ஆசிரியர்:நச்சினார்க்கினியர்
Appearance
நச்சினார்க்கினியர், தமிழில் இலக்கணம், இலக்கியம் ஆகிய இருவகை நூல்களுக்கும் உரை எழுதியவர்.
வரலாறு:
[தொகு]பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரையில் வாழ்ந்து வந்தவர். ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தவர். பாரத்துவாச கோத்திரத்தவர். பார்ப்பன மரபினர். சிவஞானச் செல்வர்.[1]
உரை எழுதிய நூல்கள்:
[தொகு]- இலக்கண நூல்: தொல்காப்பியம்
- இலக்கிய நூல்கள்:
- பத்துப்பாட்டு
- கலித்தொகை
- குறுந்தொகையில் 20 பாடல்கள்
- சீவகசிந்தாமணி
- உரை கண்ட நூல்களைக் குறிப்பிடும் வெண்பா:
"பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கவியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே"[2]
(குறுந்தொகைக்கான உரை கிடைக்கவில்லை)
நச்சினார்க்கினியரின் புலமை:
[தொகு]தாம் உரை எழுத எடுத்துக்கொண்ட நூல்களையும் அவற்றிற்குரிய உரைகளையும் பலமுறை பயின்று தெளிவு பெற்றவராக உள்ளார். இலக்கண இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய கலைகளிலும் நிரம்பிய அறிவு பெற்றவர்.[3] இவர் நூல் எதுவும் இயற்றவில்லை. அதற்கு மாறாக வாழ்நாள் முழுமையும் பண்டைத்தமிழ் நூல்களுக்கு உரை காண்பதில் செலவிட்டுள்ளார்.
- ↑ வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
எண்டிசை விளங்க வந்த ஆசான்
பயின்ற கேள்வி பாரத் துவாசன்
நன்மறை துணிந்த நற்பொருள் ஆகிய
தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் (பாயிரம்) - ↑ மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மூன்றாம் பதிப்பு) ப.235.
- ↑ பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
நூற்படு வான்பொருள் நுண்ணிதின் உணர்ந்த
போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின்
நாற்பொருள் பொதிந்த தாக்கமை யாப்பினைத்
தேக்கிய சிந்தையன்" (பாயிரம்)