உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/ஐயரவர்களின்‌ வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களின்
வாழ்க்கை நிகழ்ச்சிகள்

19-2-1855 திங்கட்கிழமை. தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியமூலை என்னும் ஊரில் பிறந்தார்.

1861 அரியிலூர் சடகோப ஐயங்காரிடம் பாடங் கேட்கத் தொடங்கியது.

1862 உபநயனம்—பெயர்: வேங்கடராமன்.

16-6-1868 திருமணம்-மனைவி : மதுராம்பாள்.

1869 செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் யாப்பருங் கலக்காரிகை பாடம் கேட்டது.

1871 மாயூரத்தில் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவனாகச் சேர்ந்தது. ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்தித்தது: ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். வித்துவான்தியாகராச செட்டியார் இவர்களுடைய தொடர்பும் ஆதரவும்.

1872 ஆசிரியருடன் திருவாவடுதுறை சென்றது.

1873 உத்தமதானபுரத்தில் கவி இயற்றியது. ஆவுடையார் கோயிலில் புராணப் பிரசங்கம்.

1874 செங்கணத்தில் முதன்முதல் நூல் இயற்ற ஆரம்பித்தல் நூலின் பெயர் "நீலி இரட்டை மணிமாலை." திருவிளையாடற் புராணப் பிரசங்கம்.

11-2-1876 ஆசிரியர் மறைவு. வேதநாயகம் பிள்ளை சந்திப்பு. திருவாவடுதுறை மடத்தில் ஆசிரியராகவும். மாணாக்கராகவும் பணியாற்றல்.

1877 ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை ஐயாவர்களின் தந்தையார் கண்டு உரையாடியது. ஐயரவர்கள் வசிப்பதற்குத் தேசிகர் இல்லம் அமைத்துக் கொடுத்தது. மாத வேதனம் அளித்தமை.

1878 மதுரை, திருநெல்வேலிப் பயணம். ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்குச் சன்மானம் அளித்தது.

1880 வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களின் விடா முயற்சியால், கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பெற்றது. சேலம் இராமசுவாமி முதலியார்

சந்திப்பு. சீவகசிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம், ஜைன நண்பர்கள் தொடர்பு.

1883 திருக்குடந்தைப் புராணப் பதிப்பு.

1884 பரம்பரைச் சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து மீட்டது. முதற் தடவை சென்னை வருகை.

1885 மகாமகம். திருவாவடுதுறை மகாசந்நிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்கள் தந்தையாருக்கும் ஐயரவர்களுக்கும் பீதாம்பரம் அளித்ததுடன் ஐயரவர்கள் குமாரர் கலியாண சுந்தரையருக்கும் சந்திர ஹாரம் என்னும் பொன்னாபரணம் அளித்தது.

1887 சீவகசிந்தாமணி பதிப்பித்து முடிந்து, தமிழுலகில் உலாவ ஆரம்பித்தது.

1888 திருவாவடுதுறை மகாசந்நிதானம் பரிபூரணம் எய்தியது. தியாகராச செட்டியார் மறைவு: நெல்லை மாவட்டத்தில் ஏடு தேடத் தொடங்கியது.

1889 பத்துப்பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. சிலப்பதிகாரப் பதிப்பு ஆரம்பம். சென்னைக்கு வந்து பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய "கச்சிக்கலம்பகம்" அரங்கேற்றத்தில் கலந்துகொண்டது.

1891 சீவகசிந்தாமணி புத்தகத்தைக் கண்டு பாரிஸ் பேராசிரியர் ஜூலியன் வின்ஸோன் அவர்கள் பாராட்டி எழுதியது. குமாரனுக்கு உபநயனம்.

1892 சேலம் இராமசுவாமி முதலியார் மறைவு சிலப்பதிகாரம் பதிப்பித்து முடிந்தது. பாஸ்கர சேதுபதி அவர்களின் அழைப்பின் பேரில் இராமநாதபுரம் சென்று நவராத்திரி விழாவில் கலந்துகொண்டது.

27-1- 1893 மகாவைத்தியநாதையர் நிரியாணம்.

7-10-1893 தந்தையார் மறைவு.

10-12-1893 பூண்டி அரங்கநாத முதலியார் மறைவு.

1894 புறநானூறு பதிப்பு. பாண்டித்துரைத் தேவர் சந்திப்பு. கும்பகோணத்தில் வீடு வாங்கியது. புறப்பொருள் வெண்பா மாலை பதிப்பு.

1895 ஜி.யூ.போப் அவர்களுடன் கடிதத்தொடர்பு.

1898 மணிமேகலை பதிப்பு நிறைவேறியது.

1903 சென்னை மாநிலக் கல்லூரிக்குக் குடந்தையிலிருந்து மாற்றப் பெற்றது.

1-1-1906 மகாமகோபாத்தியாய" பட்டம் பெற்றது. கல்வி இலாகா ரூ. 1000 வழங்கியது.

சென்னை கவர்னர் லார்டு கார்மிகேல் பிரபுவோடு சம்பாஷித்துப் பாராட்டப் பெற்றது. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பு நிறைவேறியது.

1909 சென்னையில் வீடு வாங்கி "தியாகராச விலாசம்" என்று பெயரிட்டது.

12-12-1911 ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவினையொட்டி ரூ 100/-காரனேஷன் பென்ஷன் ஆண்டுக்கொரு முறை வழங்கப்பெற்றது.

24-1-1912 கவர்னர் துரை தமிழ் வகுப்பிற்கு வந்து 1½ மணி நேரம் இருந்தது. தமிழ்ச் சுவடிகளைக் காட்டி வாழ்த்துப்பா அளித்தது.

1916 மைசூர் யூனிவர்ஸிடியில் திராவிடியன் போர்டில் மெம்பராக நியமனம்.

