கணினி களஞ்சியப் பேரகராதி-1./K

விக்கிமூலம் இலிருந்து
K


K : கே : 1. கிலோ என்பதன் சுருக்கம். பதின்ம எண்ணில் 1000 என்பதைக் குறிப்பிடும். சான்றாக 100K ch/s என்றால் ஒரு நொடிக்கு 100, 000 எழுத்துகள் அளவு படிக்கும் வேகம். 2. சேமிப்புத் திறனில் 2-ன் 10 மடங்கு என்பது பதின்ம எண் முறையில் 1024, 8K என்பது 8192 அதாவது 8 x 1024.

Kale : கேல்  : கேல் கன்சல்டன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறு வனங்களில் ஒன்று.

Kansas city standard : கன்சாஸ் நகர தர நிருணயம் : குறைந்த வேக ஒளிப்பேழை (கேசட்) சேமிப்பு வடிவம்.

Karnaugh map : கார்னாக் வரை படம் : உண்மைப் பட்டியலின் இரு பரிமாண அமைப்பு.

Kb : கேபி : kilo byte என்பதன் குறும்பெயர்.

Kbits/Sec (KiloBits per SECond : கேபிட்ஸ்/செக் : Kilobits per Second என்பதன் குறும்பெயர். ஒரு நொடிக்கு ஆயிரம் துண்மிகள்.

KBps, Kbps (KiloBytes per Second, KiloBits per Second : கேபிபீஎஸ் : Kilobytes per Second, Kilobits per Second என்பதன் குறும்பெயர்கள். ஒரு நொடிக்கு ஆயிரம் எட்டியல்கள், ஆயிரம் துண்மிகள்.


KBS : கேபிஎஸ் : ஒரு நொடிக்கு ஒரு கிலோ எட்டியல்கள் (1024 எட்டியல்கள்)

K-Byte (Kbyte or KB) : கே-எட்டியல்கள் : Kbyte or KB என்பது ஏறக்குறைய ஒரு ஆயிரம் எட்டியல்கள். துல்லியமாக 210 அல்லது 1, 024 எட்டியல்கள்.

Kbytes/sec (Kilobytes per second) : கேபைட்ஸ்/செக் : Kilobytes per Second என்பதின் குறும்பெயர். ஏறக்குறைய ஒரு நொடிக்கு ஒராயிரம் எட்டியல்கள்.

Kc : கேசி : ஒரு நொடியில் ஆயிரம் எழுத்துகள். தரவு மாற்றல் இயக்கங்களின் விகிதத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

KCS : கேசிஎஸ் : ஒரு நொடிக்கு ஆயிரம் எழுத்துகள் அல்லது கிலோ எட்டியல்கள் என்பதன் சுருக்கம்.

. ke : . கேஇ : ஒர் இணைய தள முகவரி கென்யா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


KEE : கேஇஇ : Knọwledge Engineering Environment என்பதன் குறும்பெயர்.


Keep out areas : தவிர் பரப்புப் பகுதிகள் : அச்சிட்ட மின்சுற்று வெளி அமைப்பில் பயன் படுத்துவோர் குறிப்பிடும் பகுதிகள். இதில் உறுப்புகள் அல்லது மின்சுற்றுப் பாதைகள் குறிப் பிடக்கூடாது. காட்/காம் முறையிலும் இதைத் தவிர்க்க வேண்டும்.


Kelvin : கெல்வின் : செல்ஷியஸ் டிகிரியில் குறிப்பிடப்படும் எஸ். ஐ. மெட்ரிக் அமைப்பின் வெப்ப நிலை அளக்கும் அலகு.


Kelvin, William Thomson (1824-1907) : கெல்வின், வில்லியம் தாம்சன் (1824-1907) : ஸ்காட்லாந்து கணித மேதை. மாறு பாட்டு அலசலை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான கொள்கைகளை 1875இல் விவரித்தவர்.


Kemeny John : கெம்னை ஜான் : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் தாமஸ் குர்ட்சுடன் சேர்ந்து பேசிக் என்னும் கணினி மொழியை உருவாக்கினார். கற்பதற்கு எளியது. பயன்படுத்துவதற்கு எளியது. அல்ஜிப்ரா முறை நிரலாக்கத் தொடர் மொழி பயன்படுத்த எளியது. டார்ட்மவுத் காலப் பங்கீட்டு அமைப்பையும் உருவாக்கினார்.


kerberos or kerberos : கெர்பராஸ் : எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http : /Aweb. mit. edu/kerberos/www.) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறுவகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென் பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது.


