கணினி களஞ்சியப் பேரகராதி-1./B

விக்கிமூலம் இலிருந்து
B

b : பி : 'பைட்' (byte) அல்லது 'பாட்' (baud) என்பதன் சுருக்கப் பெயர். இருப்பகத்தைக் குறிப்பிடும் இடங்களில் 'பைட் (எண்மி) என்றும் தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போது 'பாட் (செய்தி வேகம்) என்றும் உணர்த்தும் கேபி (KB) - 1000 பைட்டுகள் அல்லது பாட் (தொழில்நுட்ப அடிப்படையின்படி 1கே (1K) என்பது 1024 பைட்டுகளைக் குறிக்கும்).

babbage, charles : பாபேஜ், சார்லஸ் : (1792 - 1871) ஆங்கிலேய கணிதவியலாளர்; கண்டு பிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடிவமைத்தவர். இலக்கமுறை கணிப்பொறிக்கு முன்னோடியாக விளங்கும் 'பகுப்பு' எந்திரத்தையும் உருவாக்கியவர். பாபேஜ் காலத்தில் அவரது எந்திரங்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு வேண்டிய பொறியியல் தொழில் நுட்பங்கள் முன்னேறியவையாக இல்லை.

babble : பிறழவு : ஒரு அமைப் பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற்படும் குறுக்கீட்டுப் பேச்சு.

bachman diagram : பக்மன் வ்ரைபடம்.

back : முந்தைய

backbone : முதுகெலும்பு : அடியாதாரம் : 1. சிறு சிறு பிணையங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தகவல் போக்குவரத்தை ஏற்படுத் தும் பெரும் பிணையம். இணையத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இத்தகைய முது கெலும்புப் பிணையங்கள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் ஆறு முது கெலும்புப் பிணையங்கள் உள்ளன (எ. டு : sprint, MCI) ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்பிலுள்ள பகுதிகள் துண்அலை (microwave) தடங்கள், நிலத்தடி, கடலடிக் கேபிள்கள் மற்றும் செயற்கைக் கோள்களால் இணைக்கப்படுகின்றன. 2. இணையத் தகவல் தொடர்பில் பெருமளவு தகவல் பொட்டலப் பரிமாற்றங்களைச் செயல் படுத்துகின்ற சிறிய பகுதிப் பிணையங்கள். 3. ஒரு பிணையத்தில் தகவல் தொடர்புப் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்கும் இணைப்புக் கம்பிகள். ஒரு குறும்பரப்புப் பிணை யத்தில் பாட்டை (Bus) என்பது முதுகெலும்பாக விளங்கும்.

backbone cabal : முது கெலும்புமறை குழு : இணையத்தில் யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படி நிலை அமைப்பை அறிவித்தல் மற்றும் புதிய செய்திக் குழுக்களை உருவாக்கல் ஆகிய வற்றுக்கு பொறுப்பான பிணைய நிர்வாகிகளின் குழுவைக் குறிக்கும் சொல். இப்போது அத் தகைய மறைகுழுக்கள் இல்லை.

back door : பின்வாசல் : பின் கதவு : ஒரு நிரல் அல்லது முறைமையின் பாதுகாப்புக் கட்டுப் பாடுகளை மீறி உள்ளே நுழையும் வழி. நிரலாக்க வல்லுநர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்களில், பிழை களைக் கண்டறியும் நோக்கில் இத்தகைய பின்வாசல்களை அமைப்பர். பின்வாசல் வசதி நிரலர் தவிர ஏனையோர்க்கு தெரிந்துவிட்டாலோ, மென் பொருள் வெளியிடப்படுவதற்கு முன்பு அத்தகைய பின் வாசல் வசதிகள் நீக்கப்படாவிட்டாலோ (கவனக் குறைவாக), பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்.

backdrop : பின்னணி : பின்னணித் தோற்றம். சிடி ஐ-யில் மற்ற தோற்றங்கள் தெளிவாகத் தெரியும்போது பின்னணி தோற்றப் பகுதியும் முழுவதும்தெரியும்.

back end : பின்னிலை : பின்னணி; பின்அமைவு : 1. கிளையன்/வழங்கன் (Client/Server) பயன்பாடுகளில், வழங்கு கணினியில் செயல்படும் நிரலின் பகுதி. (Client/Server Architecture, Front End என்பதனுடன் ஒப்பிடுக). 2. மொழிமாற்றி (compiler) யின் ஒரு பகுதி. மனிதர்களுக்குப் புரிகிற மூல நிரல் வரைவை (source code), எந்திரத்துக்குப் புரிகிற குறிநோக்கு வரைவாக (object code) மாற்றியமைக்கும் பகுதி.

back-end case : பின்முனை எழுத்து : நிரல் குறியீடுகளை உருவாக்கும் எழுத்துக் கருவிகள்.

back end operation : பின் முனைப் பகுதிகள்; பின்னிலைப் பணிகள்; பின் இயக்கப் பணிகள்.

back-end processor : பின் நிலைச்செயல் : தரவுத் தள எந்திரம் (Data base machine) போன்றது. மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடை முகமாகப் பணியாற்றும் கணினி.

backfilling : பின்புற நிரப்புதல் : 8086 /88 மற்றும் 286 பி. சி. க்களின் வழக்கமான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவ கத்தை ஒதுக்குவது. மூல தாய்ப் பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம்எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவு முகவரிகள் இடப்படுகின்றன. பின்புற நிரப்புதலின் மூலம் டெஸ்க்வியூ போன்ற பல்பணி நிரல்கள் இயங்கவும், விரிவாக்கப்பட்ட நினைவகத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் நிரல்களை அமைக்கவும் முடியும்.

background:பின்புலம்;பின்னணி:1. பன்முகக் கட்டளையிடலில் குறைந்த முன்னுரிமையுள்ள நிரல் செயல்படுத்தும் சூழல். 2. காட்சித் திரையில் காட்டப்பட உருக்களோ வரை பட முன்புலங்களோ இல்லாத திரைப்பகுதி.

background application:பின் புலப் பயன்பாடு.

background colour:பின்னணி வண்ணம்;பின்புல நிறம்: காட்சித்திரையின் பின்னணி நிறம். காட்சித் திரைதுடைக்கப்பட்ட பிறகு ய்ந்த நிறத்துக்குத் திரை திரும்பும்.

background communication:பின்புலத் தகவல் தொடர்பு

background job:பின்புலப் பணி.

background ink:பின்புல மை:அதிகம் பிரதிபலிக்கும் மை. வருடுபொறி கண்டுபிடிக்க முடியாத வகையில் படிவத்தின் பகுதிகளை இது அச்சிடும்.

background noise:பின்னணிண்இரைச்சல்:கம்பியிலோ,வழித் தடத்திலோ அல்லது மின்சுற்றிலோ வந்துசேரும் தொடர்பில்லாத, தேவையற்ற சமிக்கைகள்.

background operation:பின் புல இயக்கம்:ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு நிரலை மொழிமாற்றும் பணியைச் செய்யும்போது,அச்சுப்பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கீடுகளைப் (Interrupt)பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்.

background printing:பின்புல அச்சிடல்;பின்னணி அச்சிடு முறை:ஒர் ஆவணத்தை அச்சிட அச்சுப்பொறிக்கு அனுப்பி விட்டு கணினியில் வேறுபணிகளை மேற்கொள்ளும் முறை.

background processing:பின்னணி செயலாக்கம்:முன்புலத்தில் ஒரு நிரல் செயல்படும் போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு நிரல் இயக்கப்படுவது.

background programme:பின்புல நிரல்:பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது.

background reflectance : பின்னணி பிரதிபலிப்பு : ஒரு எழுத்தைச் சுற்றி ஏற்படும் பிரதி பலிப்பை அளக்கும் ஒ. சி. ஆர் (OCR-Optical CharacterRecognition).

background tasks : பின்புலப் பணிகள்.

backing storage : தாங்கும் இருப்பகம் : பின்னர் பயன் படுத்துவதற்காக வட்டுகள் அல்லது நாடாக்களில் வைக்கப் பட்டிருக்கும் துணை நிலை நினைவகம்.

backing store : பின்தாங்கும் இருப்பு : கணினியின் முதன்மை நினைவகத்திற்கு பின்பலமாக இருந்து தாங்குகின்ற நினைவகம். துணை இருப்பகம் என்றும் அழைக்கப்படுகிறது.

backing-up : பின் ஆதரவு : மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல்.

backlash : பின் விளைவு : எந்திரமுறை செயல்பாட்டின் போது, தாங்குவதன் விளைவாக இரண்டு பல் சக்கரங்களைப் போன்ற சேர்ந்தியங்கும் பகுதிகளின் செயல்.

backline : பின் பகுதி : ஒரு அமைப்பின் அட்டைகளில் மின் சுற்றுகள் மற்றும் எந்திரப் பகுதிகள் இணைக்கப்படுவதுண்டு. இதில் முதன்மை மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படும். தாய்ப் பலகை என்றும் முறைமைப் பலகை என்றும் அழைப்பர்.

backlit : பின்னொளி : திரையின் பின்பக்கத்திலிருந்து ஒளி வருகின்ற எல்சிடி திரை. இதனால் பின்னணி பிரகாச மாகவும் எழுத்துகள் தெளிவாகவும் இருக்கும்.

back-lit display : பின்-ஒளி திரைக் காட்சி : திரைக்குப் பின்னால் ஒளிபடுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.

back panel ; பின் பலகம் : கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கான பல துளைகளுடன்கூடிய பின்புறப்பகுதி.

backplane : பின்தளம்.

backquote : பின்மேற்கோள் குறி.

back slash : பின்சாய்வுக் கோடு : விசைப்பலகையில் உள்ள ஒரு சிறப்புக் குறியீடு.

backspace : பின்னிடவெளி : காட்டியை (Cursor) இடதுபுற மாக ஒரு இடவெளிக்கு நகர்த்துகின்ற விசைப்பலகையின் செயல் பாடு. ஏற்கெனவே தட்டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

backspace character : பின் இட எழுத்து.

backspace key : பின்னிட வெளிவிசை (விரற் கட்டை).

backspace tape : பின் இட நாடா : ஒரு காந்த நாடாவை அது ஆரம்பித்த இடத்திற்கோ அல்லது பதிவேட்டிற்கோ திருப்பி அனுப்பும் செயல்பாடு.

backterium : இனப்பெருக்கி : கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும்.

backtracking : பின்தேடல் : ஒரு பட்டியலை தலை கீழாகத் தேடும் செயல் முறை.

backup : காப்பு நகல்; பின் ஆதரவு; பின்படி ஆதார நகல் : மறுபடி : 1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக் கூடும் என்பதற்காக நிரல் தொடர் அல்லது தகவலுக்கு ஒரு பிரதி எடுத்தல்.

backup and restore : பாதுகாப்பும் மீட்டளிப்பும் : கோப்புகளை பாதுகாப்பு நகல் எடுத்துச் சேமித்தலும், அவற்றை மீண்டும் அந்த இடத்திலேயே மீட்டளித்தலும்.

backup copy : காப்பு நகல் : பின் ஆதரவு பிரதி : மூலத் தரவுத் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன் படுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ள கோப்பு அல்லது தரவுத் தொகுப்பின் பிரதி.

backup disk : காப்பு வட்டு : முக்கிய கோப்புகளின் நகல்ளை வைத்துக்கொள்ளப் பயன் படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக்கூடிய வட்டுப் பெட்டிகளும் பாதுகாப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை.

backup files : காப்புக் கோப்புகள் : ஆதரவு கோப்புகள் : மூலக் கோப்புகள் சேதமாகி அல்லது அழிந்துபோனால், பயன்படுத்தக் கூடிய கோப்புகளின் பிரதிகள்.

backup power : காப்பு மின்சக்தி : மின்சாரம் நின்று போகுமானால் பயன்படுத்தக்கூடிய கூடுதல் மின்சார ஆதாரம்.

backup procedures : காப்பு நடைமுறைகள் : பாதுகாப்பு அளிப்பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தரவுகள் மற்றும் நிரல்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள்.

backup programmer : துணை நிரல் எழுதுபவர் : தலைமை நிரல் எழுதுபவருக்கு உதவியாளராக இருக்கும் ஒரு நிரல் எழுதுபவர்.

backup & recovery : காப்பும் மீட்பும் : வன் பொருள் அல்லது மென்பொருள் பழுது ஏற்படும் போது இழந்துபோன தரவுகளை மீண்டும் பெறக்கூடிய மனிதனாலான, எந்திரத்தினாலான நடைமுறைகளின் இணைப்பு.

backup storage : பாதுகாப்புச் சேமிப்பகம்.

backup utility : காப்புப் பயன் கூறு.

Backus, john : பேக்கஸ், ஜான் : 1957இல் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணக்கீடுகளுக்காக ஃபோர்ட் ரான் (Fortran) என்னும் உயர்நிலைக் கணினி மொழியை உருவாக்கினார்.

Backus Normal Form (BNF) : பேக்கஸ் இயல்பு வடிவம் (பிஎன்எஃப்) : ஆர்டிபி எம்எஸ் விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வடிவம். மூன்றாவது இயல்பு வடிவத்துக்கு அடுத்து இடம் பெறுவது.

back volume : முன்தொகுதி.

backward - chaining : பின்னோக்கி சங்கிலியிடல் : தேவைப்படும் இலக்கிலிருந்து ஏற்கெனவே தெரிந்த உண்மைகளை நோக்கிச் செல்லும் இலக்கு நோக்கிய காரண முறை.

backward compatible : பின்னோக்கிய ஒத்தியல்பு : கீழ் நோக்கிய ஒத்தியல்பு போன்றது.

backward read : பின்புறமாகப் படி : சில காந்த நாடா அமைப்புகளில் உள்ள வசதி. இதில் காந்த நாடா அலகுகள் தலைகீழாக நகர்ந்து கொண்டே, கணினி பின் இருப்பகத்திற்குள் தரவுகளை மாற்றித் தரும்.

backward reasoning : பின்னோக்குக் காரணியம்.

bad block : பழுதுத் தொகுதி : நினைவகத்தில் பழுதான பகுதி. கணினியை இயக்கி வைக்கும் போது, நினைவகக் கட்டுப்பாட்டு பொறி கயபரிசோதனை செய்து கொள்கையில் பழுதான தொகுதியை அடையாளங் காண்கிறது.

badge reader : பட்டை படிப்பி : கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம். bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் ஒரு பகுதி. bad track : பழுதுத் தடம் : நிலை வட்டில் அல்லது நெகிழ்வட்டில், பழுதான பிரிவைக் கொண்டுள்ள ஒரு தடம். இவ்வாறு பழுதெனக் குறிக்கப்பட்ட தடத்தை இயக்க முறைமை புறக்கணித்துச் செல்லும்.

. bak : பாக் : பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு.

balanced line : சமச்சீர் இணைப்புத் தடம் : முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின் கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது.

Baidwin, Frank Stephen பால்ட்வின், ஃப்ராங்க் ஸ்டீஃபன் : பின்னோக்கி வரக்கூடிய நான்கு செயல் முறைகளையுடைய முதல் கணிப்பியை இவர் 1875இல் அமெரிக்காவில் கண்டுபிடித்தார்.

ballistic gain:செலுத்து வினை ஆதாயம்:கட்டி அல்லது கோளச் சுட்டியின் கைவேகத்தை ஒட்டி சுட்டி பயணம் செய்யும். சுட்டியின் கோளம் வேகமாக ஒடினால்,திரையில் சுட்டியும் அதைவிட அதிக தூரம் நகரும்.

balloon help:பலூன் உதவி:குறிப்பிட்ட பொருளின்மீது சுட்டியில் சொடுக்கும்போது,கார்டூன் பாணியில் திரையில் காட்டப்படும் உரையாடல் பெட்டி. மெக்கின்டோஷில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

ball printer:கோள அச்சுப் பொறி:மீண்டும் மாற்றக் கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப் பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும்.

band:கற்றை:தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம். band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை மட்டும் செல்ல அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கும்.

band printer:கற்றை அச்சுப் பொறி:எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத் திற்கு 300 முதல் 2, 000 வரிகள் வரையிலான வேகத்தில் அச்சிடுவதுடன் பல கார்பன் பிரதிகளையும் இதனால் தரமுடியும்.

bandwidth:கற்றை அகலம்:செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும்,குறைந்த அலைவரிசைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்னும் அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தைக் குறிப்பிடுவது.

bandwidth on demand:தேவைக்கேற்ற அலைக் கற்றை: தொலை தொடர்பில் ஒரு தகவல் தடத்தில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும்போது, அத்தகவல் பரிமாற்றத்தின் தேவைக்கேற்ப கையாள் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்.

bank:வங்கி:1. தகவல் தொடர்புகளில்,இரண்டு குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையிலான அலைவரிசைகளின் பரப்பு. 2. செயல்பாட்டின் பரப்பு அல்லது தன்மை 3. வட்டு அல்லது உருளை போன்ற இருமுக சாதனத்தில் வட்டமான பதிவு செய்யும் வழித்தடங்களின் தொகுதி.

bank,data:தரவு வங்கி;தகவல் வங்கி.

banked memory:சேமிக்கப்பட்ட நினைவகம்:வழக்கமான 64 கே ரேம் நினைவகத்தை அதிகப்படுத்தும்முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க 8 துண்மி நுண் செயலகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மெகா பைட் உள்ளவற்றுக்கு முகவரியிடுவது 64. கே. வுக்கு மேல் உள்ள அட்டைகள் தேவைப்படும்போது மட்டும் மென்பொருள் கட்டுப்பாட்டின் மூலம் தொடங்கப்படும்.

banking software:வங்கி பணி மென்பொருள்.

banking through telephone:தொலைபேசி வழி வங்கிப் பணி.

bank switching:தடு இணைபபாக்கம்:மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல்,நிறுத்துதல்,மற்ற அலகுகள் நிறுத்தப்படும்போது ஒன்று மட்டும் செயல்படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரியிடுவதையோ,இயக்கப்படுவதையோ தடுக்கும் கணினி அமைப்பின் வடிவமைப்பு.

banner:பட்டிகை;பதாகை:1. இணையத்தில் வலைப் பக்கத்தின் ஒரு பகுதியில் தோன்றும் விளம்பரப்பட்டிகை. பெரும்பாலும் ஒர் அங்குல அகலத்தில்,வலைப்பக்கத்தின் நீளத்தில் காணப்படும். விளம்பரப்படுத்தப் பட்டுள்ள நிறுவனத்தின் வலைத் தளத்துக்கு அப்பட்டிகையில் ஒரு தொடுப்பு இருக்கும். 2. யூனிக்ஸ் இயக்க முறையில் உள்ள கட்டளை. கணினித் திரையின் ஒரு வரியில் 10 எழுத்துகளில் விதம் பெரிய எழுத்துகளில் செய்திகளைத் திரையிடலாம்.

banner page:பட்டிகைப் பக்கம்:பெரும்பாலான அச்சு மென்பொருள் களால் ஒவ்வொரு அச்செடுப்பின்போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப்பக்கம். பயனாளர் அடையாளத் தகவல்,அச்சுப் பணீயின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட் இப்பக்கம் பயன்படும். 2. மென் பொருள் தொகுப்புகளில் தொடக்கத்தில் தோன்றும் பக்கம். அத்தயாரிப்பை பற்றியும் அதைத் தயாரித்த நிறுவனம் பற்றியும் தகவல் இடம் பெற்றிருக்கும்.

bar:பட்டை.

bar chart:பட்டை நிரல் படம்:வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படும் வரைபடம் காலஅட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது.

bar code:பட்டைக் குறிமுறை;பட்டைக் கோடு;பட்டை வரி:வருடு பொறியினால் படிப்பதற்காக ஒட்டுச்சீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடையாளம் காண பட்டைக் குறியீடு முறை பயன்படுகின்றன. நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்களையும் இரயில் வண்டி பெட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

bar-code reader:பட்டைக் குறிமுறை படிப்பி;பட்டைக் கோடு படிப்பி; பட்டை படிப்பான்;பட்டைக் குறியீட்டுப் படிப்பான்:பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடுகளைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி.

bar-code scanner:பட்டைக் குறிமுறை வருடு பொறி:இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள்களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச்சாதனம். இருப்பு வைப்பதற்காகவோ அல்லது செயலாக்கத்திற்காகவோ எழுத்துகள் இலக்க சமிக்கைகளாக மாற்றப்படுகின்றன.

bar code wand:பட்டைக் குறி முறைக் கோடு.

