ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை

விக்கிமூலம் இலிருந்து

25. கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை


துரியோதனன் சபையில், துரெளபதி மானபங்கப் படுத்தப்பட்டாள். துச்சாதனன் அவள் புடவையை உரியத் தொடங்கினான். பாண்டவர்கள் ஐவரும் செய்வதறியாது கவிழ்ந்த தலையராய்க் கண்ணீர் உகுத்து நின்றனர்.

வீடுமன், துரோணன், கிருபன் முதலிய சான்றோர்களும் வாய் திறக்கவில்லை.

கற்புக்கரசி காந்தாரியோ “அஞ்சுடன் ஆறு ஆகட்டும்! அதற்கென்ன எழுந்து போடி?” என்பதுபோல் மூச்சு விடாமல் மெளனமானாள்.

இந்நிலையில் செயலிழந்த பாஞ்சாலி: “கோவிந்தா! கோவிந்தா!” என்று புடவை பற்றிய கையைத் தலைமேல் தூக்கிக் கண்ணனைச் சரணம் அடைந்தாள்.

துச்சாதனன் உரிய உரியத் துகில் வளர்ந்தது. ஆயிரம் யானை பலம் கொண்ட துச்சாதனன் சோர்ந்து ஓய்ந்து கீழே சாய்ந்தான். திரெளபதி மானம் இழக்காமல், மன்னர் சபையில் மாண்புடன் நின்றிருந்தாள்.

பாஞ்சாலி கூப்பிட்டவுடன் கண்ணன் புடவை சுரந்தானே! ஏன்? இப்படி ஒரு வினா எழுந்தது ஒரு நாட்டுப்புறக் கலைஞன் மனத்தில்.

தன் கற்பனையால் அத்ற்கு ஒரு காரணம் கண்டு பிடித்தான். இன்னொருவன் வேறொரு காரணம் கற்பித்தான். அந்த இரண்டையுமே காண்போம்.

ஒருமுறை கன்ன்ன் கத்தியால் பழம் அறுத்துக் கொண்டிருந்தான். அந்தக் கத்தி, கண்ணன் கையில் பலமாகப் பட்டுவிட்டது. இரத்தம் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பலர் அங்கே திரண்டிருந்தனர் கண்ணன் காயம் பட்டதற்கு என்ன செய்யலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை வாயினால, தம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொணடிருந்தனர்.

பாஞ்சாலி, அவர்களைப் போல் அனுதாபப்படவில்லை இராஜபத்தினியாகிய அவள், புதுப்பட்டுப் புடவை கட்டியிருந்தாள் உடனே அப்புடவையில் ஒரு பகுதியைக் கிழித்துத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் கையில் கட்டுப்போட்டாள். கைக்காயம் உடனே ஆறிவிட்டது உடனே எப்படி ஆறும்!

கண்ணன் அங்கிருந்தவர்களின் மனநிலையைச் சோதிக்கத் தானே கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டான் எல்லோரும் உதவ முன்வராத நிலையில் பாஞ்சாலி தானே பட்டுச்சேலை என்று பாராமல் கிழித்துக் கட்டுக் கட்டினாள்?

பாஞ்சாலி செய்த உதவிக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று நெடுநாளாகக் காத்திருந்தான் கண்ணன்.

பாஞ்சாலிக்குச் செய்யவேண்டிய நன்றிக்கடன், சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல் வளர்ந்து கொண்டே இருந்தது.

அந்த நன்றிக் கடன் தீர்க்கும் வாயப்பு, துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரு புடவைத்துணுக்குக்காக மலைமலையாகப் புடவைகளைக் குவித்த பின்பே, கணணன் தன் கடன் சுமை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தான்.

இது ஒரு கலைஞனது கற்பனை.

இனி மற்றொருவன் கற்பனையையும் காண்போம்.

ஒரு முறை கண்ணன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, அவன் கட்டியிருந்த ஆடையை ஒரு மீன் இழுத்துக் கொண்டு மறைந்துவிட்டது.

ஆடையில்லாமல் கண்ணன் கரை ஏறுவது எப்படி? கரை ஏறினாலும் வீடுவரை செல்வது எப்படி? தண்ணீருக்குள் மூழ்கியவாறே தத்தளித்துக் கொண்டிருந்தான். குளிர் உடலை வாட்டுகின்றது பசியோ காதை அடைக்கின்றது அவ்வழியே பலர் சென்று கொண்டுதான் இருந்தனர் யாருக்கும் கணணன் நிலை கண்டு உதவத் தோன்றவிலலை அவர்கள் வழியே போயக் கொண்டிருந்தனர்

அப்போது, பாஞ்சாலி அவ்வழியே வரநேர்ந்தது கண்ணன் நீரில் தததளிப்பதைப் பார்த்தாள அவன் கரை ஏறாமைக்குரிய காரணத்தையும் உயத்து உணாந்து கொண்டாள். உடனே தான் அணிந்திருநத விலையுயர்ந்த படடுச் சேலையில் ஒரு பகுதியைக் கிழித்துக் கண்ணனிடம வீசினாள கண்ணன் அதை உடுத்துக் கொண்டு கரை ஏறினான்.

காலத்தினால் செயத பாஞ்சாலியின் உதவி ஞாலத்தின் மாணப் பெரிதனறோ? இந்த நன்றிக் கடன், வட்டிபோல் வளர்ந்து கொண்டே இருந்தது. இக்கடனைத் தீர்ககும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான் அந்த வாய்ப்பைத் துரியோதனன உணடாக்கித் தந்தான், கணணன் தன் கடனைத் தீர்க்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொணடான்