இறையனார் அகப்பொருள்/களவியல்

விக்கிமூலம் இலிருந்து

கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரை பத்தாம் நூற்றாண்டில் எழுத்துருவம் பெற்றது என்பது ஒரு கோட்பாடு.

விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்- மூலம்[தொகு]

ஆசிரியர்: இறையனார்[தொகு]

(ஆலவாய்அண்ணல் அறுபது நூற்பாவில் ஆக்கிய அகப்பொருள் இலக்கணம்)[தொகு]

முதலாவது களவியல் (நூற்பா 01 முதல் 33 முடிய)[தொகு]

நூற்பா 01 (அன்பின்ஐந்திணை)[தொகு]

அன்பி னைந்திணைக் களவெனப் படுவ
தந்தண ரருமறை மன்ற லெட்டனுள்
கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.
(இச்சூத்திரம், 'இவ்வதிகாரம் உரைக்கின்ற பொருள் இன்னது' என்றும், 'இதனோடு ஒத்தது' என்றும் உரைக்கின்றது.)


மூலம் பதப்பிரிப்பு
அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர். (01)


நூற்பா 02 (அதுவே)[தொகு]

அதுவே,
தானே யவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல்.
(இச்சூத்திரம் 'களவு' என்பதனை விளக்கியது.)


மூலம் பதப்பிரிப்பு


அதுவே,
தானே அவளே தமியர் காணக்
காமப்புணர்ச்சி இருவயின் ஒத்தல். (02)


நூற்பா 03 (ஆங்ஙனம்)[தொகு]

ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயின்
பாங்க னோரின் குறிதலைப் பெய்தலும்
பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலுமென்
றாங்கவ் விரண்டே தலைப்பெயல் மரபே.
(இச்சூத்திரம் 'தலைப்பெயல்' இலக்கணம் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன் வயின்
பாங்கனோரின் குறிதலைப்பெய்தலும்
பாங்கிலன் தமியோள் இடந்தலைப்படலும் என்று
ஆங்கு அவ்விரண்டே தலைப்பெயல் மரபே. (03)


நூற்பா 04 (அவ்வியல்பல்லது)[தொகு]

அவ்வியல் பல்லது கூட்டக் கூட
லெவ்விடத் தானுங் களவிற் கில்லை.


மூலம் பதப்பிரிப்பு


அவ்வியல்பு அல்லது கூட்டக்கூடல்
எவ்விடத்தானும் களவிற்கு இல்லை. (04)


நூற்பா 05 (புணர்ந்தபின்றை)[தொகு]

புணர்ந்த பின்றை யாங்ஙன மொழுகாது
பணிந்த மொழியாற் றோழி தேஎத்
திரந்துகுறை யுறுதலுங் கிழவோன் மேற்றே.
(இச்சூத்திரம் தலைமகனுக்குரிய செயல் ஒன்றனைக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


புணர்ந்த பின்றை ஆங்ஙனம் ஒழுகாது
பணிந்த மொழியால் தோழி தேஎத்து
இரந்து குறையுறுதலும் கிழவோன் மேற்றே. (05)


நூற்பா 06 (இரந்துகுறை)[தொகு]

இரந்துகுறை யுறாது கிழவியுந் தோழியு
மொருங்கு தலைப்பெய்த செவ்வி னோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுத்தற்கு முரிய னென்ப.
(இச்சூத்திரம் 'மதியுடம்படுத்தல்' என்பதனை விளக்கியது.)


மூலம் பதப்பிரிப்பு
இரந்து குறையுறாது கிழவியும் தோழியும்
ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம்படுத்தற்கும் உரியன் என்ப. (06)


நூற்பா 07 (முன்னுறவுணர்தல்)[தொகு]

முன்னுற வுணர்தல் குறையுற வுணர்த
லிருவரு முள்வழி யவன்வர வுணர்தலென்
றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி.


