உள்ளடக்கத்துக்குச் செல்

ஓர் விருந்து அல்லது சபாபதி/சபாபதி சங்கீதம் கற்றது

விக்கிமூலம் இலிருந்து

சபாபதி சங்கீதம் கற்றது.
ஒரு துணுக்கு

நாடக பாத்திரங்கள்.-சபாபதி முதலியார், சபாபதி, கிருஷ்ணசாமி முதலியார்,

இடம்:—A room in Sabapathy Mudaliar's house

Enter Sabapathi Mudaliar.

S. M.
What is this வவுத்தெரிச்சல்! I must learn this, இல்லாப் போனா all useless, ஒண்ணும் பிரயோஜனமில்லை. மச்சான் பாடரான், எனக்குப் பாடத் தெரியாதுண்ணா, அவமான case ஆயிருக்குது! -அடே சபாபதி!
Enter Sabapathi.
ச.
ஏம்பா.
S. M.
அடே சபாபதி, இந்தப்பக்கம் கதவண்டை நிண்ணுக்கினு ஒர்த்தரையும் உள்ளே உடாதே, யாரானா வந்தா அய்யா ரொம்ப வேலையாயிருக்கிறார், இண்னு சொல்லி விடு-போ.

(Exit Sabapathi)

S. M.
(Begins singing) அங்கிங்கெனாதபடி-

Re-enter Sabapathi.

ச.
ஏம்பா, என்னா வேலையாயிருக்கிறார் இண்ணு கேட்டா என்னா சொல்றது? அத்தே சொல்லல்லெயே யப்பா.
S. M.
அதெல்லாம் உனக்கென்னா? அது ரகசியம், ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது, போ.
ச.
எனக்கு மாத்திரம் சொல்லிடு அப்பா, நானு ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன்.
S. M.
Damn it! உனக்குக் கூட சொல்லக் கூடாது. போ.

(Exit Sabapathi)

S. M.
(Begin singing)அங்கிங்கெனாதபடி-
ச.
ஏன்? (from within)

Re-enter Sabapathi.

ச.
என்னெ கூப்டையா யப்பா?
S. M.
நான் கூப்டலையே.
ச.
என்னமோ கூச்சல் கேட்டது-நீ கூப்டையாங் காட்டிக்கினு நினைச்சிக்கினே.
S. M.
Nonsense, போ வெளியே!
ச.
இல்லே யப்பா, நீ கோவிச்சிக்காதே, ஒரு சந்தேகம் கேட்டுக்கினு போலாம்னு வந்தேன்.
S. M.
என்னாடா அது சந்தேகம்?
ச.
யாரானா வந்தாதான் வேலையாயிருக்கிரே இண்ணு சொல்லணும், யாரும் வராப்போனா என்னா செய்யரது? அத்தே மாத்தரம் சொல்லிடப்பா.
S. M.
ஏண்டா மடையா இது கூடவா நான் சொல்லணும், யாரும் வராப்போனா நல்லதாச்சு.
ச.
யாரும் வராப்போனா நல்லதாச்சோ, சரி, (போகிறான்)
S. M.
(பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாபடி-

சபாபதி மறுபடி வருகிறான்.

ச.
நல்லதாச்சப்பா, நல்லதாச்சப்பா!
S. M.
என்னாதுடா அது? என்னா நல்லதாச்சு?
ச.
நீ தாம்பா சொன்னே; யாரும் வராப்போனா நல்லதாச்சிண்ணு. ஒர்த்தரும் வல்லெ அப்பா, ரொம்ப நல்ல தாச்சு!
S. M.
ஏண்டா Idiot! அத்தே சொல்லரத்துக்கா வந்தே இங்கே? இன்னொரு தரம் இந்த பக்கம் வந்தேண்ணா உன் மண்டயே ஒடச்சுடுவேன் போ. (சபாபதி போகிறான்)
S. M.
(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

வேறு வழியாக சபாபதி மறுபடி வருகிறான்.