31-1-1917 காசி பாரத தர்ம மகாமண்டலத்தாரால் 'திராவிட வித்யா பூஷணம்' பட்டம் பெற்றது.

1-3-1917 காசி சர்வகலாசாலையில் போர்டு மெம்பர், பரீக்ஷகர் நியமனம்.

8-5-1917 மனைவியார் வியோகம்.

1-4- 1919 வேலையிலிருந்து ஓய்வு பெற்றது. (39 வருட உழைப்புக்குப் பின்), டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் வீட்டிற்கு வந்து அளவளாவியது.

13-1-1922 மேன்மைதங்கிய வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது 'கில்லத்து'ப் பெற்றது.

12-2-1924 பெருங்கதை பதிப்புப் பூர்த்தி

1924-1927 சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரி பிரின்ஸ்பாலாகப் பதவி ஏற்றுப் பல நன்மாணாக்கர் களுக்குப்பாடம் சொல்லியது.

1925 காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களால் "தாக்ஷிணாத்ய கலாநிதி" என்ற பட்டம் சூட்டப்பெற்றது.

1927 சென்னை, சர்வகலாசாலையின் ஆதரவில் 'சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்' என்ற தலைப்பில் 10 தினங்கள் சொற்பொழிவு ஆற்றியது.

21-3-1932 சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் 'டாக்டர்! பட்டம் அளிக்கப்பெற்றது.

1932 தமிழன்பர் மகாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்தது.

4-8-1938 ஆந்திர யூனிவர்ஸிடி தமிழ் போர்டில் மெம்பர் ஸ்தானத்தை ஒப்புக்கொண்டது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுதி வெளியிட்டது.

1935 எண்பதாவது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப் பெற்றமை.

1937 குறுந்தொகைப் பதிப்பு.

16-1-1087 குடந்தை, கோபாலராவ் நூல் நிலையத்தில் ஐயரவர்கள் படத் திறப்பு

6-2-1937 சநாதன தர்ம மகா நாட்டில் கலந்து கொண்டது.

27- 8-1987 பாரதீய ஸாஹித்ய பரிஷத் - மகாத்மா காந்தி தலைமை வரவேற்புரை நிகழ்த்தியது. மகாத்மா காந்தியுடன் உரையாடல்.

11-1-1938 சென்னையில் வைஸ்ராய் நடத்திய விருந்தில் கலந்துகொண்டது.

15-8-1938 ஆக்ஸ்போர்டு ஸம்ஸ்கிருத ஆசிரியர் பிரசங்கத்திற்குச் சென்றது. மணிமேகலையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.

1-8-1939 கொப்பனாப்பட்டிக் கல்லூரித் திறப்பு விழாவில் முன்னுரை

25-11- 1939 செவ்வைச்சூடுவார் பாகவதம் குறிப்புரை எழுத ஆரம்பித்தது.

28-11-1939 டி.கே.ஸி. அவர்களும், கல்கி அவர்களும் வீட்டிற்கு வந்து உரையாடினர்.

7-12-1989 ஹிந்து மத்திரிகை வைரவிழா வாழ்த்து

15-12-1939 கல்கி அவர்களிடம் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளியிட 'சுய சரிதம்’ முதல் அத்தியாயம் எழுதிக்கொடுத்தது.

மார்ச்சு 1940 ஸ்டான்லி மருத்துவமனையில் சஸ்திர சிகிச்சை பெற்றது.

12-6-1940 கூத்தனூர் கலைமகள் விஷயமாகப் பாடல்கள் எழுதி அனுப்பினமை.

5-8-1941 தமிழிசையைப் பற்றி டைகர் வரதாசாரியாருக்கு அபிப்பிராயத்தை எழுதியனுப்பியது.

29-9- 1941 திருச்சி ரேடியோவில் 'எது தமிழ்' என்பது பற்றி ஒரு பேச்சு.

7-12-1941 கனகாபிஷேகம்-கொள்ளுப் பேரனால்

13-1-1942 இரவு மெத்தைப் படியில் தவறி விழுந்தது.

29-1-1942 டாக்டர் திருமூர்த்தி அவர்கள் வந்து பார்த்து, அவரது ஆலோசனையின்படி சிவராம கிருஷ்ணையரைக் கொண்டு நிழற்படம் எடுக்கப்பட்டது.

12-2-1942 திருக்கழுக்குன்றம் சென்றது.

27-4-1942 மாலை குளிர் ஜுரம் கண்டது.

28-4-1942 மாலை 3-35க்கு இறைவனடி சேர்ந்தது.

5-7-1943 "டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்" தொடக்க விழா - திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்கள் ஆதரவில்

1948 உருவச்சிலை மாநிலக் கல்லூரியில் திறக்கப்பெற்றது.

1955 நூற்றாண்டு விழா.


பிழையும் திருத்தமும்

பக்கம் வரி பிழை திருத்தம்
10 26 இவர்கள் இவர்களில்
17 27 ஜீரணமாவதில்லை ஜீரணமாவதில்லை”
145 17 தாத்தாத்திரேய தத்தாத்திரேய
193 1 சீர்காழிக்கோவை சீகாழிக்கோவை
193 21 கவனித்தராம் கவனித்தாராம்
194 6 ஐயரிமிடருந்து ஐயரிடமிருந்து
197 8 எதுவகையில் எதுகையில்
200 27 பிறிகு பிறகு
201 6 இருக்கிறார்களா? இருக்கிறார்களா?”
,, 7 ,, ,,
464 35 சார்பினாலோா சார்பினாலோ
579 20 ராஜகோபலார்ச்சாரியர் ராஜகோபாலாச்சாரியர்
699 18 ஒருங்காக ஒழுங்காக
716 11 வைஷ்ணவ வைஷ்ணவர்