bare board:வெற்று அட்டை:வெறும் பலகை:எந்த ஒரு மின்னணுச் சாதனமும் இல்லாத அச்சிட்ட மின்கற்று அட்டை

bare bone:வெற்றெலும்பு;சிக்கனப் படைப்பு:வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத,கட்டாயத் தேவையான குறைந்தபட்சக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென் பொருள் தொகுப்பு. மென்பொருளெனில்,கொடுக்கப் பட்ட பணியை நிறைவேற்று வதற்குரிய செயல்கூறுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு கணினி எனில் வேறெந்தக் கூடுதல் புறச்சாதனங்களும் இல்லாமல் கணினி இயங்கத் தேவையான மிகக்குறைந்த வன்பொருள் உறுப்புகளையே கொண்டிருக்கும். இயக்க முறைமை தவிர வேறெந்த மென்பொருளும் அக்கணினியில் இருக்காது. bar printer:பட்டை அச்சகம்:வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப்பட்ட பல பட்டைகளைப் பயன்படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம்.

barrel distortion:உருளைச் சிதைவு:பக்கவாட்டில் வெளியேறக்கூடிய திரைக் காட்சிச் சிதைவு.

barrel printer:உருளை அச்சுப் பொறி:Drum Printer-க்கு வேறொரு பெயர்.

base:அடிவாய்;ஆதாரம் தளம்:1. எண் முறையின் ஒரு மூலம். 2. உமிழிலிருந்து வெளியேற்றப் பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத்திற்கும் உமிழிக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி.

base 2:ஆதார எண் 2.

base 8:ஆதார எண் 8.

base 10:ஆதார எண் 10.

base 16:ஆதார எண்16

base address:தொடக்க முகவரி;அடிப்படை முகவரி;அடி முகவரி:ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தின் முழுமுகவரியை உருவாக்க துணை முகவரியுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி.

base alignment:அடிப்பகுதி ஒழுங்கமைவுதல்:அடிக்கோடுகளில் பலவித அளவுகளில் எழுத்து வடிவங்களை அடுக்குதல்.

base band:அடிக் கற்றை;தாழ் அலைவரிசை:தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும்.

base band coaxial cable:தாழ் அலைக்கற்றை இணையச்சு வடம்.

baseband networking:அடிக்கற்றைப் பிணையம்:அனுப்பும் சாதனத்தில் இலக்கமுறை சமிக்கையை நேரடியாக வைக்கும் தகவல் தொடர்பு முறை.

baseband transmission:அடிக்கற்றை பரப்புகை:கோஆக்சியல் குழாய் மூலமாக குறைந்த தூரத்துக்கு குறைந்த அலை வரிசையில் சமிக்கைகளை அனுப்பும் முறை.

base case disk:அடிப் பெட்டி வட்டு:சிடி1- இல் பேஸ் கேஸ் அமைப்பில் இயங்கக்கூடிய வட்டு.

base case system:அடித் தட்டு அமைப்பு:சிடி1 முழு அமைப்பு அளவுகளில் குறைந்த அளவே பயன் படுத்துதல். base class : அடிப்படை இனக்குழு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்பாளர், மேலாளர், இயக்குநர், மேலாண் இயக்குநர் இந்த இனக்குழுப் படிநிலையில் 'பணியாளர்' என்பது அடிப்படை இனக் குழுவாகும்.

base concept data : தரவுத் தளக் கருத்துரு.

base data : தரவுத் தளம்; தகவல் தளம்.

base/displacement : அடிப்படை/இடமாற்றம் : நினைவகத்தின் குறித்த இடத்தில் இருந்து நிரல்களை இயக்கும் தொழில்நுட்பம். எந்திர மொழி நிரல்களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். நிரல் இயக்கப்படும்போது மாறிய முகவரியை வன்பொருளானது அடிப் படை முகவரிக்கு அளித்து முழு முகவரியைப் பெற்றுத் தரும்.

based system knowledge : அறிவு வழி அமைப்பு.

baseline : அடிப்படைக்கோடு : சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு.

baseline document : ஆதார ஆவணம் : தரவு செயலாக்க அமைப்பில் ஒரு தரவுவை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம்.

Base Management System, Data : தரவுத் தள மேலாண்மை அமைப்பு : சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடக்குவர்.

base memory : அடிப்படை நினைவகம் : ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம்.

base name : அடிப்படைப் பெயர் : புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடப்புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஒரு கோப்பின் முதல் பெயர் எனவும் சொல்லலாம்.

base number : அடிப்படை எண்

base notation : அடிப்படை குறிமானம்.

base point : அடிப்படை எழுத்து வடிவம்;அடிப்படைப் புள்ளி : எண் முறையின் ஆரம்ப நிலை. base register வேறொன்றும் குறிப்பிடவில்லையென்றால் அச்சடிக்கப் பயன் படும் எழுத்து வடிவம்.

base register : அடிப்படைப் பதிவகம் : தொடர்பு முகவரியை முழு முகவரியாக மாற்றும் பட்டியல் பதிவகம்.

Basic : பேசிக் - ஒரு கணினி மொழி (தொடக்கநிலை பல்திறன் குறியீட்டு ஆணைமொழி) : Beginners All Purpose Symbolic Instruction Code என்னும் நீண்ட பெயரின் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்துகளின் சுருக்கப் பெயர். கற்பதற்கும் பயன்படுத்து வதற்கும் ஒரு கணினி நிரலாக்க மொழி. மிகக்குறைவான ஆணைகளும் எளிய சொற்றொடர் வடிவங்களும் உடையது. டார்ட் மவுத் கல்லூரியில் ஜான் கெம்னி மற்றும் தாமஸ் குர்ட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. சொந்தக் கணினியிலும் வணிக, தொழில் துறை, நுண்கணினிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

basic contents : அடிப்படை உள்ளடக்கங்கள்.

basic FORTRAN : அடிப்படை ஃபோர்ட்ரான் : ஃபோர்ட்ரான் நிரலாக்க மொழியில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில் ஒன்று.

Basic Input Output System (BIOS) : அடிப்படை உள்ளீட்டு/வெளியீட்டு முறைமை : வட்டு இயக்கி தொடர்பானது தவிர மற்ற உள்ளீட்டு / வெளியீட்டு பணிகளைக் கட்டுப்படுத்தும் செயலாக்க அமைப்பின் பகுதி.

BASIC in ROM : ரோமில் பேசிக் : பயன்படுத்துவோருக்கு எப்போதும் கிடைக்கும் வகையில் படிக்க மட்டும் நினைவகத்தில் சேமித்து வைத்துள்ள அடிப்படை நிரல் மாற்றி.

basic language : அடிப்படை கணினி மொழி.

Basic linkage : அடிப்படை தொகுப்புகை : ஒரு நிரலின் சிறு செயல்கூறு அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே மாதிரியான விதிமுறைகளையே பின்பற்றும்.

BASIC PLUS : பேசிக் பிளஸ் : பேசிக் மொழியை நீட்டித்த மொழி. தரவுவைக் கையாளுதல் போன்ற சக்திமிக்க செயல்திறன்கள் சேர்க்கப்பட்ட பேசிக் மொழி.

. bat : . பேட் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி நிரல் கோப்புகளை அடையாளங் bat காணப் பயன்படும் வகைப் பெயர் (Extention), . பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைகள் . பேட் கோப்பில் இடம் பெற முடியும்.

bat : வளைவு : மின்னணு சாதனங்களைப் பொருத்தக்கூடிய அலமாரி அல்லது அடுக்கு கருவிகளின் வளைவு என்றும் அழைக்கப்படும்.

BAT : பேட் : ஒரு கோப்பு வகை

batch : தொகுதி : 1. ஒரு கணினியில் செயலாக்கத்திற்காக ஒரே தொகுதியாகக் கருதப்படும் நிரல்கள் அல்லது பதிவுகளின் குழு. 2. தொகுதி முறை செயலாக்கத்தைப் பயன்படுத்துதல்.

batch control : தொகுதிக் கட்டுப்பாடு : தகவலின் சரியான தன்மையை உறுதி செய்ய கட்டுப்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை இது குறிப்பிடுகிறது.

batch control document : தொகுதிக் கட்டுப்பாட்டு ஆவணம் : உள்ளீட்டு தரவு தொகுதியைக் கொண்ட கட்டுப்பாட்டு ஆவணம். இதில் கட்டு எண், தொகுப்பு தேதி, ஆவணங்களின் எண்ணிக்கை, உள்ளீட்டு தரவுவின் கட்டுப்பாட்டு மொத்த எண்ணிக்கைகள் போன்ற தரவு இருக்கும்.

batch file : தொகுதிக் கோப்பு : வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்படுகின்றன.

batch file transmission : கோப்புத் தொகுதி அனுப்புகை : ஒரேயொரு கட்டளை மூலம் கோப்புகளின் தொகுதியை அனுப்பி வைக்கப் பயன்படும் கட்டளை

batch job : தொகுதி வேலை.

batching : தொகுதிப்படுத்தல்; தொகுதியாக்கம்.

batch processing : தொகுதிச்செயலாக்கம்; தொகுப்பு முறை : 1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நிரல் தொகுதியாக்கப்பட்டு செயல் batch processing mode battery படுத்தப்பட்ட பின் திருப்பி அளக்கப்படுகிறது. பயனாளருக்கு எந்திரத்துடன் நேரடி தொடர்பு இல்லை. 2. நீண்ட காலமாக சேர்க்கப்பட்டு வந்த ஒரு தரவுத் தொகுதியையோ அல்லது சம்பளப் பட்டியல், விலைப் பட்டியல் தயாரித்தல் போன்று அடிக்கடி செய்யும் பணிகளையோ செயலாக்கப் படுத்தல்.

batch processing mode : தொகுதி செயலாக்க பாங்கு.


batch programme : தொகுதி நிரல் : உரையாடல் முறையில் நிரல் பிரித்தல் அல்லது அறிக்கை பட்டியலிடல் போன்றவை.

batch session : தொகுதி நிகழ்வு : ஒரு முழுகோப்பையுமே புதுப்பித்தல் அல்லது அனுப்புதல். ஆரம்பம் முதல் கடைசிவரை தடையின்றி நடைபெறுவது Interactive session-க்கு எதிர்ச் சொல்.

batch stream : தொகுதித் தாரை : கணினியில் செயல்படுத்தக் கூடிய தொகுதி நிரல்களின் திரட்டு.

batch system : தொகுதி முறைமை : முன்வரையறுக்கப்பட்ட ஊடாடும் வகையிலோ, நிகழ்நேரத்திலோ இல்லாமல், தொகுதி தொகுதியாகச் செயல்படுத்தும் ஒரு முறைமை.

batch total : தொகுதி முழுமை : தொகுதிக் கூட்டல் : ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட்டங்களின் கூட்டுத் தொகை. தொகுதியுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன்படுத்தப்படுவது.

bat file (Batchfile) : பேட் கோப்பு : ஒன்றையடுத்து ஒன்றாக இயக்கப்பட்டு வரும் டாஸ் அல்லது ஒஎஸ்/2 கட்டளைகளின் தொகுதியைக் கொண்ட கோப்பு.

Batten system : பேட்டன் அமைப்பு : டபிள்யு. இ. பேட்டன் கண்டுபிடித்த பட்டியலிடும் முறை. தனி இயல்புகளை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கண்டறியப் பயன்படுவது. பீக்-ஏ-பூ என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது. அட்டைகளின் மேல் அட்டைகளை வைத்து துளைகளை ஒப்பிட்டு துளைகளின் ஒற்றுமையைச் சோதித்தறிவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

battery : மின்கலத் தொகுதி : மின்வழங்கி : இரண்டு அல்லது மேற்பட்ட மின் கலன்களை ஒரு கொள்கலனில் கொண்ட தொகுதி. மின்சாரக் கரைசலில் கொள்கலன் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சொந்தக் கணினிகளுக்கு மின்கலத் தொகுதி, ஒரு மாற்று மின்சார வழங்கியாகப் பயன் படுகிறது. கையேட்டுக் கணினி மற்றும் மடிக் கணினிகளுக்கு இத்தகைய மின்சார வழங்கிகளே (நிக்கல் கேட்மியம், நிக்கல் மெட்டல் ஹைடிரைடு, லித் தியம் அயான் மின் வழங்கிகள்) பயன்படுத்தப்படுகின்றன. கணி னிக்குள் இருக்கும் கடிகாரம், அழியா நினைவகத்தின் ஒரு பகுதி (முக்கிய முறைமைத் தகவல்கள் பதியப்பட்டுள்ள சீமாஸ் பகுதி) ஆகியவை எப்போதும் மின்சாரம்பெற இந்த மறு மின்னூட்ட மின் வழங்கிகள் பயன்படுகின்றன.

battery backup : காப்பு மின்கலம்; மின்கல பின்னாதரவு; மாற்று மின்கல அடுக்கு : மின் தடங்களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் படும் துணை மின்சக்தி.

battery meter : மின்கல மானி : ஒரு மின்கலத்தின் மின்னோட் டத்தை (திறனை) அளக்கப் பயன் படும் கருவி.

baud : பாட் : செய்தி வேகம் : தகவல் அனுப்பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு.

baudot code : பாடாட் குறி முறை : ஒரு எழுத்தை ஐந்து துண்மிகள் மூலம் குறிப்பிட்டு தரவுகளை அனுப்பும் ஒரு குறியீட்டு முறை. பல தொலை அச்சு அமைப்புகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தந்தி முறை குறியீட்டு எண் என்றும் அழைக்கப் படுகிறது. 1950இல் இந்த குறியீட்டு முறையே பன்னாட்டுத் தந்தித் தொடர்புக்கான தர நிர்ணயங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

Baudot. Emile : பாடாட் எமிலி : பாடாட் குறியீட்டுதந்தி முறையை 1880-இல் கண்டுபிடித்த முன்னோடி.

baud rate : பாட் வீதம் : செய்தியனுப்பும் வேக வீதம் : தரவு அனுப்புதலின் வேகத்தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃபிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளரான ஜே. எம். இ. பாட் என்ப வரின் பெயர் இடப்பட்டது.

Baum. L. Frank பாம் எல். ஃப்ராங்க் : எந்திரங்களை ஒரு நன்மை தரும் சக்தியாகக் கருதி இந்த நூற்றாண்டின் நன்னம்பிக்கையில் பங்கேற்றவர். அவரது புகழ் பெற்ற ஒஇஸ்ட் வரிசை நூல்களில் வரும் டிக்டாக் என்பவன் கடிகாரம் போன்று வேலை செய்யும் பித்தளை மனிதன். சொல்லி வைத்ததை எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடியவன்.

bay : வைப்பிடம்; செருகிடம் : ஒரு மின்னணுக் கருவியை ஒர் எந்திரத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம் அல்லது செருகுவாய். எடுத்துக்காட்டாக, ஒரு நுண் கணினியின் நிலைப்பெட்டியில் பின்னாளில் கூடுதலாக ஒரு நிலை வட்டினையோ, குறு வட்டகத்தையோ பொருத்துவதற்காக விட்டு வைக்கப்பட்டுள்ள வைப்பிடம்.

bb : பிபி : இணையத்தில், பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

B2C : மின் வணிக (e-commerce) நடைமுறையில் வணிக நிறு வனத்துக்கும் (Business) வாடிக்கையாளருக்கும் (Customer) இடையே நடைபெறும் வணிகத் தகவல் பரிமாற்றங்கள்.

BBC : பிபிசி : இங்கிலாந்து நாட்டு வானொலி நிறுவனம்.

BBட : பிபிஎல் : பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும். Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்குபெற்றுள்ள ஒர் உறுப்பினர் தற் காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் பிறகு இணைந்துகொள்ள எண்ணும்போது பயன் படுத்தக்கூடிய ஒரு சொல்.

BBS : செய்திப் பலகை அமைப்பு தகவல் பலகை முறைமை : Bulletin Board System என்ற தொடரின் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட இணக்கிகள் அல்லது வேறெந்த பிணைய அணுகுமுறைச் சாதனங்கள் இணைக்கப்பட்ட கணினி அமைப்பு. தொலை துரங்களிலிருந்து தொடர்பு கொள்ளும் பயனாளர்கள் தகவல் மற்றும் செய்திகளைப் பெறுவதற்கு இக்கணினி அமைப்பு உதவுகிறது. இதில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பயன்பாட்டு மென் பொருள்கள் பயனாளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பயனாளர்கள் தகவல்களைப் படிக்கலாம். தாம் விரும்பும் தகவல்களை பிறரின் பார்வைக்கு வைக்கலாம். பிபிஎஸ் பயனாளர்கள் தமக்குள் மின்னஞ்சல் பரிமாறிக் கொள்ளலாம். அரட்டை (Chat) அடிக்கலாம். கோப்புகளை பதிவேற்றம்/பதி விறக்கம் செய்யலாம். பிபிஎஸ் சேவைகள் கட்டண அடிப்படையிலும் இலவசமாகவும் அமைகின்றன.

bcc : பிசிசி :  : பிறர் அறியா கார்பன் நகல் என்று பொருள்படும் (blind carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். (bind courtesy copy என்றும் கூறுவர்). மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்பலாம். பெறுநர் (to) முகவரி இருக்குமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது CC என்ற கட்டத்துள் வேறு பலரின் முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது BCC என்ற கட்டத்துள்ளும் குறிப்பிடலாம். to, cc ஆகியவற்றில் குறிப்பிடும் முகவரிதாரர்களுக்கு இந்த மடல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால், BCC யில் குறிப்பிட்டுள்ள முகவரி தாரருக்கு மடலின் நகல் கிடைக் கும். ஆனால் அந்த மடலின் நகல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது.

. bc. ca : . பி. சி. சிஏ : ஒர் இணையதளம். கனடா நாட்டுப் பிரிட்டிஷ் கொலாம்பியாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

BCD : பிசிடி : Binary coded decimal என்பதன் கருக்கப்பெயர்.

BCNF : பிசிஎன்எஃப் : பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைமுறை கள் உள்ளன. அட்டவணைகள் அந்த வரையறையின்படி அமைய வில்லையெனில் தரவுத் தள மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். எனவே, அப்படிப்பட்ட அட்டவணைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் நான்கைந்து படிநிலைகளில் மேற்கொள்ளப் பட வேண்டும். பாய்ஸ்-காடின் முறை அதில் ஒரு படிநிலை.

BCs : பிசிஎஸ் : இங்கிலாந்தின் கணினிச் சங்கம் எனப் பொருள்படும் British Computer Society என்ற பெயரின் குறும் பெயர்.

BDOS : பிடிஓஎஸ் : அடிப்படை வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Basic Disk operating System என்பதன் குறும்பெயர். சில இயக்க முறைமைகளில் ஒரு குறிப்பிட்ட வட்டு இயக்கத்துக்கு ஏற்ப சரிப்படுத்தும் அந்த முறைமையின் பகுதி. . bd : பிடி : வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங் களப் பெயர்.

be : பிஇ : பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

beacon : இடர் எச்சரிக்கை : ஒரு கட்டமைப்பில், ஒரு முனையில் இருந்து அனுப்பப்படும், கட்டமைப்புச் சிக்கல் பற்றிய அபாயச் செய்தி.

beaconing : இடர் எச்சரித்தல் : ஒரு குறும்பரப்பு பிணையமாகிய லேனில் (Lan) தவறான நிலைகளை சமிக்கை மூலம் அனுப்புதல்.

bead : பீட் : 1. நிரலின் ஒரு சிறிய துணைச் செயல் முறை. பல பீட்கள் ஒன்று சேர்ந்தால் நூல் (த்ரெட்) எனப்படும். 2. கோஆக்சியல் கம்பியில் இன்சுலேட்டரைச் சுற்றியுள்ள உள் கம்பி. 3. தரவுத் தகவல் தள ஆவணத்தில் தேவையின்றி முன்னால் செல்வது.

beam penetration CRT : காற்றை உட்செலுத்தும் சி ஆர்டீ : நிறத்தை உருவாக்கும் நெறியக் காட்சித் திரை அமைப்பு. சிகப்பு மற்றும் பச்சை கந்தகம் பூசப்பட்ட திரையில் செலுத்தப்படும் மின்னணு ஒளிக்கற்றை.

beam splitter : கற்றை பிரிப்பான்

bearer channel : தாங்கு தடம் : ஒர் ஐஎஸ்டிஎன் இணைப்பில் நடைபெறும் 64 kbps தகவல் தொடர்புத் தடங்களில் ஒன்று. ஒரு பிஆர்ஐ (basic rate interface) ஐஎஸ்டிஎன் இணைப்பு 2 தாங்கு தடங்களையும் ஒரு தரவுத் (data) தடத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பிரைமரி ரேட் இன்டர் ஃபேஸ் (PRI) இணைப்பு வட அமெரிக்காவில் 23 தாங்கு தடங்களையும் ஐரோப்பாவில் 30 தாங்கு தடங் களையும் ஒரு தரவுத் தடத்தையும் கொண்டுள்ளன.

