உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஊர்த்தெய்வ வணக்கம்

விக்கிமூலம் இலிருந்து
உரத்தநாட் டையன்பாதம் உரைப்பேன் பலநாளும்
பொங்குச டையும்பு கழுந் தரித்தவர்
எங்கள் புதுவூர்த் தெய்வங்கள் பெருமாளும்
ஏறும் பரிகள்வந்து சூழும் பனிநீரை
காரி அழகரைநான் பாதன் பணிந்தேனே
பொய்சொல்லா மெய்யன்புது மேஸ்திரி யாவரும்
மெய்சொல்லி அய்யன்பாதன் வேண்டிப் பணிகின்றோம்
பாலும் பழமும்ப சியாவ ரந்தரும்
பாலையடி அய்யனுடைப் பாதம் பணிந்துநான்
ஓங்கார முள்ளஉ றந்தை வளநாட்டில்
வேம்பய்யன் பாதத்தை விரும்பிப் பணிகின்றோம்
கலங்காதே யென்றுப லங்கள் தருகின்ற
இளங்கோவில் ஐயன்பாதம் விளங்குவோம் எந்நாளும்
வாழ்வும்பெ ருகும்வ ளரும்உ றந்தையில்
சேவுக ரையன்பாதம் சீர்பாதம் போற்றுவோம்
சரசகு ணமுந்த யவும்பெ ருகியே
பெரியமு தலியையன் துதிசெய்வோம் எந்நாளும்
ஐவர் பையில் அடைக்கலம் காத்தவர்
வைபோகம் எங்கும்புகழ் தெய்வங்கள் விநாயகர்
அசாரக் காரரவர் அபிமானங் காத்தவர்
ராஜாவூர் ஐயன்பாதம் நேசம் மறவேனே
உத்தமி எங்கள்உ றந்தை வலநாட்டில்
முத்துமகா மாரிபாதம் நித்தம் துதிசெய்வோம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் ஆயன்ச கோதரி (65)
மலையாள் பரங்கிமுத்து மாரி பெரியவள்
மலையாள் பரங்கிஉல காத்தாள்வில் லாத்தாளாம்
குலதெய்வம் என்றுநாங்கள் நிதமும் துதிசெய்வோம்
பூத தயவுகளும் பெருமைகளும் உண்டாக
மாதா பெரியவள் பாதம்ப ணிகுவோம் (70)