ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன்[தொகு]

குறுந்தொகை: 184. நெய்தல்திணை[தொகு]

(கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது)


அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்டு
ஆண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.