BeBox : பி-கணினி : பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகு திறனுள்ள பவர் பிசி (powerPC) துண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முறைமையான பிஓஎஸ் (BeOS) நிறுவப்பட்டது. தற்போது மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கருவியாக பி-கணினி விற்பனைக்கு வந்துள்ளது.

bebugging : பிழை நுழைத்துதல் : ஒரு நிரலில் தெரிந்த பிழைகளையே ஏற்படுத்தி, பயிற்சி பிழை நீக்கும் திறனைச் சோதிப்பதற்கான நடைமுறை.

beenet : பீனெட் : ஒரு லேன் (Lan). இதில் தகவல் பரிமாற்ற வேகம் ஒரு நொடிக்கு ஒரு மெகாபைட்.

beep : பீப் : விளி : ஒரு கணினியின் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் ஒசை. கணினி ஒலிபெருக்கிகளில் ஒசையை ஏற்படுத்துவதற்காக சில நிரலாக்க மொழிகளில் உள்ள ஒரு ஆணை.

beep statement : பீப் கூற்று.

beginning-of-file : கோப்பின் தொடக்கம் : 1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின் தொடக்கத்தை அறிகிறது. கோப்பின் பிற இடங்களையும் இதன் அடிப்படையிலேயே கணக்கிட்டு அணுகுகிறது. 2. ஒரு வட்டில் எழுதப்பட்டிருக்கும் கோப்பின் தொடக்க இடம். கோப்புகளின் தரவுகளைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பகம் (Directory) அல்லது திரட்டு இத்தொடக்க இருப்பிடத்தைக் கொண்டிருக்கும்.

beginning of tape marker : நாடா காட்டியின் தொடக்கம் : காந்த நாடாவின் ஒரு புள்ளியைக்காட்டும் அடையாளம். அங்கிருந்துதான் பெரும்பாலும் தரவு தொடங்கும்.

behaviour : நடத்தை : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு பொருள் எவ்வாறு வினையாற்றுகிறது, எதிர் வினையாற்றுகிறது என்பதை அதன் நிலை மாற்றங்கள் மற்றும் செய்தி அனுப்புதலின் மூலம் அறியலாம்.

Bell 103 : பெல் 103 : 300 பாட் வேகம் (Baud) மோடம்களின் தர நிருணயம்.

Bell 212A : பெல் 212ஏ : 12கேபி செய்தி வேக மோடம்களின் தர நிருணயம்.

Bell laboratories : பெல் ஆய்வகங்கள் : ஏ டீ அண்டு டீ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம். உலகப் புகழ் பெற்றது. பல கணினி வன்பொருள், மென் பொருள் கோட்பாடுகள் மற்றும் கணினி மொழிகள் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டன.

bell communications Standards : பெல் தகவல் தொடர்பு தர வரையறை : தகவல் பரி மாற்றத்துக்கான பல்வேறு தர வரையறுப்புகளை 1970களின் பின்பகுதியிலும் 1980களின் முன்பகுதியிலும் ஏடீ & டீ நிறு வனம் வகுத்துத் தந்தது. வட அமெரிக்காவில் அவை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இணக்கி (modem) களுக்கான சட்டபூர்வ தர வரையறைகளாக அவை காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1200 bps வரையிலான இணக்கிகளுக்கு இத் தரவரையறை இருந்தது. இந்த வேக இணக்கிகள் இப்போது வழக்கொழிந்து விட்டன 1200 bps-க்கு அதிகமான வேகமுள்ள இணக்கிகளுக்கு, சிசிஐ உடீ (CCITT) என்னும் அமைப்பு (இப்போது ITUCT) பரிந்துரை செய்யும் தர வரையறைகளே இப்போது உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

bell compatible modem : பெல் ஒத்தியல்பு இணக்கி : பெல் நிறு வனத்தின் தர வரையறைகளுக்கு ஏற்பச் செயல்படும் ஒர் இணக்கி.

bells and whistles : அனி ஆபரணங்கள்; அலங்கார அணிகள் : ஒரு மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு அதன் அடிப்படை செயல்பாட்டுக்கும் அதிகமாகக் கவர்ச்சிகரமான வசதிகளை வழங்குவது. எடுத்துக்காட்டாக, ஒரு காரில் அமைக்கப்படும் மின் கதவையும் குளிர்சாதனக் கருவியையும் கூறலாம். கணினிகளைப் பொறுத்தமட்டில் இத்தகைய அலங்கார அணிகலன்கள் எதுவும் இல்லாத கணினியை சாதா வெனில்லா கணினி என்பர்.

belt - bed photter; வார்பட்டை வரைவு பொறி : தத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் வார் பட் டையைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவு பொறி.

ΒΕΜΑ : பிஈஎம்ஏ : வணிகக் கருவி தயாரிப்பாளர் சங்கம் எனப் பொருள்படும் Business Equipment manufacturer's Association என்பதன் குறும்பெயர்.

benchmark : திறன் மதிப்பு : தர அளவு மதிப்பீடு செய்தல் : ஒரு கணினியின் செயல் திறனை ஒரு நிரலைப் பயன்படுத்தி தர அளவீடுகளைச் செய்வதைக் குறிப்பிடும் சொல். பொருள்களை ஒப்பீடு செய்ய உதவும் ஒரு தர நிருணயம்.

benchmark problem : திறன் மதிப்பீட்டுச் சிக்கல் : இலக்க முறை கணினிகளின் செயல் திறனை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்ய வடிவமைக்கப்பட்ட சிக்கல்.

bench mark programme : தர நிருணய நிரல் : மதிப்பீட்டு நிரல் : ஒரு கணினியின் திறன் மற்றும் பிற அளவைகளை மதிப்பிடும் நிரல். 

benchmark test : திறன் மதிப்பீட்டுச் சோதனை : முழு செயல் வேகத் திறமையை ஒப்பிடுவதற்காக பல்வேறு கணினிகளில் இயக்கப்படும் ஒரு கணினி நிரல். குறிப்பிட்ட பயன்பாட்டு சூழ்நிலையில் கணினிக் கருவி யின் செயல்திறனை அளக்கப் பயன்படுத்தப்படும் சோதனை.

benign virus : தீங்கிலா நச்சு நிரல் : நச்சுநிரல் போன்ற பண் புடைய ஒரு நிரல் தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றி தீங்கும் விளைவிக்காது.

BeOS : பிஓஎஸ் : பி ஆப்பரேட் டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும் பெயர். பி நிறுவனம் (Be inc) உருவாக்கிய பொருள் நோக் கிலான இயக்க முறைமை பி-கணினி மற்றும் பவர் மெக் கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த இயக்க முறைமை சமச்சீர் பல் செயலாக்கம், பல்பணி மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவகம் ஆகிய வசதிகளைக் கொண்டது. பல்லூடகம், அசைவூட்டம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஏற்றது.

Bernoulli box : பெர்னவுலி பெட்டி : சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ் வட்டகம், அதிகமான சேமிப்புத் திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல் பெர்னவுலி (daniel bernoulli) என்ற இயற்பியல் அறிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றியக்கத்தில் செயல் படும் இயங்கேணி (Lift) பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் செயல்படுத்திக் காட்டியவர். பெர்னவுலிப் பெட்டி, மிகுவேகத்துடன் சுழலும் நெகிழ் வட்டை வட்டின் எழுது/படிப்பு முனைக்கு அருகில் கொண்டு வரும்.

Bernoulii Box drive : வட்டு இயக்ககம்.

Bernoulli cartridges : பெர்னவுலி பேழைகள் : நிலைவட்டு மற்றும் நெகிழ் வட்டு கலந்த ஒரு சேமிப்பகச் சாதனம்.

Bernoulli process : பெர்னவுலி செயலாக்கம் : பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு பரிசோதனையை திரும்பத் திரும்பச் செய்வதால் ஏற்படக்கூடிய முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தல். Bernoulli sampling process Bernoulli sampling process : பெர்னவுலி மாதிரிகாண் செயலாக்கம் : ஒவ்வொரு முயற்சியிலும் இரண்டிலொரு முடிவைத் தரக்கூடிய ஏதேனும் ஒரு பரிசோதனையை, தொடர்ச்சியாக n தடவைகள், ஒன்றையொன்று சாராத, ஒரே மாதிரியான தேர்வாய்வுக்கு உட்படுத் தும்போது வரக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்படும் புள்ளியியல் ஆய்வு. (எ-டு) : ஒரு நாணயத்தைச் சுண்டினால் பூ அல்லது தலை விழும். 10 முறை சுண்டினால் எத்தனை முறை தலை விழும் ? எத்தனை முறை பூ விழும்?

Bernoully drive : பெர்னவுலி இயக்ககம்.

Berr Clifford : பெர்ரி கிளிஃபோர்டு : 1939இல் ஜான் அடனசாஃபுடன் சேர்ந்து ஏபிசி எனப்படும் முதல் மின்னணு இலக்கமுறை கணினியைக் கண்டுபிடித்தவர்.

best of breed : உள்ளதில் சிறப்பு : ஆயிரத்தில் ஒன்று : குறிப்பிட்ட வகைப் பிரிவில் மிகச்சிறந்த பொருளைக் குறிக்கும் சொல். வன்பொருளாகவோ மென்பொருள் தொகுப்பாகவோ இருக்கலாம்.

beta site : பீட்டாத் தளம் : ஒரு மென்பொருளின் பீட்டா சோதனையை மேற்கொள்ளும் ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறு வனம். மென்பொருளை உருவாக்கிய நிறுவனம், பெரும்பாலும் பட்டறிவுமிக்க வாடிக்கையாளர், தன்னார்வலர்களின் குழுவில் சிலரையே பீட்டாத் தளமாகத் தேர்வு செய்யும். பெரும்பாலான பீட்டாத் தளத்தினர் இச்சேவையை இலவசமாகவே செய்வர். வெளியீட்டுக்கு முன் பயன்படுத்தும் வாய்ப்பு, மென்பொருளின் இலவச நகல் இவர்களுக்குக் கிடைக்கிறது. வெளியிடப்பட்ட பின்பு, இறுதிப் படைப்பின் இலவச நகலும் இவர்களுக்குக் கிடைக்கும்.

beta test : பீட்டா சோதனை : மென்பொருள் அல்லது வன்பொருள், இறுதியாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக பல கட்டச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அவற்றுள் வெளியீட்டுக்கு முந்தைய இறுதிக் கட்டச் சோதனை 'பீட்டா சோதனை' எனப்படுகிறது.

beta testing : பீட்டா சோதனையிடல் : பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு வன்பொருள், மென்பொருள்களை, தேர்ந்தெடுத்த சிலரிடம் கொடுத்து அவரவர் பணியிடத் திலேயே பயன்படுத்தச் செய்து அதில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிதல்.

beta test site : பீட்டா சோதனை செய்யுமிடம் : புதிதாக உருவாக்கப் பட்ட கணினி அமைப்பை சாதாரண இயக்கச் சூழ் நிலையில் பல மாதங்களுக்குச் சோதனை செய்யும் ஒருவித செயலாக்க மையம் அல்லது ஒரு கிளை அலுவலகம் அல் லது பிரிவு. முறையாக வெளியிடப்படும் முன்பு ஏராளமான பேர்களுக்குக் கொடுத்து பீட்டா சோதனை செய்யப்படும் மென்பொருள்.

beta version :பீட்டா பதிப்பு: வெளியீட்டுக்கு முந்தைய பரிசோதனைப் பதிப்பு.

between : இடையில்

Bezier : பெஸியர் : அல்கோரிதத்தில் உருவாக்கப்படும் ஒரு வகை வளைவு. ஃபிரெஞ்சு கணிதமேதை பியரே பெஸியரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வடிவங்களை வரை யறுக்க பெஸியர் வளைவுகளுக்கு அல்கோரி ஒரு சில புள்ளிகளே போதுமானது. ஒவிய மென்பொருளுக்கு உகந்தது.

பெஸியர் வளைவு

bezier curve :பெஸியர் வளைவு : ஒரு குறிப்பிட்ட கணித முறைப்படி இரண்டு தனிப் புள்ளிகளை இணைத்து பெஸியர் வளைவு வரையப்படும் இழைவான வளைகோடு மற்றும் வரை தளம். கேட் உருமாதிரி (CAD model)களுக்கு தேவையான ஒன்று. ஒரு வடிவத்தை தோராய மாக வடிவமைக்க ஏனைய கணிதவியல் மாதிரிகளை விடச் சிறந்தது. ஏனெனில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்டே அதிக எண்ணிக்கையிலான வடிவங்களைப் பெறமுடியும்.

.bց : .பி.ஜி : பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

. bh , பிஹெச் : ஒர் இணைய தளம் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

bias : மதிப்புகளின் தொகுதியின் சராசரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மதிப்பு விலகிச்செல்லும் அளவு.

bibliography : நூல் விவரத் தொகுதி : 1. ஆவணங்களின் விவரங்களைக் கூறும் பட்டி, 2. விவர நூல் பட்டியல். 3. ஒரு தலைப்பு அல்லது ஆசிரியர் தொடர் பான ஆவணங்களின் பட்டியல். 4. பட்டி அல்லது பட்டியலைத் தொகுக்கும் செயல் முறை.

bidirectional : இரு திசையில் : ஒரு கம்பியில் தரவு இரு திசை களிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி/வாங்கி (Transceivers) களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப் புத் தொகுதிகள் மின்பாட்டை நிலையிலோ அல்லது திறந்த கலெக்டர், டிரான்சிஸ்டர் டிரான்சிஸ்டர் தருக்க முறையில் அமைந்திருக்கும் அளவைகளாகவோ இருக்கும்.

bidirectional bus : இருதிசை மின்பாட்டை : ஒரே மின் இணைப்புப் பாதையில் இரு திசைகளிலும் தரவு மாறப்படுதல்.

bidirectional parallel port : இருதிசை இணை வாசல்; இரு திசை இணை நிலைத் துறை : கணினிக்கும் இன்னொரு புறச் சாதனத்துக்கும் இடையே இரு திசையிலும் இணை நிலைத் தகவல் தொடர்புக்கு வழியமைத் துத் தரும் ஒர் இடை முகம்.

bidirectional printer : இரு திசை அச்சுப் பொறி : அச்சிடும் தலை திரும்பி வருவதன் தாம தத்தைத் தவிர்க்க இடப்புறத் திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத்திலிருந்து இடப்புறமாகவும அச்சிடும் அச்சுப்பொறி.

bi-endian : இரு முடிவன் : இரு முனையன் : சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளின் பண்புக் கூறு. பவர்பிசி (powerPC) துண்செயலி இத் தகைய இரு முடிவன் திறனைக் கொண்டுள்ளது. சிறுமுடிவன் விண்டோஸ் என்டி, பெரு முடிவன் மேக் ஒஎஸ்/ பீபீஜி ஆகிய இரு இயக்க முறைமைகளும் இயங்க அனுமதிக்கிறது. biform : இரு வடிவம் : எழுத்து வடிவ இயலில், சிறிய எழுத்து மற்றும் சிறிய தலைப்பெழுத்து களைச் சேர்த்து உருவாக்கும் சிறிய எழுத்து அகரவரிசை.

bifurcation : இரண்டாகப் பிரித்தல் ; இருகூறாக்கல் : இரண்டு, இரண்டாக மட்டும் வெளியீடு வருகின்ற சூழ் நிலை. 1 அல்லது 0 உண்மை அல்லது பொய், இயக்கு அல்லது நிறுத்து போன்றவை.

BIGAS : பைகாஸ் : Business International Country Assessment Service என்பதன் குறும்பெயர்.

Big Blue : பிக்புளு : ஐபிஎம் நிறுவனத்தின் இன்னொரு ஒரு வேறுபாடான நீல வண்ணத்தை அதன் கணினிகள் மற்றும் பிற கருவிகளில் அந்த நிறுவனம் பயன்படுத்துவதால் இப் பெயர் ஏற்பட்டது.

Big endian : ஒரு முடிவன் ; பெரு முனையன் : ஒர் எண்ணை பதிவகங்களில் (registers) பதிவுசெய்து வைக்கும் முறை. இம்முறையில் ஒர் எண்ணின் பெருமதிப்புள்ள பைட் (most significant byte), முதலில் இடம் பெறும். (எ-டு) A02B என்ற் பதின் அறும (Hexadecimal) எண் A02B என்று பதியப்படும். சிறு முடிவன் முறையில் 28A0. பெரு முடிவன் முறை மோட்டோரோலா நுண் செயலிகளில் பின்பற்றப்படு கிறது. இன்டெல் நுண்செயலிகள் சிறுமுனைய முறையைப் பயன் படுத்துகின்றன. பெரு முடிவன் என்ற சொல் ஜோனாதன் ஸ்விஃப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் பெரு முடிவன் என்ற சொல், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கிறது. அக்குழுவினர், முட்டையை உண்ணும்போது அதனைச் சிறுமுனைப் பக்கம் உடைக்க வேண்டும் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

big red switch : பெரும் சிவப்பு விசை : கணினியை இயக்க/ நிறுத்த (மின்சாரம் செலுத்த/ நிறுத்த) பயன்படும் விசை, கணினி திடீரென செயல்படா மல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசை யைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கலாம் (Re-booting). ஐபிஎம் பீசி மற்றும் பல கணினிகளிலும் தொடக்க காலங்களில் இந்த விசை பெரிதாக சிவப்பு வண் ணத்தில் இருந்தது. கணினி நடு வில் நின்றுவிடும்போது, இந்த விசையைப் பயன்படுத்தி கணி னிக்குப் புத்துயிர் ஊட்டுவதில் ஒர் ஆபத்தும் உள்ளது. நிலையா நினைவகத்தில் (RAM) உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு விடும். நிலை வட்டும் பழுதுபட வாய்ப்புள்ளது. எனவே தான் இவ்விசையை இறுதி ஆயுத மாகப் பயன்படுத்த வேண்டும்.

bilion : பில்லியன் : ஒராயிரம் மில்லியன் : நூறு கோடி.

bin : கூடை : வெற்றுக் காகிதம் அல்லது முன்பே அச்சடிக்கப் பட்ட படிவங்களைப் படித்துக் கொள்ள அச்சுப்பொறியில் உள்ள ஒரு தட்டு. முடிந்த வேலையை வாங்கிக் கொள்வதற்கும் கூடை பயன்படுத்தப்படலாம். நிலை வட்டில் பலவகைப் பொருளுக் கான பட்டியல் செயலாக்க அமைப்பு மற்றும் சேவை நிரல் கள் இதில் இடம் பெறும்.

BINAC : பினாக் : Binary Automatic Computer என்ற கணினியின் குறும் பெயர். 1949ஆம் ஆண்டு எக்கார்த் மாக்லி நிறுவனம் உருவாக்கியது.

binaries : இரும மொழி நிரல்கள் : எந்திர மொழியில் இயங்கக் கூடிய நிரல்கள்.

binary : இருமம் : 2-ஐ அடிப் படையாகக் கொண்ட முறை இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள ஒரு சூழ்நிலை.

binary arithmetic : இருமக் கணக்கு; இருமக் கணக்கீடு; ஈரிலக்கக் கணக்கு : 1. பதின்ம எண் முறைக்குச் கணக்கீட்டு முறை. ஆனால், இதில் 0, 1 ஆகிய இரண்டு இலக் கங்கள் மட்டுமே பயன்படுத் தப்படுகின்றன. 2. ஒரே நேரத் தில் இரண்டு மதிப்புகளை மட்டுமே வைத்து எல்லா கணக்குகளும் செய்யப்படு வதைக் குறித்தல்.

binary arithmetic operation : இரும பூலியன் செயற்பாடு.

binary boolian operation : இருமக் கணக்கீட்டுச் செயல்பாடு.

binary card : இரும எண் அட்டை : தரமான துளைஅட்டை 0 அல்லது 1-ஐக் குறிப்பிட 12 வரிசைகளில் 80 பத்திகளில் 960 துளையிடும் இடங்களைக் கொண்டது.

binary chop : இரும வெட்டு.

binary code : இருமக் குறி முறை : ஈரிலக்கக் குறியீடு : எந்தத் தகவலையும் துண்மிகள் 0 அல்லது 1 இன் மூலமே குறியீடு செய்யும் குறியீட்டு முறை BASCII மற்றும் EBCDIC போன்ற இரண்டு முறைகளில் இவை பயன்படுத் தப்படுகின்றன. 0 என்றால் நிறுத்து. 1 என்பது இயக்கு.

binary coded character : இருமக் குறியீட்டு எழுத்து : எண் குறியீட்டு முறையில் ஒன்று. இதில் பதின்ம இலக்கங்கள், எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் ஆகியவை, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட, தொடர்ச்சியான இரும இலக்கங்களினால் குறிப்பிடப்படும் எழுத்து என் கொண்ட குறிகளைக் குறிப்பிடுகிறது.

binary coded decimal; (BCD) : இருமக் குறி முறைப் பதின்மம் : பிசிடி : ஒரு வகை யான கணினி குறி யீட்டு முறை. இதில் ஒவ்வொரு பதின்ம இலக்கமும் 1-க்கள் 0-க்கள் கொண்ட நான்கு இலக்கத் தொகுதியால் குறிப்பிடப்படுகின்றன.

binary coded decimal inter change code : இருமக் குறி முறைப் பதின்ம மாற்றக் குறி முறை : 6 எழுத்து மாற்ற வசதி கொண்ட 6 துண்மி உள்ளிட்டுக் குறி முறை.

binary coded decimal notation : இருமக் குறியீட்டு பதின்மக் குறி.