Kermit : கெர்மிட் : கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இரைச்சலான வழித் தடத்திலும் துல்லியமாக அமைப்பை ஏற்றது. சிறு மற்றும் பெரு கணிணிகளுக்குப் புகழ் பெற்றது. 7பிட் அஸ்கி

அமைப்புகளில் துண்மி சார்ந்த மாற்றல்களுக்கு புகழ் பெற்றது.

kern : நெருக்கம் : குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடை வெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக்கோப்பில் எழுத்தமைவில் சமனாக் கம் இயலுகிறது. (எ-டு) : க ி என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும்போது கி எனத் தோற்றமளிக்கும்.

Kernel : கரு உருவாக்க மையம் : கணினி பணிகளின் மிகப் பழையவற்றைச் செயல்படுத்தும் இயக்க அமைப்பிலுள்ள நிரல் தொடர் தொகுதி.

Kerning : நெருக்கல் : குறிப்பிட்ட எழுத்துகளின் இணைகளுக்கு இடையே உள்ள கூடுதல் வெண்மை இடை வெளியைக் குறைப்பது.

KES : கேஇஎஸ் : Knowledge Engineering System என்பதன் குறும்பெயர்.

KET : Kharagpur Expert Tool என்பதன் குறும்பெயர்.

Key : விசை, திறவு; விரற்கட்டை, குமிழ் சாவி : 1. ஒரு பதிவேட்டை அடையாளம் காட்டும் புலங்கள் அல்லது கட்டுப்பாட்டுப் புலம் பார்க்க Primary key. 2. வகைப் படுத்தப்பட்ட வரிசையில் ஒரு பதிவேட்டின் நிலையினை முடிவு செய்யும் புலம். பார்க்க Major sort key, Minor sort key. 3. தட்டச்சுப் பொறி அல்லது காட்சித் திரை விசைப்பலகை போன்ற கையால் இயக்கும் எந்திரங்களில் உள்ள விசை, 4. விசைப் பலகை மூலம் ஒரு கணினி அமைப்பில் தரவுகளை நுழைப்பது. Keyb : கீபி : பயன்படுத்தப்படும் விசைப்பலகையைப் பற்றிய தரவுவைக் கொண்ட டாஸ் (DOS) கட்டளை.

Keyboard விசைப்பலகை; தட்டச்சுப் பலகை; விரற்கட் டைப் பட்டடை : கணினியின் சேமிப்பகத்திற்குள் தரவுகளையும், நிரலாக்கத் தொடரையும் விசைமூலம் அனுப்பும் உள்ளிட்டுச் சாதனம்.

keyboard buffer : விசைபலகை இடையகம் : கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல்முறைப்படுத் தப்படுவதற்கு முன்பாக உள் வீட்டுத் தரவு இந்த நினைவகத் keyboard controller

தில் தங்கியிருக்கும். செயலி மற் றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல் பாட்டு வேக வேறுபாடு காரண மாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளீட்டு/ வெளியீட்டுத் தரவுகளை சேமிக்க வேண்டி யுள்ளது.

Keyboard controller : விசைப்பலகை கட்டுப்பாட்டுப் பொறி : அடித்த விசைகளைக் கண் காணித்து அழுத்தப்படும்போது தரவு துண்மிகளை உருவாக்கும் விசைப்பலகை.

keyboard enhancer : விசைப்பலகை மேம்படுத்தி : விசைப் பலகையில் அழுத்தும் விசை களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல் கூறினை இயங்க வைக்க முடியும்.

Keyboarder : விசைப்பலகை அமைப்பவர் : தட்டச்சு, சொல் செயலி அல்லது கணினி முகப்பின் விசைப் பலகையைப் பயன்படுத்துதல்.

Key boarding : விசைப் பலகை யிடல் : உள்ளிட்டு ஊடகத்திலோ அல்லது நேரடியாக கணினி யிலோ விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தரவு களையும் நிரல் தொடர்களை யும் நுழைக்கும் செயல்முறை. கணினி முனையம் அல்லது சொல்செயலிகளில் விசைப் பலகைகளைப் பயன்படுத்துவது போன்றது.

