கணினி களஞ்சிய அகராதி-2/R
dash style : கீறுகோட்டுப் பாணி.
DAT : டாட் : இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர்.
data : தரவு, தகவல்; செய்திக் குறிப்பு; விவரம் : முறைப்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள். மனிதர்கள் அல்லது தானியக்க முறையில் தொடர்பு கொள்ளல், கருத்துக் கூறல் அல்லது வகைப்படுத்துதலுக்கு பொருத்தமானதாகும் : வகைப்படுத்தப்படாத தரவுகள் (உ-ம்) விரிப்புகளுக்கான டாலர் விலை, வழங்கப்பட்ட கட்டட அனுமதிகள். வரலாற்றுக் காலம் தொட்டு டேட்டா என்பது பன்மைப் பெயர் ஆகும். டேட்டம் என்பது ஒருமைப் பெயர் ஆகும். இந்த வேறுபாடு தரவு முறைப்படுத்தும் தொழில் துணுக்கத்தில் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகிறது.
data abstract : தரவுச் சுருக்கம்.
data abstraction : தரவு உருவாகம் : பொருள் சார்ந்த செயல் முறைப்படுத்தலில், பயனாளர் வரையறுத்த தரவு வகைகளை உருவாக்குதல். இவை, சொந்தமான தரவுகளையும், செய்முறை யையும் கொண்டிருக்கும்.
data acquisition : தரவு ஈட்டல் : புள்ளிவிவரம் பெறல், தரவு பெறல். தொலைதூரத் தளங்களிலிருந்து தரவுகளை மத்திய கணினி அமைப்பு ஒன்றினால் பெறுதலாகும். புறஉணர்விகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தலாகும்.
data administration : தரவுத் தள மேலாளர் மேலாண்மை : தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்பு ஆகியவை அடங்கும். தரவு உருமாதிரிகள், தரவு விவர ஏடுகள் ஆகியவற்றை உருவாக்குவதும் இதில் சேரும். இவை தரவு தள வடிவமைப்புக்கு மூலப் பொருள்களாக அமையும். தரவுகளை ஒர் அமைவனத்தின் ஒட்டு மொத்த மேலாண்மைக்கு தரவு நிருவாகப் பணிகள் உதவுகின்றன.
data aggregate : தரவுத் தொகுதி : ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தரவு வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
data analysis : தரவுப் பகுப்பாய்வு. data analysis package : தரவுத் தளப் பகுப்பாய்வுத் தொகுதி : தரவு பகுப்பாய்வுத் தொகுதி : குறிப்பிட்ட ஒரு சில முடிவு களைப் பெறுவதற்காகக் கட்டமைப்புக்கும், தரவுகளைச் சீரமைப்பதற்கும் பயன்படும் ஒரு மெல்லினச் சாதனம். ஒரு மின்னணுவியல் அகல் தட்டுச் செயல்முறை இதற்கு எடுத்துக்காட்டு.
data area : தரவு பகுதி.
data attribute : தரவின் பண்புக் கூறு : விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள்.
data bank : தரவு வங்கி : தரவு நூலகங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆகும். 2. நெருக்க மில்லாத தொகுப்பு எனும் நிலையில் தரவு அடிப்படை என்று கூறப்படுகிறது.
database தரவுத் தளம் : தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தருக்க முறையில் தொடர்புடைய பதிவேடுகளின் அல்லது கோப்புகளின் ஒரு தொகுப்பு. ஒரு தரவுத் தளம், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
database administration : தரவு தள நிருவாகம் : ஒர் அமைவனத்தின் தரவு அகராதியைத் தயாரித்துப் பேணி வருதல், தரவு தளத்தின் செயல் முறையை வடிவமைத்துக் கண்காணித்து வருதல், தரவு தளப் பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தர அளவுகளைச் செயற்படுத்துதல் முதலிய பல பணிகள் இதில் அடங்கும்.