                      7   5   2   1   3
                  0111 0101 0010 0001 0011
                  இருமக் குறியீட்டு பதின்ம எண்

binary coded decimal number : இருமக் குறிமுறை பதின்ம எண் : நான்கு எண்களைக் கொண்ட தொடர்ச்சியான இரும எண் தொகுதிகள். பதின்ம எண்ணில் குறிப்பிடப்படும் மதிப்புக்குச் சமமானது என்று குறிப்பிட முடியாது. ஆனால் பதின்மான எண்ணுக்கு ஒவ்வொன்றுக்கும் இரும முறை எண் உண்டு. எடுத்துக் காட்டாக 264-க்கு இரும எண் 0010 0110 0100.

binary coded decimal representation : இருமக் குறியீட்டு பதின்ம உருவகிப்பு

binary coded digit : இருமக் குறியீட்டு இலக்கம்.

binary coded octal : இருமக் குறி முறை எண்மம் : 3 துண்மிகள் தொகுதியில் எட்டிலக்க அல்லது எண்ம இலக்கங்களைச் சேமித்தல்.

binary compatible : இரும ஒத்தியல்பு; இரும தகவமைவு : இரும வடிவத்தில் உள்ள எந்த ஒரு வன்பொருள் அல்லது மென் பொருள் அமைப்பையும் குறிப்பிடுகிறது.

binary conversion : இரும எண் மாற்றம் : ஒரு பதின்ம (decimal) எண்ணை இரு ம மாற்றலும், ஒர் இரும எண்ணை பதின்ம எண்ணாக மாற்றலும்.

binary counter : இருமக் கணக்ககம் : ஒவ்வொரு உள்ளிட்டுத் துடிப்புடனும் 1 ஈவிலக்கம் சேர்க்கும் கணக்ககம்.

binary decimal conversion : இரும - பதின்ம மாற்றம்.

binary device : இருமச் சாதனம் : 1. நிறுத்துதல் அல்லது இயக்கு தல் என்று இயங்கும் மின்சார பொத்தானைப் போன்ற இரண்டு நிலைகளில் பதிவு செய்யும் சாதனம். 2. கணினி அறிவிய லில், இரும வடிவில் பதிவு செய்யும் சாதனம் அல்லது அவ்வாறு குறியீடு செய்யப்பட்டதைப் படிக்கும் சாதனம்.

binary digit : இரும இலக்கம் : 'பிட்' துண்மி என்று சுருக்கப் பெயர் அளிக்கப்பட்ட 0 அல்லது 1 என்ற எண்களில் ஏதாவது ஒன்று.

binary encoding : இருமக் குறியாக்கம் : எந்த ஒரு மொழியிலும் எழுத்துத் தொகுதியை இரும வடிவத்தில் குறிப்பிடுதல்.

binary field : இருமப் புலம் : இரும எண்களை மட்டும் கொண்டுள்ள புலம் கணக்கீடு இரும எண்களை சேமிப்பதையோ அல்லது சொற் றொடர் வரைகலை உருவங்கள், குரல், ஒளிக்காட்சி போன்ற எத்தகைய தகவலையும் வைத்துக் கொள்ளும் திறனுள்ள புலமாகவோ இருக்கலாம்.

binary file : இருமக் கோப்பு : இருமக் குறியீடுகளால் ஆன கோப்பு.

binary file transfer : இரும கோப்புப் பரிமாற்றம் : இரும வடிவில் தகவல் பதியப்பட்டுள்ள கோப்புகளை கணினி வாயிலாகப் பரிமாற்றம் செய்தல். உரை வடிவக் கோப்பு களைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து மாறுபட்டது. தற் போதைய நவீன கணினி இயக்க முறைமைகளில் ஒர் உரைக் கோப்பே, அச்சிடத்தக்க எழுத்து களடங்கிய இருமக் கோப் பாகவே கருதப்படுகிறது. ஆனால் பழைய முறைமைகளில் இவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் முறை இருந்தது.

binary format : இரும வடி வமைவு; இரும வடிவம் : பிசிடி

வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்களை இழக்காமல் எந்த கோப்பையும் அனுப்பக் கூடிய கோப்புப் பரிமாற்ற குறிமுறை.

binary fraction : இரும பின்னங்கள் : ஒவ்வொரு இரும இலக்கம் அதற்கு வலப்புறம் வரும் இலக்கத்தைப் போல இரண்டு மதிப்பு கொண்டது. பதின்மப் புள்ளிக்கு முன்போ அல்லது பின்போ இருமக் குறியீட்டு பதின்மமாக வந்தாலும் அதே மதிப்பையே கொண்டிருக்கும். சான்றாக 11-11 என்பது இருமத்தில் 2-14 0. 54 0. 25 அதாவது பதின்மான எண்ணில் 3. 75

binary half adder : இரும அரை கூட்டி

binary language : இரும மொழி.

binary notation : இருமக் குறிமானம் : 2-ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எண்

binary number : இரும எண் : ஒவ்வொரு இலக்கத்திற்கும் 2. ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு மதிப்பு அளிக்கப்படுகிறது. 0, 1 ஆகிய இரண்டு இலக்கங்களே பயன்படுத்தப்படுகின்றன.

binary number system : இரும எண் முறை : 2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை.

binary number system or code : இரும எண்முறை அல்லது குறிமுறை 0 மற்றும் ! ஆகிய இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தி எண்களை எழுதும் முறை.

binary operation : இருமச் செயற்பாடு.

binary point : இருமப்புள்ளி : கலவையான இரும எண்ணில் முழு எண்ணிலிருந்து அதன் பதின்மப் பகுதியை பிரிக்கும் புள்ளி. 110. 01. 1 என்ற இரும எண்ணில் இரண்டு 0-க்களுக்கு

இடையில் இருமப் புள்ளி உள்ளது.

binary relation : இரும உறவு : இரண்டு தொகுதிகளுக்கு இடையே உள்ள உறவு.

binary representation : இரும உருவகிப்பு.

binary row : இரும வரிசை : இருமக் கிடக்கை.

binary search : இரும தேடல் : ஒவ்வொன்றையும் இரண்டு

binary sequence

152

bind


பகுதிகளாகப் பிரித்து, அதில் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற்றொன்றை ஒதுக்கும் முறை. பல தரவுத்தளங்களில் இந்த முறையில் தேடுகிறார்கள்.

binary sequence : இரும வரிசை : தொடர்ச்சியான இரும இலக்கங்கள்.

binary system : இரும முரை| : 0 மற்றும் 1 ஆகிய 2 இலக்கங்களை மட்டுமே பயன்படுத்தும் எண் முறை.

binary time : இரும நேரம்

binary-to-decimal conversion : இருமத்திலிருந்து பதின்மத் துக்கு மாற்றல் : 2-ன் அடிப்படையில் எழுதப்பட்ட எண்ணை 10-ன் அடிப்படையில் மாற்றி அதற்குச் சமமான இலக்கத்தை எழுதுதல்.

binary-to-gray code conversion : இருமத்திலிருந்து கிரே குறியீடுக்கு மாற்றுதல் : இடது புறத்திலிருந்து வலப்புறமாக படிக்கும் விதியைப் பயன்படுத்தி இருமக் குறிமுறைக்குச் சமமான கிரே குறிமுறையினைக் கொண்டு வரமுடியும்.

binary -to-hexadecimal conversion : இருமத்திலிருந்து பதினறும அடிப்படைக்கு மாற்றுதல்

2- ன் அடிப்படையில் எழுதப்பட்ட எண்ணிலிருந்து 16-ன் அடிப் படையில் எழுதப்பட்ட எண்ணுக்கு மாற்றுதல்.

binary-to-octal conversion : இருமயெண்ணிலிருந்து எண்ம எண்ணுக்கு மாற்றுதல் : 2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணிலிருந்து 8-ஐ அடிப்ப யாகக் கொண்ட எண்ணிற்குச் சமமானதை எழுதுதல்.

binary transfer : இருமப் பரிமாற்றம் : இயக்குநிலை (executable) கோப்புகள், பயன்பாட்டு தரவுக் கோப்புகள் மற்றும் மறையாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை கணினி வழியாகப் பரி மாற்றம் செய்து கொள்வதற்கு உகந்த மின்னணுத் தகவல் பரிமாற்ற முறை.

binary tree : இரும மரம் : எந்த ஒரு மரத்தையும் இடது, வலது துணை மரங்களாகப் பிரித்தல். ஒவ்வொரு முறையிலும் ஒரு பெற்றோர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத குழந்தைகள் உள்ள தரவுக் கூட்டமைப்பு.

binary variables : இரும மாறிலிகள் : இரண்டு மதிப்புகளில் ஒன்றை உண்மை அல்லது பொய், 1 அல்லது 0 என ஏற்கும் மாறிலி.

bind : கட்டு, பிணை : 1. எந்திர முகவரியை அளவை அல்லது குறியீடு அல்லது முகவரிக்குக்


binding time

153

biomic chips


கொடுத்தல். 2. ஒரு மாறிலி அல்லது அளவு கோலுக்கு ஒரு வகை மதிப்பை அளித்தல். 3. தொகுதிகளை ஒன்றாக இணைத்தல்.

binding time : பிணைக்கும் நேரம் : ஒரு தொகுப்பு அடையாள எண் அல்லது முகவரியை

எந்திர மொழி வடிவத்தில் மாற்றும் நிலை.

Bin Hex : பின்ஹெக்ஸ் : 1. இருமத் தரவு கோப்புகளை, மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரையாக மற்றொரு கணினிக்கு அனுப்புவதற்கு உகந்த வகையில் ஆஸ்கி (ASCII) உரைக் கோப்பாய் மாற்றுவதற்கான குறிமுறை. இணையத்தில் ஆஸ்கிக் குறியீட்டு வடிவில் தகவல் அனுப்ப வேண்டிய தேவைகளுக்கு இம்முறை உகந்தது. பெரும்பாலான மேக் (Mac) கணினிப் பயனாளர்கள் பின் ஹெக்ஸ் முறையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். 2. ஒர் இருமத் தரவுக் கோப்பை, ஆஸ்கி உரைக் கோப்பாகவும், ஒர் ஆஸ்கிக் கோப்பை இரும வடிவக் கோப்பாகவும் மாற்றித் தருகின்ற ஆப்பிள் மெக்கின் டோஷ் நிரல்.

biochip : உயிரியச் சிப்பு : உயிருள்ள பொருள்களை நுண்சிப்புகளாக மாற்ற கணினி

தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை செய்ய 80 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலார் சிலர் கூறுகின்றனர்.

biocomputer : உயிரியக் கணினி : உயிரியச் சிப்புகளில் தனது மையச்செயலகம் அல்லது நினை வகத்தைச் சேர்த்து வைக்கும் கணினி.

biodata : தகுதிக்குறிப்பு; தன் விவரக் குறிப்பு.

biological neuron : உயிரியல் நரம்பகம் : 0. 01 மி. மீ. நீளமுள்ள உயிரியல் நரம்பு அறை.

biomechanics : உயிரிய எந்திரவியல் : இயக்கத்தின் உயிர்க்கூறு கொள்கைகளை ஆய்தல். விளையாட்டு வீரர்கள் மற்றும் பந்தயக் குதிரைகளின் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டும் உயிர் எந்திரவியல் பயன்பாடுகள் செய்யப்படுகின்றன.

biometrics : உயிரளவை : தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறிவியல். சில பாதுகாப்பு முறைகள் மற்றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன் படுத்தப்படுகிறது.

biomic chips : உயிரியல் சிப்பு : உயிரியல் சில்லு,
bionics : உயிரியம் : உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல்.

BIOS : பயாஸ் : அடிப்படை உள்ளீட்டு-வெளியீட்டு அமைப்பு எனப் பொருள்படும் Basic Input/output System என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட கணினிக்கு இசையுமாறு மாற்றப்படும் அமைப்பின் பகுதி.

Bios data area : பயாஸ் தரவுப் பகுதி : 00404 : 0000-வில் தொடங்கும் நினைவகத்தின் பகுதி. இங்கு தான் பயாஸ்நிலை பற்றிய தரவுவையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத்தையும் வைத்திருக்கிறது.

biosensors : உயிர் உணரிகள்.

bipolar : இருதுருவ : சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிகவும் புகழ்பெற்ற அடிப்படை முறை. இருதுருவ என்றால் இரண்டு துருவங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்டுக்கு மாறானது. மோஸ் ஃபீல்டில் ஒரே துருவம்தான் உண்டு. ஒரே திசையில்தான் மின்சாரம் பாயும் இருதுருவ டிரான்சிஸ்டர்களில் இரண்டு திசைகளிலும் உள்ள முகப்புகளை நோக்கி மின்சாரம் பாயும். ஒரு துருவம் என்பதற்கு மாறானது.

bipolar read only memory : இரு துருவ படிக்க மட்டுமான நினைவகம்.

bipolar transmission : இரு துருவ செய்தி பரப்புகை : பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சமிக்கைகளாக மாற்றி மாற்றி அனுப்பும் இலக்க முறை தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம்.

biquinary code : பிக்குனரி பதின்மக் குறியீடு : இருமக் குறிமுறை துண்மி மதிப்புள்ள குறியீடு. பதின்ம எண்களைக் குறிப்பிடுவது. பிழை திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பதின்ம எண் 5-ஐக் குறிக்க மூன்று துண்மிகள்போதும். மற்ற 5துண்மிகளும் பதின்ம எண் 0-வை 4-ன் மூலம் குறிப்பிடுகின்றன.

birefrin gence : இரட்டை பதின்ம அலை வீச்சு : ஒரு படிகத்தைப் பயன்படுத்தி ஒளியை இரண்டு அலைவரிசைகளில் பிரித்து இரண்டு வெவ்வேறு வேகங்களில் ஒன்றுக் கொன்று செங்கோணத்தில் போக செய்தல். எல்சிடி காட்சித் திரையில் நிறத்தை வடிகட்டி அனுப்ப இது பயன்படுகிறது. bisam : பைசாம் : அடிப்படை சுட்டுறு வரிசைமுறை அணுகுமுறை எனப் பொருள்படும் Basic Indexed Sequential Access Method என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

bistable : இருநிலை : 1 அல்லது 0, இயக்கும் அல்லது நிறுத்தும். இவை இரண்டு நிலைகளில் ஒன்றை மட்டும் ஏற்கும் வன்பொருள் சாதனம்.

bistable circuit : இருநிலை மின்சுற்று : இரண்டே இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைக்கும் மின்சுற்று. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற, மின் சுற்றுக்கு வெளியிலிருந்து தூண்டப்பட வேண்டும். ஓர் இரு நிலை மின்சுற்று, ஒரு துண்மி (பிட்) தகவலை இருத்தி வைக்கும் திறனுடையது.

bistable device : இருநிலைச் சாதனம் : நிறுத்துதல் அல்லது இயக்குதல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம்.

bistable magnetic core : இரு நிலை காந்த உள்ளகம்.

bi-state : இருநிலை : இரண்டு நிலைகள் மட்டும் இருக்கும் போது அவற்றில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கணினி உறுப்புகளின் நிலை.

bit : பிட் : துண்மி : இருநிலைத் துணுக்கு : இரும இலக்கம் : 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எண்மியில் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது.

bit block : துண்மிக் தொகுதி : பிட் தொகுதி : கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் குறிக்கும் துண்மிகளின் தொகுப்பு என்பதால் இப்பெயர் பெற்றது. நிரலர்கள் துண்மித் தொகுதிகளையும், துண்மித் தொகுதி இடமாற்ற நுட்பத்தையும் பயன்படுத்தி, கணினித் திரையில் மின்னல் வேகத்தில் உருவங்களை அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம், பட உருவங்கள் இயங்குவது போலச் செய்ய முடியும்.

bit block transfer : துண்மித் தொகுதி இடமாற்றம் : வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய சுட்டுக்குறி (cursor) யாகவோ, ஒரு கார்ட்டூன் படமாகவோ இருக்கலாம். இத்தகைய துண்மித் தொகுதியை ஒற்றை அலகாக ஒளிக்காட்சி நினைவகத்தில் நகர்த்துவதன் மூலம் கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிவேகமாய் திரையிட முடியும். துண்மிகளின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம் உருவப்படங்களில் ஒளிப் பகுதியை மாற்றமுடியும். தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம் பட உருவங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். நடமாடுவது போலச் செய்யவும் முடியும்.

bit bucket : துண்மிக் கூடை : துண்மிக் குப்பைத் தொட்டி : தரவுவை கழித்துக்கட்டப் பயன் படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையில் இந்தத் துண்மிக் குப்பைத் தொட்டி நல் (null என்று அறியப்படுகிறது. யூனிக்ஸ் இயக்க முறைமையில், /dev என்னும் கோப்பகத்தில் இத்தகைய வெற்றுச் சாதனக் கருத்துரு உண்டு. ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலை வெற்றுச் சாதனத்துக்கு அனுப்பும்போது, பட்டியல் திரையில் தெரியாமல் மறைந்து விடுகிறது. இயக்க முறைமை தருகின்ற பிழை சுட்டும் அல்லது பிற வகைச் செய்திகளை திரையில் காட்டப்படாமலிருக்கும் பொருட்டு அச்செய்திகளை வெற்றுச்சாதனம் என்னும் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி வைப்பதுண்டு. C. \>Copy File1 File2 >NUL என்ற டாஸ் கட்டளை கோப்பை நகலெடுத்த பிறகு 1 File (s) copied எனும் செய்தியைத் திரையில் காட்டாது.

bit check : துண்மிச் சரி பார்ப்பு.

bit controi : துண்மி கட்டுப்பாடு : வரிசையான தரவுவை அனுப்பும் முறை. இதில் ஒவ்வொரு துண்மியும் ஒரு தனிப் பொருள் கொண்டது. ஒவ்வொரு எழுத்துக்கு முன்னும் பின்னும் தொடங்கவும், நிறுத்தவுமான துண்மிகள் இருக்கும்.

bit density : துண்மி அடர்த்தி : ஒரு குறிப்பிட்ட நீள அலகிலோ அல்லது காந்த நாடாவின் பரப்பளவிலோ அல்லது வட்டிலோ பதிவு செய்யப்பட்டுள்ள துண்மிகளை அளப்பது. bit depth : துண்மி ஆழம் : ஒரு வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவு செய்ய ஒரு படப்புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை.

bit error rate : துண்மி பிழை வீதம்.

bit error single : துண்மி தனிப்பிழை.

bit field : துண்மி புலம் : ஒரு எட்டியலையோ சொல்லையோ துண்மிகளாகப் பார்க்கும்போது, பல துணுக்குகள் ஒன்றுசேர்ந்து ஒரு தகவலின் பகுதியைத் தருகிறது. சான்றாக, 0 - 3துண்மிகள் ஒரு துண்மி புலத்தில் உள்ள எழுத்துகளின் முன்னணி நிறத்தைக் குறிப்பிடுகின்றன.

bit flipping : துண்மி மாற்றுதல் : 0-ஐ 1 ஆகவும் 1-ஐ 0 ஆகவும் மாற்றும் செயல். சான்றாக, வரைகலை நிரலில் கறுப்புவெள்ளை துண்மி வரைந்த உருவத்தை மாற்ற அதன் துண்மிகளை மாற்றிப் பெறலாம்.

bit image : துண்மிப் படிமம் : ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக அணிபோல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாளருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்றம் எனலாம்.

bit length : துண்மி நீளம்.

bit level device : துண்மி நிலை சாதனம் : வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல்.

bit tocation : துண்மி இருப்பிடம்.

bit manipulation : துண்மியைக் கையாளல் : துண்மிகளை மாற்றியமைத்து ஒரு தரவு மதிப்பிணை மாற்றுதல். துண்மிமாற்றுதல் என்றும் சில சமயம் சொல்லப் படுவதுண்டு.

bit map : துண்மி நிலைப்படம் : 1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப்பகுதி. தொடர்ந்து காட்சித்திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்களின் வரிசை மாற்றம் அடைதல்.

bitmap display : துண்மி நிலைப்படக் காட்சி.

bitmap font துண்மிப்பட எழுத்துரு : துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எழுத்துரு. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் உள்ள எழுத்துகளின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி முறையிலான புள்ளிகளை உடையது. துண்மி மூலம் உருவான திரை அல்லது அச்சுப்பொறியின் அச்செழுத்துகள் புள்ளிக் கணக்குகளாலான எழுத்துகளைக் கொண்டிருக்கும்.

bitmapped display : துண்மிப் படக்காட்சி : திரையில் உள்ள ஒவ்வொரு படப்புள்ளியும் ரேமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்பு படுத்தும் காட்சித்திரை.

bit-mapped graphics : துண்மிப் பட வரைகலை : திரையில் உள்ள படப்புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை மற்றும் நீலநிற படப்புள்ளிகளை துண்மிப்பட முறையில் உருவாக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்மிகள் தேவைப்படும். சில வருடி பொறிகளிலும் ஒவிய மென்பொருள்களிலும் துண்மி வரைகலைகள் உருவாக்கப்படுகின்றன.

bitmapped screen : துண்மி படத்திரை : கணினியின் ரேமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித்திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முடியும்.

bitmapping : துண்மிப் படமாக்கம் : துண்மிகளின் புள்ளிகள் குழுக்களைப் பயன்படுத்தி அகர வரிசை எழுத்து அல்லது வரைகலை உருவத்தை உருவாக்குதல்.

bitmap scanning : துண்மிப் நிலைப்பட வருடல்.

bit mask : துண்மி மறைப்பு : ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தைச் சோதனை செய்யப் பயன்படுத்தப்படும் துண்மிகளின் தொகுதி.

bit matrix : துண்மி அணி : இரு பரிமாண அணி. இதன் உறுப்புகளாக இரும இலக்கங்களாகிய 0 அல்லது 1 மட்டும் வரும்.