Keyboard initialisation : விசைப் பலகை ஆரம்பித்தல் பல கணினிகளை இயக்கத் துவங்கும்போது செய்யப்படும் நடைமுறை. ரோம் பயாஸ் நினைவகம் இதைத் துவக்கி சரியான விசைப்பலகை மின்னிணைப்பு பெறப்பட்டதா, சரி யான ஸ்கேன் குறியீடுகள் இணைக்கப்பட்டதா என்பதை சோதிக்கிறது. NUM LOCK LED வருமானால் சரியான விசைப் பலகை ஆரம்பிக்கப்பட்டதாகப் பொருள்.

Keyboard interrupt : விசைப்பலகை குறுக்கீடு ஒரு விசையை அழுத்தும்போதோ அல்லது விடும்போது செய்யப் படும் வன்பொருள் குறுக்கீடு. விசைப்பலகை நுண் செயலகத் தில் இருந்து வரும் நுண்ணாய்வு (ஸ்கேன்) கோடுகளை நிரலாக் கத் தொடர் பயன்படுத்திக்கூடிய குறியீடுகளாக மாற்றி விசைப் பலகை இடை நினைவகத்தில் இக்குறியீடுகளை நுழைக்கிறது. keyboard layout : விசைப்பலகை உருவரை : ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந் துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண் ணிைக்கை (தற்போதைய தரவரை யறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

Keyboard processor : விசைப் பலகைச் செயலகம் : விசை அடிப்புகளை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளாக மாற்றும் விசைப் பலகையின் மின்சுற்று.

keyboard punch விசைப் பலகைத் துளை.

Keyboard skills : விசைப்பலகை திறன்கள் : ஒரு கணினி விசைப்பலகையை திறமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தும் திறன். கணினி தொழில் புரிபவர்களுக்கு விசைப்பலகை திறன்கள் இன்றியமையாதவை

keyboard to - disk system : விசை என்று கருதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையிலும் இது தேவை என்பதால் ஒவ்வொரு வருக்கும் இது வாழ்க்கைத் திறனாக தேவைப்படுகிறது.

Keyboard, sys : விசைப்பலகை சிஸ் : விசைப் பலகையின் இயக் கத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கிச் சாதனம். -

Keyboard template : விசைப் பலகை படிம அச்சு அட்டை : கணினி விசைப் பலகையின் விசைகளில் பொருந்தும் ஒரு செயற்கை இழைப்படிவம். இதன் மூலம் குறிப்பிட்ட மென் பொருள் பயன்பாடுகளில் விசைப் பணிகளைச் செய்ய எளிதான, விரைவான குறிப்பு. விசைப்பலகை படிம அச்சு அட்டைகள் மென்பொருள் தொகுப்புகளின் பகுதியாக இப்போது அதிகமாக வழங்கப் படுகின்றன.

keyboard terminal : விசைப் பலகை முனையம் : ஒரு கணினி அமைப்புக்குள் தரவுகளை நுழைக்க அனுமதிக்கும் தட்டச்சு போன்ற விசைப் பலகை.

keyboard to - disk system : விசைப்பலகையிலிருந்து வட்டு முறைமைக்கு ; விசைப்பலகை யிலிருந்து வட்டுக்கான அமைப்பு : விசைப்பலகையில் தரவுவைத் தட்டச்சு செய்வதன் மூலம் தரவுகள் நேரடியாக வட்டுக்குள் நுழையும் தரவு நுழைவு அமைப்பு.

keyboard to - tape system : விசைப் பலகையிலிருந்து நாடா முறைமைக்கு : விசைப்பலகை யில் தரவுகளைத் தட்டச்சு செய்து நேரடியாக நாடாவுக்குள் நுழைக்கும் தரவு நுழைவு அமைப்பு.

Key bounce : விசை திரும்புதல் : சில மோசமாக வடிவமைக்கப் பட்ட விசைப்பலகையின் தன்மை. விசையை ஒவ்வொரு முறை அழுத்தும்போதும் எழுத்து இரண்டு தடவைகள் பதிவாகும்.

Key cap : விசை மூடி : விசைப் பலகை விசையின் மேல் பகுதி. மாற்றக் கூடியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறியீடுகளை அடையாளம் காண சிறப்பு விசை மூடிகளைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.

