ஆவூர்கிழார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆவூர் கிழார்[தொகு]

ஆவூர் கிழார்[தொகு]

புறநானூறு: 322.[தொகு]

உழுதூர் காளை யூழ்கோ டன்ன ஊழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்திப்
புதுவரகு வரிகாற் கருப்பை பார்க்கும் புது வரகு வரி கால் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய (5) பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே மன்றில் பாயும் வன் புலத்ததுவே
கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது ( )
திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
டண்பணை யாளும் வேந்தர்க்குக் தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை யீயா வேலோ னூரே. (10) கண் படை ஈயா வேலோன் ஊரே.
குறிப்பு
இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா” ஆகும்.

ஆவூர்கிழார் சங்க இலக்கியத்துள் பாடிய பாடல் தொகை 1 (ஒன்றுமட்டும்) ஆகும்.

( )


பார்க்க[தொகு]

அகர வரிசையில் சங்க இலக்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆவூர்கிழார்&oldid=475713" இருந்து மீள்விக்கப்பட்டது