BitNET : பிட்நெட் : ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள்தரும் Because It's Time Network என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WAN). ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிணையக் கழகம் (CREN Corporation for research and educational networking) இதனைப் பராமரித்து வந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பெருமுகக் கணினி அமைப்புகளிடையே (main frames) மின்னஞ்சல் மற்றும் கோப்புப் பரிமாற்றங்களுக்காக இப்பிணையம் பயன்பட்டது.

பிட்நெட், டிசிபீ/ஐபி நெறி முறைக்குப் பதிலாக, ஐபிஎம் மின் பிணையப் பணி உள்ளீடு என்ற பொருள் படும் Network Job Entry (NJE) என்னும் தகவல் பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்தியது. இன்றைக்கு இணையத்தில் அஞ்சல் குழுக்களைப் (mailing lists) பராமரிக்கப் பயன்படும் லிஸ்ட்செர்வ் (Listserve) என்னும் மென்பொருள் தொகுப்பு பிட்நெட்டில் உருவாக்கப்பட்டது.

. bit newsgroups : துண்மி செய்திக் குழுக்கள்; துண்மி செய்தி அரங்குகள் : பிட் நெட்டி லுள்ள சில அஞ்சல் பட்டியல் அல்லது அஞ்சல் குழுக்களின் (mailing list) உள்ளடக்கத்தைப் பிரதி பிம்பமாய் தம்மகத்தே கொண்டுள்ள இணைய செய்திக் குழுக்களின் படிமுறை.

bitonal : இரு வண்ண.

bit operations : துண்மி செயல்பாடுகள் : தகவலுக்குள் குறிப் பிட்ட துண்மிகளை மட்டும் படிக்கும் அல்லது மாற்றும் நிரல் செயல்பாடுகள்.

bit oriented protocol : துண்மி சார்ந்த நெறிமுறை : தகவல் துண்மிகளின் தனித்தனி குழுக்களைப் பிரிக்கப் பயன்படும் துண்மி அமைப்பு.

bit parallel : துண்மி இணை : பல துண்மிகளை ஒரே சமயத் தில் அனுப்புதல். ஒவ்வொரு துண்மியும் கம்பித் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கம்பி வழியாகச் செல்லும்.

bit parity . துண்மிப் பொருத்தம்; துண்மிச் சமநிலை.

bit pattern : துண்மித் தோரணி : குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரும எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு.

bit plane : துண்மித் தளம் : ஈஜிஏ-வில் ஒளிக்காட்சி இடை யகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப்படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்கள் இணையாகப் பிரிக்கப்பட்டுக் குறிப் பிட்ட நினைவக முகவரியில் நான்கு பட்டியல்களாகக் காணப் படுகின்றன. சில சமயங்களில் தளங்களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு.

bit position துண்மி இட நிலை.
bit rate : துண்மி வீதம் : தரவு தொடர்பிலோ அல்லது வழித் தடங்களிலோ இலக்கங்கள் அல்லது துடிப்புகள் தோன்றும் விகிதம்.
bit serial : துண்மித் தொடர் : ஒரு வழியில் ஒன்றன்பின் ஒன்றாக துண்மிகளை அனுப்புதல்.
bit sign : துண்மி அடையாளம்.
bit slice microprocessor : துண்மித் துண்டு நுண் செயலி : பொதுவாக நுண்செயலிகள் எட்டுத்துண்மித் தொகுதி களையே (ஒரு பைட் = 8 பிட்டு கள்) கையாள்கின்றன. 2 பிட்டு கள், 4 பிட்டுகளில் ஆன தகவல் களைக் கையாளவும் முடிகிற நுண்செயலி துண்மித் துண்டு நுண்செயலி எனப்படுகிறது. ஏனைய நுண்செயலிகள் செய் கின்ற அதே பணிகளை இந்த நுண் செயலிகள் செய்து முடிக்க, நிரல் அமைக்க முடியும்.
bit-slice processor : துண்மி துண்டு செயலகம் : ஒரு தனி சிப்புவில் 2, 4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித்தனியாக இயங்குமாறு உள்ள செயலகம், பலவித சொல் அளவுகள் உள்ளவாறு நுண்செயலகங்களை அமைத்தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண் கணினியில் 8, 12, 16, 24 அல்லது 32 துண்மி கிடைக்கக் கூடிய முறை.
bit specifications : துண்மி வரன்முறைகள் : ஒரே நேரத்தில் மையச் செயலகம் கணிப்பீடு செய்யும் அளவான கணினியின் உள் சொல் அல்லது பதிவகத்தின் அளவு தகவல் பரிமாற்றப்பாதை, நினைவகத்திலிருந்து மைய செயலகத்துக்கோ அல்லது வெளிப் புறச் சாதனங்களுக்கோ தகவல்களை அனுப்பும் அளவு.
bits per inch : அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள் : தகவல் சேமிப்புத் திறனை அளக்கும் அலகு. ஒரு வட்டில் ஒரு வட்டத் தடம் (track) சுற்றில் கொள்ளுகின்ற துண்மிகளின் எண்ணிக்கை.
bits per second : ஒரு நொடிக்குத் துண்மிகள் : ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகள் என்ற வகையில் தரவு அனுப்பப்படும் விகிதத்தை அளக்கும் முறை. பிபீஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படும் இது பாட் விகித அளவுடனும் மாற்றிப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்புதல் விகிதம் சமமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

bit stream : துண்மித்தாரை ; துண்மி வரிசை : எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படும் துண்மித் தொடர்.

bit stuffing : துண்மி நுழைத்தல் : ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப்படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாட்டுக் குறியீடுகளாகத் தவறாகக் கருதப்படுவதைத் தடுக்க தகவல் துண்மிகளின் அமைப்பைப் பிரித்தல்.

bit synchronous protocol : துண்மி ஒத்தியங்கு நெறி முறை.

bit test : துண்மி சோதனை : ஒரு குறிப்பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்றா அல்லது சுழியா (பூஜ்யம்), இயக்கமா அல்லது நிறுத்தமா என்று கண்டறிய உதவும் நிரல் சோதனை முறை.

bit transfer rate : துண்மி பரிமாற்ற வீதம் : 1. ஒரு குறிப்பிட்ட நேர அலகில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும்.

bit twiddler : துண்மி ஆர்வலர் : 1. கணினி நேசர், 2. கணினியோடு பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைபவர்.

Bix : பிக்ஸ் : எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக் கழகம் (delphi internet services corporation) இதனை வாங்கிச் செயல் படுத்தி வருகிறது. மின்னஞ்சல், மென்பொருள் பதிவிறக்கம், மென்பொருள்/வன்பொருள் தொடர்புடைய கருத்தரங்குகள் போன்ற சேவைகளை பிக்ஸ் வழங்கி வருகிறது.

biz. newsgroups : வணிகச் செய்தி அரங்கம்; வணிகச் செய்திக் குழுக்கள் : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களில் ஒருவகை. வணிகம் பற்றிய விவாதங்களே இக்குழுக்களில் நடைபெறுகின்றன. ஏனைய செய்திக் குழுக்களில் இருப்பது போன்று அல்லாமல், இவற்றில் விளம்பரம் மற்றும் ஏனைய விற்பனை தொடர்பான தகவல்

11 களை வெளியிடவும் அனுமதி உண்டு.

. bj : . பிஜே : இணைய தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப் படுத்தப்படு கின்றன. பெருங்களம் (major domain), உட் களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் பகுதியில் இருப்பது பெருங்களப் பிரிவு. . com, . org, . edu, ... என்று இவை அமையும். ஒரு நாட்டின் பெயரைக் குறிக்கும் சொல்லும் பெருங்களப் பிரிவைக் குறிப்பது உண்டு. முகவரியின் இறுதியில் . in என்று அமைந்தால் இந்தியாவைக் குறிக்கும். . bj என்பது பெனின் (benin) நாட்டைக் குறிக்கிறது.

BL : பிஎல் : Blank and Empty Space in text என்பதன் குறும் பெயர்.

black box : கறுப்புப் பெட்டி : எதிர்பார்க்கப்படும் முறையில் உள்ளீடு சமிக்கைகளை மாற்றுகின்ற ஒரு மின்னணு அல்லது எந்திர சாதனம். ஆனால், இதன் உள்ளே எவ்வாறு செயல்படுகிறது என்பது அதைப் பயன்படுத்துகின்றவருக்குப் பெரும்பாலும் மர்மமாகவே இருக்கும்.

black box approach : கறுப்புப் பெட்டி அணுகுமுறை : ஒரு கணினி அமைப்பின் தகவல் மாற்றும் செயல்முறை பற்றிய தொழில்நுட்ப தகவல்களை ஆராய்வதற்குப் பதிலாக, எல்லைகள், இடைமுகங்கள், உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளைப் பற்றி ஆராய்வது.

blackout : இருட்டடிப்பு : மின்சக்தி ஒட்டம் நின்று போதல்.

blank : வெற்றிடம்; காலியிடம் : 1. எழுத்து எதுவும் பதியப் படாத, ஆவணத்தின் ஒரு பகுதி. 2. மின்னணு விரிதாளில் ஒரு கலம் அல்லது கல வரிசைகளில் உள்ளவற்றை அழிக்கக்கூடிய ஒரு கட்டளை. 3. ஒரு எழுத்துத் தகவல் சேர்க்கக்கூடிய வெற்றிடம்.

blank character : வெற்றிட எழுத்து : 1. வெளியீட்டுச் சாதனத் தில் ஒரு எழுத்து இடவெளியை உருவாக்கக் கூடிய ஒரு குறியீடு. 2. பொதுவாக b என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

blank database : வெற்றுத் தரவுத் தளம்.

blanking : வெற்றிடமாக்கல் : காட்சித் திரையில் ஒரு எழுத்து இருந்தபோதிலும், அந்த இடத்தை வெற்றிடமாக ஆக்கி அந்த எழுத்தை இடாமலிருத்தல்.

blank lines : வெறுங் கோடுகள்.

blank space : வெற்றிடம். blank squash : வெற்றிட நீக்கம் : தகவல் பொருள்களுக்கிடையில் வெற்றிடங்களை நீக்குதல். சான்றாக, City + ", " + STATE என்றும் Austin TX என்றும் வருவதை விட AUSTIN, TX என்று வந்து வெற்றிடம் நீக்கப்பட்டிருக்கும்.

bleed : சொட்டுதல் : டிடீ. பீ. மற்றும் வணிக அச்சில் பயன் படுத்தப்படும் சொல். பக்கத்தின் இறுதிப் பகுதியில் இருந்து வெளியே போவதைக் குறிப்பிடுகிறது.

blickering : பளிச்சிடுதல்.

blind carbon copy : அறியா நகல். காண்க : bcc

blind search : கண்மூடித் தேடல் : ஒரு முறையான திட்டமின்றித் தேடல். அதிகநேரம் எடுக்கும் தேடல். இதில் எல்லா வாய்ப்புகளும் முயற்சிக்கப்படும். ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது.

blinking : சிமிட்டல்; இமைத்தல் : வடிவமைப்பவரின் கவனத்தைக் கவர திரையில் தோன்றித் தோன்றி மறையும் ஒரு வரை படத் தோற்றம்.

blink speed : மின்னும் வேகம்; துடிக்கும் வேகம் : கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பயன்பாட்டுத் தொகுப்பைத் திறந்தவுடன், எடுத்துக்காட்டாக, ஒரு சொல்செயலியைத் திறந்தவுடன், திரையில் நாம் தகவலைத் தட்டச்சுச் செய்ய வசதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுட்டுக்குறி (cursor) துடித்துக் கொண்டிருக்கும். சுட்டுக் குறி மின்னுகின்ற, துடிக் கின்ற வேகத்தைக் குறிக்கும் சொல் இது.

blip : திரைத் தோற்றம் : ஒளிக் காட்சி திரையில் உள்ள ஒரு சிறிய பிரகாசமான தோற்றம். பொதுவாக இது ஒரு ரேடார் திரையாக இருக்கும்.

blip mark : திரைத் தோற்றக் குறியீடு : நுண் ஃபிலம் போன்ற ஒரு ஊடகத்தில் காணப்படும் கோடு அல்லது புள்ளி. இதை ஒளி முறையில் கண்டறிய முடியும். நேரம் அறிய அல்லது எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும்.

bloat : உப்பல்

bloatware : உப்பிய மென் பொருள் : பயனாளரின் நிலை வட்டில் இயல்புக்கு அதிகமாய் ஏராளமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கோப்புகளையுடைய மென்பொருள். குறிப்பாக, அதே மென்பொருளின் முந்தைய பதிப்போடு ஒப்பிடுகையில் இப்போதைய பதிப்பு ஏராளமான இடத்தை எடுத்துக் கொண்டால் இப் பெயரிட்டு அழைப்பதுண்டு. block : தொகுதி; தொகுப்பு; தொகை; திரட்டு : 1. உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனத்தில் ஒரே அலகாகக் கருதப்படும் எழுத்து கள், இலக்கங்கள் அல்லது சொற்களின் தொகுதி. எடுத்துக் காட்டாக, ஒரு காந்தவட்டில் இரண்டு இடைப்பட்ட கட்டத்தின் இடைவெளிக்கு இடை யில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கூறலாம். 2. ஒரு தனிப் பதிவேடாகக் கருதப்படும் ஒரு பதிவேட்டின் தொகுதி.

Block Check Character (BCC) : தொகுதி சோதனை எழுத்து.

block cipher : தொகுதி மறையெழுத்து; தொகுதி மறைக் குறி : இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத் தரவுப் பெறப்படுகிறது. இதற்குப் பல்வேறு மறையாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தனி பொதுமறைக் குறிமுறை. ஒரு தனிமறைக் குறியைப் பயன்படுத்தித் தரவுவை மறையாக்கம் செய்வர். அதற்குரிய பொது மறைக்குறியைப் பயன்படுத்கி மறைவிலக்கம் செய்வர். தரவுவைக் குறிப்பிட்ட துண்மி எண்ணிக்கையுள்ள (எடுத்துக் காட்டாக 64 துண்மிகள்) தொகுதிகளாகப் பிரித்து அத்தொகுதியை தனிமறைக் குறி மூலம் மறையாக்கம் செய்யலாம். மறையாக்கம் செய்யப்பட்ட தரவுவிலும் மூலத் தரவுவிலிருந்த அதே எண்ணிக்கையிலான துண்மிகளே இருக்கும். இம்முறைக்கு தொகுதி தனி மறைக்குறி என்று பெயர்.

block compaction : கட்டம் அமைத்தல் : நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை.

block cursor : கட்டச் சுட்டுக் குறி : உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப்புள்ளிகளால் திரையில் காட்டப்படுகிறது. உரை அடிப்படையிலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் சுட்டி (mouse) நிறுவப்படும் போது, அதன் சுட்டுக்குறி ஒர் எழுத்தை உள்ளடக்கும் கட்டத்துக்குள் அமையும் வகையில் உருவாக்கப்படுகிறது.

block device : தொகுதிச் சாதனம் : ஒரு நேரத்தில் தகவல் பைட்டுகளின் தொகுதியை வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம்.

block diagram : கட்ட வரைபடம்; பகுதிவாரி வரைபடம் : தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம்.

blocked process : தடுக்கப் பட்ட செயல்முறை : தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன்னதாகவே தடுக்கப்படுவதால் செய்யப்பட முடியாத கணிப்பு செயல் முறை.

blocked records : தொகுக்கப்பட்ட பதிவேடுகள் : இரண்டு அல்லது மேற்பட்ட தருக்கக் கோப்புகளில் உள்ள ஏடுகளை ஒரே குழுவாக்கி ஒற்றை ஏடாக மாற்றி அமைத்தல்.

block gap : தொகுதி இடைவெளி : சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு தரவுத் தொகுதிகளைப் பிரிக்கும் இடைவெளி தொகுதி இடைவெளி எனப்படுகிறது.

block graphics : தொகுதி வரைகலை : தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொகுதி வரைகலையை கணினி வேகமாகக் காட்ட முடியும். அவற்றை அனுப்புவதும் விரைவாக நடக்கும்.

block header : தொகுதித் தலைப்பு : ஒரு நினைவக தொகுதி யையோ மற்றும் அதன் உள்ளடக்கங்களையோ குறிப்பிடும் தரவுகளின் சிறு பதிவேடு.

blocking : தொகுத்தல்; தொகுதியாக்கம் : திரட்டு தொகுதி என்று அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான சேமிப்பு அலகாக குறிப் பிட்ட அளவில் பதிவேடுகளைத் தொகுக்கும் செயல். கணினியின் உள்ளீட்டு, வெளியீட்டு செயல் முறைகளின் திறனை அதிகரிக்க இவ்வாறு செய்வதுண்டு. சொல் செயலாக்கத்தில், உரையின் ஒரு பகுதி தொகுதியாக ஒதுக்கப் படுவதுண்டு.

blocking factor : தொகுக்கும் காரணி : ஒரு வட்டு அல்லது காந்த நாடாவில் உண்மையாக இருக்கும் பதிவேட்டின் படி உள்ள தருக்கப் பதிவேடுகளின் எண்ணிக்கை. blocking object : தொகுக்கும் பொருள் : பொருள் சார்ந்த நிரல் களில், பல்வகைக் கட்டுப்பாட்டு இழைகளுக்கு உறுதியளிக்கும் அமைப்பு கொண்ட இயங்காத பொருள்.

block leader : தொகுதித் தொடக்கம்.

block length : தொகுதி நீளம் : ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும்.

block length, fixed : மாறாத் தொகுதி நீளம்.

block list : தொகுதிப் பட்டியல் : ஒரு கோப்பின் அச்சுத் திணிப்பு. மீண்டும் மாற்றியமைப்பதை குறைவாகச் செய்து, பதிவு களும், புலங்களும் அச்சிடப் படுகின்றன.

block move : தொகுதியாக நகர்த்தல் : 1. ஒரு உரையின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப்புக்கு மாற்றுதல். 2. சொல் செயலிகளில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நகர்த்தும் வசதி.

block operator : தொகுதிச் செயற்குறி

block protection : தொகுதிக் காப்பு.

block quote : தொகுதி வினா.

block size : தொகுதி அளவு : கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வன்பொருள் சாதனங்களையும் திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அளவு தீர்மானிக்கப்படுகிறது.

block sort : தொகுதி வரிசையாக்கம் : ஒரு கோப்பினை தொகுதி தொகுதியாகப் பிரிக்கும் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்க இந்த நுட்பம் பயன்படும்.

block, storage : சேமிப்புத் தொகுதி.

block structure : தொகுதிக் கட்டமைப்பு : தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற் கான நிரல் கோட்பாடு. block structured language : தொகுதிக் கட்டமைப்பு மொழி.

blocks world : தொகுதிகள் உலகம்; தொகுதிகள் சூழல் : எந்திர மனிதனியல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல்.

block transfer : தொகுதிப் பரிமாற்றம் : சேமிப்பகத்தின் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தரவுத் தொகுதி முழுவதையும் மாற்றுதல்.

blow : ஊது : உப்பல் : துண்மிகளின் மென்கம்பிகளை ஊதி ப்ரோம் PROM சிப்புகளில் தரவு அல்லது குறியீடுகளை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும்.

blow up : தடுத்து நிறுத்து : மிகை உப்பல் : ஒரு பிழை காரண மாகவோ, தன்னால் கையாள முடியாத தரவுகளைப் பெற்ற சூழ்நிலையிலோ ஒரு நிரல் திடீரென்று நின்று விடுதல்.

blue ribbon problem : நீல நாடா பிரச்சினை : முதல் முயற் சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணை தொடர். பிழை நீக்கவேண்டிய அவசியமில்லை.

blue ribbon programme : நீல நாடா நிரல் : முதல் முயற்சியிலேயே மிகச் சரியாக இயங்கி பிழைநீக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில்லாத நிரல்.

blue screen : நீலத்திரை : திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு காட்சியை அல்லது ஒருவரின் நடிப்பைப் படம் பிடித்துக் கொள்வர். அடுத்து, விரும்புகின்ற பின்புலத்தைத் தனியாகப் படமெடுப்பர். முதலில் எடுத்த காட்சியை இந்தப் பின்புலத்தின் மீது பதியச் செய்வர். இப்போது குறிப்பிட்ட பின்புலத்தில் அக்காட்சி நடைபெறுவதுபோல இருக்கும். ஒருவர் நடந்து செல்வதையும் பாலைவனத்தையும் தனித்தனியே படம் பிடித்து, அவர் பாலைவனத்தில் நடப்பது போலக் காட்டிவிட முடியும்.

