இரண்டாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

  1. பூமன்னு பதுமம் பூத்தவே ழுலகுந்
  2. தாமுன்செய் தவத்தால் பருதிவழித் தோன்றி
  3. நெடுமா லிவனெனச் சுடர்முடி சூடி
  4. இருநில மகளை உரிமையிற் புணர்ந்து
  5. திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தணைந்து
  6. பருமணி மார்வம் பனிவரை நிகர்ப்பச்
  7. சயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டால்
  8. புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற
  9. நாமகள் தானும்எங் கோமகன் செவ்வாய்ப்
  10. பவளச் சேயொளி படைத்தன னியானெனத்
  11. தவள நன்னிறந் தனித்துடை யோரெனப்
  12. புகழ்மகள் சிந்தை மகிழு நாளிலும்
  13. ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி
  14. வெயிலுங் கருங்கலி இருளினைத் துரப்ப
  15. நீடுபல் லூழி ஏழ்கடற் புறத்தினுங்
  16. கோடாச் செந்தனிக் கோலினி துலாவ
  17. மீனமும் சிலையுஞ் சிதைத்து வானுயர்
  18. பொன்னொடு மேருவிற் புலிவீற் றிருப்ப
  19. உடம்ப ரியானை ஓரெட் டினுக்கும்
  20. தம்ப மென்னத் தனித்தனி
  21. திசைதொறும் விசையத் தம்ப நிற்பப்
  22. பசிபகை யானது தீங்கு நீங்க
  23. மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க
  24. மாதவர் தவமும் மங்கையர் கற்பும்
  25. ஆதி அந்தண ராகுதிக் கனலு
  26. மீதெழு கொண்டல் வீசுதண் புனலு
  27. மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும்
  28. நீதி அறமும் பிறழாது நிகழப்
  29. பாவம் பழனப் பரப்பும் பணைக்கை
  30. மாவு மல்லது வன்றளைப் படுதல்
  31. கனவிலுங் காண்டற் கரிதென வருந்திப்
  32. புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது
  33. சிறையெனப் படுத லின்றி நிறைபெருஞ்
  34. செல்வமோ டவனி வாழப் பல்லவர்
  35. தெலுங்கர் மாளுவர் கலிங்கர் கோசலர்
  36. கன்னடர் கடாரர் தென்னர் சேரலர்
  37. சிங்கணர் கொங்கண்ர் சேதிபர் திரிகர்த்தர்
  38. வங்க ரங்கர் வத்தவர் மத்திரர்
  39. கங்கர் சோனகர் கைகயர் சீனரென்
  40. றறைகழல் வேந்தரும் எல்லா வரைசரும்
  41. முறைமையில் வருந்தித் திறைகொணர்ந் திறைஞ்ச
  42. அம்பொன் மலர்கொடிச் செம்பியன் கிழானடி
  43. ஒருமருங் குடனமர்ந் திருப்ப அரள்புரி
  44. சிமயப் பொற்கொடி இமயப் பாவையுஞ்
  45. சிவனும் போலப் புவனமுழு துடையா
  46. ளிவன்திரு மணிமார்வத்
  47. துலகமுழு துடையா ளெனவுட னிருப்பச்
  48. செம்பொன் வீர சிம்மா சனத்துப்
  49. புவனமுழு துடையா ளோடும்வீற் றிருந்தருளிய
  50. இராஜகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
  51. குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு....



மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]] :[[]] :[[]]