உறந்தைவளர் நாட்டுவளப்பம்/சிவன் வடிவழகும் திருவிளையாடலும்

விக்கிமூலம் இலிருந்து
திங்கள் சிரத்தவர் திரிநூ லணிந்தவர்
மங்கை பெரியவள் பங்கார் குரும்பீசர்
மானும் மழுவும்ம தியும்த ரித்தவர்
ஞானம் மிகுந்தவர் நல்லகு ரும்பீசர்
கரியை உரித்தவர் காளைமேல் கொண்டவர் (25)
நரியைப் பரியாக நடத்தும் குரும்பீசர்
ஆலவிடம் உண்டவர் அமிர்தங் கடைந்தவர்
காலனை உதையக்கணை கண்டார் குரும்பீசர்
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பால் அடிபட்டார்
கட்டிப் பிடித்தமார்க் கண்டர் பயந்தீர்த்தார் (30)
திரிநூ லணிந்தவர் செந்தா மரைப்பாதம்
பரவைக்குத் தூதுசென்று வந்தார் குரும்பீசர்
கனக சபையில்நிதம் நடனம் புரிந்தவர்
மதனை எரித்துஇங்கே வந்தார் குரும்பீசர்
பொக்கணம் எடுத்தவர் புலித்தோ லணிந்தவர் (35)
முக்கண் தரித்தவர் முதலே குரும்பீசர்
சோளிகை எடுத்தவர் சூரர்களை வென்றவர்
காளியுடன் வாதுசென்று கண்டார் குரும்பீசர்
எரியை மதனைக்காத்த ஏழைபங் காளராம்
பெரியவள் பாதாரம் மதிசூடும் நாதராம் (40)
திருக்காக் குரும்பர்பாதம் சுமந்தேன் தலைமேலே