உள்ளடக்கத்துக்குச் செல்

இளையார் ஆத்திசூடி

விக்கிமூலம் இலிருந்து

இளையார் ஆத்திசூடி என்னும் 88 அடிகள் கொண்ட இந்நூலை பாரதிதாசன் 1963ஆம் ஆண்டில் இயற்றினார். அவர் 1946ஆம் ஆண்டில் இயற்றிய 84 அடிகளைக்கொண்ட ஆத்திசூடி என்னும் நூல் முதிர்ந்தவர்களுக்கு என்பதால் மாணவர் பயிலும் வகையில் இளையார் ஆத்திசூடி ஆக்கினார். இந்நூல் 1967 சூன் 10 ஆம் நாளிட்ட பாரதிதாசன் குயில் (குரல் - 1; இசை - 3) என்னும் இதழில் வெளியிடப்பட்டது.

இளையார் ஆத்திசூடி நூல்

[தொகு]

இளையார் ஆத்திசூடி இயம்பக்
களையார் தமிழ்த்தாய் கருத்தில் அமைகவே!


ழுபவன் கோழை
வின்பா லினிது
ரவினில் தூங்கு
வது மகிழ்ச்சி
ள்ளதைப் பேசு
மையைப்போ லிராதே
தையுமூன்றிப் பார்
சே லெவரையும்
ந்திற் கலைபயில்
ற்றுமை வெல்லும்
ரம்போ தெருவில்
வை தமிழ்த்தாய்


ணக்கிற் றேர்ச்சிகொள்
ரியா யெழுது
மிழுன் தாய்மொழி
ல்லவனா யிரு
ல்லினைத் தூய்மைசெய்
ற்றவர்க்குதவி செய்
ண்டிபார்த்து நட


ல்வி கற்கண்டு
கால்விலங்கு கல்லாமை
கிழிந்தாடை தீது
கீரை உடற்கினிது
குப்பை ஆக்காதே
கூனி நடவேல்
கெட்டசொல் நீக்கு
கேலி பண்ணாதே
கைத்தொழில் பழகு
கொடியரைச் சேரேல்
கௌவி உமிழேல்


மமே அனைவரும்
சாப்பிடு வேளையோடு
சிரித்துப் பேசு
சீறினாற் சீறு
செக்கெண்ணெய் முழுகு
சேவல்போல் நிமிர்ந்துநில்
'சை'யென இகழேல்
சொல்லை விழுங்கேல்
சோம்ப லொருநோய்


ந்தைசொற்படி நட
தாயைக் கும்பிடு
தின்பாரை நோக்கேல்
தீக்கண்டு விலகிநில்
துவைத்ததை உடுத்து
தூசியா யிராதே
தென்னையின் பயன்கொள்
தேனீ வளர்த்திடு
தைப்பொங்க லினிது
தொலைத்தும் தொலைத்திடேல்
தோற்பினும் முயற்சிசெய்


ரிச்செயல் கான்றுமிழ்
நாட்டின் பகைதொலை
நினைத்ததை உடன்முடி
நீந்தப் பழகு
நுணல் வாயாற்கெடும்
நூல்பயில் நாடொறும்
நெல்விளைத்துக் குவி
நேரம் வீணாக்கேல்
நைந்த தறுந்திடும்
நொய்யும் பயன்படும்
நோய் தீயொழுக்கம்


னைப்பயன் பெரிது
பாட்டிக்குத் தொண்டுசெய்
பிறர்நலம் நாடு
பீளை கண்ணிற்கொளேல்
புற்றிற் கைவிடேல்
பூச்செடி வளர்த்திடு
பெற்றதைக் காத்தல்செய்
பேராசை தவிர்
பையும் பறிபோம்
பொய் பேசாதே
போர்த்தொழில் பழகு


மாடாடு செல்வம்
மிதியொடு நட
மீனுணல் நன்றே
முத்தமிழ் முக்கனி
மூத்தவர் சொற்கேள்
மெத்தெனப் பேசு
மேலவர் கற்றவர்
மையினம் காத்தல்செய்
மொழிகளில் தமிழ்முதல்


ள்ளுவர்நூல் பயில்
வாழ்ந்தவர் உழைத்தவர்
விடியலிற் கண்விழி
வீரரைப் போற்று
வெல்லத்தமிழ் பயில்
வேர்க்க விளையாடு
வையநூ லாய்வுசெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=இளையார்_ஆத்திசூடி&oldid=1404731" இலிருந்து மீள்விக்கப்பட்டது