உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சியப் பேரகராதி/Z

விக்கிமூலம் இலிருந்து

Z

Z : இஸட் : தடையின் தன்மை. சுழி (பூஜ்யம்) துண்மியைக் குறிப்பிடும் சொல்.

. z : . இஸட் : ஒரு கோப்பு வகைப் பெயர். ஜிஸிப் மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட யூனிக்ஸ் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப் பெயர்.

. za : இஸட்ஏ : ஒர் இணைய தள முகவரி தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Z-80 : இசட்-80 : பிரபல 8 துண்மி நுண் செய்முறைப் படுத்திச் சிப்பு. இது நுண் கணினிகளில் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

z-address : z-முகவரி : பெரு சேமிப்பக அமைப்பில், தனித்த சிற்றறை முகவரியின் தன்மை. ஒரு குறிப்பிட்ட சிற்றறைப் பெட்டி இருக்கும் சுவற்றை (சுவரை) இது காட்டுகிறது.

. zairia : ஜைரியா : ஆதி அரபுச் சோதிடர்கள் உருவாக்கிய சிந்திக்கும் எந்திரம்.

zap : அழி : 1. தகவல் தள கோப்பிலுள்ள தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாத வகையில் அழித்துவிடுகிற நிரல். இது பல தகவல் தள செயல்முறைகளில் உள்ளது.

zap disk : அழி வட்டு : விஎம் செயலாக்க அமைப்பில் உள்ள மெய்நிகர் வட்டு. விட்டாம் (VTAM) குறியீட்டில் பயனாளர் எழுதும் மாற்றங்களைக் கொண்டுள்ளன.

z axis : z அச்சு : ஓர் ஆயத் தொலைத் தளத்தில், ஆழத்தைக் குறிப்பிடும் அச்சு. இது, எக்ஸ் அச்சு, ஒய்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

z-buffer : z இடையகம்; z தாங்கி : அய்க்ஸ் AIX செயலாக்க அமைப்பில் இசட்-மதிப்புகளை சேமிக்கும் நினைவகத்தின் பகுதி. பார்வையாளர் கண்ணுக்கும் படப்புள்ளிக்கும் இடையிலான தூரம் அல்லது ஆழத்தைக் கொடுக்கிறது.

z-disk : இசட்-வட்டு : சிஎம்எஸ் என்னும் உரையாடல் முகப்பு அமைப்பின் வட்டு விரிவாக்கம்.

ZD Net : இஸட் டி நெட் : தொழில் நுட்பம் சார்ந்த தனிச் சிறப்பான இணையக் குழுக் 

களையும், இலவச/பகிர் மென் பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத் தளம். பீசி பயன்பாட்டாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப்டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தரவு சேவையாக இதனை உருவாக்கினர்.

zepto : ஸெப்டோ : அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செக்ஸ் டில்லியனில் ஒரு பங்கு என்பதைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டுச் சொல். இதன் மதிப்பு 1021ஆகும்.

zero : பூஜ்யம்; சுழி : பொதுவாக அளவின்மையைக் குறிப்பிடும் எண். பல கணினிகளில், நேர் மற்றும் எதிர் சுழி (பூஜ்யம்) களுக்குத் தெளிவான குறியீடுகள் உள்ளன.

zero access storage : சுழி (பூஜ்யம்) அணுகு சேமிப்பகம்.

zero address instruction : சுழி முகவரி நிரல் : முகவரி பகுதியே இல்லாத எந்திர நிரல்.

zero-complemented transition coding : சுழி கூட்டெண் மாறும் குறியீடு : தரவு சரத்தின் ஒவ்வொரு 0 துண்மிக்கும் அனுப்பப்பட்ட சமிக்கையின் நிலையை தலைகீழாக்கி தரவு குறியீடு அமைத்தல்.

zero divide : சுழி வகுத்தல் : ஒரு வகுத்தல் கணக்கீட்டில் வகுக்கும் எண் சுழியாக (பூஜ்யமாக) இருத்தல். எந்தவோர் எண்ணையும் சுழியால் வகுத்துவரும் விடையைக் கணினி வழியாகக் கணிக்க முடியாது. எனவே ஒரு கணினி நிரலில் இதுபோன்ற கணக்கீடு அனுமதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பிழையாகவே கருதப்படும்.

zerofil : சுழி நிரப்பு : கழித்தைக் குறிப்பிடும் எழுத்துகளால் பயன்படாத சேமிப்பு இடங்களை நிரப்புதல்.

zero flag : பூஜ்ஜியக் கொடி : சுழிக் கொடி : ஒர் நிரல் சுழி மதிப்பளவைக் கொண்டிருக்கும் போது, தருக்க 1-க்குச் செல்கிற ஏற்ற இறக்கத் துடிப்பு.

zeroize : சுழி (பூஜ்யம்) யாக்கல் : ஒரு செயல்முறையைப் சுழிகளுடன் தொடக்கம் செய்தல். நினைவகத்தில் இடைவெளிகளைப் சுழிகளால் நிரப்புதல்.

zero matrix : சுழி மேட்ரிக்ஸ் : செல்லாத மேட்ரிக்சின் வேறொரு பெயர்.

zero mode : சுழி முறை : இலக்கமுறை வரைவியை இயக்கும் முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்டளையும் ஏற்றத்தைக் குறிப்பிடு  வதுடன் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அச்சுகள் தொடர்பான வேக மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

zero output signal : சுழி வெளிப்பாட்டு சமிக்கை (சைகை).

zero phase filter : சுழி நிலை வடிகட்டி : இரட்டைப்படை எண் மாதிரிகளைப் பயன்படுத்தும் ஒரு வடிகட்டி. மாதிரியின் நடு உள்ளீட்டைப் போன்ற அதே இடத்தில் உள்ள வெளியீட்டை அளிக்கிறது.

zero point : சுழி புள்ளி : வென்ச்சுராவின் செங்குத்து மற்றும் குறுக்கு வாட்டக் கோடுகளின் மீதுள்ள 'சி' விளக்கங்களின் குறுக்கிணைப்பு.

zero point intersection : சுழி புள்ளி குறுக்கிணைப்பு : வெளியீட்டு விண்டோவின் மேல் இடதுமூலையில் குறுக்கே சந்திக்கின்ற கோடுகள்.

zero punch : சுழி துளை : ஹொலரித் துளை அட்டையின் மேலிருந்து மூன்றாம் வரிசையில் போடப்படும் துளை.

zero-slot LAN : சுழி-இட லேன் : தொடர் அல்லது இணை 'போர்ட்'டில் கணினிகளுக்கு இடையில் அனுப்புவதைக் குறிப்பிடுகிறது. 'லேன்' அட்டைகள் பயன்படுத்தும் விரிவாக்க இடம் இதனால் விடுவிக்கப்படுகிறது.

zero suppression : சுழி அமுக்கம்; சுழி ஒடுக்கம் : ஒர் எண்ணிலிருந்து முக்கியமற்ற சுழிகளை ஒடுக்கி விடுதல் (ஒழித்து விடுதல்). பொதுவாக, இது அச்சிடும் செயற்பாட்டுக்கு முன்பு அல்லது செயற்பாட்டின்போது செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டு : 00004763 என்ற இலக்கம் சுழி ஒடுக்கத்தின் பிறகு 4763 என்றாகிறது. பொதுவாக பக்க எண்ணிடுவதில் கையாளப்படுகிறது. தொடக்கப் பக்க எண்கள், 01, 02... அல்லது 001, 002 ... என்பதற்குப் பதிலாக 1, 2 ... என்று எண்ணப்படுகிறது.

zero track : சுழி (பூஜ்ஜிய) த் தடம் : 'பூட்' பதிவேட்டைக் கொண்ட வட்டின் முதல் தடம். மோசமான சுழி தடம் இருக்கும் வட்டைப் பயன்படுத்த முடியாது. சுழி தடம் உள்ள வட்டை சீரமைக்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மோசமான சுழி தடம், வட்டு பயனில்லை என்று டாஸ் காட்டும்.

zero track sensor : சுழி தட உணர்வி.

zero transmission level reference point : சுழி அனுப்பு. 

நிலை குறிப்புப் புள்ளி : ஒரு மின்சுற்றில் தோராய மதிப்பாகத் தேர்ந்த புள்ளி. அங்குதான் தொடர்புள்ள எல்லா அனுப்புதல்களும் குறிப்பிடப்படும்.

zero wait state : காத்திருக்கத் தேவையில்லாமை : சுழி காத்திருப்பு நேரம்; காத்திருப்பற்ற நிலை : குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM), செயலியானது காத்திருக்க வேண்டிய தேவையில்லாத அளவுக்கு வேகமாய்ச் செயல்படும் நிலை.

zero word : சுழி சொல் : குறியீட்டுக் கொள்கையில், சுழி இலக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சொல். ஹம்மிங் இடத்தின் ஆரம்பத்தில் இது உள்ளது.

zetta : ஸெட்டா : அமெரிக்க அளவீட்டுமுறையில் ஒரு செக்ஸ்டில்லியனைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டு அளவீட்டுச் சொல். ஒரு செக்ஸ் டில்லியன் என்பது 1021 ஆகும்.

z-force : இசட்-விசை : ஒரு தொடு திரையின் அழுத்தும் உணர்வு.

z-fold paper : இசட்-மடிப்புத் தாள் : விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுது பொருளுக்கு மற்றொரு பெயர்.

z-format : இசட்-வடிவமைப்பு : படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப் புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கிணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது.