ஏண்டா! தடிக்கழுதை!-
ச.
என்னாப்பா சும்மா கோவிச்சிக்ரே! அந்த பக்கம்தானே வரக் கூடாது இண்ணே, இந்த பக்கங்கூடமா வரக் கூடாது இண்னே?
S. M.
என்னா regular idiot ஆயிருக்கிறான்! இவனைக் கட்டிக் கினு அழ வேண்டியதாயிருக்கிறது. என்னாத்துக்குடா வந்தே இங்கே!
ச.
(Smiling) இல்லேப்பா, உன் ரகசியம் கண்டு புடிச்சுட்டேம்பா -நீ பாட்டு பாடரேயப்பா.
S. M.
இருந்தா என்னடா! போ! உன் வேலையை பார்! (சபாபதி போகிறான்.)

(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி

சபாபதி மறுபடி வருகிறான்.
ச.
(crying) எம் மண்டயே ஓனும்ணா ஒடச்சூடப்பா! என்னாலே வெளியிலே யிருக்க முடியலே யப்பா!
S. M.
ஏண்டா?
ச.
நீ பாடரத்தே கேட்டா எனக்கு கூட கொஞ்சம் பாட்டு வருதப்பா.
S. M.
கொஞ்சம் பாட்டு வரதாவது! போயா beggar வெளியே, (அவனை வெளியே தள்ளி கதவை சாத்துகிறார்.)
(பாட ஆரம்பிக்கிறார், அங்கிங்கெனாதபடி-
ச.
(Sings outside) அங்கிங்கெனாதபடி-
S. M.
(Opens the door and drags Sabapathi by the ear) ஏண்டா,-என்னா செய்யரே வெளியே?-
ச.
நா மின்னேயே சொன்னனே யப்பா. நீ பாடரத்தே கேட்டு எனக்கு கூட கொஞ்ச பாட்டு வந்தது, பாடனேயப்பா,
S, M.
இன்னொரு தரம் நீ பாடனையா, உன்னே ஓத ஒதணு ஒதச்சி, அறை அறை இண்ணு அறைஞ்சி, குட்டு குட்டுண்ணு குட்டி, கும்மு கும்முண்ணு கும்மி dismiss பண்ணிடுவேன்.
ச.
என்னெ ஒதெ ஒதெண்ணு ஒதச்சு, அறை அறை இண்ணு அறைஞ்சி, குட்டு குட்டுண்ணு குட்டி, கும்மு கும்முண்ணு கும்மி, dismiss பண்ணிவிடுவெயல்லா!
S, M.
ஆமாம் ! (அவனை வெளியே தள்ளித் கதவைத் தாள் இட்டு பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாபடி-
ச.
(கதவை தபதபவென்று தட்டுகிறான்) அப்பா! அப்பா!
S, M.
What a nuisance! என்னடா அது (opens the door)
ச.
நான் இங்கிருந்தே சொல்ரேயப்பா, உள்ளே வந்தாதான் மண்டயே ஒடச்சூடு வேண்ணையா. ரொம்ப அவசரமான சமசாரம் அப்பா.
S, M.
என்னடா அவ்வளவு அவசரமான சமாசாரம்! உள்ளே வந்து சொல்.

