இளைஞர் இலக்கியம்
இளைஞர் இலக்கியம்
பாவேந்தர்
பாரதிதாசன்
மணிவாசகர் பதிப்பகம்
55, லிங்கித்தெரு, சென்னை-600001.
முதற் பதிப்பு : நவம்பர்—14, 1991.
உரிமை : செறிவு
பதிப்பாசிரியர் :
டாக்டர் ச. மெய்யப்பன்
விலை ரூ.7.50
கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
55, லிங்கித் தெரு, சென்னை-600 001.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி - 620 002.
தொலைபேசி : சிதம்பரம் — 2799 சென்னை 513707
அச்சிட்டோர்: பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ்,
சென்னை-600 013.
பாவேந்தர்
பாரதிதாசன்
(1891-1964)
பாவேந்தர் முன்னுரை
ஐந்தாண்டுடைய சிறுவர், சிறுமியர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரைக்குமுள்ள எவர்க்கும் இந்நூலிற் பாடல்கள் கிடைக்கும்.
இளைஞர் இலக்கியம் என்று பெயரிட்டு இதை நான் எழுதத் துணிந்தமைக்குக் காரணம், பிழைச் சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதாகும்.
இதில் உள்ள பாடல்களில் அருஞ்சொற்கள் காணப்படலாம். ஒவ்வொரு பாட்டாலும் மாணவர் இரண்டோர் அருஞ்சொற்களேனும் அறிந்து கொள்ளாராயின், பாட்டினால் ஏற்படும் பயன்தான் என்ன? என்று கேட்கின்றேன்!
ஆங்கிலம் முதலிய பிற சொல்லால் வழங்கும் பொருளை ஏற்ற தமிழ்ச் சொல்லாலேயே குறித்திருக்கின்றேன். படிப்பார் நினைவிற் கொண்டு பயன் அடையட்டும் என்று உரைநடையால் ஒரு பொருளை விளக்குவதினும், பாட்டாற் காட்டுங்கால் இனிது பதியும் என்ற உண்மைக்கு இந்நூல் ஒத்து வருகின்றதா என்பதைப் படிப்பார் ஆய்ந்து பார்த்து. ஆம் எனில் கொள்ளுக.
பாரதிதாசன்
குழந்தைப்பாடல்களில் ஒரு
திருப்புமுனை
பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பாரதியார் பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு மூலம் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இனிய பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். அறவுரைகள். நல்லுரைகள், உணர்ச்சி வெள்ளமாய்ப் பொங்கி ஓடும் பாடல்கள் அவை.
இனிய எளிய தமிழில் கவிமணி குழந்தைகள் பாடி மகிழும் வண்ணம் நல்ல பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
தமிழ்ப்புலமையும் தமிழாற்றலும் இல்லாத கவிஞர்கள் குழந்தைப்பாடல்கள் என்ற பெயரில் கொச்சை வழக்குகளையும் திரிந்த சொற்களையும் சிதைந்த சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் சொற்கூட்டங்களின் ஊர்வலமாக குழந்தைப் பாக்களைப் புற்றீசல்போல இயற்றினார்கள்.
பாவேந்தர் 50 ஆண்டு படைப்பு வாழ்வில் சிறுவர்களுக்கு இளைஞர்களுக்கு அறிவுரை நல்கும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின் தாய்மொழிகள் மறுமலர்ச்சி பெற்றன. தமிழிலும் தூய தமிழ்ப் பாடல்கள் சிறுவர்களால் விரும்பப் பெற்றன. பாவேந்தர் இளைஞர் இலக்கியம் என்னும் நூலைப் புதுநெறியில் தனித்தமிழில் கனித்தமிழில் இயற்றினார். சொல் எல்லாம் தூய தமிழ்ச் சொல்லாக அமைந்தது. மரபுவழிப் புலமையும் தமிழாற்றலும் நிரம்பப் பெற்ற பாவேந்தர் இயற்றிய இளைஞர் இலக்கியம் குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இன்று இவர் வழியில் பலர் செந்தமிழில் சிறுவர் இலக்கியத்தை படைக்கின்றனர். செழிக்கச் செய்கின்றனர்.
வாணிதாசன்
சுரதா
நாரா நாச்சியப்பன்
பெருஞ்சித்திரனார் - முதலானோர்
பாவேந்தர் பாரதிதாசன்
வாழ்க்கைக் குறிப்புகள்
1891 — ஏப்பிரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை தாய் இலக்குமி.
1895 — ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளமையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெறுதல்
1908 — முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும், பின்னர் புலவர் பங்காரு பக்தரிடமும், தமிழ் இலக்கண— இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றால். புலவர் சுப்புரத்தினத்தை வேணு நாயகர் வீட்டு திருமணத்தில் பாரதியார் காணல். பாரதியாரின் எளிய தமிழ் சுப்புரத்தியாத்தைப் பற்றுதல்
1909 — காரைக்கால் சார்ந்த நிரவியில் அசிரியர் பணி ஏற்றல்.
1918 — பாரதியாரின் சாதி மதம் கருதா, தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈப்புற்றுத் தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை தமிழக ஏடுகளில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்ற பெயர்களில், பாடல், காதை, கட்டுரை, மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியார்க்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருத்தல்.
1919 — திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி 1¼ ஆண்டு சிறை பிடித்த அரசு, விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் கவிஞர் வென்று பணியில் சேர்தல்.
1920 — இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல். புவனகிரியைச் சேர்ந்த பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையைத் திருமணம் செய்தல்.
