இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

மெய்க்கீர்த்தி 01[தொகு]

  1. கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதருங் கலைமாதரும்
  2. அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்துவாழ
  3. நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ்பரப்ப
  4. ஆதியுக மாமென்னச் சோதிமுடி புனைந்தருளி
  5. அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில்நின்று பாரிப்பத்
  6. தென்னவரும் சேரலரும் சிங்களரும் முதலாய
  7. மன்னவர்கள் திறைசுமந்து வந்தீண்டிச் சேவிப்ப
  8. ஊழியூழி ஒருசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்
  9. செம்பொன் வீர சிங்காசனத்(து)
  10. உலகுடை முக்கோக் கிழானடி களோடும்
  11. வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி
  12. வன்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள்
  13. ஸ்ரீ இராஜாதி ராஜதேவர்க்கு யாண்டு...

மெய்க்கீர்த்தி 02[தொகு]

  1. கடல்சூழ்ந்த பாரேழுந் திசையெட்டுங் காத்துநின்று
  2. தடமாமதி யெனவிளங்கித் தரளவெண்குடை நிலாவெறிப்ப
  3. ஆழிவரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி
  4. ஊழிதொறும் புகழோங்க ஓராழி வெயிற்பரப்பக்
  5. கயல்சிலையி லாரில்(?) வரையகன்றாளயிற் கரங்குவிப்பப்
  6. புயலாழியிற் போற்றிசெயப் புவிமேருவில் வீற்றிருப்ப
  7. திருவாணையுஞ் செங்கோலுந் திசையிட்டுங் காவல்கொள்ளப்
  8. பெருவாழ்வுபெற் றுயிரனைத்தும் பி... ....
  9. சமையமாறுந் தலையெடுப்பத் தருமமுமரு மறையுமோங்கி
  10. அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க
  11. ஓர்ப்பினும்தம் முறுகனவிலம் ஒன்றோடொன்று பகையின்றிப்
  12. போர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நீருண்ணப்
  13. பொன்னிநதியும் பொய்யாது புயலும் புனலோவாது
  14. மன்னியநிதி வளம்பெருக்க விளைவயல்(எ)வ் வளஞ்சுரக்கப்
  15. போகபூமி யிதுவென்னப் போகமெல்லாம் வந்தீண்டி
  16. ஏகவாணை அரசுரிமை ஏழ்பொழில்களும் பெற்றதென்னப்
  17. பாற்கடலிற் கார்க்கடலிப் படிவாழ முடிசூடி
  18. ஆர்த்த வமராபி ஷேகச்(சல)தியரசர் திளைத்தோட
  19. எவ்வுலகமும் இருணீங்க வந்தகோமா னிவனென்று
  20. கவ்வைதீரக் கலிகாலத் தாதிகாலங் காட்டினனென
  21. இவன்காக்கும் புவியனைத்தும் யாவையும்நினைந் தின்றருள
  22. யவன்காக்கு மெனஅகில லோகங்களும் அடியடையக்
  23. குலைபடுவன தெங்குகளே கோட்படுவன இளங்கமுகே
  24. அலைப்படுவன நீர்நிலையே அதிர்படுவன இடியேறே
  25. தளம்படிவன போர்வரம்பே தடைபடுவன கோபுரமே
  26. உளம்படுவன சூன்மகளிரே யொறுப்புனைவன மதகளிறே
  27. தடு்ப்புண்பன கோட்டகமே தள்ளுண்பன பூங்கொடியே
  28. கறைபடுவது நிறைமதியே .... .....
  29. பட்டுண்பன அணியல்குலே பரித்தாற்றுவ பரியாகமே
  30. குறைபடுவன குழற்சுருளே குழைவில்லன மணிக்கொங்கையே
  31. மறைபடுவன சூழ்காஞ்சியே மங்கொள் வனக்கிடையே?
  32. என்றுபாடிப் பாவேந்தரிளங்களிற்றின் மேற்போகச்
  33. சென்றிறைஞ்சிப் பாவேந்தர் திருவாசற் புறநிற்பச்
  34. சேரலருந் தென்னவருஞ் சிங்களருங் கொங்கணரும்
  35. பேரரசு பெறவேண்டிப் பிரியாது சேவிப்பத்
  36. தம்மரசு தாம்பெற்று தம்முடனே... சூடி
  37. யிருமருங்குந் தேவியர்கள் அணிமங்கலம் பெற்றருள
  38. வளவசோழன் வாளரசர் தலைகாக்க யாதவகுல
  39. மரபில்வந்த குலமாணிக்க மடநாண்முதற் கணநான்கின் வடிவுகொண்டு
  40. உடனாணையுந் திருவாணையு முடன்செல்ல முடிகவித்தாள்
  41. மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம்புனை வளவனுடன்
  42. பெண்ணரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள்
  43. உறையூரும் பேரூரகையு முதகையுமது ராபுரியு
  44. முறைமுறை யாண்டருளி முளரிநகர் துறந்தவண்ணம்
  45. பொன்னாசனஞ் சிங்கவணை பொலங்கற்பகப் பூஞ்சோலை
  46. முன்னேவல் நித்தல்முறை முறையேபெறு முலைப்பெருமாள்
  47. அளகநுதற் கயல்நயனத் தம்பொற்குழைக் கொம்பென்ன
  48. உளமகிழ வந்தருளிய உலகுடைமுக்கோக் கிழானடியுடன்
  49. வாழிவாழி மணம்புணர்ந் தூழியூழி பலவோங்கிச்
  50. செம்பொன் வீர சிங்கா சனத்து
  51. உலகுடை முக்கோக் கிழானடி களோடும்
  52. வீற்றிருந் தருளியகோ விராஜகேசரி பந்மரான
  53. திரிபுவனச் சக்கர வர்த்திகள்ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்குயாண்டு...

மெய்க்கீர்த்திகள்