உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/P

விக்கிமூலம் இலிருந்து

P
pace வேகம்

pacificism அமைதியியக்கம், அமைதிக் கொள்கை
pacing அறுதியிட்டமைத்தல்
page பக்கம், பணிப் பையன்
pageant பகட்டு ஆரவாரம், பகட்டு அணி
paido centricism மாணவ மையம்
pain நோவு, வலி
painting வண்ண ஓவியம்
pair இணை, சோடி
paired association இணையியைபு
paired comparison இணையொப்பு
palaestra மற்போர்ப் பள்ளி
palatal வல்லண ஒலி
palate அண்ணம்
palm உள்ளங்கை
palmistry கை வரையியல்
pampered இளக்காரத்தால் கெட்ட
pamphlet துண்டு வெளியீடு
panacea சஞ்சீவி
pancreas கணையம்
pandemonium பெருங்குழப்பம்
panel குழுப்பட்டி, தெரிவர்
panel discussion தெரிவர் உரையாடல்
panic திகில்
panorama அடுக்கணிக் காட்சி
pantheism மாயா வாதம், இயற்கை வணக்கம்
pantomime ஊமைக் கூத்து, அவிநயக் கூத்து, பேசா நாடகம்
paper தாள், பத்திரிகை
paper and pencil test தாள் சோதனை
parable நீதிக் கதை, உவமைக் கதை
parabola பர வளைவு
parade படை, அணி வகுப்பு
paradox முரணுரை
paragraph பத்தி
parallax இடமாறு தோற்றம்
parallel இணை, ஒரு போகு
lines இணை கோடுகள், ஒரு போகுக் கோடுகள்
postulate இணைப்பு, முடிவரை
parallelism, psycho-physical மனவுடல் இணை கொள்கை, மனவுடல் ஒரு போகுக் கொள்கை
parallelogram இணைகரம்
paralysis பக்க வாதம்
paronia கருத்துத் திரிபு நிலை
paraphrase பொழிப்பு, பெயர்த்தெழுதல்
parasite ஒட்டுயிர், ஒட்டுண்ணி
parathyroid கேடயத் துணைச் சுரப்பி
parcel சிறு கட்டு
parchment எழுதும் தோல், பழந்தாள் வகை
parental instinct மகப் பற்றூக்கம், மகவூக்கம்
parenthesis செருகு தொடர்
parents பெற்றோர்
parietal lobe பக்கப் பிரிவு
parish மத வட்டாரம்
parity சரி ஒப்பு
park பூங்கா
parlance பேச்சு முறை
parliament பார்லிமெண்டு, சட்ட சபை
parliamentary சட்ட சபைக்குரிய
parochial குறுகிய மனப்பான்மையுள்ள
parody ஏளனப் போலி நாடகம், போலி நகை இலக்கியம்
parsimony, law of சிக்கன விதி
part பகுதி, பாகம்
part method பகுதி முறை, பிரி நிலை முறை
partial ஒரு தலையான
partiality ஓரம்
participation பங்கெடுத்தல்
participle எச்ச வினை
particular தனிப்பட்ட, சிறப்பு
partisan கட்சியாளர்
partition பிரித்தல்
partner கூட்டாளி
parturition பிள்ளைப் பேறு
party system கட்சி ஆட்சி முறை
pass கணவாய்
passage பகுதி, ஊடு வழி
passing race கடத்து ஓட்டம்
passion ஆர்வம், மனவெழுச்சி
passive செயலற்ற, செயப்பாட்டு
passport நுழைவுச் சீட்டு.