zif socket : ஸிஃப் பொருத்துவாய் : செருகச் சக்தி தேவையில்லா செருகுவாய் என்று பொருள்படும் Zero Insertion force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு கம்பி அல்லது திருப்புளி கொண்டு மெல்லத் திறந்து சிப்புவைச் செருகுவாயில் வைத்துவிட்டால் போதும், இறுகப் பற்றிக்கொள்ளும். பிற செருகுவாய்களில் சிப்புவை அழுத்திச் செருகவேண்டும். அடிக்கடி எடுத்துப்போட வேண்டிய சில்லுகளுக்கு/ அட்டைகளுக்கு ஸிஃப் பொருத்துவாய் உகந்தது. ஆனால் இவை அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். மரபு முறைச் செருகுவாய்களைவிடச் செலவு அதிகமாகும்.

zig-zag fold paper : சிக்-சாக் மடிப்புக் காகிதம் : விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுதுபொருளின் வேறு பெயர்.  zilog : சிலாக் : உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்- 80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினி சிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு இதைப் பின்னுக்குத் தள்ளியது. அதற்கடுத்து ஐ.பி.எம் பீசியில் பயன்படுத்தப்பட்ட 8088 சிப்பு கணினித் துறையில் புரட்சியையே ஏற்படுத்தியது.

zip : சிப்: பீகேசிப்பைப் (PKZIP) பயன்படுத்தி ஒரு கோப்பை சுருக்குதல்.

zip drive : ஸிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய ஒரு வட்டு இயக்ககம். 3.5 அங்குல விட்டமுள்ள ஸிப் இயக்ககம் செருகுவட்டிலேயே (ஸிப் வட்டுகள்) 100 மெகா பைட் தரவை எழுத முடியும்.

Zip drv

zip files : சிப் கோப்புகள் : பிகே சிப்பைப் பயன்படுத்தி சுருக்கிய வடிவத்தில் உருவாக்கப்படும். ZIP விரிவாக்கம் உள்ள கோப்பு. இவற்றைப் பயன்படுத்த அவற்றை விரிக்க வேண்டும். PKUNZIP.EXE நிரல் தொடர் சுருக்கிய கோப்புகளை வழக்கமான அளவில் விரிக்கிறது. தரவு பாதுகாப்பதற்கு வசதியான, சிக்கனமான வழி இதுவே.

zip mode : சிப் முறை : வரைவியின் இயக்க முறை. இதில் ஒவ்வொரு உள்ளீட்டுக் கட்டளையும் கூட்டிய மாறுபாட்டைக் குறிப்பிடும்.

.zm : இஸட்எம் : ஒர் இணைய தள முகவரி ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

zmodem : இசட்மோடம் : எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறி முறையின் மேம்  பட்ட வடிவம். அதிக அளவு தரவு பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும். கோப்பு பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் மீண்டும் தொடங்கும்போது தொடக்கத்திலிருந்து தொடங்காமல் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மீள் தொடங்கு குறியிடம் (checkpoint restart) என்னும் வசதியைக் கொண்டுள்ளது.

z-net : இசட்-நெட் : ஈதர்நெட் போன்ற குறும்பரப்புக் கட்டமைப்பு.

zombie process : சோம்பி செயல்முறை : அதன் நுழைவு செயலாக்கப் பகுதிக்கு வந்த போதிலும், பயனாளர் அல்லது கெர்னல் இடம் ஒதுக்கப் படாத, முடிந்த செயல்முறை. AIX இல் பயன்படுவது.

zone : மண்டலம் ; வட்டாரம் : மீண்டும் பயன்படுத்தக்கூடிய வட்டின் பகுதியில் தங்குகின்ற வட்டுப் பதிவேடுகளில் ஒரு பகுதி.

zone - bit recording : மண்டல பிட் பதிவு.

zone bits : மண்டலத் துண்மிகள்; வட்டாரத் துண்மிகள் : ஆல்ஃபா எண்மான எழுத்துகளைக் குறிக்கும் எண்மானத் துண்மிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் தனிவகைத் துண்மிகள்

zoned decimal : பிரிக்கப்பட்ட பதின்மம் : ஈ. பி. சி. டி. ஐ. சி-யில் குறியீடு இடப்பட்ட எண்ணெழுத்து, ஒவ்வொரு பதின்ம இலக்கமும் ஒரு எட்டியல் சேமிப்பக அளவுள்ளது. இலக்கங்கள் 4 முதல் 7 வரையிலான துண்மிகளிலும், குறியீடுகள் 0 முதல் 3 வரையிலும், மற்றவை 1 களிலும் இருக்கும். சான்றாக, பிரிக்கப்பட்ட பதின்ம படிவத்தில் +123-ன் பதின்ம மதிப்பு 111 0001 1111 0010 1100 0011 என்று குறிப்பிடப்படும். கட்டப்படாத பதின்ம படிவம் என்றும் இது அழைக்கப்படும்.