Key chord : விசைக்கயிறு : இரண்டு அல்லது மேற்பட்ட விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி தனி நுண்ணாய்வுக் (ஸ்கேன்) குறியீட்டை உருவாக்குதல்.

Key click : வரிசை சொடுக்கு ஒசை : ஒரு விசையை அழுத்தியவுடன் கேட்கக் கூடிய ஓசை. இதை மாற்றியமைக்கலாம்.

Key command : வரிசை ஆணை : கணினியில் கட்டளைகளாகப் பயன்படுத்தப்படும் விசைத் தொகுதி.

Key data entry device : விசை தரவு நுழைவுச் சாதனம் : கணினி கருவி ஏற்றுக் கொள்ளும் வகை யில் தரவுகளைத் தயார் செய்யப் பயன்படுத்தும் விசைத் துளை எந்திரங்கள், விசை யிலிருந்து வட்டுக்கான அலகுகள், விசை யிலிருந்து நாடாவுக்கான அலகுகள்.

key disk : மென்பூட்டு/திறவு வட்டு

Key-driven : விசை இயக்கம் : விசைளை அழுத்துவதன் மூலம் இயக்கப்படும் சாதனம்.

Key entry : விசை நுழைவு : விசைப்பலகை மூலம் கை களால் தரவுகளை அனுப்புவது.

key escrow : ஒரு மறையாக்க முறை. அரசு முகமையினால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு தனித் திறவி (Private key) மூன்றாம். நபர்களுக்கு வழங்கப்படும். அத்திறவி மூலம் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும் செய்திகளை அரசு விரும்பினால் படித்துக் கொள்ள முடியும்.

Key field : குறிப்பு புலம் ; விசைப்புலம் : ஒரு பதிவேட்டி லிருந்து மற்றொன்றுக்கு வேறு பாடு காட்டும் புலம்.

Key field : குறிப்புப் புலம்.

key-frame : முதன்மைச் சட்டம் : ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட் டைக் குறிப்பிட்டு விட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர் மானித்து மிக நளினமான தானி யங்கு அசைவூட்டப் படத்தை உருவாக்கித் தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

Key in : விசை நுழை : விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தரவுகளை நுழைத்தல்.

Keying error rate : விசையிடலில் பிழைவிகிதம் : மொத்த மாக விசையிடப்பட்ட எழுத்து களில் தவறாக விசையிடப்பட்ட வற்றின் சதவிகித அளவு.

Key map . முக்கிய வரைபடம் : சில குறிப்பிட்ட மிடி (MIDI) செய்திகளுக்கு முக்கிய மதிப்புகளை மாற்றித் தரும் மிடி ஒட்டு வரைபட நுழைவு. சான்று : குறிப்பிட்ட ஆக்டேவில்மெலடி இசைக்கருவி அல்லது பெர் குஷன் கருவியை இசைக்கப் பயன்படுத்தப்படும் விசைகள்.

Key pad : விசை அட்டை எண் தளம் : 0 - 9 வரையிலான பதின்ம இயக்க விசைகளையும், இரண்டு சிறப்புப் பணி விசைகளையும் பயன்படுத்தும் உள் வீட்டுச் சாதனம். தனி சாதன மாகவும் பயன்படுகிறது அல் லது சிக்கனத்தின் விளைவான Qwerty விசைப்பலகையின் வலது புறத்திலும் இடம் பெறுகிறது.

Key punch : விசைதுளை துளைப்பி : கணினி படிப்பியில் படிப்பதற்காக தரவுகளைக் குறிப்பிடும் துளையிடும் அட் டைகளில் துளையிட்டுப் பயன் படுத்தப்படும் விசைப்பலகை இயக்கும் சாதனம்.

Key punching : விசைதுளையிடல் : மூலத் தரவுகளை துளையிடும் அட்டைகளில் பதிவு செய்யும் செயல் முறை. இயக்குபவர் மூல ஆவணங்களைப் படித்து விசைத்துளை எந்திரங்களில் விசையை அழுத்தி மூல ஆவண தரவுவை துளையிட்ட அட்டைகளாக மாற்றுகிறார்.