past கழிந்த, இறந்த
paste பசை
pasteurization பாஃச்டர் முறை
pastime பொழுதுபோக்கு
patch-work ஒட்டுமானம்.
paternal தந்தை வழி
path பாதை
pathology நோய்க் கூறு,நோய் இயல்
pathos அவலச் சுவை
patience பொறுமை
patriarchy குல முதியோராட்சி
patriotism நாட்டுப் பற்று
patrol system அணி வகுப்பு முறை
patron புரவலர்
pattern கோலம், தோறணி
pause இடை நிறுத்தம்
pavilion கூடாரம்
pay சம்பளம்
payment கட்டணம்
peace அமைதி
peasant உழவன், நாட்டுப் புறத்தான்
peculiar தனிப்பட்ட
peculiarity தனிப் பண்பு
pedagogue ஆசிரியர்
pedagogy ஆசிரியரியல், ஆசிரியம், போதனாமுறை
hard வல் ஆசிரியம்
soft மெல் ஆசிரியம்
pedant கல்விப் பாவனையாளன்
pedestal பீடம், நிலை மேடை
peer-age group சம வயதுக் குழு
peers சமமானோர், ஒப்பார்
pen பேனா, மைக்கோல்
penalty தண்டனை, தண்டம், தண்ட உதை (ph)
pencil பென்சில், கரிக் கோல்
pendulam ஊசல் குண்டு, ஊசல்
penetration ஊடுருவல்
pension ஓய்வுச் சம்பளம், உபகாரச் சம்பளம், பென்சன்
pentagon ஐங்கோணம்
people மக்கள்
perceive புலனறி, புரிந்து கொள்
percentage சதவீதம், நூற்று வீதம்
percentage error நூற்று வீதப் பிழை
percentile நூற்றுமானம், சதமானம்
percept புலன் காட்சிப் பொருள், காட்சிப் பொருள்
perception புலன் காட்சி, காட்சி, காண்டல்
percolation நீர்க் கசிவு, கசிவு
perfection நிறைவு
perfectionist நிறைவு நோக்கினன்; குறை பொறுக்கிலான்
perforation துளையிடல், துளை
performance test செய்கைச் சோதனை, செயற்சோதனை
perimeter சுற்றளவு
period பருவம், பீரியடு, காலக் கூறு
period of infection நோய் தொற்று காலம்
periodical பத்திரிகை
peripheral (nervous system) வெளி (நரம்புத் தொகுதி)
periphery மேற்பரப்பு, விளிம்பு
permanent நிலையான
permeate ஊடுபரவு
permission இணக்கம், அனுமதி
permutation உறுப்பு மாற்று கோவை
perpendicular செங்குத்தான, செங்குத்துக் கோடு
perpetuate நீடிக்கச் செய்
persecution delusion துன்புறு ஏமாற்றம் (பிரமை)
perseverance விடா முயற்சி
perseverator, high உயர்ந்த ஈடுபாட்டினன்
low தாழ்ந்த ஈடுபாட்டினன்
persistence நிலைத்திருத்தல்
person ஆள்
personal ஆள் சார்(ந்த)
personality ஆளுமை
double இரட்டை ஆளுமை
integrated ஒருமித்தஆளுமை
mulitple பன்னிலை, பலவாய ஆளுமை
ratings ஆளுமைத்தரமீடு
personate போல் நடி
personification ஆள் திறமாக்கல்