1921 — பாரதியார் மறைவு (12-9-21)
1926 — ஸ்ரீமயிலம் சுப்ரமணியர் துதியமுது நூலை இயற்றல்.
1928 — நவம்பர் 3, கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு.
1929 — ‘குடியரசு’, ’பகுத்தறிவு’ ஏடுகளில், பாடல், கட்டுரை, கதை எழுதுதல், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே பாட்டெழுதிய முதல் பாவர்.
1930 — பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும், பாடிய சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல். டிசம்பர் 10இல் ‘புதுவை முரசு‘ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
1933 — மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்‘ என்று எழுத்திக் கையெழுத்திடல்.
1934 — முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதிம், மயிலை சீனிவேங்கட சாமி, மாயூரம் நடராசடன், சாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ணனுடன் படகில் மாமல்லபுரம் செல்லை. ‘மாவலிபுரச் செலவு‘ பாடல் பிறந்தது.
1935 — இந்தியாவில் முதல் பாட்டேடான — ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்‘ தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர் எஸ். ஆர். சுப்பிரமணியம்.
1937 — புரட்சிக்கவி — குறுங்காவியம் வெளியிடல்.
1938 — பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் கடலூர் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிடுதல். பெரியார் ‘தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்‘ சான்று பாராட்டுதல்.
1941 — எதிர்பாராத முத்தம் (குறுங்காவியம்)
1942 — குடும்ப விளக்கு I வெளியிடுதல்.
1943 — பாண்டியன் பரிசு (காவியம்) வெளியிடல்.
1944 — இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு நாடகம்), அழகின் சிரிப்பு ஆகிய நூல்களை ஒன்றன் பின் ஒன்றாய் வெளியிடல் குடும்ப விளக்கு II வெளியிடல். செட்டிநாடு
- முழுவதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைதக் காலூன்றச் செய்தல்.
1945 — புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல், தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது), எது இசை நூல்கள் வெளியீடல்.
1946 — ‘முல்லை’ இதழ் தொடங்கம். அமைதி — ஊமை நாடகம் வெளியிடல், (29.1.46) பாவேந்தர் ’புரட்சிக் கவி’ என்று போற்றப்பட்டு ரூ.25000 கொண்ட பொற்கிழியைப் பெறுதல். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தல், அறிஞர் அண்ணா நிதி திரட்டித் தருதல்.
1947 — புதுக்கோட்டையிலிருந்து ‘குயில்’ 1, 2 மாத வெளியீடு. ‘சௌமியன்‘ நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல். சென்னையில் ‘குயில்‘, இசையமுது வெளியிடல்; புதுவையிலிருந்து ‘குயில்‘ இதழ் ஆசிரியர் — வெளியிடுபவர். கவிஞர் பேசுகிறார் (சொற்பொழிவு நூல்.)
1948 — காதலா கடமையா? (காவியம்), முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற்குமிழிகள் (காவியம்), குடும்ப விளக்கு III, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி நூல் வெளியிடல்.
1949 — பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் தொகுதி, சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி (குறுங்காவியம்), ஏற்றப்பாட்டு வெளியிடல்.
1950 — குடும்ப விளக்கு IV, குடும்ப விளக்கு V வெளியிடல்.
1951 — அமிழ்து எது? — கழைக்கூத்தியின் காதல் வெளியிடல்.
1954 — பொங்கல் வாழ்த்துக் குவியல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.
1955 — புதுவைச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். பாரதிதாசன் கவிதைகள் — மூன்றாம் தொகுதி வெளியிடல்.
1955 — தேனருவி இசைப்பாடல்கள் வெளியீடல்.
1950 — தாயின் மேல் ஆணை: இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். ‘குயில்‘ கிழமை ஏடாக வெளிவருதல்.
1959 — பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு வெளியிடல். ‘‘பிசிராந்தையார்’’ நாடகம் தொடர்தல், 1.11.50 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.
1961 — சென்னைக்குக் குடிபெயர்தல். பாண்டியன் பரிசு — திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல்.
1962 — சென்னையில் மீண்டும் ‘குயில்’ கிழமை ஏடு (15.4.62). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா வெளியிடல்.
1962 — மூதறிஞர் இராசாசி, தமிழ் எழுத்தாளர் சங்கச் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.
1963 — பன்மணித்திரள் நூல் வெளியீடு. 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.
1964 — பொது மருத்துவமனையில் ஏப்பிரல் 21இல் இயற்கை எய்துதல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள்.
1965 — ஏப்பிரல் 21. புதுவை கடற்கரை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் கட்டப்பெற்றது.
1968 — சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, பாவேந்தரின் திருஉருவச்சிலை, மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.
1969 — பிசிராந்தையார் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தல்.
1970 — மார்ச்சு, கவிஞரின் 'பிசிராந்தையார்' நாடக நூலுக்கு சாகித்திய அகாதமி ரூ.5000 பரிசு வழங்கியது.
1971 — ஏப்பிரல் 29இல் பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்பெற்றது. ஆண்டு தோறும் அரசு விழா எடுக்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95-ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம் நினைவகம் அருங்காட்சியகமாக கவிஞரின் ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது.
1972 — ஏப்பிரல் 29, பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
தலைப்பு வரிசை
பக்க எண்
1. | 1 |
2. | 6 |
3. | 23 |
4. | 35 |
5. | 44 |
6. | 52 |
7. | 58 |
8. | 61 |
8. | 61 |