Key punch department : விசைத் துளைப் பிரிவு : data entry department). Keypunch machine : விசைத்துளை எந்திரம் : துளையிட்ட அட்டை தரவு நுழைவு எந்திரம். வெற்று அட்டைகளின் தொகுதி ஹாப்பரில் வைக்கப்பட்டபின் இயக்குபவரின் கட்டளையின் படி துளையிடும் இடத்திற்கு ஒரு அட்டையை எந்திரம் அனுப்புகிறது. எழுத்துகள் தட்டச்சு செய்யப்பட்டவுடன், தொடர் எழுத்தச்சுகள் தேர்ந் தெடுக்கப்பட்ட அட்டை பத்தியில் தேவையான இடங்களில் துளைகளை இடுகின்றன.

Key punch operator : விசை துளை இயக்குபவர் : KPO என்று சுருக்கி அழைக்கப்படும். விசைத் துளை எந்திரத்தை இயக்கும் நபர். கணினியில் தரவுகளை நுழைக்கும் ஆரம்பகால முறை களில் இதுவும் ஒன்று. விசைத் துளை எந்திரம் தட்டச்சு செய்யப் பட்ட நுழைவுகளை காகித அட்டைகளில் தொடர்ச்சியாக குறியீடாக மாற்றியும் மின்எந்திர அட்டை படிப்பியில் இது படிக்கப்படும். விசைத் துளை எந்திரங்கள் இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படு கின்றன. நுழைவுகளைச் செய்ய வேகமான ஊடகங்கள் வந்து விட்டன. என்றாலும், விசைத் துளை இயக்குபவர் என்ற பதம் நிலைத்து விட்டது.

Key record : குமிழ் குறிப்பு

key recovery : திறவி மீட்சி : ஒரு தனித் திறவி (private key) வழி முறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச் சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடி யும். அமெரிக்காவில் தற் போதுள்ள சட்டப்படி 1998-க் குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த வொரு மறையாக்க மென்பொரு ளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.

key, shift : தகர்த்து விசை

Keysight : முக்கியப் பார்வை : ஒரு எந்திரம் மனிதனின் பார்வை அமைப்பு. GM அமைப்பு என்றும் சொல்லலாம்.

Key stations : முக்கிய நிலையங்கள் : பலர் பயன்படுத்தும் அமைப்புகளில் தரவு உள்ளிட்டுக்குப் பயன்படுத்தப்படும் முனையங்கள்.

keystroke : விசையழுத்தம் : ஒரு குறிப்பிட்ட எழுத்தை உள்ளீடு செய்யவோ அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்றும் பொருட்டோ விசைப்பலகை யிலுள்ள ஒரு விசையை அழுத்தும் நடவடிக்கை. சில

பயன்பாட்டு மென்பொருள் களின் செயல்திறனும் எளிமை யும் அதிலுள்ள பொதுவான செயல்பாடுகளை மேற்கொள்ள எத்தனை விசையழுத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றன.

key stroke buffer : விசையழுத்தல் இடையகம்.

Keystore : விசை இருப்பு : ஒரு நிமிடத்திற்கு எத்தனை விசை களை அடிக்கலாம் என்று பல தரவு நுழைவுகளின் வேகத்தை அளப்பதற்காக ஒரு விசை அலகை அழுத்தும் செயல்.

Key switch : வரிசை பொத்தான் : ஒரு விசைப்பலகையில் உள்ளீடு விசையின் பொத்தான் பகுதி.

Key-to-address : விசையிலி முகவரிக்கு.

Key to address transformation : விசையிலிருந்து முகவரிக்கு மாற்றம் : விசைப்பலகையில் தரவுகளை தட்டச்சு செய்தால் அவை நேரடியாக வட்டில் பதிவு செய்யப்படுகின்ற பெரும் பாலும் நெகிழ்வட்டில் நடை முறையைக் குறிப்பிடும் சொல்.

Key-to-disk machine : விசைவட்டு எந்திரம் : கணினி நுழைவுக்காக காந்த வட்டின் மீது தரவுகளை சேமித்து வைக்கும் தனித்து நிற்கும் தரவு நுழைவு எந்திரம்.

Key-to-disk unit : விசையிலிருந்து வட்டுக்கு அலகு : வளையும் வட்டுக்குள் தரவுகளை நேரடி யாக சேமிக்கப் பயன்படும் விசைப்பலகை அலகு.

