ஈரோடு மாவட்ட வரலாறு/042-043

விக்கிமூலம் இலிருந்து
 

42. ஈரோடு மாவட்டத்தின்
இணையற்ற சிறப்புக்கள்



1. இருபது இலட்சம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லுயிரி எச்சங்கள் (FOSSILS) காணப்படுவது.

2. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட பெருங்கற்படைச் சின்னங்கள் மிக அதிகமாகக் காணப்படுவது.

3. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் முதன் முதலில் சமணம் புகுந்தது.

4. தொல்காப்பிய விதிக்கும் இசைக்கலைக்கும் வட்டெழுத்துத் தோற்றத்திற்கும் சான்றான கி.பி.2ஆம் நூற்றாண்டு அறச்சலூர். தமிழ் பிராமி கல்வெட்டு இருப்பது.

5. சங்க காலத்தில் கால்நடைச் செல்வம் மிகுதியாக இருந்தது.

6. வண்ணக் கல்மணிகள் உருவாக்கியது. உரோமானியர்கள் வாங்கிச் சென்றது.

7. பிளினி பாராட்டியுள்ள கொங்கு நாட்டின் வைரச் சுரங்கம் இருந்த படியூர் இருப்பது.

8. தமிழில் முதல் மொழி பெயர்ப்புக் காப்பியம் பெருங்கதை உருவானது.

9. விசயமங்கலத்தில் தமிழ்ச்சங்கம் இருந்தது.

10. ஏழாம் நூற்றாண்டிலேயே கொங்கு வீரர்கள் தொண்டைநாடு சென்று போரிட்டது (கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சாகாடைச் சிற்றன்).

11, நடுகல்லில் பெயரும் பெருமையும் "வெண்பா" வடிவில் இருப்பது (பழமங்கலம்).

12. தமிழ்நாட்டில் தொன்மையான நினைவுக்கல் இருப்பது (பர்கூர், ஈரெட்டி மலை).

13. கன்னிவாடிக் கல்வெட்டில் ‘ஆநிரை’ என்ற சொல் வருவது.

14. கோயிலுக்குக் கால்நடைக் கொடை கொடுக்காதது.

15. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுக்குப் பதிலாக ‘சுவத்திசீ’ என்று ஒலிபெயர்ப்பும், ‘நன்மங்கலஞ் சிறக்க’ என்ற தமிழ்மொழி பெயர்ப்பும் எழுதப்பட்டிருப்பது.

16. தமிழ்நாட்டில் எல்லா அரசர்களும் ‘மனுநீதிப்படி’ ஆட்சிபுரிந்ததாகக் கூற, இம்மாவட்டத்தலைவர்கள் “வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படியே” அரசு புரிந்ததாகக் கூறுவது.

17. வழக்கத்திற்கு மாறாக மேலிருந்து கீழாக இல்லாமல் கீழிருந்து மேலாகக் கல்வெட்டைப் பொறித்திருப்பது (அறச்சலூர், திங்களூர்) மற்றும் கல்வெட்டில் ஆய்த எழுத்து இருப்பது (அஃகம்).

18. சிலப்பதிகாரத்திற்கு முதலில் அரும்பத உரையும் விளக்க உரையும் எழுதியது (அடியார்க்கு நல்லார், நிரம்பை)

19. தூக்குத்தண்டனை கூடாது என்று (தலைவிலை) நாட்டுச்சபை முடிவு செய்தது.

20. மிகுதியான சந்தன மரங்களும் காடுகளில் மிகுதியான யானைகளும் இருப்பது.

21. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 1804வரை தொடர்ந்து எல்லா அரசர்களுக்கும் தாராபுரம் தலைநகராக இருந்தது.

22. கணக்கு மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தது.

23. முதல் மூன்று காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டு அம்மாநாடுகளின் வரலாறும் எழுதிய பகடால நரசிம்மலு நாயுடு பிறந்தது.

24. உலகப் புகழ் டென்னிஸ் வீரர்கள் அமிர்தராஜ் சகோதரர்கள் ஊர் உள்ளது.

25, மகாத்மா காந்தியடிகள் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு இருமுறை சிலை வைத்தது.

26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.

27. குரங்கன்பள்ளம் கொம்பணையில் பள்ளத்தின் கீழ்ப்பாலத்தில் காலிங்கராயன் கால்வாய் செல்லுவது.

28. காவிரித்தோற்றத்தின் அரிய சிற்பம் இருப்பது (சாத்தம்பூர்)

29. கொங்கு நாட்டின் நான்கு பட்டக்காரர்களும் இருப்பது.

30. வடதமிழ்நாட்டில் முதல் விடுதலை வீரன் தீரன் சின்னமலை. (17.4.1756- 31.7.1805) பிறந்தது.

31. உலகின் மிகப்பெரிய மண் அணை இருப்பது (கீழ்பவானி அணை)

32. தந்தை பெரியாரைத் தந்தது.

இன்னும் பலப்பல.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/042-043&oldid=1491805" இலிருந்து மீள்விக்கப்பட்டது