personnel வேலையாட்டொகுதி
perspective இயலுருத் தோற்றம், தொலைத் தோற்றம், நோக்கு
persuation இணைக் குவிப்பு, இசைவிப்பு
perversion புரட்டல், நெறி கோணல்
pervert புரட்டன், நெறி கோணியவன், கோட்டி
pessimism அவல நோக்கு, சிணுங்கித் தனம், துன்பக் கொள்கை
pest பீடை
pet செல்லக் குழந்தை, சீராட்டு
petitio principii தற்சார்புக் குற்றம்
petition மனு
petrifaction கல்லாய்ச் சமைதல், கல்லாதல்
petty சிறிய, சில்லறை
phase பகுதி
phantasy பாவனை, அதிபாவனை
phenomenon தோற்றம், நிகழ்ச்சி, தோற்ற நிலைப் பொருள்
phenomenalism தோற்ற நிலைக் கொள்கை
philanthropy அன்புப் பணி, மக்கட் பணி
philology மொழியியல்
philosophy மெய்யறி நூல், தத்துவம், தத்துவ சாத்திரம்
phlegmatic தாமத குணன், தூங்கு மூஞ்சி
phobia கிலி
acrophobia உச்சிக் கிலி, உயிரிடக் கிலி
agorophobia திறப்புக் கிலி, வெளியிடக் கிலி
claustrophobia அடைப்புக் கிலி, குகைக் கிலி
phyrrophobia தீக் கிலி
hydrophobia
(aquaphobia)
நீர்க் கிலி
hematophobia குருதிக் கிலி
misophobia தீண்டற் கிலி, தீட்டுக் கிலி
pathophobia நோய்க் கிலி
toxophobia நச்சுக் கிலி
zoophobia விலங்குக் கிலி
phoneme மாற்றொலி
phonetics ஒலி பிறப்பியல், மொழி ஒலியியல்
phonetic ஒலிப்பு முறை சார்ந்த
phonic ஒலி சார்ந்த
photograph போட்டோப் படம், நிழற் படம்
phrase சொற்றொடர்
phrenology கபால அளவையியல்
physical உடலியல், உடல்
education உடற் கல்வி
examination உடல் ஆய்வு
fitness உடல் தகுதி
training உடற் பயிற்சி
physiognomy முக அளவையியல்
physiography நில இயற்கையியல்
physiology உடலியல்
physique உடலமைப்பு
picnic இன்பச் செலவு
pictograph சித்திர எழுத்து
pictorial ஓவிய, சித்திர, பட
picture completion test பட நிரப்புச் சோதனை
picture interpretation test படத் திறங் காண் சோதனை
piece-meal துண்டுகளாக
piety கடவுட் பற்று, பக்தி
pile குவியல்
pilgrimage யாத்திரை
pillar தூண், ஆதாரம்
pineal gland பினியல் சுரப்பி, கூம்புருவச் சுரப்பி
pinna செவி மடல்
pinnacle உச்சி
pioneer முனைவர், புது முயற்சியாளர்
pitch சுருதி, குரல் எடுப்பு
pitching தெறித்தல்
pituitary பிட்யூட்டரி
pity இரக்கம்
pivot சுழலச்சு
placard சுவரொட்டி (விளம்பரம்)
place இடம், பதவி
plagiarism கருத்துத் திருட்டு
plain-folk technique பொது நலம் சுட்டல் முறை
plan திட்டம்

planning திட்டமிடுதல்
lesson பாடத் திட்டமிடல்
plane மட்டம், தளம்
planetarium கோளின இயங்குருவம்
plantor reflex கால் விரல் மறி வினை
plasma பிளாஃச்மா
plaster சாந்து, பிளாஃச்திரி
plastic art குழைமக் கலை, குழைவுக் கலை
plasticity நெகிழ்ச்சி
plateau தேக்க நிலை, மேடு, தேக்கம்
platform மேடை
platitude பொது மெய்ம்மை
play விளையாட்டு, நாடகம்
play festival விளையாட்டு விழா
Xplay ground விளையாட்டிடம்; விளையாட்டு மைதானம்
play therapy விளையாட்டு மூலம் மருத்துவம்
play way விளையாட்டு முறை
pleasure இன்பம்
plebiscite குடியொப்பம்
pledge வாக்குறுதி, சூளுரை, ஈடு
plenary session முழுமைக் கூட்டம்
plosive வெடியொலி
plot கதையமைப்பு
plural பல, பன்மை
pluralism பன்முதற் கொள்கை, பன்மைக் கொள்கை
poem கவி, காவியம்
poet கவிஞன்
poetry செய்யுள்,கவிதை
point முனை, புள்ளி, குறிப்பு
pont of view நோக்கு முனை
-point scale- வரை அளவு கோல்
pointer சுட்டு கோல், சுட்டு முள்
poise சம நிலை
polar முனை, துருவ
bi இரு முனை
tri மும்முனை
polarise முனைப்படுத்து
pole vault நீள் கழியால் தாண்டல்
policy கொள்கை முறை
political அரசியல்
polity செயலாட்சி முறை
poll பொது வாக்கெடுப்பு
polygon பல கோணம்
poly syllable பல வசைச் சொல்
poly technic பல கலைப் பள்ளி
ponder நன்கு ஆய்
pons பாலம்
pool நிதிச் சேர்க்கை
popular பொது விருப்பான, வழக்கிலுள்ள, பொது மக்கள்-
popularise பெருவழக்காக்கு
population மக்கள் தொகை
portrait உருவப் படம்
pose தோரணை, நிற்கும் நிலை
position பதவி, இடம்
positive உடன்பாட்டு, நேர்
after-image நேர் பின் விம்பம்
transference உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம்
possession, instinct of உடைமையூக்கம்
post அஞ்சல், பதவி, நிலை, கம்பம்
poster சுவரொட்டி, விளம்பரம்
posterior பின்னுள்ள, பின்பக்க,புற
post-basic பின் ஆதார
postpone தள்ளி வை, ஒத்திப் போடு
post position பின்னிணைப்பு, வேற்றுமை உருபு
postscript பிற்சேர்க்கை
postulate முற்கோள், ஆதார விதி
posture உடல் நிலை, உடற் கோலம், நிலை, இருப்பு நிலை
potential ஒடுங்கி நிற்கும், உள்ளார்ந்த
poultry கோழிப் பண்ணை
power அதிகாரம்
practicability கையாளுமை, செயற்பாடுடைமை, கையாள இயலுமை
practical work செயல் முறை வேலை, நடைமுறை வேலை
practice பயிற்சி, செயல் முறை
oral வாய் மொழிப் பயிற்சி
pragmatic பயன் வழி
pragmatism பயனளவைக் கொள்கை
praise பாராட்டு, (p) புகழ்ச்சி
prattle மழலைப் பேச்சு
prayer வேண்டுதல், வழிபாடு
pre basic முன் ஆதார