Key-to-tape unit : cologuélé Slobog, நாடாவுக்கான அலகு : தரவு களை காந்த நாடாவுக்குள் நேரடியாக சேமிக்கப் பயன் படும் விசைப்பலகை அலகு.

key, user difined function : Luu னாளர் வரையறுக்கும் பணிவிசை

Key verification விசை சோதித்தல்.

key verifier : வரிசை சரிபார்ப்பி;

Key verify : வரிசை சோதிப்பு : துளை அட்டை எந்திரத்தை சோதிப்பவராகப் பயன்படுத் தல். துளை அட்டையில் துளை யிட வேண்டிய தரவு சரியாக துளையிடப்பட்டதா என்பதை சோதிக்க விசைப் பலகையை இந்த எந்திரம் பயன்படுத்து கிறது. துளையிட்ட அட்டையும், அழுத்தும் விசையும் ஒத்துப் போகவில்லையென்றால் சரி யாக உள்ளது என்பது பொருள்.

Key word : முக்கியச் சொல்; சிறப்புச் சொல்; திறவுச் சொல்; நிர்ணயிக்கப்பட்ட சொல்; கட் டளைச் சொல் : தரவுத் தளங் களின் ஏடுகளிடையே வரிசை யாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை. இது, தரவுத்தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.

Keyword analysis : முதன்மைச்சொல் ஆய்வு : ஒரு சொற்றொடரின் உள்ளடக்கங்களை ஆராயும் எளிமையான ஆனால் மிகவும் மோசமான முறை. முக்கிய சொல் ஆய்வு என்று அமைப்பு இணைக்கும் நுட்பம் அழைக்கப்படுகிறது.

keyword-in-context : சூழ்நிலையில்யில் முதல் சொல்; சூழலில் திறவுச்சொல் : ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப் பகுதியுடன் சுட்டுக்குறிப்பில் பதிவு செய்யப்படும். பெரும் பாலும் ஆவண உரை அல்லது தலைப்புகளில் திறவுச் சொல்லுக்கு முந்தைய அல்லது பிந்தைய சொல் அல்லது சொல் தொடராக இருப்பதுண்டு.

keyword search : திறவுச்சொல் தேடு.

. kh : கேஹெச் : ஒர் இணையதள முகவரி கம்போடியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Khornerstones : திருப்பு முனைகள் : மையச் செயலகம் உள்ளீடு /வெளியீடு மற்றும் மிதக்கும் புள்ளி செயல்பாட்டை சோதித்துத் தரமறியும் நிரலாக்கத் தொடர்.

KHz : கே எச் இஸ்ட் : கிலோ ஹெர்ட்ஸ் என்பதன் குறும் பெயர். ஒரு நொடிக்கு ஒராயிரம் சுழற்சிகள்.

. ki : கேஐ : ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Kilby jack : கில்பி ஜேக் : 1958 இல் ஒருங்கிணைந்த மின்சுற்றை அறிமுகப்படுத்திய டெக்சாஸ் கருவிகள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பாளர். கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆரம்பகால கணிப்பானையும் அவர் கண்டுபிடித்தார்.

Kil : கொல் : 1. அதன் வழக்கமான முடிவை அடைவதற்குள் ஒரு செயலை நிறுத்துதல் அல்லது நீக்குதல். 2. தரவுவை அழிக்கும் முறை.

killer app , அதிரடிப் பயன்பாடு : ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற செல்வாக்கான மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அது மட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும்.

Kilo : கிலோ : மெட்ரிக் அளவு. ஒரு ஆயிரத்தைக் குறிப்பது. 10-ன் 3 மடங்கு. K என்று சுருக்கி அழைப்பது.

Kilobaud : கிலோ பாட் : ஒரு நொடிக்கு ஆயிரம் பாட். தரவுத் தொடர்பு வேகங்களை அளக்கப் பயன்படுவது.

Kilobit : கிலோ துண்மிகள் : ஆயிரம் துண்மிகள்.

kilobits per second : ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள் : சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப்படுகிறது. ஒரு பிணையத்தில் தரவு பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப்படுகிறது.

Kilobyte : கிலோ எண்மிகள் : 2-ன் 10 மடங்கு (210) அல்லது 1024 எண்மிகளைக் குறிப்பிடுவது. பொதுவாக 1000 - என்று கருதப்பட்டு K என்று சுருக்கி அழைப்பது. 24 கே என்பது. 24x1024 அல்லது 24, 576 எட்டியல் நினைவு அமைப்புக்குச் சமமானது. Kb என்றும் சில சமயம் சுருக்கி அழைக்கப்படும்.

