ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்[தொகு]

அகநானூறு- 64-ஆம் பாடல், முல்லைத்திணை[தொகு]

(வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது)

அகநானூறு: 64. பாடல்:1[தொகு]

களையு மிடனாற் பாக வுளையணிகளையும் இடனால் பாக உளை அணி
வுலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி மா
வகையமை வனப்பின் வள்புநீ தெரியத் வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத்
தளவுப்பிணி யவிழ்ந்த தண்பதப் பெருவழி தளவுப் பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி
யைதிலங் ககலிலை நெய்கனி நோன்காழ்(5)ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
வென்வே லிளையர் வீங்குபரி முடுகச் வெல் வேல் இளையர் வீங்கு பரி முடுகச்
செலவுநா மயர்ந்தன மாயிற் பெயல செலவு நாம் அயந்தனம் ஆயின் பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின் கடு நீர் வரித்த செம் நில மருங்கின்
விடுநெறி வீர்மணல் வாரணஞ் சிதரப்விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதரப்
பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குத்தி (10)(10)பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி
மண்ணுடைக் கோட்ட வண்ண லேஎ மண் உடைக் கோட்ட வண்ணல் ஏஎறு
றுடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
வூர்வயிற் பெயரும் பொழுதிற் சேர்புடன் ஊர் வயின் பெயரும் பொழுதின் சேர்பு உடன்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு கன்று பயிர் குரல மன்று நிறை புகு தரும்
மாபூண் தெண்மணி யைதியம் பின்னிசைமா பூண் தெள் மணி ஐது இயம்பு இன் இசை
புலம்புகொள் மாலை கேட்டொறுங் புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கின ளுறைவோள் கையறு நிலையே. கலங்கினள் உறைவோள் கையறு நிலை ஏ. (1)


குறிப்பு
இப்பாடல் நால்வகை ஆசிரியப்பாவுள் ஈற்றயலடி முச்சீரான் வந்த "நேரிசை ஆசிரியப்பா" ஆகும்.
சங்க இலக்கியத்துள், –ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்– பாடிய பாடல் எண்ணிக்கை: 1 (ஒன்று மட்டும்).
( )


பார்க்க:[தொகு]

அகர வரிசையில் சங்க இலக்கியம்