சபாபதி உள்ளே வருகிறான்,

ச.
நீ தப்பா ஒண்ணு நெனச்சிக்காதே அப்பா, இப்பவே சொல்லிட்டே, அப்பரம் என்மேல் கோவிச்சிக்காதே.
S, M.
என்னாடா அது? சீக்கிரம் சொல்.
ச.
நம்ப வண்ணா வந்திருக்கிறான் அப்பா-வாஸ்த்தவமா வந்திருக்கிறான் அப்பா.
S, M.
ஏண்டா அதனப்பிரசங்கி- (அவனை அடிக்கிறார்)
ச.
(Crying) இதுக்குதாம்பா அப்பவே சொன்னே! என்னையேம்பா சும்மா அடிக்கிரே! நான் அப்பவே தப்பா நீ நெனச்சிக்கக் கூடாது இண்ணு சொன்னேனாயில்லையா? நான் என்னா உன் பாட்டே கேட்டு வண்ணா வந்தாண்ணு சொன்னேனோ? வண்ணான் சலவே கொடுக்க வந்தாண்ணு சொன்னே, சும்மா என்னே அனியாயமா அடிச்சையா, உனக்கு பாட்டே வராது போ!
S, M.
இல்லே, இல்லே போ, நீ நல்லவந்தான் போ, உன்னே நான் அடிக்கலே போ.
ச.
ஆ! அப்படி என்னெ சமாதானப் படுத்தினேயிண்ணா உனக்கு பாட்டு சீக்கிரம் வரும். அப்பா, நான் ஒரு யுத்தி சொல்லித் தர்ரேன். இப்படி யெல்லாம் பாட்டு வராதப்பா உனக்கு. ஒரு அமோனியா பொட்டி வாங்கி வச்சிக்கோ. அப்பதாம் வரும்.
S, M.
அதென்னாடா அது? அமோனியாப் பெட்டி என்னடா அது!
ச.
Shopலே விக்குது அப்பா அமோனியா பெட்டி,
S, M.
ஓ! அதுவா? Alright, அப்படியே செய்ரேன்.
(Takes out his pocket book and writes a memo). “Please send per bearer a box of Ammonia in my account.” அடே, எதிர் ஷாப்லே போய் வாங்கியாடா இதே. ஜாக்கிரதையா தூக்கிக்கினு வா.

(சபாபதி போகிறான்.)

இந்த வாத்தியப்பெட்டி வர்ரவரைக்கும் சும்மா பாடிகினு இருப்போம். (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

சபாபதி மறுபடியும் வருகிறான்.

ச.
(Brings a bottle of Ammonia)ஏம்ப்பா நீ என்னாப்பா எழுதனே? நான் அமோனியாப் பெட்டி கேட்டாக்கா, இத்தே கொடுத்தாம்பா அந்த கழுத மகன்!
S. M.
என்னாடா! இந்த மருந்தே வாங்கி யாந்தயே!
ச.
இதாம் எழுதினாரு இண்ணு சொன்னான். இல்லை ஐயா, வாத்தியப் பெட்டி ஓணும்னு சொன்னே. போடா, உனக்கு ஒண்ணும் தெரியாது இண்ணு என்னை கல்தா கொடுத்தனுப்பிச்சான்.
S. M.
போனாப்போவுது. இது வாணாம்னு சொல்லி திருப்பி கொடுத்தூட்டு வந்தூடு.
ச.
என்னாத்தேயப்பா திருப்பி கொடுக்கரது? மருந்தையா கல்தாவையா?
S. M.
(சபாபதிக்கு ஒரு கல்தா கொடுக்க அவன் கூச்சலிட்டுக் கொண்டே போகிறான்.) அப்பா, இனி மேலே வர மாட்டான்! (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி-

கிருஷ்ணசாமி முதலியார் வருகிறார், அவர் பின்னால் சபாபதி மறுபடி வருகிறான்.
கி.
என்னா அத்தான், காபுரா பண்ணிகினு இருக்கிறீங்கள்?
S. M.
வா அப்பேன் வா!-வேறொண்ணுமில்லே, இந்த fellow பாட்டு கத்துகோணுமிண்ணா, அதுக்கோசரம் அவனுக்கு பாட்டு கத்து கொடுத்துகினு இருக்கிறேன்.
கி.
சபாபதியா பாட்டு கத்துகினு மிண்ணா? ஏண்டா, என்ன. கத்துகினே? பாடு கேப்போம்.
S. M.
பாட்ரா ! (சபாபதிக்கு கண் அடிக்கிறார்).
ச.
(பாடுகிறான்.) அங்கிங்கெனாபடி- அவ்வளவுதாம் பாட்டு கத்து கொடுத்தாருங்கோ.
கி.
அவ்வளவு போதும் இண்ணைக்கி, சாப்பாட்டுக்கு நாழி ஆச்சி! வாங்க போகலாம். (எல்லோரும் போகிறார்கள்)

காட்சி முடிகிறது.