Kilocycle : கிலோசைக்கிள் : ஆயிரம் சுழற்சிகள். ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள் என்று முன்பு அழைக்கப்பட்டது. இப்போது கிலோ ஹெர்ட்ஸ்.

Kilo cycles per second : நொடிக்கு இத்தனை கிலோ சுழற்சிகள் : ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள்.

Kilohertz : கிலோ ஹெர்ட்ஸ் : ஒரு நொடிக்கு ஒராயிரம் சுழற்சி. தரவு அனுப்புதல் சுழற்சியை அளக்கப் பயன்படுகிறது.

Kilomegacycle : கிலோ மெகா சைக்கிள் : ஒரு நொடிக்கு ஒரு நூறாயிரம் கோடி சுழற்சிகள்.

Kinematics : இயக்க வடிவியல் : கணினி அமைப்பு வடிவமைக்கும் ஒரு அமைப்பு அல்லது ஒரு எந்திரத்தின் பகுதிகள் இயங்குவதை அசைவூட்டம் (அனிமேஷன்) மூலம் காட்டுவது அல்லது வரைவி (பிளாட்டிங்) ஆகியவற்றில் கணினி உதவிடும் பொறியியல் செயல்முறை.

kinesis ergonomic keyboard : கினிசிஸ் சூழலியல் விசைப்பலகை : தொடர்ந்து விசைப்பலகையில் பணியாற்றுவதால் சோர்வும் உலைவும் ஏற் படுத்தாத பணிச்சூழலுக்குகந்த விசைப்பலகை வடிவமைப்பு.

kinetics : இயக்கியல்.

kiosk : கணினி முனையம் : பொது மக்களுக்குத் தேவையான தரவுகளை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம்.

kiosk mode : கணினியகப் பாங்கு.

KIPS : கிப்ஸ் : எதிர்பார்க்கப்படுகின்ற ஐந்தாம் தலைமுறை கணினிக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்.

Kiudging : கியுட்ஜிங் : நிரலாக்கத் தொடரின் நோக்கமாக இல்லையென்றாலும் தொழில் நுட்ப முறையில் முடியக்கூடிய ஏதாவது செய்வது. 'hacking என்றும் அழைக்கப்படும்.

Kludge : ஒப்பேற்றல் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்ட தவறான இணைப்புள்ள பாகங்களின் தொகுதி பற்றிய மாற்று அமைப்பு.

Knob : கைப்பிடி குமிழ்க்கைப்பிடி

Knockout நாக் அவுட் : கம்மோடர் 64 வீட்டு கணினிக்கான மென்பொருள். பெட்டி வளையத்தைப்போலச் செய்து காட்டி இரண்டு பெட்டிகள் அதன் மீது வைக்கப்படுதல்.

knowbot : நோபாட் : அறிந்திரன் : அறிவு + எந்திரன் (Knowledge+ Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப் படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தரவுவைக் கொண்டுள்ள ஒர் ஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Knowledge : ஆய்வறிவு : சால்பு.

Knowledge acquisition : அறிவு சேர்த்தல் : அறிவு ஈட்டல்.

Knowledge base : அறிவு ஆதாரம் : அறிவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அறிவின் தரவுத் தளம். உண்மைகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் போன்ற சிக்கல் தீர்வுக்கான வழிமுறைகளைக் கொண்டது.

Knowledge based system : அறிவுசார்ந்த அமைப்பு : ஒரு பொருள் பற்றிய அறிவின் தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு.

Knowledge build : அறிவுக்கட்டுமானம் : வேக்ஸ் சூப்பர் மென் பொருள் தொடர். பிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை உற்பத்திக் கருவி. Knowledge domain : அறிவுப்பகுதி : ஒரு வல்லுநர் அமைப்பில் குறிப்பிட்ட அறிவின் பகுதி.

knowledge engineer : அறிவுப் பொறியாளர் : தேவையான அறிவையெல்லாம் தேடிப்பெற்று அவற்றை ஒரு நிரலாக வடிவமைத்து ஒரு வல்லுநர் முறைமையை (Expert System) கட்டமைக்கும் ஒரு கணினி அறிவியலாளர்.

