இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

மெய்க்கீர்த்தி 01[தொகு]

  1. பூமருவிய பொரிலேழும் பொருப்பேழும் புனைநித்திலத்
  2. தாமநெடுங் கொடை பொழிந்த தவள
  3. வெண்ணிலா குளிர்பொதியச்
  4. சுடர்ச்சக்கர வெற்பில்தன தடற்சக்கர வெயி்லெறிப்பச்
  5. சினப்புலியுஞ் செங்கோலு மனைத்துயிர்க்குங் காவல்பூணப்
  6. பணியணைமிசைப் பரஞ்சோதி பாற்கடல்நின் றெழுந்தருளி
  7. மணிநெடுமுடி கவித்தூநெடு மண்மடந்தையை மணம்புரிந்து
  8. புகழ்மடந்தை கொழுநனாகிப் போர்மடந்தையை மணம்புணர்ந்து
  9. பருதிமுதற் குலம்விளக்கிச் சுருதிகளின் முறைவாழ்த்தெழ
  10. விழுந்த அரிசமயத்தையு மீளவெடுத்து ஆதியுகங்
  11. கொழுந்துவிட்டுத் தழைத்தோங்கக் கோடாதறங் குளிர்தூங்க
  12. மாரிவாய்த்து வளம்சுரக்க தாரணியோர் பிணிநீங்க
  13. நல்லோர்தங் கற்புயர நான்மறையோர் தொழில்வளர
  14. எல்லாருந் தனித்தனியே வாழ்ந்தனமென மனமகிழ்ந்து
  15. ஒருவருடன் ஒருவர்க்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
  16. வெருவருபகைமை மனத்தின்றி விழைந்துகா தலுடன்சேர
  17. இந்திரன்முதற் றிசாபாலர் எண்மருமொரு வடிவாகி
  18. வந்தபடி தரநின்று மனுவாணை தனிநடாத்தி
  19. மாலியானையே பிணிப்புண்பன மணிச்சிலம்பே யரற்றுவன
  20. சேலோடையே கலக்குண்பன தேமாவே வடுப்படுவன
  21. பொய்யுடையன வனவேயே போர்மலைவன வெழுகழனியே
  22. மாமலரே கடியவாயின வருபுனலே சிறைப்படுவன
  23. காவுகளே கொடியவாயி்ன கள்ளுண்பன வண்டுகளே
  24. பொய்யுடையன வனவேயே போர்மலைவன வெழுகழனியே
  25. மையுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே
  26. கயற்குலமே பிறழ்ந்தொழுகும் கைத்தாயரே கடிந்தொறுப்பார்
  27. இயற்புலவரே பொருள்வேட்பார் இசைப்பாணரே கூடஞ்செய்வார்
  28. இவன்காக்கும் திருநாட்டில் இயல்விதுவென நின்றுகாவல்
  29. நெறிபூண்டு மனுநெறி யல்லது நினையாது
  30. தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந் தாயிலோர்க்குத் தாயாகியு
  31. மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட் குயிராகியும்
  32. விழிபெற்ற பயனென்ன அமையப்பெற்ற வருளெனவும்
  33. மொழிபொரு(ளா-மிவ)னெனவும் முகம்பெற்ற பனுவலெனவும்
  34. எத்துறைக்கும் இறைவனெனவும் வரஞ்செய்யும் பெருந்தவமெனவும்
  35. முத்தமிழ்க்கும் தலைவனெனவும் மூன்றுலகின் முதல்வனெனவும்
  36. அரசியற்கை முறைநிறுத்தி யல்லவைகடிந் தாறுய்த்து
  37. பொருகலியி னிருளகற்றிப் புகழென்னு நிலாப்பரப்பிக்
  38. கன்னடருங் காலிங்கருந் தென்னவருஞ் சிங்களருங்
  39. கைகயருங் கொங்கணருங் கூபகருங் காசியருங்
  40. காம்போசருங் கோசலருங் கொந்தளரும் கப்பளரும்
  41. பப்பளரும் பாஞ்சாலரும் பெப்பளரும் பூலுவரும்
  42. மத்திரரு மராட்டரும் வத்தவரு மாகதருங்
  43. கொடிநுடங்கு கனககோபுரக் கொற்றவாசலில் வந்தீண்டி
  44. கொட்பா வயரப் பாவல ரொராவகற்றிக்?
  45. கருமாமுகில் திருநிறத்துக் கனகளப ராஜராஜன்
  46. திருமார்பிலுந் திருத்தோளிலுந் திருமனதிலும் பிரியாது
  47. பற்றார் குழலியர்க்கொரு சூளாமணி ரத்நமென்ன
  48. சிந்தாமணி மஹாரத்ன மதிலதசோழ குலரத்னம்
  49. பூமகளும் ஜயமகளும் புகழ்மகளும் புவிமகளு
  50. நாமகளுந் தனித்தேவி நரதுங்கற் கிவளென்ன
  51. பாரரசர் பெருமையுட .... டென்றரற்றப்
  52. பேரரசு தனிநடாத்திப் பெண்ணரசாய் முடிசூடி
  53. உடனாணையு முடனிருக்கையு முடனரசும் உடன்சிறப்புங்
  54. கடனாகவே படைத்தருளி அறம்புரக்குங் கருணைவல்லி