. bm : . பிஎம் : ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர் முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு.

BMMC : பிஎம்எம்சி : அடிப்படை மாதப் பாராமரிப்புக் கட்டணம் என்று பொருள்படும் Basic Monthly Maintenance Charge என்பதன் குறும் பெயர்.

. bmp : . பிஎம்பீ : துண்மி வரை படக் கோப்புப் படிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள, ராஸ்டர் வரைகலைக் படத்தைச் சுட்டும் ஒரு கோப்பின் வகைப் பெயர் (extension).

. bn : . பிஎன் : ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸ்லாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர்.

BNC : பிஎன்சி : இணையச்சு (coaxial) வடத்தில் இணைப்புக் காகப் பயன்படுத்தப்படுவது. ஒரு உருளைபோல தோன்றும் இந்த பிளக்கின் இரு எதிர்ப் புறங்களிலும் இரு சிறிய கம்பிகள் இருக்கும். பிளக்கை நுழைத்தவுடன், சாக்கெட்டை இயக்கினால் பிளக்கில் உள்ள கம்பிகள் இறுக்கம் அடைகின்றன.

BNC connector : பி. என். சி இணைப்பி : கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகு வாயில் செருகி 900 திருப் பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.

BNF : பிஎன்எஃப் : பேக்கஸ் இயல்பு வடிவம் என்று பொருள்படும் Backus Normal form என்பதன் குறும்பெயர். ஆர்டிபி எம்எஸ் தரவுத்தள அட்டவணை களில் பேசப்படுவது.

. bo : . பிஒ : ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர்.

board : அட்டை : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுவது. ஒரு தட்டையான, மெல்லிய, செவ்வக வடிவமுள்ள அட்டை கணினியின் உள்ளிருப்பது ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட அச்சிடப்பட்ட மின்சுற்று அடுக்குகளைக் கொண்ட வெளிப்புற உறுப்பு. இதில் சிப்புகள் மற்றும் பிற மின்னணு உறுப்புகள் இணைக்கப்படுகின்றன.

board computer : அட்டைக் கணினி : ஒரு தனி மின் சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி.

board exchange warranty : அட்டை மாற்றக்கூடிய சான்றுறுதி : முதல் அட்டையில் பழுது ஏற்பட்டால் அதற்குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றித்தருவதற்கு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் உறுதி.

board level : அட்டை நிலை : மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள்.

body : உடற்பகுதி : இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.

body face : உடற்பகுதி எழுத்து வடிவம் : ஓர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத் தலைப்பு, பத்தித் தலைப்புகள் பெரிய/ தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்திலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூ ரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை.

body type : உடல்வகை மாதிரி.

body works : உடல் இயக்கம் : மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள்.

BOF : பிஓஎஃப் : Beginning of File என்பதன் குறும்பெயர். முதன்முதலாகத் திறக்கும்போது உள்ள கோப்பின் நிலை. கோப்புகாட்டியை மீண்டும் அமைக்கும் ஆணை அல்லது கட்டளை.

boilerplate : கொதிகலன் தகடு; கொதி தட்டு : பல்வேறு ஆவணங்களில் சொல்லுக்குச்சொல் மீண்டும் பயன்படுத்தப்படுகின்ற பனுவலின் பகுதி.

boilerplate document : கொதிகலன் தகட்டு ஆவணம் : சில தரமான பத்திகளில் தகவலைக் கொண்டு தேர்ந்தெடுத்த பத்திகளை ஒன்றாக இணைத்து ஏற்படுத்தப்படும் ஆவணம். bold : தடித்த.

bold declaration : தடித்த எழுத்தமைத்தல் : அச்சிட்ட பக்கத்தில் சொற்கள் தடிமனாக அமைய அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துகளை சொல் செயலக ஆவணத்தில் சேர்த்தமைத்தல்.

boldface : தடித்த எழுத்து : சாதாரண எழுத்தைவிடத் தடித்துத் தோன்றும் எழுத்து. ஆவணத்தில் உள்ள உரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து தடிமன் என்ற கட்டளை தரும்போது, அப்பகுதி முழுவதும் தடித்த எழுத்துகளாகிவிடும்.

boldface bomb : தடித்தமுகக் குண்டு : Abend and Crash போன்றது. நிரல் தொடர்களை அழிக்கும் நிரலில் (வைரசின்) ஒரு அம்சம்.

boldface font : தடித்த அச்செழுத்து : வழக்கமான எழுத்துகளைவிட கறுப்பாகவும் கனமானதாகவும் உள்ள எழுத்துகளின் தொகுதி. தடித்த அச்செழுத்தில் எல்லா எழுத்துகளும் தடித்ததாக இருக்கும்.

boldfacing : தடித்த எழுத்து அச்சு; தடிப்பாக்கம் : சில அச்சுப்பொறிகளிலும் சொல்செயலாக்க அமைப்புகளிலும் உள்ள ஒரு தன்மை. கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றத்தைத் தருவது. நிழல் அச்சுமுறை மூலம் கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றம் பல அச்சுப்பொறிகளில் தரப்படுகின்றது.

bold italics : தடித்த சாய்வெழுத்து.

bold printing : தடித்த அச்சு : சுற்றிலும் உள்ள எழுத்துகளைவிட அழுத்தமாக சில எழுத்துகளை உருவாக்கும் திறன். நிழல் அச்சு அலலது பலமாக அடித்தல் மூலம் சில அச்சுப்பொறிகள் தடித்த எழுத்துகளை உருவாக்குகின்றன.

Bollee, Leon : போலி, லியோன் : திரும்பத்திரும்ப கூட்டுவதற்குப் பதிலாக நேரடியாக பெருக்கலைச்செய்யும் முதல் எந்திரத்தை 1886இல் வெற்றிகரமாக வடிவமைத்த ஒரு ஃபிரெஞ்சுக்காரர்.

bomb : வெடி : 1. ஒரு நிரலாக்கத் தொடரின் மகத்தான தோல்வி. 2. ஒரு அமைப்பைத் தடுக்கக்கூடிய ஒரு நிரலாக்கத் தொடரை எழுதி ஒரு அமைப்பை வேண்டுமென்றே நாசம் செய்தல்.

book keeping : கணக்கு வைப்பு.

bookman : புக்மேன் : ஒரு வகையான எழுத்துரு. ஐடிசி நிறுவனம் உருவாக்கிய ஒரு எழுத்துரு வகை. bookmark : பக்க அடையாளக் குறி; நினைவுக் குறி : 1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையப்பக்கம் அல்லது இணைய முகவரிக்கு, பின்னால் மீண்டும் காணும்பொருட்டு ஒரு தொடுப்பினை நிலைவட்டுக் கோப்பில் குறித்து வைத்துக் கொள்வது.

bookmark file : அடையாளக் குறிக்கோப்பு : 1. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) எனப்படுகிறது. சூடான பட்டியல் (hotlist) என்றும் அழைக்கப்படுவதுண்டு. 2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, ஹெச்டி எம்எல் வடிவத்தில் ஒரு பக்கத்தில் வெளியீடு செய்யப்படுகின்ற, நாம் விரும்பிப்பார்த்த வலையகங்களின் முகவரிகள் அடங்கிய கோப்பு.

boolean : பூலியன் : பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type). உண்மை/பொய், சரி /தவறு, ஆம்/இல்லை என்பது போன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக்கொள்ளும். சில மொழிகளில் நேரடியாகவே பூலியன் என்னும் தகவல் இனம் உண்டு. சரி, தவறு ஆகிய மதிப்புகளில் ஒன்றை இருத்திவைக்க முடியும். வேறுசில மொழிகளில் நேரடியான பூலியன் இனம் கிடையாது. சுழி என்னும் பூஜ்யம் தவறு எனவும், சுழியல்லாத மதிப்பு சரி எனவும் கையாளப்படுகிறது. பூலியன் குறிக்கணிதத்தை உருவாக்கிய ஆங்கிலக் கணித மேதை ஜார்ஜ் பூல் (George Bool) அவர்களின் பெயரில் இது அமைந்துள்ளது.

boolean algebra : பூலியன் குறிக்கணக்கு : குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரணகாரிய உறவுகளைப் பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற துறைகளில் வெளியே தெரியாமல் இருந்த துறை. மின்னணு கணினியின் காரண - காரிய வடிவமைப்பில் ஒரு முக்கிய பிரிவாக உருவாகி உள்ளது. ஜார்ஜ் பூலேவுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டது. boolean calculus : பூலியன் கணக்கீடு.

boolean complementation : பூலியன் நிரப்புகை.

boolean data : பூலியன் தரவு : ஆம்/ இல்லை அல்லது உண்மை / பொய் என்னும் மதிப்புகளை ஏற்கும் தரவு.

boolean equations : பூலியன் சமன்பாடுகள் : கணக்கோட்பாடு (set theory) கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் கணங்களுக்கிடையேயான சமன்பாடுகள்.

boolean expression : பூலியன் தொடர்; பூலியன் கோவை : பூலியன் இயக்கிகளின் மூலம் உண்மை அல்லது பொய் என்ற இரண்டில் ஒன்றை குறிக்கும் தொடர்.

boolean logic : பூலியன் தருக்கம் : 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூல் என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக் கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தருக்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவை பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள்.

boolean operation, binary : இரும பூலியன் செயற்பாடு.

boolean operator : பூலியன் இயக்கி : தருக்க இயக்கிக் கணக்கீடுகள் மற்றும் முடிவுகள் இரண்டு மதிப்புகளில் ஒன்றாகவே அமையும்.

boolean Search : பூலியன் தேடல் : குறிப்பிட்ட தரவுகளைத் தேடல், பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும்.

boolean variable : பூலியன் மாறிலி : உண்மை அல்லது பொய் என்ற இரண்டு மதிப்புகளை மட்டுமே ஏற்கும் மாறிலி.

Boole, george 1815 - 1864 : பூல், ஜார்ஜ் 1815-1864 : ஆங்கில தருக்கவியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் தருக்கவியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். 1851இல் தருக்க அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் தருக்கவியல் பற்றிய கணிதகொள்கைகள் உருவாக்கப்பட்டன.

bool type : தருக்க இனம்.

boot : ஏற்று; இயக்கு : Boot strap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் சேமிப்புச் சாதனத்தின் மூலம் நிரல்களைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது அல்லது மீண்டும் கணினியைத் இயக்குவது. ஏற்கெனவே கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது அதனை இயக்கும் முறையை முதன்மை நினைவகத்திற்கு அனுப்புவது.

bootable : இயக்க முறைமை ஏற்றிய : இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும்.

bootable disk : இயக்குறு வட்டு : இயக்க முறைமையைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கத்தில் ஏற்றக்கூடிய நெகிழ்வட்டு இல்லையென்றால், நிலைவட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும்.

boot block : இயக்கத் தொடக்கப் பகுதி : இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் ஆணைகளையும், கணினியை இயக்கிவைக்கும் ஏனைய தகவல்களையும் பதித்து வைத்துள்ள வட்டுப் பகுதி.

boot/booting : இயக்கு/இயக்குதல் : கணினியைத் தொடக்கு என்பதைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே ரோமில் (ROM) சிறிய நிரலாக அமைத்திருப்பார்.

boot disk : இயக்கு வட்டு : கணினியை இயக்குவதற்குரிய இயக்கமுறைமை சேமிக்கப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்கியதும், இந்த வட்டிலுள்ள இயக்க முறைமை நினைவகத்தில் ஏற்றப்பட்டு, கணினி பணியாற்ற தயாராகிவிடும். இயக்குவட்டு நெகிழ்வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.

boot drive : இயக்கு வட்டியக்ககம் : இயக்க முறைமை அமைந்துள்ள வட்டு இயக்ககம்.

boot failure : இயக்கத் தோல்வி : கணினியை இயக்க முற்படும் போது, இயக்க முறைமையை வட்டில் கண்டறிந்து நினைவகத்தில் ஏற்றிக் கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்க முடியாமல் போகும்போது இத்தகைய தோல்வி நேருகிறது.

boot partition : இயக்க பாகப்பிரிவு : இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக் கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப் பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும்போது இக் கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன.

boot protocol : இயக்க நெறிமுறை : ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப் பயன்படுகிறது. பூட்பீ (bootP) என்றும் கூறுவர்.

boot record : இயக்கு ஏடு : கணினியைத் இயக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கொண்ட செயலாக்க அமைப்புப் பகுதி. இயக்கும் தகவலைச் சேமித்து வைக்கும் துணை நிலை சேமிப்பகத்தின் பகுதி.

boot ROM : இயக்கு ரோம் : வழங்கன் கணினியிலோ அல்லது பிற தொலைதுார நிலையத்திலோ பணி நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல் ; boot sector இயக்கு வட்டக்கூறு : boot strap இயக்க முன்னோடி.

boot sector : இயக்கு வட்டக் கூறு; இயக்க வட்டுப் பிரிவு : ஒரு வட்டு பல்வேறு வட்டக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி நிரல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக் கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த நிரல் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்கமுறைக் கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது.

boot sequence : இயக்கும் முறை விசை.

bootstrap : ஏற்றும் வசதி; முன்னோடி : கணினியில் பெரிய நிரலை துழைக்க அனுமதிக்கும் வசதி.

bootstrap loader : முன்னோடி ஏற்றி : ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தின்படி ஒரு நிரல் தொடரின் முதல் சில நிரல்களின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வரமுடியும்.

bootstrapping : இயக்கத்தொடக்கம் : பூட்ஸ்ட்ராப் என்னும் சிறிய அரிச்சுவடி நிரலைப் பயன்படுத்தி வேறொரு நிரலை நினைவகத்தில் ஏற்றி, ஒரு கணினியை இயக்க வைத்தல்.

boot tape : ஏற்றுக் நாடா : பல கணினிகளில் இயக்க முறை மையை நாடாவில், பொதுவாக பேழையில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறைமையைப் பயன்படுத்தும் கணினியை இயக்கும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்ககம் இல்லாமல் பயன்படுத்த முடியாது.

bootup disk : இயக்கும் வட்டு.

boot virus : இயக்க நச்சு நிரல் : ஃபிளாப்பி எனும் வட்டில் இயக்குப் பகுதியில் எழுதப்பட்ட நச்சுநிரல். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பில் தொற்றிக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்ள வட்டை ஏற்றினால் மைக்கேல் ஏஞ்சலோ பிறந்தநாளான மார்ச் 6ஆம் நாள் அன்று அது ஏற்றப்பட்ட கணினியில் உள்ள தரவுகளை அழித்துவிடும்.

BOP : பிஓபீ : பிட் சார்ந்த நெறிமுறை என்று பொருள்படும் Bit-Oriented Protocol என்பதன் குறும்பெயர்.

border : எல்லை : திரையின் மீது இயங்கும் சாளரத்தில், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்கூடிய எல்லைக்கோடு, அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு.

Border Gateway protocol : எல்லை நுழைவி நெறிமுறை : இன்றைய இணையத்தின் முன்னோடியாக விளங்கிய என்எஸ்எஃப். நெட் பிணையத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. புறநுழைவி நெறிமுறை (External Gateway Protocol) யின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சுருக்கச்சொல் பிஜிபீ (BGP) ஆகும்.

border layout : கரை உருவரை.

border properties : கரைப் பண்புகள்.

bore : போர் : ஒரு நெகிழ்வட்டு அல்லது காந்த நாடா சுருணை போன்றவற்றின் துளையின் குறுக்களவு.

Borland C++ : போர்லேண்ட் சி++ : டாஸ் மற்றும் விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லாண்ட் நிறுவனம் உருவாக்கிய அன்சி சி மற்றும் சி++ தொகுப்பு மொழி மென்பொருள். சி-யில் எழுதப்பட்ட விண்டோஸ் நிரல்கள் மற்றும் டர்போசி-யை ஏற்பதுடன் பிழை நீக்கவும் செய்யும்.

Borland (Borland int'l) போர்லாண்ட் : 1983இல் பிலிப்கான் உருவாக்கிய முன்னணி பீ சி மென் பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப்பொருளானது டர்ப்போ சி தொழில்துறை தர அளவு கோலானது. டர்போ பாஸ்கல் மற்றும் போர்லண்ட் சி++ மூலம் விண்டோஸ் மற்றும் பொருள் நோக்கு நிரலாக்கமும் இயலும்.

borrow : கடன் வாங்கு : கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது.

boss screen : முதலாளியின் திரைக் காட்சி; மேலதிகாரியின் திரைத் தோற்றம் : அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்பட்டபின், அலுவலக ஊழியர்கள் பணி நேரத்தில் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அந்த நேரம் முதலாளி அல்லது மேலாளர் அங்கே வந்து விட்டால், உடனடியாக கணினித் திரையில் ஒரு புதிய தோற்றத்தை வரவழைத்து விடுவர். இது போல முதலாளி/மேலதிகாரி வரும்போது காட்டுவதற்கென்றே டாஸ் விளையாட்டுகளில் தனிச்சிறப்பான திரைத் தோற்றங்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் வணிகம் தொடர்பான விவரங்கள் காணப்படும். இப்போதுள்ள மேக், விண்டோஸ், லினக்ஸ் பணித்தளத்தில் இத்தகைய சிக்கல் இல்லை. நொடியில், ஒரு கட்டிச் சொடுக்கில் திரைத் தோற்றத்தை மாற்றிவிட முடியும்.

bot : பாட் : நாடாவின் தொடக்கம் எனப்பொருள்படும். Beginning of Tape என்பதன் குறும் பெயர். ஒரு காந்த நாடாவில் பதிவு செய்வதை எந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு.

bottleneck : இடர்ப்பாடு.

bottom-up design : கீழிருந்து-மேல் வடிவமைப்பு : ஒரு மென் பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பணி களுக்கான நிரல் வரைவும் வடிவமைக்கப்படும்.

bottom-up programming : கீழிருந்து-மேலான நிரலாக்கம் : பெரும்பாலான நிரலர்கள், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் ஆகிய இரண்டு முறைகளின் சரியான கலவையே சிறந்தமுறை என நம்புகின்றனர்.

bottom up technique : கீழிருந்து மேல் செல்லும் நுட்பம்.

bounce : திருப்புகை, திருப்பிவிடும்; திருப்பியனுப்பு : நமக்கு வரும் மின்னஞ்சலை நமது கருத்துரை எதுவுமின்றி, மேலொப்பம் எதுவுமின்றி அப்படியே இன்னொருவருக்குத் திருப்பி அனுப்புதல். அந்த மின்னஞ்சலைப் பெறுபவர்க்கு நாம் திருப்பியனுப்பிய மடல் என்பதை அறிய முடியாது. நமக்கு அஞ்சல் அனுப்பியவரிடமிருந்து அது வந்துள்ளதாகவே எண்ணிக் கொள்வார்.

