உறந்தைவளர் நாட்டுவளப்பம்/இறைவணக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இசை:

தானன தானன தானன தானன
தானன தானன தானன தானன

பாடல்:

சீர்பெருகு நாடுசி றந்தாள்உ றந்தையில்
பேர்பெருகு முன்தழுக்கைப் பிள்ளையாரே முன்னடவீர்!
முன்னடவீர் தென்னுறந்தை முருகா உனைப்பாடச்
சன்னதிப் புன்னைப் போல் தழைக்கும்உ றந்தையில்
மிக்க துவரைவி ளங்கனியாம் சர்க்கரை
சர்க்கரை பாலுடன்த ழைக்கும்உ றந்தையில்
முக்கனி சர்க்கரை முழங்கும்உ றந்தையில்
முக்கனி கொண்டவர் மெய்க்குவி நாயகர்
மெய்க்குவி நாயகரை வேண்டிஅ னுதினம்
தக்கோர் வளத்தைப்பாடச் சரஸ்வதியே முன்னடவீர்!
தஞ்சமென்றேன் உன்பாதம் சரசுபதித் தாயே
பூஞ்சோலை என்றுபொ ருப்பாள் பெரியவள்
கற்றோர் பெரியவர் கவிவாண ருக்கெல்லாம்
பற்புலவர் நற்புலவர் பாதம்ப ணிந்துநான்
முத்தையன் சொன்னதமிழ் எத்தேச காலமும்
வித்தை வளரருள்செய் மெய்க்குவி நாயகர்
உறந்தை வளநாடு சிறந்துப ணிகின்றோம்
குரும்பீசர் பாதத்தை விரும்புவோம் எந்நாளும்
பெருத்தச டையும்பி றையும்த ரித்தவர்
திருக்காக் குரும்பரைநான் துதிப்பேன் பலநாளும்