(இச்சூத்திரம் தோழி உணரும் முறையைக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
அம்மூன்று என்ப தோழிக்கு உணர்ச்சி. (07)


நூற்பா 08 (ஆங்குணர்ந்)[தொகு]

ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துத்
தான்குறை யுறுதல் தோழிக் கில்லை.


(இச்சூத்திரம் தோழிக்குரியதோர் பண்பினைக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
ஆங்கு உணர்ந்து அல்லது கிழவோள் தேஎத்துத்
தான் குறையுறுதல் தோழிக்கு இல்லை. (08)


நூற்பா 09 (முன்னுறவுணரினும்)[தொகு]

முன்னுற வுணரினு மவன்குறை யுற்ற
பின்ன ரல்லது கிளவி தோன்றாது.


(இச்சூத்திரம் தோழியின் சொல்லாடுந்திறன் உணர்த்தியது.)


மூலம் பதப்பிரிப்பு
முன்னுற உணரினும் அவன் குறையுற்ற
பின்னர் அல்லது கிளவி தோன்றாது. (09)



நூற்பா 10 (உள்ளத்துணர்ச்சி)[தொகு]

உள்ளத் துணர்ச்சி தெள்ளிதின் கரந்து
கிழவோள் தேஎத்துக் குறையுறூஉ முளவே
குறிப்பறி வுறூஉங் காலை யான.


(இச்சூத்திரம் தோழி தலைமகளிடத்துக் குறைவேண்டல் உணர்த்தியது.)


மூலம் பதப்பிரிப்பு
உள்ளத்து உணர்ச்சி தெள்ளின் கரந்து
கிழவோள் தேஎத்துக் குறை உறூஉம் உளவே
குறிப்பு அறிவு உறூஉம் காலை ஆன. (10)


நூற்பா 11 (தன்னுள்)[தொகு]

தன்னுட் குறிப்பினை யருகுந் தோழிக்கு
முன்னுறு புணர்ச்சியி னருகலு முண்டே.


(இச்சூத்திரம், தன் உள்ளக்குறிப்பினைத் தலைமகள் உணர்த்துதலைக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


தன் உள்குறிப்பினை அருகும் தோழிக்கு
முன்உறுபுணர்ச்சியின் அருகலும் உண்டே.(11)


நூற்பா 12 (குறையுறுங்)[தொகு]

குறையுறுங் கிழவனை யுணர்ந்த தோழி
சிறையுறக் கிளந்து சேண்பட நிறுத்தலு
மென்னை மறைத்த லெவனா கியரென
முன்னுறு புணர்ச்சி முறைமுறை செப்பலு
மாயப் புணர்ச்சி யவனொடு நகாஅ
நீயே சென்று கூறென விடுத்தலு
மறியாள் போறலுங் குறியாள் கூறலும்
படைத்துமொழி கிளவியுங் குறிப்புவேறு கொளலு
மன்ன பிறவுந் தலைப்பெயல் வேட்கை
முன்னுறு புணர்ச்சிக் குரிய வென்ப.


(இச்சூத்திரம் 'சேட்படை' என்பதுபற்றிக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


குறையுறும் கிழவனை உணர்ந்த தோழி
சிறையுறக் கிளந்து சேண்பட நிறுத்தலும்
என்னைமறைத்தல் எவனாகியர் என
முன்னுறுபுணர்ச்சி முறை முறை செப்பலும்
மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ
நீயே சென்று கூறு என விடுத்தலும்
அறியாள் போறலும் குறியாள் கூறலும்
படைத்துமொழி கிளவியும் குறிப்பு வேறு கொளலும்
அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை
முன்னுறுபுணர்ச்சிக்கு உரிய என்ப. (12)


நூற்பா 13 (குறையுறுபுணர்)[தொகு]

குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
கிழவிக் கில்லை தலைப்பெய லான.


(இச்சூத்திரம் தலைமகளது பண்பினை உணர்த்தியது.)