precedence முற்படல்
precedent முன் நிகழ்ச்சி
precept கட்டளை
precision திட்பம், சரி நுட்பம்
precocious பிஞ்சிலே பழுத்த, முந்தி வளர்ந்த, மிஞ்சி வளர்ந்த
predictae பயனிலை(ப் படுத்து)
predict முற்கூறு
predigested முற்செறித்த
preface முகவுரை
preference முன்னுரிமை, விருப்பம்
prefix முன்னொட்டு
prehistoric வரலாற்றுக்கு முந்திய
prejudice சார்பெண்ணம்
prelude பீடிகை
premature முதிராத
premise தொடக்க வாசகம், வாக்கியம்
prenatal பிறப்புக்கு முன்னான
preparation ஆயத்தம் செய்தல், முன்னேற்பாடு
preparatory ஆயத்த
preposition பெயர் முன் இடைச் சொல்
prerequisite முன் தேவை
prescriptive கட்டளையிடு
present உள்ளேன், உள்ள, உள்ளோர், நிகழ், பரிசு, அறிமுகப்படுத்து
presentation எடுத்துக் கூறல், பரிசு வழங்கல்
preservation பாதுகாத்தல், பாதுகாப்பு
president தலைவர்
press அச்சகம், அச்சுப் பொறி, பத்திரிகை, செய்தி நிலையம்
pressure-groups நெருக்கும் குழுக்கள்
prestige தன்மதிப்பு, மதிப்புரிமை, கௌரவம்
presupposition முற்கோடல்
preventive தடுத்தற்கேது
preventive theory தடுத்தற் கொள்கை
previous experience முன்னனுபவம்
pride செருக்கு
priest மத குரு
primary முதனிலை, முக்கியமான, மூல, ஆதார
primer முதற் புத்தகம்
primitive பண்டைய, தொடக்க கால, புராதன
principal முதல்வர், தலைமை
principle ஆதார உண்மை, கொள்கை, ஆதார விதி, தத்துவம்
prints அச்சு
printing அச்சடித்தல்
private தனியோர்
privilege உரிமை, சிறப்புரிமை
prize பரிசு, நன்கொடை
probability ஏற்படு நிலை, நிகழ் திறம், நிகழுமை, நிகழ்வெண், சம்பாவிதம்
probable நிகழக் கூடிய
error நிகழ் பிழை
probation தகுதி ஆயத்த காலம்.
problem புதிர், சிக்கல், பிரச்சினை, உத்திக் கணக்கு
method புதிர் தீர் முறை
set பிரச்சினைத் தொடர்பு
solving புதிர் தீர்த்தல்
problamatic புதிருடை
procedure செய் முறை
proceeds விலைப் பணம், ஆதாயம்
proceedings நடவடிக்கை
process செயல் முறை
procession ஊர்வலம், வலம் வருதல்
proclivity (மனம்) நோக்குகை
procreation பிறப்பித்தல்
prodigy மேதை
producer level உற்பத்தி மட்டம், இயற்றுநர் மட்டம்,
product விளை பொருள்; பெருக்குத் தொகை
product moment method பெருக்க உந்த முறை
production உற்பத்தி (செய்தல்), விளைவு, தயாரிப்பு
productive craft உற்பத்தித் தொழில்
profession உயர் தொழில்
professional தொழில் முறை

