ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க மன்னனின் குலகுரு ஆவார். அவர் குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண் கேட்க சென்றார். அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர் பாண்டியர் சோழரை விட தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் பாடினார்.

0. ஒட்டக்கூத்தர் பாடல்கள்
பாடியவர் - ஒட்டக்கூத்தர்
முன்னிருந்தவர் - பாண்டிய வேந்தன், புகழேந்தி
துறை - பாண்டியர் மகளை குலோத்துங்கனுக்கு பெண்மறுத்ததை எதிர்த்து பாண்டிய அரசரை எள்ளிநகையாடுதல்
ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?

விளக்கம்[தொகு]

 1. சோழனின் ஆர் மாலைக்கு பாண்டியனின் வேம்பு மாலை ஈடாகாது.(ஆர் - சோழரின் மாலை, வேம்பு - பாண்டியரின் மாலை)
 2. சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம் ஈடாகாது.(ஆதித்தன் - சோழர் சூர்யவம்சத்தை சேர்ந்தவர், அம்புலி - பாண்டியர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்)
 3. மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது.
 4. புலிக்கு மீன் இணையாக முடியாது. (பாண்டியர் கொடி - மீன், சோழர் கொடி - புலி)
 5. உறந்தைக்கு கொற்கை ஈடாக முடியாது. (உறந்தை - சோழர் தலைநகரம், கொற்கை - பாண்டியர் தலைநகரம்)
 6. மொத்தத்தில் சோழ நாட்டுக்கு பாண்டிய நாடு ஈடாக முடியாது.

பதில் பாடல்[தொகு]

ஒட்டக்கூத்தர் பாண்டியரை எள்ளிநகையாடியதை எதிர்த்து பாண்டியவை புலவர் புகழேந்தி பின்வரும் பாடலை பாடினார்.

1. புகழேந்தி பாடல்
பாடியவர் - புகழேந்தி
முன்னிருந்தவர் - ஒட்டக்கூத்தர்
துறை - ஒட்டக்கூத்தர் பாண்டியரை எள்ளிநகையாடியதை எதிர்த்து பாண்டியவை புலவர் புகழேந்தி பாடியது
ஒருமுனி நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையட் டுறந்தையிலோ அம்மானே?
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே?
சிவன் முடியிலேறுவதஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரில் காவிரியோ வையையோ அம்மானே?
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே?
பரவை பரந்ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே?
பாண்டியனார் பராக்கிரம்மம் பகர்வறிவ தம்மானே?

விளக்கம்[தொகு]

 1. அகத்தியர் நேரியில் சங்கம் அமைத்து உறை அமைக்கவில்லை. பாண்டிய நாட்டிலேயே சங்கம் அமைத்தார்.
 2. சிவனின் 64 திருவிளையாடல்களும் உறந்தையில் நிகழவில்லை மதுரையிலேயே நிகழ்ந்தது.
 3. கரியமால் புலி அவதாரம் எடுத்ததில்லை. ஆனால் மீன்(மச்ச) அவதாரம் எடுத்திருக்கிறார்.
 4. சிவன் முடியில் சூரியனை சூடவில்லை. சந்திரனையே சூடியுள்ளார்.
 5. பேயோட்டுவதற்கு மருத்துவத்துக்கும் வேப்பிலையே உதவுகிறது. ஆர் உதவாது.
 6. கடல் பாண்டியர்களின் அடி பணிந்ததாக தான் வரலாறு.
  1. உக்கிரகுமாரன் - திருவிளையாடல் புராணம்.
  2. நிலந்தருதிருவின் பாண்டியன் - தமிழ் சங்க இலக்கியம்.சோழர் எவரையும் பணியவில்லை.
 7. இத்தனை பெருமைகளுடைய பாண்டியர் வீர செயல்களை விளக்குவது கடினம்.