Knowledge engineering : அறிவுப் பொறியியல் : சாதாரணமாக மனிதப் பட்டறிவில் உயர்நிலை தேவைப்படுகின்ற சிக்கல்களைத் தீர்க்க கணினி அமைப்புகளில் அறிவை ஒருங்கிணைக்கும் பொறியியல் பிரிவு.

Knowledge industries : அறிவுத் தொழில்கள் : தரவு செயலாக்கம் செய்து தரவு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் தொழில்கள்.

Knowledge information : அறிவுத் தகவல்.

Knowledge information processing system : அறிவுத் தரவு செயற்பாட்டு முறைமை.

Knowledge link : அறிவு இணைப்பு : ஐபிஎம் நிறுவன கணினிகளுக்கும், துறைசார்ந்த வாக்ஸ் சூப்பர் பணிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட அறிவு இணைப்பு. இதன் மூலம் நிறுவனத்திற்கும், துறைக்குமான கணிப்புச் செயல்கள் சுமுகமாகச் செல்ல முடிகிறது.

Knowledge manager : அறிவு மேலாளர் : நுண் தரவுத்தள கணினி அமைப்புகளிலிருந்து வரும் டிபிஎஸ் அமைப்பு. இதன் மூலம் எண்ணற்ற கோப்பு களைக் கையாள பயனாளருக்கு அனுமதி கிடைக்கிறது.

Knowledge representation : அறிவு குறித்தல்; அறிவு குறிப்பிடு முறை : ஒரு சிக்கலுக்குத் தேவைப்படும் தகவலை வடிவமைத்து ஒருங்குபடுத்துதல்.

Knowledge work : அறிவு வேலை : தகவலைப் பெறுதல், செயலாக்கப் புகுதல் மற்றும் அனுப்புதல் உள்ளடக்கிய வேலைகள்.

Knowledge workers : அறிவுப் பணியாளர்கள் : தரவுவை உருவாக்கல், பயன்படுத்தல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றை முக்கிய வேலையாகக் கொண்டு பணியாற்றுபவர்கள்.

korn shell : கார்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளைவரி இடைமுகம். போர்னே (Bourne) மற்றும் சிசெயல் தளங்களிலுள்ள கூறுகளை உள்ளடக்கியது. கார்ன் செயல்தளம் போர்னே செயல் தளத்துடன் முழுமையான ஒத்திசைவு கொண்டது. அதே வேளையில் சி-செயல் தளத்தின் கட்டளை வரி திருத்தல் திறனும் கொண்டது.


. kp : கேபீ : ஓர் இணைய தள முக வரி வடகொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


K & R C : கேஆர்சி : Kernighan and Ritchie C என்பதன் குறும் பெயர். அன்சி (Ansi) தர நிர்ணயத்திற்கு இருந்த "சி" மொழியின் பதிப்பு. பிரியன் கெர்னிகன் மற்றும் டென்னிஸ் ரிச்சி உருவாக்கியது.


KSR : கேஎஸ்ஆர் : Keyboard Send / Receive என்பதன் சுருக்கப் பெயர். விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறியைக் கொண்ட தொலைத் தட்டச்சுப்பொறி.


KSR terminal : கேஎஸ். ஆர் முனையம் : விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தரவுவையும் திரைக் காட்சிக்குப் பதிலாக உள் ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும்.


kr : கேஆர் : ஓர் இணையதள முகவரி தென்கொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


Kurtz Thomas : குர்ட்ஸ் தாமஸ் : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் ஜான் கெம்னையுடன் சேர்ந்து பேசிக் என்னும் கற்பதற்கு எளிய, அல்ஜீப்ரா கலந்த நிரலாக்கத்தொடர் மொழியை உருவாக்கினார்.


. kw : கேடபிள்யூ : ஒர் இணைய தளமுகவரி குவைத் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


KWIC : கேடபுள்யூஐசி : Key& Word&ln Context என்பதன் சுருக்கம். சொற்கள் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப் படுகின்றன என்பதை வைத்து சொற்கள் மற்றும் சொற்றொடர்களை முன்னதாக தேர்வு செய்து தகவலைப் பட்டியலிடும் ஒரு முறை.


. ky : கேஒய் : ஒர் இணைய தள முகவரி கேமான் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.


. kz : கேஇஸட் : ஒர் இணைய தள முகவரி கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.