professional etiquette உயர் தொழில் ஆசாரம்
professor பேராசிரியர்
proficiency தேர்ச்சி
badges தேர்ச்சிச் சின்னங்கள்
profile வடிவுருவம், பக்கத் தோற்றம்
profile test பக்கத் தோற்றச் சோதனை
profit ஆதாயம்
progeny பின் மரபு, எச்சம்
prognostic முன்னறி
programme நிகழ்ச்சி நிரல்
progress முன்னேற்றம்
progress முன்னேற்ற அறிக்கை
progression வரிசை
progressive முற்போக்கான
project செயல் திட்டம்
project method செயல் திட்ட முறை
projection புறத் தேற்றல், புறத்தெறிதல்
projective techniques புறத் தேற்று நுண் முறைகள்
projector படமெறி கருவி
prologue நாடக முகப்பு, பதிகம், பாயிரம்
promiscuous கலப்படமான, ஒழுங்கற்ற
promotion முன்னேற்றம்
pronoun பெயர்ச் சுட்டு
pronounce ஒலி, உச்சரி(ப்பு)
proof தேற்றம்
proof நீங்கு
propaganda கொள்கை பரப்பல், பிரசாரம்
propagation பெருக்குதல், பரப்பல்
propensity போக்கு, பற்றுகை
prophylact ஊறு களைதல்
proportion விகித சமம், வீத சமம்
proposition முன் மொழிதல், கூற்று
proprioceptors அங்ககக் கொள்வாய், அங்ககப் பொறி
prose உரை நடை
prosody யாப்பிலக்கண்ம்
prospective முன்னோக்கிய, முன்னோக்கு
prospects எதிர்கால வாய்ப்பு
prospectus தகவல் தொகுப்பு
propensity இயற்கைச் சார்பு
protective பாதுகாப்பு, காப்பு
protein புரோட்டீன், புரதம்
proverb பழமொழி
provision முன்னேற்பாடு (செய்தல்)
proximity அண்மை
proxy பதின்மை
prudential stage பட்டறி நிலை
psyche மனம், ஆன்மா, உள்ளம்
psychiatry உள மருத்துவ இயல்
psychical உள
psycho-analysis உளப் பகுப்பு
psychologist உளவியலார், உளவியல் அறிஞர்
psychology உளவியல்
applied நடைமுறை உளவியல்
child குழந்தை உளவியல்
depth ஆழ உளவியல்
developmental வளர்ச்சி உளவியல்
educational கல்வி உளவியல்
functional செயனிலை உளவியல்
genetic தோன்று நிலை உளவியல்
gestalt முழு நிலைக் காட்சி உளவியல்
hormic நோக்க உளவியல்
physiological உடலியல் உளவியல்
practical செயல் முறை உளவியல்
structural அமைப்பு நிலை உளவியல்
psychometry உள அளவியல்
psycho-motor உள-இயக்க
psy cho-neurosis உள நரம்புநோய்
psycho pathology உள நோயியல்
psycho physics மனப் பௌதிகம்
psychophysical parallelism மன உடல் ஒரு போகுக் கொள்கை
psycho therapy உளக் குண முறை
psychosis சித்த விகாரம், புத்தி மாறாட்டம்
puberty பூப்பு
public பொதுமக்கள்
public opinion survey பொதுமக்கள் கருத்து எடுப்பு (சர்வே)
publication வெளியீடு
publicity விளம்பரம்
publisher வெளியிடுவோர்

pull ups
punctuation நிறுத்தக் குறியியல், நிறுத்தற் குறியீடு
punishment தண்டனை
pupil records மாணவர் பதிவுகள்
pupillary reflex பாவை மறி வினை
puppet பொம்மை
purposing நோக்கமுறுதல், துணிதல்
purposive activity நோக்குடைச் செயல், நோக்குடைத் தொழிற்பாடு
purposivists நோக்க நெறியினர்
puzzle box புதிர்ப் பெட்டி
pyorrhoea ஈறழற்சி
pyramid கோபுரம், பிரமிட்