Bouncekeys : திருப்பு விசைகள் : விண்டோஸ் 95/98இல் உள்ள ஒரு சிறப்புக் கூறு. விசைப்பலகையில் ஒரே விசையை இரு முறையோ, அறியாமல் தவறுதலாக வேறுசில விசைகளையோ சேர்த்து அழுத்தும்போது, அவற்றைப் புறக்கணிக்குமாறு நுண்செயலிக்கு ஆணையிடலாம்.

bound : கட்டுப்பட்ட : செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப் பகுதியின் செயல்முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடைசெய்கிறது என்பதைக் குறிப்பிடுவது.

boundary : எல்லை : ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி, சான்றாக, நிரல் தொடர்கள் 16 பைட் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும். அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும்.

boundary fill : எல்லை நிரப்பி : ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல்முறை. எல்லை மதிப்பு உள்ள படப்புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப்படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்) களால் நிரப்புதல்.

bound column : கட்டுண்டநெடுக்கை.

bound controls : கட்டுண்ட இயக்கு விசைகள்.

boundry of input : உள்ளீட்டு எல்லை.

Bourne shell : போர்ன் செயல் தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல்தளம் அல்லது நிரல் மாற்றி எனலாம். ஏடீ&டீ சிஸ்டம்-V யூனிக்ஸின் இடம் பெற்றது. 1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஸ்டீவ் போர்ன் (steve bourne) இதனை உருவாக்கினார். ஏனைய யூனிக்ஸ் செயல்தளங்களில் இருக்கின்ற சில வசதிகள் (கட்டளை வரியில் ஒரு கோப்பினைத் திருத்தியமைப்பது, முந்தைய கட்டளைகளைத் திரும்ப வரவழைப்பது) இல்லாத போதும், செயல்தள நிரல்கள் பெரும்பாலானவை போர்ன் செயல்தளத்தில் இயங்குபவையாகவே உள்ளன.

box class : பெட்டி இனக்குழு.

box, decision : தீர்வுப் பெட்டி.

box drawing characters : பெட்டி வரையும் குறிகள் : நீட்டிக்கப்பட்ட ஆஸ்கியில் உள்ள பெட்டிகளை வரையப் பயன்படுத்தப்படும் குறிகளின் தொகுதி.

box layout : பெட்டி உருவரை.

bozo : போஸோ : இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான, பிறழ்மனப்போக்கு உடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்; பேச்சு வழக்குச் சொல்.

bozo filter : போஸோ வடி கட்டி : இணையப் பயனாளரின் கணினியில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுவுக்கான மென்பொருள் தொகுப்பில் இருக்கும் வசதி. இதன்மூலம் ஒருவர் தனக்கு, குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும், செய்திக்குழுக் கட்டுரை வடிகட்டிப் புறக்கணித்து விடலாம். பெரும்பாலும், போஸோக்களிடமிருந்து வரும் தகவல்களைத்தான் இவ்வாறு தடுப்பர்.

BPI : பிபிஐ : ஓர் அங்குலத்தில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bit per inch என்பதன் சுருக்கம். bytes per inch என்பதற்கு BPI என்று குறும்பெயர் தரப்படுகிறது.

bps : பிபீஎஸ் : ஓர் வினாடியில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bits per second மற்றும் bytes per second என்பதன் குறும்பெயர், bps என்பதாகும்.

bracket : அடைப்புக்குறி.

brain-damaged : மூளை பாதிக்கப்பட்ட : மோசமாக நடக்கும் அல்லது அழிக்கும் முறையில் செயல்படும் நிரலைக் குறிப்பிடும் சொல்.

brain dump : குப்பைத் தகவல் : மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு வழியாக கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத்தகவல் குப்பை, அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிகக்கடினமான செயல்.

brain-wave interface : மூளை- அலை இடைமுகம் : மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறனுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள்.

branch : இணை பிரிதல் : 1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஓட்டம் ஒன்று அல்லது பலபாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு நிரல்வரிசையில் இருந்து மற்றொரு நிரல் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக்கூடிய ஆணை.

branching : கிளைத்தல்; கிளை பிரித்தல்.

branching Statement : கிளைபிரிக் கூற்று ; கிளைபிரி கட்டளை.

branch Instruction : கிளை பிரிப்பு ஆணை : ஒரு நிரலில் இரண்டில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கணினிக்கு உதவும் ஆணை. நிரலை இயக்கும்போது, சூழ்நிலைக்கேற்ப பிரிந்து போதல் செயல்படுத்தப்படும்.

branch point : பிரியும் இடம் : ஒரு நிரலில் பிரிந்து போதலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம்.

branded : முத்திரைப் பெயர்.

BRB : பிஆர்பி : நான் மீண்டும் வருவேன் என்று பொருள்படும் I'll be right back என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணைய அரட்டை மற்றும் இணைய தகவல் சேவைகளில் கலந்து கொள்வோர் தற்காலிகமாக அக்குழுக்களிலிருந்து பிரியும் போது தரும் செய்தி.

bread board : சோதனைப் பலகை; பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு.

சோதனைப் பலகை

breadth-first search : அகல - முதல் தேடல் : மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை முதலில் கண்டு பிடிக்க முடியும்.

Break : முறி; நிறுத்து : ஒரு நிரலாக்கத்தொடர் செயல்படுவதைத் தடுப்பதற்கான ஆணை. Control Break என்பதற்கு ஒப்புமை உடையதல்ல.

break code : முறிவு குறி முறை : விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு.

break, control : கட்டுப்பாட்டு முறிப்பு : கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது Ctrl, Break ஆகிய இருவிசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம்.

break down : நிலைகுலைவு.

break detect : முறிவு அறிதல் : நீள் வரிசை அளவை 0-க்களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் தகவியின் திறன்.

break key : முறிவு விசை : கணினி செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும்.

break mode : முறிவு பாங்கு.

breakout box : அவசர உதவிப் பெட்டி : கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அவசர உதவிப் பெட்டி

breakpoint : முறிவிடம் : ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை செய்தல் அல்லது பிழைநீக்க நிரல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

breakpoint instructions : நிறுத்துமிட ஆணைகள்.

break signal : முறிவு சமிக்கை : தொகுதி கோப்பு செயல்படுவதை நிறுத்தவோ அல்லது நிரலை நிறுத்தவோ அல்லது செய்தித் தகவல் தொடர்பு நிகழ்வை நிறுத்தவோ பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி.

BRI : பிஆர்ஐ : அடிப்படைக் கட்டண இடைமுகம் என்ற பொருள் தரும் Basic Rate Interface என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஐஸ்டிஎன் தகவல் தொடர்பில் இரண்டு பி (64 கேபிபீஎஸ்) தடங்களையும் ஒரு டி (64 கேபிபீஎஸ்) தடத்தையும் பயன்படுத்தி குரல், ஒளிக் காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்பிப் பெறக்கூடிய வசதி.

bridge : இணைவி : பல தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இனைத்து ஒரு பல்முனை மின் சுற்றினை உருவாக்கும் சாதனம்.

bridge router : இணைவித்திசைவி : பிணையத்தில் இணைவியாகவும் திசைவியாகவும் செயல்படும் ஒரு சாதனம். ஒரு குறும்பரப்பு அல்லது விரிபரப்பு பிணையத்தின் இரு கூறுகளை இது இணைக்கிறது. இரு கூறுகளுக்கிடையே தகவல் பொதிகளை வழிச்செலுத்த இரண்டாம் நிலை முகவரிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

bridge ware : இணைப்புப் பொருள் : ஒருவகைக் கணினிக்கு எழுதப்பட்ட நிரல்களை வேறு வகையான கணினி புரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பு செய்யும் நிரல்கள்.

brietcase : கைப்பெட்டி : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு கோப்புறை (folder). பொதுவாக இரண்டு கணினிகளுக்கிடையே (குறிப்பாக மேசைக் கணினிக்கும் மடிக்கணினிக்கும் இடையே) கோப்புகளை ஒத்திசைவுப்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது. இந்தக் கோப்புறையிலுள்ள கோப்புகளை வேறொரு கணினிக்கு வட்டின் மூலமோ, கம்பிவடம் மூலமோ பிணையம் மூலமாகவோ மாற்றலாம். அவ்வாறு நகலெடுத்த கோப்புகளை மீண்டும் முந்தைய கோப்புறையில் மாற்றும்போது, திருத்தம் செய்யப்பட்ட கோப்புகளை நாளதுவரை புதுப்பித்துக் கொள்ளும், மேசைக் கணினி, மடிக் கணினி இரண்டையும் தம் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

briefcase computer : கைப்பெட்டி கணினி : ஒரு கைப் பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி.

bright : பொலிவு; ஒளிர்வு.

brightness : ஒளிர்மை : 1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுதல் - குறிப்பாக சில பகுதிகளை மட்டும் தெளிவாகக் காட்டுதல்.

bring to front : முன்னால் கொண்டு வா.

brittle : நொறுங்கக் கூடிய.

broadband : அகலக்கற்றை : குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் கற்றை தரவுத் தொடர்பு வழித் தடங்கள் செயல்படுகின்றன. ஐம்பது இலட்சம் பாட் (baud) செய்தி வேகம் வரை இதன் மூலம் தரவுகளை அனுப்ப முடியும். Narrow band உடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

broadband and video : அகல அலைக்கற்றை மற்றும் ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (conferencing).

broadband coaxial cable : அகலக்கற்றை இணை அச்சு வடம்.

broadband modem : அகலக்கற்றை இணக்கி : அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை.

broadband network : அகலக்கற்றைப் பிணையம் : தகவல் போக்குவரத்து ரேடியோ அலை

வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது ஒளியிழை வடங்களினால் பட்டுள்ளன. இவற்றின் வழி யாக சாதாரணத் தகவல், குரல் மற்றும் ஒளிக்காட்சி ஆகிய வற்றை ஒரே நேரத்தில் வெவ்வேறு அலை வரிசைகளில் அனுப்ப முடியும். அகல கற்றைப் பிணையம் உயர்வேகத் (வினாடிக்கு 20 மெகா பைட்டுக் கும் மேல்!. ஆனால் சாதாரண அடிக் கற்றைப் பிணையங்களை விட செலவு அதிகமாகும். நிறுவுவது கடினம். வடத் தொலைக்காட்சியின் தொழில் இப்பிணையத்தில் பினபற்றபபடுகிறது.

broadband research network அகலக்கற்றை ஆய்வுப் பிணையம்

broadband transmission அகலக்கற்றை பரப்புகை அனுப் பும் ஊடகத்தை பல வழித்தடங் களாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் தகவல் அனுப்பும் முறை.

broadcast அலைபரப்பு : ஒரே நேரத்தில் பல இடங்களுக்குத் தகவலை அனுபபுவது.

broadcast storm அலைபரப்புப் புயல் : ஒரு பிணை யத்தில் நடைபெறும் தகவல் ஒலிபரப்பு, பல்வேறு சேவை மையக் கணினிகளை நேரத்தில் பதிலிறுக்கத் துண்டும் போது ஏற்படுகின்ற போக்கு வரத்து நெரிசல், ஒரு பிணையத் தில் பழைய டீசிபி/ஐபி திசைவி களையும், புதிய நெறிமுறை களை ஏற்கும் திசைவிகளையும் கலந்து பயன்படுத்துவதால் அலை பரப்புப் புயல் ஏற்படுகிறது. பிணையம் உருகிக் கரைதல் (network meltdown) என்றும் கூறுவர்.

brom ப்ரோம் இருதுருவ படிக்க மட்டும் நினைவகம் எனப் பொருள்படும் Bipolar read only memory என்பதன் குறும் பெயர்.

bromide : ஒளியுணர் தாள் : ஒளி உணரும் தாள், டைப் செட்டில் பயன்படுவது.

brooklyn bridge : புரூக்களின் பாலம் : ஐந்தாம் தலைமுறை கணினி அமைப்புகளில் உள்ள கோப்பு பரிமாற்ற நிரல். தகவல் களை மடிக் கணினிக்கும், மேசைக் கணினிக்கும் இடையில் மாற்றுகிறது.

brownout பழுப்பு வெளியேறல் : வழக்கத்தைவிடக் குறை வாக மின்சக்தி குறையும்போது புரவுன்அவுட் ஏற்படுகிறது. மின்சக்தியின் தேவை, அதன் உற்பத்தியை விட 50 ஹெர்ட்ஸ் அதிகரிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. இதனால் யின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

browse : உலாவு : தேடு : 1. டி பேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற தரவுத் தளத் தொகுப்புகளில், ஒரே திரையில் ஒட்டு மொத்தமாக பல ஏடுகளைத் திரையிட்டு தகவலைத் தேடவும் திருத்தவும் பயன்படும் கட்டளை. 2. இணையத்தில் மேலோட்டமாக தகவல் பக்கங்களைப் பார்வை யிடுவதைக் குறிக்கும் சொல்.

browse button : உலாவு பொத்தான்.

browse mode : உலாவுப் பாங்கு.

browse option : உலாவுத் தேர்வு.

browse stylesheets : உலாவி பாணித் தாள்கள்.

browser : உலாவி : நிரலாக்க மொழி அளிக்கின்ற கருவி வரிசை முறையைப் பார்த்து, குறி முறையைத் திருத்த நிரலருக்கு உதவும் மென் பொருள்.

browsers/web browser : உலாவி/வலை உலாவி : வலையில் ஆவணங்களைத் தேடிப் பெறவும், ஆவணத்திலிருந்து ஆவணத்திற்கு இணைப்புப் பின் தொடரவும் அனுமதிக்கும் மென்பொருள் இணையத்தில் பயன் படுவது.

browse view : உலாவுத் தோற்றம்.

browsing : உலாவுதல்;நோட்டமிடல் : கணினி பட்டியல்களிலோ அல்லது கோப்புகளிலோ சுவையான செய்தி கிடைக்காதா என்று தேடுதல்.

brush : துரிகை : கணினி வரை படங்களில் ஜாய் ஸ்டிக், பேடில் அல்லது அதை போன்ற உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் காட்சித் திரையின் எந்தப் பகுதியிலும் நகர்த்தக் கூடிய வண்ணம் தரும் சாதனம்.

brute-force technique : முரட்டுவிசை நுட்பம்.

. bs : . பிஎஸ் : ஒர் இணைய தளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

BSAM (Bee Sam) : பி. சாம் : அடிப்படைத் தொடர் வரிசை அணுகுமுறை என்று பொருள் படும் Basic Sequential Access Method என்பதன் குறும்பெயர்.

BSC : பிஎஸ்சி : இரும ஒத் திசைவு தகவல் தொடர்பு என்று பொருள்படும் Binary Synchronous Communication என்பதன் குறும்பெயர். தரவு அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு செயல்முறை.

BSD UNIX : பிஎஸ்டி யூனிக்ஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடி&டி பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக் கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் பதிப்பு ஆகும். இதுவே சுருக்கமாக பிஎஸ்டி யூனிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்று யூனிக்ஸில் இருக்கின்ற பிணையத் திறன், கூடுதல் புறச்சாதன ஏற்பு, நீண்ட கோப்புப் பெயர், சி-செயல் தளம், விஐ தொகுப்பான், டிசிபி/ ஐ. பீ ஆகிய பல கூடுதல் வசதிகள் பிஎஸ்டி யூனிக்ஸின் பங்களிப்பாகும். இன்றைக்கு யூனிக்ஸின் பரவலுக்கும், கல்விக் கூடங்களை இணையத்தில் இணைப்பதற்கும் காரணமாக அமைந்தது பிஎஸ்டி யூனிக்ஸ். 1பி. எஸ்டி என்ற பதிப்பில் தொடங்கி 4. 3 பிஎஸ்டி பதிப்புவரை வெளியிடப்பட்டது. 1993 ஆண்டுடன் பிஎஸ்டி யூனிக்ஸின் வெளியீடு நிறுத்தப்பட்டு விட்டது.

BSN : பிஎஸ்என் : வணிக சந்தாதாரர் பிணையம் என்று பொருள்படும் Business Subscriber Network என்பதன் குறும்பெயர்.

b-spline : பி-ஸ்ப்ளைன் : கணினி வரைகலையின் தொடர்ச்சியை உறுதி செய்யும் கணித வாய்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வளைவு.

. bt : . பி. டீ : ஓர் இணைய தள முகவரியின் இறுதியில், பூட்டான் நாட்டைச் சார்ந்த தளம் என்பதைக் குறிக்க இணைக்கப்படும் பெருங்களப் பிரிவுப் பெயர்.

BTAM : பிடாம் : அடிப்படை தொலைத் தொடர்பு அணுகுமுறை என்று பொருள்படும் Basic Telecommunication Access Method என்பதன் குறும்பெயர். தொலைதூர சாதனங்களுடன் படித்து எழுதி தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு அணுகு முறை.

B-tree : பி. மரம் : சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் தேடி கண்டறி முடியும்.

Btrieve : பிட்ரீவ் : நாவல் (Novell) நிறுவனத்தின் தரவு தள மேலாண்மை முறைமை

BTW : பிடீடபிள்யூ : இந்த வழியே என்று பொருள் படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது.

bubble : குமிழ் : குமிழ் வரை படத்தில் ஒரு குறியீடு அல்லது குமிழ் நினைவகத்தில் துண்மி.

bubbie chart : குமிழ் நிரல் படம் : குமிழ் போன்ற குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி தரவுப் பாய்வு நிரல் படங்களை உருவாக்குதல்.

bubble jet : குமிழ் ஜெட் : கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினைவிட மலிவானது.

bubble jet printer : குமிழி பீச்சு அச்சுப்பொறி : தொடா அச்சு முறை சார்ந்த அச்சுப் பொறி. மைபீச்சு அச்சுப்பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்படுகின்றன. மையைத் தயாரிக்க தனிச் சிறப்பான சூடாக்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது.