மூலம் பதப்பிரிப்பு


குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
கிழவிக்கு இல்லை தலைப்பெயல் ஆன. (13)


நூற்பா 14 (தோழிக்குரியவை)[தொகு]

தோழி்க் குரியவை கோடாய் தேஎத்து
மாறுகோ ளில்லா மொழியுமா ருளவே.


(இச்சூத்திரம் அறத்தொடுநிற்கும் முறைமை கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
தோழிக்கு உரியவை கோடாய் தேஎத்து?
மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே. (14)


நூற்பா 15 (முற்படப்)[தொகு]

முற்படப் புணராத சொல்லின் மையின்
கற்பெனப் படுவது களவின் வழித்தே.


(இச்சூத்திரம் கற்பின் இலக்கணம் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


முன்படப் புணராத சொல் இன்மையின்
கற்பு எனப்படுவது களவின் வழித்தே. (15)


நூற்பா 16 (களவினுட்)[தொகு]

களவினுட் டவிர்ச்சி காப்புமிகி னுரித்தே
வரைவிடை வைத்த காலை யான.


(இச்சூத்திரம் தலைமகனுக்கு நிகழும் இடையீடு கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
களவினுள் தவிர்ச்சி காப்பு மிகின் உரித்தே
வரைவு இடைவைத்த காலை ஆன. (16)


நூற்பா 17 (அல்லகுறிப்)[தொகு]

அல்லகுறிப் படுதலு மவ்வயி னுரித்தே
யவன்வர வறியுங் குறிப்பி னானா.


(இச்சூத்திரம் அல்லகுறிப்படுதல் என்பதுபற்றிக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு:


அல்ல குறிப்படுதலும் அவ்வயின் உரித்தே
அவன் வரவு அறியும் குறிப்பின் ஆனா. (17)

நூற்பா 18 (குறியெனப்படுவ)[தொகு]

குறியெனப் படுவ திரவினும் பகலினு
மறியக் கிளந்த இடமென மொழிப.


(இச்சூத்திரம் 'குறி' -இரவுக்குறி, பகற்குறி- பற்றிக் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


குறி எனப்படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த இடம் என மொழிப. (18)


நூற்பா 19 (இரவுக்குறியே)[தொகு]

இரவுக் குறியே யில்வரை யிகவாது.


(இச்சூத்திரம் இரவுக்குறி நிகழுமிடம் கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு


இரவுக்குறியே இல் வரை இகவாது. (19)


நூற்பா 20 (பகற்குறி)[தொகு]

பகற்குறி தானே யிகப்பினும் வரையார்.


(இச்சூத்திரம் பகற்குறி இடம் உணர்த்தியது.)


மூலம் பதப்பிரிப்பு


பகல்குறி தானே இகப்பினும் வரையார். (20)


நூற்பா 21 (இரவுமனை)[தொகு]

இரவுமனை யிகந்த குறியிடத் தல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை.
(இச்சூத்திரம் இரவுக்குறிக்கோர் எல்லை கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
இரவுமனை இகந்த குறியிடத்து அல்லது
கிழவோன் சேர்தலை கிழத்திக்கு இல்லை. (21)


நூற்பா 22 (அம்பலும்)[தொகு]

அம்பலு மலருங் களவு.
(இச்சூத்திரம், அம்பல், அலர் பற்றி உரைத்தது)


மூலம் பதப்பிரிப்பு
அம்பலும் அலரும் களவு. (22)


நூற்பா 23 (வெளிப்பட்ட)[தொகு]

வெளிப்பட்ட பின்றையு முரிய கிளவி.


(இச்சூத்திரம், வெளிப்பட்ட பின்னர் நிகழ்வது உணர்த்தியது)


மூலம் பதப்பிரிப்பு


வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி. (23)




நூற்பா 24 (களவுவெளிப்படா)[தொகு]

களவு வெளிப்படா முன்னுறு வரைதல்
களவு வெளிப்பட்ட பின்றை வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே.


