இங்கிலாந்தில் சில மாதங்கள்/ஒப்புமைக் கூற்று

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒப்புமைக் கூற்று

ஜப்பான் நாட்டில் வாழும் இந்திய அறிஞர் ஒருவர் சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்தார். அவர் தொலைக்காட்சியில் இந்த இரண்டு தேசங்களை ஒப்புமைப்படுத்திக் கூறுகின்றார் :

“இந்தியாவின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து என்ன?"

“பாரத தேசம் முன்னைய விட பத்தில் ஒரு பங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஜப்பானியர் நம்மை

விடப் பத்து மடங்கு முன்னேறி வருகிறார்கள்"

என்பது அவர் தந்த பதில்.

இவர் மேலும் இதை வேறு வகையாக விளக்கிக் காட்டுகிறார்: “அவர்களை நோக்க நாம் ஒன்பது மடங்கு பின் தங்கிவிட்டோம்” என்று காட்டுகிறார்.

அங்கே தொழிற்சாலைகள் மிகுதி; அதை ஒட்டியே கல்விச்சாலைகளும் பெருகியுள்ளன. தொழிலுக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே சோம்பல் மிகுதி; அங்கே செயல்பாடு மிகுதி என்று கூறுகிறார். இன்னும் அந்தச் சொற்கள் நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.