  55. தவனவயல் பசும்புரவி கடவுட்டேர் கடாவவருந்
  56. தவனகுலத் துலகந்தொழ வந்தருளிய சந்த்ரவுதயம்
  57. ஞானமுதற் குலநான்கு நல்லொழுக்கமும் பெருங்கற்பும்
  58. பேணுமயில் ராஜராஜன் பிரியாவே ளைக்காரி
  59. அகலாத மாதாவென் றாரணங்க ளொருநான்கும்
  60. புகலவருந் தனிநாயகி புவனமுழு துடையாளும்
  61. அக்கிரமத் தொழிலால் அருள்மழைபொழி கிளர்வெண்குடைச்
  62. சக்கிரவர்த்தி சனநாதன் தரணிபாலன் தனிநாயகி
  63. ஆரலங்க மலர்ச்சோலையி லுலாவுங்கிளி தன்காதற்
  64. பேரருளாமொரு பாற்கடல் விளையாடு பெடையன்னம்
  65. சீர்படைத்த சிலைநுதல்மயில் பூலோக சுந்தரியாம்
  66. பேர்படைத்த நான்முகத்தோன் பெரம்படைப்பை வளர்க்கும்பணை
  67. வையமேத்துஞ் சமந்தகமணி மாதவன்புனை கவத்துவமணி
  68. தையலார்க்கொரு சூளாமணி சதுர்வேத சிந்தாமணி
  69. புண்ணியமொரு வடிவுகொண்டு புகழென்னும் மணிபுனைந்து
  70. பெண்ணியல்பு தனதாகப் பிறந்ததெனச் சிறந்தபேதை
  71. மன்னவர்தந் தேவியர்நின் வழியடியோ மடியோமென
  72. முன்னின்று தொழுதேத்த முதன்மைபெற்ற மூலநாயகி
  73. இனம்பொழியுங் கவிராஜன் யானையோடு தீதாடத்
  74. தனம்பொழியும் ராஜராஜன் தாய்வேனை தரித்தபொற்கொடி?
  75. இசைமுழுதுங் குடைமுழுதுங் குணமுழுதும் ஈண்டுற்று
  76. திசைமுழுது மண்முழுதுந் திருமுழுது முடையாளொரு
  77. முந்தைமுழு துலகுய்ய முடிசூடும் ராஜபண்டிதன்
  78. தன்(மன)முழு ஒருசீர்த்துடைய தேவிதரணிமுழு துடையாளும்
  79. பார்வாழவும் மண்வாழவும் பனுவல் வாழவும் (மனுவாழவும்)
  80. சீர்வாழவும் மலாடகுலத் தவதரித்துத் திசைவிளக்கு
  81. மேன்மையுடன் பெருங்கீர்த்தி மண்மிசைவ ளர்க்குங்குயில்
  82. உலகுடை முக்கோக் கிழானடிக ளென்னு
  83. மலகில் கற்பி லரவிந்த மடையுந்
  84. திருந்தியதன் பெருங்குணத்திற் சிறந்தோங்கி யறந்தழைக்கும்
  85. அருந்ததியா மென்னவரும் பெருமையுமவனி முழுதுடையாளும்
  86. மன்னியபெரும் புகழ்படைத்த தென்னவன்கிழா னடிகளும்
  87. ஊழியூழி பலகற்பம் வாழிமணம் புணர்ந்திருப்ப
  88. உதயகிரி உச்சியேறி மதிவெண்குடை புதுநீழற்கீழ்ச்
  89. சந்திரமுக் மண்டலத்துத் தாமரைக்குள் செம்பவளவாய்
  90. இந்த்ரநீல குஞ்சரமோ டிளம்பிடியுட னிசைந்ததெனச்
  91. செம்பொன்வீர சிம்மாசனத்துப் புவனமுழு துடையாளொடும்
  92. வீற்றிருந் தருளியகோப் பரகேசரி பன்மரான
  93. திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு
  94. யாண்டேழா வதுகன்னி நாயிற்று அமரபட்சத்து
  95. நவமியும்புதன் கிழமையும் பெற்றஆயில் யத்துநாள்...


மெய்க்கீர்த்தி 02[தொகு]

  1. பூமருவிய திருமாதும் புவிமாதும் செயமாதும
  2. நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க
  3. அருமறை விதியெறி யனைத்துந் தழைப்ப
  4. வருமறை யுரிமையில் மணிமுடி சூடித்
  5. திங்கள் வெண்குடைத் திசைக்களி றெட்டுந்
  6. தங்கு தனிக்கூடந் தானென விளங்கக்
  7. கருங்கலிப் பட்டியைச் செங்கோல் துரப்பப்
  8. பொருகதி ராழி புவிவளர்த் துடன்வர
  9. வில்லவ ரிரட்டர் மீனவர் சிங்களர்
  10. பல்லவர் முதலிய பார்த்திவர் பணிய
  11. எண்ணரு கற்பம் மண்ணகம் புணர்ந்து
  12. செம்பொன் வீர சிம்மா சனத்து
  13. புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
  14. கோப்பர கேசரி வன்ம ரான
  15. திரிபுவனச் சக்கர வர்த்திகள்
  16. ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு...
மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] {{}}