உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஆட்சிச் சிறப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சொல்லுக்குத் தருமராம் மல்லுக்கு வீமராம்
வில்லுக் கருச்சுனர் வீர மணவாளர்
ஆர்த்தி தெரிந்தவர் அருளில் மிகுந்தவர்
கீர்த்தி யுரைக்குந்தமிழ் கேட்குஞ் செவிகொண்டு
உரையா லறிந்தவர் உறந்தை வளநாட்டில்
அரவும் எலியும்அ டைத்தா ரொருகூட்டில்
தளிகையும் கோவ்லும் தண்ணீர்த் தடாகமும்
புலியும் பசுவும்தண்ணீர் புசிக்கும் வளநாடு
தானம் பரிக்குலம் தழைக்கும்உ றந்தையில்
மானும் புலியும் வளர்த்தா ரொருகூட்டில்
வேதிய ருக்குக்கலி யாணஞ்சி றந்ததும்
சாதிக்குள் ளேபரிசம் வாரிச்சொ ரிந்ததும்
தானதரு மங்களுடன் நீதிதெ ரிந்தவர்
ஞானம் தெரிந்துஅபி மானம்து றந்தவர்
சலிக்காத் தமிழ்க்குச்செம்பொன் அளித்திட வல்லவர்
கெலிக்கும் சிங்கமுறந்தை புலிக்கொடி உள்ளவர்
வரராச கோபாலர் மனமகிழ்ந்த நன்னாடு
திருராசர் காவல்கொளும் தென்னுறந்தை நன்னாடு
ஆனைவ ளையுங்காணி அரசு பதினாறு
சேகர் மாகஒரு தாவளத்தில் வந்ததும்