குமிழ் பீச்சு அச்சுப் பொறி
ஆனால் மைபீச்சு அச்சுப்பொறியில் பீஸோ மின்படிகங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

bubble memory : குமிழ் நினைவகம் : காந்தப் புள்ளிகளாக தகவலை சேமித்து வைக்கும்முறை. ஒரு மெல்லிய, மின்கடத்தாப் பொருளால் ஆன படலத்தின் (film) மீது குமிழ்கள் நிற்கின்றன. அழியாத இருப்பகத் திறனை இது அளிக்கிறது.

bubble sort : குமிழி வரிசைப் படுத்தல் : ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் nஉறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல்முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற் கொள்ளப்படுகிறது. அடிப்பாகத்திலிருந்து எடை குறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற் பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

bucket : வாளி : கூட்டாக அழைக்கப்படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது 'தற்சார்பு முகவரியாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக்கூடியதாக இருக்கலாம்.

bucket sort : கலன் வரிசையாக்கம்.

buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும்முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும்.

budget forcasting model : நிதி நிலை முன்மதிப்பீட்டு மாதிரியம் : தரமான கணக்கீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி தனித்தனி துறையிலிருந்து அளிக்கக்கூடிய நிதிநிலைத் தகவல்களைத் தொகுப்பதற்குப் பயன்படக் கூடிய மாதிரியம். பணப் பாய்வு, ஒரு பங்குக்கான வருமானம் மற்றும் பிற நிதித் துறை விகிதாச்சாரங்களை முன்னறிவிப்புச் செய்யும் திறன்களையும் இதில் உள்ளடக்கலாம். இதன் விளைவாக நிதிநிலைக்கு ஏற்றவாறு, விரிதாள் பணித் தொகுப்புகளில் இத்தகைய மாதிரியங்கள் பொதுவாக சேர்க்கப்படும்.

budgeting : வரவு செலவுத் திட்டமிடல்.

buffer : இடையகம்;இடைநிலை நினைவகம் : பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகின்ற கணினியின் செயலகத் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம்.

buffer amplifier : இடையகப் பெருக்கி.

buffer card punch : இடையக துளை அட்டை.

buffered computer : இடைத் தடுப்புக் கணினி : ஒரே நேரத்தில் உள்ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி.

buffer flush : இடையகம் வழிதல் இடைநிலை : நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தரவுவை மாற்றுதல்.

buffering : இடைச்சேமிப்பு : தகவல் தொடர்பு பாதையில் தரவுகளை அனுப்புவதைத் தாமதப்படுத்துவதோ அல்லது தற்காலிகமாக சேமித்து வைப்பதோ செய்யப்படுவது.

buffer memory : இடை நினைவகம்;இடைநிலை நினைவகம் : உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது.

buffer pool : இடையகக் குவிப்பு : கூடுதல் இருப்பிடங் களுக்காக நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி.

buffer storage : இடைநிலைச் சேமிப்பு : இடைநிலை தகவல் தேக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் நிரலாக்கத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம் வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் முறை. 2. ஒரே வேகத்தில் செயல்படாத இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது, தகவல் எடுத்தாளப்படும் வரை சிறிதுநேரம் தற்காலிகமாகத் தேக்கிவைக்கும் இடம். விசைப் பலகையிலிருந்து வரும் தகவலை செயலி படிக்கும் போது, அச்சுப் பொறிக்குத் தகவல் அனுப்பப் படும்போது, வட்டிலிருந்து தகவலைப் படிக்கும் போது, வட்டில் தகவல் எழுதப்படும் போது மற்றும் இதுபோன்று வேக வேறு பாடுள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு இடைநிலை தகவல் தேக்கம் அவசியமாகும்.

bug : பிழை;தவறு : ஒரு கணினியின் நிரலிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன்பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி செய்வதாகும்.

buggy : முற்றப் பிழையான;முழுக்கப் பிழையான : பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்.

building block principle : உறுப்புத் தொகுதிக் கோட்பாடு.

built-in : உள்ளிணைக்கப்பட்ட.

built-in check : உள்ளிணைந்த சரிபார்ப்பு.

built-in font : உள்ளிணைந்த எழுததுரு.

built-in function : உள்ளிணைந்த செயற்பாடு.

built-in groups : உள்ளிணைந்த குழுக்கள்;உள்ளிணைந்த உரிமைத் தொகுதிகள் : விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உரிமைகளுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளுள் குறிப்பிட்ட சிலவற்றை ஒரு தொகுதியாக வைத்துக் கொள்வதால், ஒரு பயனாளருக்கு அத்தொகுதி உரிமையை வழங்குவது எளிமையாக இருக்கும். குறிப்பிட்ட பொதுவான உரிமைகள் பெற்ற பயனாளர் குழுக்களை உருவாக்குவதும் எளிதானது.

built-in pointing device : உள்ளிணைந்த சுட்டுச் சாதனம்.

bulk eraser : முழுக்க நீக்கல்;முற்றத் துடைத்தல்;ஒட்டு மொத்தமாய் அழித்தல் : நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்தி வாய்ந்த மின்காந்த்ப் புலத்தை உருவாக்குவதன் மூலம் மின்காந்த ஊடகத் திலுள்ள இரும்புத் துகள்களைச் சிதைத்து தகவல் அனைத்தையும் துடைத்திட முடியும்.

bulk storage : மொத்த சேமிப்பகம்;மொத்த இருப்பகம் : அதிக அளவில் தகவல்களைச் சேமிப்பது. பொதுவாக, நீண்டகால தேவைக்காக இவ்வாறு செய்யப்படும்.

bullet : பொட்டு : ஒரு பட்டியலில் உள்ள வகைபாடுகளைத் தொடங்கப் பயன்படுத்தப்படும் பொட்டுப் போன்ற அடையாளம்.

builetin board : அறிக்கைப் பலகை, தகவல் பலகை : கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

bulletin board service : அறிக்கைப் பலகை சேவை : ஒரு வணிக தகவல் தொடர்பு கட்டமைப்பு. இதில் சந்தாதாரர்கள் செய்திகளை அனுப்பலாம்;மென்பொருள் ஆலோசனை பெறலாம்;நிரல்களை ஏற்றிப் பெறலாம்;இன்னும் பலவற்றைச் செய்யலாம். BBS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. Bulletin Board System என்றும் சொல்லப்படுகிறது.

bullet-in font : உள்ளமைந்த எழுத்துரு : அச்சுப்பொறியின் ரோமில் (ROM) நிரந்தரமாகக் குறியீடு இடப்பட்ட எழுத்துருக்கள்.

bullet proof : பிழைதடுப்புத் திறன் : வேறொரு கணினியின் வன் பொருள் குறைபாடுகளால் நல்ல படியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கணினிச் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தடுத்துக் காக்கும் திறன்.

bullets and numbering : பொட்டும் எண்ணிடலும்.

bump mapping : பம்ப் மேப்பிங் : கணினி வரைகலையில் ஒரு தொழில் நுட்பம்.

bunde : கட்டு;உள்ளிணைந்த : மென்பொருள் துணைப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஒரு கணினி விலையின் பகுதியாகச் சேர்ப்பது.

bundled : உள்ளினைக்கப்பட்ட : கணினி பொருட்கள் மற்றும் சேவைகள் முழுவதையும் ஒரே விலைக்கு சேர்த்துத் தருவதைக் குறிப்பது.

bundled Software : உள்ளிணைந்த மென்பொருள் : கணினி அமைப்பின் மொத்த விலையில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்ட மென்பொருள்.

bundled/unbundled : உள்ளிணைந்த/பிரிக்கப்பட்ட : ஒரு விலைக்கு அளிக்கப்படும் வன்பொருள்/மென்பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனி விலை உண்டு.

bundling : உள்ளிணைத்தல்;உடன்சேர்த்தல் : கணினி அமைப்பின் விலையிலேயே மென்பொருள், பராமரிப்பு, பயிற்சி மற்றும் பிற பொருள்கள் அல்லது சேவைகளைச் சேர்த்தல்.

bunny suit : காப்பு உடை : சிப்பு தயாரிக்கும் இடங்களில் மனித துண்ணுயிரிகள் தொற்றாமல் தடுக்க துய்மையான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல்.

bureau : அலுவலகம் : தகவல் செயலாக்கச் சேவைகளை வேறொரு நிறுவனத்திற்கு அளிக்கும் நிறுவனம்.

burn : எரித்தல் : 1. மிக அதிக மின்சக்தி அல்லது வெப்பத்திற்கு உள்ளாக்கி மின்சுற்றை அழித்தல். 2. குறுவெட்டில் எழுதுவதையும் குறிக்கிறது.

burn-in : உள்ளெரித்தல் : உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வெப்பநிலையில் இயக்குவது ஒரு சராசரியான சோதனை. இதன்மூலம் பலவீனமான மின் கற்றுகள் எரிந்து போய் சோதனைகளைத் தாங்கும் பாகங்கள் மட்டும் மிஞ்சும்.

burning : எரித்தல் : படிக்க மட்டுமான நினைவகத்தில் (ROM) நிரல்களைப் பதித்தல். குறுவட்டில் எழுதுவதையும் குறிக்கும்.

Burroughs adding machine : பரோவின் கூட்டல் எந்திரம் : 1884இல் வில்லியம் பரோஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிகமுறை யிலான கூட்டும், பட்டியலிடும் எந்திரம், வகைப் பலகை மற்றும் அதன் தொழில் நுட்பம் இன்னும் கைகளால் இயங்கும் சில எந்திரங்களில் அப்படியே மாறாமல் உள்ளது.

Burroughs Corporation : பரோஸ் நிறுவனம் : கணினிக் கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

Burroughs, William Seward (1857-1898) : பரோஸ் வில்லியம் சீவார்ட் (1857-1898) : முதல் வணிக முறையிலான கூட்டல் எந்திரத்தைக் கண்டுபிடித்தவர். இன்றைய பரோஸ் கார்ப்பரேஷன் அந்த எந்திரத் திலிருந்துதான் துவங்கியது.

burst : வெடிப்பு : 1. கணினி செயல்பாடுகளில், தொடர்ச்சியான காகிதத்தில் இருந்து தனித்தாள்களைப் பிரித்தல். 2. தரவு அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்கைகளின் தொகுப்பு.

burster : வெடிப்பி : பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டினைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள்களை எடுக்கிறது.

burst errors : வெடித்த பிழைகள் : தகவல் தொடர்புகளில் மிக நெருக்கத்தில் (வெடிப்பில்) ஏற்படும் தொடர் பிழைகள், நடைமுறையில் பெரும்பாலான பிழைகள் நெருக்கத்தில் (வெடிப்பில்) தான் ஏற்படுகின்றன.

bursting : வெடித்தல் : தொடர்ச்சியான படிவ காகிதத்தைத் தனித் தாள்களாகப் பிரிக்கும் செயல்முறை.

burst mode : வெடிப்பு முறை : தடை செய்யமுடியாத முறையில் தரவுகளைப் படிக்கும் அல்லது எழுதும் முறை.

burst mode transfer : வெடிப்பு பாங்கு மாற்றம் : குறுவட்டு (CD-Rom) விலிருந்து தகவல் பரிமாற்றம். சராசரி தகவல் பரிமாற்றம் விகிதமான 150 கிலோ பைட்/நொடி (முறை 1) அல்லது 171 கிலோ பைட்டுகள்/நொடி (முறை 2) ஆகியவற்றைவிட பல மடங்கு பெரியது. ஸ்கஸ்ஸி (SCSI) தொகுதியைவிட அதிக வேகத்தை இது எடுக்க முடியும்.

burst speed : வெடிப்பு வேகம் : 1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப்பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்த வரிக்கு வராமல் ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக் கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக் கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால் உண்மையில் அச்சுப் பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.

bursty : வெடிப்பி; வெடிப்பு முறை : தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியாகத் தரவை அனுப்புவதற்குப் பதில் வெடிப்பு முறையில் துண்டு துண்டாக அனுப்பும் முறை.

bus : மின் பாட்டை : தகவல் மற்றும் மின் சமிக்கைகளை அனுப்புவதற்கான பாதை அல்லது வழித்தடம்.

bus architecture : மின்பாட்டைக் கட்டுமானம். :

bus bridge : மின்பாட்டைப் பாலம் : இரண்டு மின் பாட்டைப் தொகுதிகளை ஒன்றாக இணைக்கும் சாதனம்.

bus card : மின் பாட்டை அட்டை : விரிவாக்க அட்டை. இது கணினியின் விரிவாக்க மின்பாட்டையில் பொருத்தப்படுவது.

bus common : பொது மின் பாட்டை : வன்பொருள் சாதனங்களுக்கோ கணினியின் உள் பாகங்களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் இரு நிலைகளுக்கிடையிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின்பாட்டைத் தொகுதி அமைப்பு பயன்படுமானால், அதன் செயலகங்கள், நினைவகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின்பாட்டை ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண்டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின்பாட்டை இணைக்கப்படும்.

bus enumerator : மின் பாட்டைக் கணக்கெடுப்பி : ஒரு குறிப்பிட்ட மின்பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்டறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்த அடையாளக் குறியீடு அளிக்க வல்ல ஒரு சாதன இயக்கி (device drive) ஆணைத் தொகுப்பு. ஒரு கணினியை இயக்கியவுடன், கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் தகவல்களையும் நினைவகத்தில் ஏற்றும் பணியை இக்கணக்கெடுப்பியே கவனித்துக் கொள்கிறது.

bus extender : மின்பாட்டை விரிவாக்கம் : சோதனைக்காக சுற்றிலும் உள்ள அட்டைகளுக்கு வெளியே ஒரு அச்சிட்ட மின் சுற்று அட்டையைத் தள்ளும் அட்டை. அது முதலில் ஒரு விரிவாக்க இடத்தில் பொருத்தி பின்னர் மின்பாட்டை விரிவாக்கியில் சேர்க்கிறது. இதில் பல விரிவாக்க இடங்கள் மட்டும் இருக்கலாம் அல்லது அவற்றில் மின்சக்தி அளிக்கும் வசதியும் இருக்கலாம்.

bush button : அழுத்து பொத்தான்.

bush, vannevar (1890-1974) : புஷ், வான்னேவர் : மின் தடங்களினால் ஏற்படும் கணித சமன்பாட்டு வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, 1930ஆம் ஆண்டு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உருவாக்கினார். மாறுபாட்டு பகுப்பாய்வி (Differential Analyzer) என்று அழைக்கப்பட்ட கணினி, இன்றைய ஒப்புமை கணினிகளுக்கெல்லாம் முன்னோடியானது. 100 டன் எடையுள்ள இக்கணினியில் பல்லாயிரக்கணக்கான வெற்றிடக் குழல்கள் பயன்பட்டன.

business applications : வணிகப் பயன்பாடுகள் : சம்பளப்பட்டி, வரவேண்டிய, கொடுக்க வேண்டிய பணம் பற்றிய கணக்குகள், இருப்பு கணக்கெடுத்தல் போன்ற அன்றாட கணக்கீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படும் கணினிப் பணித் தொகுப்புகள் அறிவியல் பயன்பாடுகளுக்கு மாறானது.

business computer : வணிகக் கணினி : வணிகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி.

business data processing : வணிகத் தரவு செயலாக்கம் : சம்பளப்பட்டி, பட்டியலிடல், கணக்கெடுத்தல் போன்ற வணிக நோக்கங்களுக்காக நடைபெறும் தரவு செயலாக்கம்.

Business Equipment Manufacturers Association (BEMA) : பீமா : வணிகக் கருவி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பொருள்படும் Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி கருவிகள் மற்றும் அலுவலக எந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கொண்ட சங்கம். பயன்பாட்டாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், பொது நலனுக்காக தகவலைப் பயன்படுத்தவும், கணினி மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளுக்கான தர நிர்ணயங்களை உருவாக்கவும் வழி காட்டுவதே இதன் நோக்கங்கள். ஒரு வாராந்தர செய்தி மடலும், ஒரு ஆண்டு அறிக்கையும், வெளியிடுகின்றது.

business graphics : , வணிக வரை கலை : 1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி விற்பனை, உற்பத்திப் பொருள் செயல்பாட்டின் ஒப்பீடு, இருப்பு விலைகள் போன்ற துறைகளில் அளித்தல். 2. தரவுகள் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் காட்டக்கூடிய பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குதல்.

business information processing : வணிக தகவல் செயலாக்கம் : வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்றவை எடுத்துக் காட்டுகள்.

business machines : வணிக எந்திரங்கள் : வணிகச் செயல்பாடுகளுடன் தொடர்புள்ள கணினிகள், சொல் செயலாக்க எந்திரங்கள், முனையங்கள் மற்றும் பிற மின்னணு, எந்திரக் கருவிகள்.

business mini computer : வணிகச் சிறு கணினி.

business - oriented programming language : வணிகம் சார்ந்த நிரலாக்க மொழி : வணிகப் பயன்பாடுகளில் அதிக தரவுக் கோப்புகளைக் கையாளக் கூடிய தாக உருவாக்கப்பட்ட மொழி. (எ. டு. கோபால் COBOL)

business programming : வணிக நிரலாக்கம் : கணினி தீர்வுக்காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி நிரலாக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தரவு உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்புகளைக் கையாளக் கூடியது.

business software : வணிக மென்பொருள் : மின்னணு விரிதாள், தரவுத் தள மேலாண்மை அமைப்புகள், வணிக வரைபட சம்பளப் பட்டி நிரல்கள் மற்றும் கணக்கீட்டு நிரல்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்தொகுப்புகள்

business systems planning (BSP) வணிகமுறைத் திட்ட மிடல். bus mouse : மின் பாட்டை சுட்டி : வரிசைத் துறையில் (Port) பொருந்துவதற்குப் பதிலாக விரிவாக்க அட்டையில் பொருந்தும் மின்பாட்டைச் சுட்டி.

bus network : பாட்டைப் பிணையம் : மின் பாட்டை



அல்லது ஒரு பொது விநியோக வழித்தடத்தினைப் பயன்படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச் சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு.

bus system : மின்பாட்டை முறைமை : மின்பாட்டை அமைப்பு : கணினி உள்ளே தரவுகள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. தரவு மின் பாட்டை, கட்டுப்பாட்டு மின்பாட்டை, முகவரி மின்பாட்டை ஆகியவை கணினியில் முக்கிய மின்பாட்டைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

bussy hour : மிகைவேலை நேரம்.

bus topology : மின்பாட்டை அமைப்பியல் : மின்னணு கட்டமைப்பு கட்டுமானத்தை விளக்குவது.

button bar : பொத்தான் பட்டை

Button : பொத்தான் : சுட்டியினால் சொடுக்கினால் திரையில் ஒரு இடத்தில் ஒரு செயலைத் துவக்கவோ அல்லது நிறுத்தம்

செய்யவோ அதிகம் பயன் படுத்தப்படுவது.

button bomb : குண்டுப் பொத்தான்; பொத்தான் குண்டு : இணையத்திலுள்ள வலைப் பக்கத்தில் பல்வேறு செயல்முறைகளை இயக்க பல்வேறு உருவங்களில் பொத்தான்கள் அமைக்கப்படுவது உண்டு. சுட்டியின் சுட்டுக்குறியை ஒரு பொத்தான்மீது வைத்துச் சொடுக்கும்போது அதற்குரிய பணி செயல்படுத்தப்படும். குண்டின் உருவத்தில் தோற்றமளிக்கும் பொத்தான், 'பொத்தான் குண்டு' எனப்படுகிறது.

button, help : உதவிப் பொத்தான் : பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குறியை வைத்துக் சொடுக்கினால் உதவிக் குறிப்புகள் திரையில் விரியும். வைய விரிவலைப் பக்கங்கள், பல்லூடகச் சேவை நிலையங்கள், கணினி வழியாகக் கற்பித்தல் ஆகியவற்றில் பயனாளர் தாமாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய பொத்தான்கள்/சின்னங்கள் அமைக்கப்படுகின்றன.

. bw : . பி. டபிள்யூ : இணையத்தில் குறிப்பிட்ட தளம் போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க தள முகவரியில் இடம்பெறும் பெருங்களப் பெயர்.

by default : உள்ளிருப்பாய் : இயல்பாகவே.

bypass : மாற்றுவழி : சுருக்கு வழி : ஒரு மின்சுற்றில் ஒன்று அல்லது பல பொருள்களைச் சுற்றிச் செல்லும் இணைவழி.

bypass capacitor : மாற்றுவழி தாங்கி : மின்சக்தி வழங்குதலின் போது ஏற்படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி.

Byron Lady Ada Augusta : பைரன் அடா அகஸ்டா சீமாட்டி : லவ்லேஸ் பெருமகள் என்று அழைக்கப்படுபவர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகளே செல்வி பைரன். சார்லஸ் பாபேஜியிடம் அவர் நெருங்கிப் பணியாற்றி, அவரது பகுப்பு எந்திரத்திற்கு ஒரு விளக்க நிரலைக் கொடுத்தார். உலகின் முதல் நிரலர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அடா என்னும் நிரல் மொழி அவரது நினைவாக பெயரிடப்பட்டது.

byte : பைட் : எண்மி : 1. கணினியில் ஒரு தனி அலகாக செயல்படும் அடுத்தடுத்துள்ள இரும இலக்கங்களின் தொகுதி. எண்மியில் எட்டு இரும இலக்கங்கள் இருக்கும். 2. ஒரு தனி எழுத்தைக் குறியீடு செய்யப் பயன்படுத்தப்படும் இரும இலக்க தொகுதி. 3. சில சமயம் B என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

byte code : பைட் குறிமுறை.

byte machine : பைட் எந்திரம் : எண்மி இயந்திரம் : மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி.

byte mode : பைட் பாங்கு : மையச் செயலகத்திற்கும் வேறு வெளிப்புறச் சாதனத்திற்கும் தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பிடுவது. இம்முறையில் ஒரு நேரத்தில் ஒரு தனி பைட் மாற்றப்படுகிறது.

byte order : பைட் வரிசை : எண்மி வரிசை ஏஐஎக்ஸ் விரிவு எக்ஸ் பலகணியில் துண்மிக்கு வரையறை அல்லது பிக்ஸ்மேப் தகவலுக்காக பணியாளார் வரையறுக்கும் எட்டியல்களின் வரிசை.

byte oriented protocol : பைட் சார்ந்த நெறிமுறை : தகவல் தொடர்பு இதில் கட்டுப்பாட்டுக் குறியீடுகள் முழுவதும் பைட்டு களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர்கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக்காட்டு.

byte specifications : பைட் வரையறைகள் : வன்பொருள் பற்றிய வரையறைகள். எண் துண்மிகளில் செய்யப்படுகின்றன. சான்றாக 80 மெகா பைட் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மெகா பைட் நினைவகம் 18 இலட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8, 000 பைட்டுகள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட பைட்டுகள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படுகிறது.

bytes per inch (BPI) : பிபீஐ : Byte Per Inch என்பதன் குறும்பெயர். ஒரு அங்குல காந்த நாடாவில் கொள்ளக்கூடிய பைட்டுகளின் எண்ணிக்கை. (தகவல்) அடர்த்தியைப் பதிவு செய்யும் பொதுவான அளவுகோல்.

byte string : பைட் சரம் வருடப்பட்ட ஆவணத்திலிருந்து இலக்க மயமாக்கப்பட்ட வடிவம்.

. bz : . பிஇஸட் : இணைய தள முகவரியில் பீலைஸ் நாட்டைச் சேர்ந்த தளம் என்பதைக் குறிக்கும் பெருங் களப் பெயர்.