zone header : மண்டலத் தலைப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதிகளை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும்.

zone portion : மண்டலப் பகுதி

zone position : மண்டல நிலை.  zone punch : மண்டலத் துளை; வட்டாரத் துளை : ஹொலரித் அட்டையில் ஒ, எக்ஸ் அல்லது ஒய் வரிசையிலுள்ள துளை.

zoo210 : ஸூ210 : கோப்புகளை இறுக்கிச் சுருக்கும் நிரலான ஸூ-வின் பதிப்பு 2. 1 இவ்வாறு அழைக்கப்படுகிறது. இறுகிய கோப்புகளின் வகைப் பெயர் (extension). zoo என இருக்கும். எல்ஹெச் ஆர்க் (LHARC) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலேயே ஸூ210-ன் படிமுறைத் தருக்கம் அமைந்துள்ளது. யூனிக்ஸ் மற்றும் இன்டெல் கணினிகளுக்கான ஸூ210 கிடைக்கிறது.

zoom : பெரிதாக்கு : பல வரைகலை மற்றும் சில விரிதாள் தொகுதிகளில் காணப்படும் தன்மை. வரைகலைப் பொருளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெரிதுபடுத்திப் பார்க்க இது பயனாளரை அனுமதிக்கிறது. ஒளிப்படக் கலையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது (ஜூம் லென்ஸ்).

zoom box : ஸூம்பெட்டி ; பெரிதாக்கும் பெட்டி : மெக்கின்டோஷ் கணினிகளில் திரையில் தோன்றும் ஒரு சாளரத்தின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் ஒர் இயக்கு விசை (control). பயனாளர் இப்பெட்டிமீது மாறிமாறிச் சொடுக்கும்போது, சாளரம் மீப்பெரும் அளவுக்கும், பயனர் முன்பு சரி செய்து வைத்திருந்த தொடக்க அளவுக்கும் இடையே மாறிக் கொண்டிருக்கும்.

zoomed video port : பெரிதாக்கப்பட்ட ஒளிக்காட்சித்துறை.

zoom factor : பெரிதாக்குக் காரணி.

zoom in : அண்மையாக்கு : உள்ளிருப்பதைப் பெரிதாக்கு : பல் ஊடகப் பயன்பாடு அல்லது கணினி வரை கலையில் ஏற்படும் ஒளிப்பட மாற்றம், அது படமெடுக்கும் பொருளை நோக்கி ஒளிப்படக்கருவி நெருங்கி வருவதுபோல் தோன்றுவது. செயலாற்றும் பொருளின் நெருங்கிய பார்வை இதில் கிட்டுகிறது. விரிவாக செயலாற்ற இது மிகவும் உதவிகரமானது. 'இன்ஜூம்' முறையில் அளவு பெரிதாகும்.

zooming : மேற்செலுத்தம் ; பெரிதாக்கல் : தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்றத்தை மாற்றுதல்.ஒரு காட்சித்திரையில் காட்டப்படும் ஓர் உருவத்தை விரிவாக்குகிற அல்லது குறைக்கிற திறம்பாடு.

zoom out : சிறிதாக்கு : சேய்மையாக்கு : கணினி வரைகலை அல்லது பல் ஊடகப் பயன்பாடுகளில், ஒளிமுறை ஒளிப்படக் கருவியில் ஏற்படும் மாற்றம். இதில் கருவியானது அது படம் பிடிக்கும் பொருளில் இருந்து பின்னோக்கி வருவது போலத் தோன்றும். ஜூம் அவுட்' முறையில் அளவு சிறிதாகும்.

zoom pyramid : பிரமிடாக்கு : அதிகத் தெளிவான உருவமும், அதையடுத்து அதன் பாதியளவே தெளிவான உருவமும் கொண்ட தொடர்ச்சியான இலக்க உருவங்கள். உயர் தெளிவுக்குத் தேவைப்படும் இடத்தில் மூன்றில் ஒரு பங்கே தேவைப்படும். எந்த வகையான தெளிவான உருவமும் விருப்பம்போல் பெறலாம். நேரடியாகவோ அல்லது ஒன்றில் ஒன்றை நுழைத்தோ பெறலாம்.

Z-parameter இசட்-அளவு கோல் : நான்கு டிரான்சிஸ்டர்களின் தொகுதிக்குச் சமமான மின்சுற்று அளவு கோல்களில் ஒன்று. ஒய் அளவு கோலின் தலைகீழ் அமைப்பு.

. zr : . இசட்ஆர் : ஓர் இணைய தள முகவரி ஸய்ர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

zulu time : ஸூலு நேரம் : கிரீன்விச் சராசரி நேரம் என்பதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.

Zuse, Konrad : ஜூஸ், கோன்ராடு : கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.