(இச்சூத்திரம், 'வரைதல்' இரண்டுவகை எனக்கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு
களவு வெளிப்படா முன்னுறு வரைதல்
களவு வெளிப்பட்ட பின்றை வரைதல் என்று
ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. (24)


நூற்பா 25 (பட்டபின்றை)[தொகு]

பட்ட பின்றை வரையாக் கிழவன்
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிதலும்
பொருள்வயிற் பிரியா தொருவழித் தணத்தலும்
புரைவ தென்ப கற்பா லான.
(இச்சூத்திரம், அவ்வரைவிற்கு வரும் இடையீடு இவை என்பது கூறியது.)


மூலம் பதப்பிரிப்பு:
பட்ட பின்றை வரையாக் கிழவன்
நெட்டிடை கழிந்து பொருள்வயின் பிரிதலும்
பொருள்வயின் பிரியாது ஒருவழித் தணத்தலும்
புரைவது என்ப கற்பால் ஆன. (25)

நூற்பா 26 (வெளிப்படை)[தொகு]

வெளிப்படை தானே விரிக்குங் காலைத்
தந்தை தாயே தன்னைய ரென்றாங்
கன்னவ ரறியப் பண்பா கும்மே.


(இச்சூத்திரம், வெளிப்படை என்பதன் இலக்கணங் கூறியது.)


நூற்பா 27 (அவருள்)[தொகு]

அவருள்,
தாயறி வுறுதலி னேனோரு மறிவர்.
(இச்சூத்திரம், பிறர் அறியும்வகை கூறியது.)


நூற்பா 28 (தந்தை)[தொகு]

தந்தை தன்னைய ராயிரு வீற்றும்
முன்ன மல்லது கூற்றவ ணில்லை.
(இச்சூத்திரம், நற்றாய் அறத்தொடுநிற்றலைக் கூறியது.)


நூற்பா 29 (காப்புக்கை)[தொகு]

காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்
நொதுமலர் வரையும் பருவ மாயினும்
வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினு
மவனூ றஞ்சுங் கால மாயினு
மந்நா லிடத்தும் மெய்ந்நா ணொரீஇ
யறத்தொடு நிற்றல் தோழிக்கு முரித்தே.


(இச்சூத்திரம், அறத்தொடு நிற்கும் இடம் கூறியது.)


நூற்பா 30 (காமம்மிக்க)[தொகு]

காமம் மிக்க கழிபடர் கிளவியுங்
காப்புச் சிறைமிக்க கையறு கிளவியு
மாறுபார்த் துற்ற வச்சக் கிளவியு
மிரவினும் பகலினு நீவரு கென்றலுங்
கிழவோன் றன்னை வார லென்றலுந்
தன்னுட் கையா றெய்திடு கிளவியு
மன்ன மரபின் பிறவுந் தொகைஇத்
தன்னை யழிந்த் கிளவி யெல்லாம்
வரைதல் வேட்கைப் பொருள வென்ப.


(இச்சூத்திரம், வரைவுகடாவும் இலக்கணமெல்லாம் தொகுத்துணர்த்தியது.)


நூற்பா 31 (ஆறின்னாமை)[தொகு]

ஆறின் னாமையு மூறு மச்சமுந்
தன்னை யழிதலுங் கிழவோற் கில்லை.


(இச்சூத்திரம்,தலைமகனது பண்பு உணர்த்தியது.)


நூற்பா 32 (களவினுட்)[தொகு]

களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டம்
திங்க ளிரண்டி னகமென மொழிப.


(இச்சூத்திரம், களவொழுக்கத்தின் காலம் இவ்வளவு என உரைத்தது.)


நூற்பா 33 (களவினுட்..கிழவோற்)[தொகு]

களவினுட் டவிர்ச்சி கிழவோற் கில்லை.


(களவுக்காலத்துத் தலைமகனது இலக்கணம் உணர்த்தியது.)

முதலாவது களவியல் முற்றும்[தொகு]

அடுத்து வருவது, கற்பியல்[தொகு]

பார்க்க:


இறையனார் அகப்பொருள்/கற்பியல் :[[]] :[[]] :[[]]