database administrator : தரவு தள நிருவாகி : தரவுத் தளத்தின் இயற்பியல் வடிவமைப்புக்கும், மேலாண்மைக்கும், அதன் பொறியமைவின் மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்களில், தரவுத் தள நிருவாகி, நிருவாகி இருவரின் பணியும் ஒன்றுதான். ஆனால், இரு பொறுப்புகளும் தனித்தனியே மேலாண்மை செய்யப்படும்போது தரவுத் தள நிருவாகியின் அதிகம் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கும்.
database analyst : பகுப்பாய்வாளர் : வடிவமைப்பு மற்றும் தரவு அடிப்படைச் சூழலில் தரவு அமைப்பை அமல்படுத்துதலில் முக்கிய நபர் ஆவார்.
database broadcasting : தரவுத் தள அலைபரப்பு.
database concept : தரவுத் தள கருததுரு.
database definition language : தரவுத் தள வரையறை மொழி : ஒரு தகவலை உருவாக்கி, சேமித்து வைத்து, மேலாண்மை செய்வதற்கு தரவு நிருவாகி பயன்படுத்தும் ஒரு மொழி.
database design : தரவுத் தள வடிவமைப்பு.
database designer : தரவுத் தள வடிவமைப்பாளர்;தரவுத்தள திட்ட அமைப்பாளர் : ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.
database driver : தரவுத்தள இயக்கி : ஒரு தரவுத் தளத்தை அணுகுகிற மெல்லின வாலாயம். இது ஒரு குறிப்பிட்ட தரவுத் தளத்தை அணுகுவதற்கு ஒரு தொகுப்பாணை அனுமதிக்கிறது.
database engine : தரவுத்தளப் பொறி : தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள்.
database environment : தரவுத்தள தளச் சூழல் : பயன்படுத்துவோர், தரவு மற்றும் தரவுத்தளத்தை அமல்படுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல்.
database machine : தரவுத்தள எந்திரம் : தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப் படுத்திகளைப் பயன்படுத்துகிறது.
database management : தரவுத் தள நிர்வாகம், தரவுத் தள மேலாண்மை : கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடிவில் தரவு வகைகளை சேமித்தல், நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதுார அமைப்புகளின் மூலம் பல பயனாளர் பலரும் பொதுவான தரவு வங்கிகளைப் பயன்படுத்த முடியும். database management approach : தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை : தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், தரவு மீட்புக்காகவும் பயனாளருக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகின்றன.
database management system : (DBMS) தரவுத் தள மேலாண்மை முறைமை : ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவுகளைத் தேடவும், மற்றும் பிறவற்றுக்கும் இடமளிக்கிற, வகைப்படுத்துகிற வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் தொகுப்பாகும். கோப்பு நிர்வாகியுடன் ஒப்பிடவும்.
database manager : தரவுத் தள மேலாளர் : தரவுகளை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப் படுத்த, தரவுகளைப் பெற பயன்படுத்த ஒருவரை அனு மதிக்கும் நிரல் தொகுப்பு.
database objects : தரவு தளச் செயல்பாடு.
database operation : தரவு தளப் பண்புகள்.
database packages : தரவு தள தொகுப்புகள் :
database publishing : தரவு தள வெளியீடு : தரவுத் தளப் பிரசுரம், தரவுத் தள அறிக்கை : ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறாஇயில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில் துட்ப அடிப்படையில் வெளி யிடும் முறை.
database query language : தரவுத் தள வினவு மொழி : ஒரு தரவுத் தளத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒர் ஆணை அல்லது செயல்முறைப்படுத்தும் மொழி. இந்த மொழி, தரவுத் தளத்திலிருந்து தரவுகளை வர வழைத்துக் கையாள்வதற்குப் பயனாளரை அனுமதிக்கிறது.
database server : தரவு தள ஏவலர் : ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச் சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவகைக் கோப்புகளையும் செயல்முறைகளையும், பகிர்ந்து பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கிறது.
database specialist : தரவுத்தள வல்லுநர் : தரவுத் தளங்களுடன் பணிபுரிவோர்.
database splitter : தரவுத்தள பிரிப்பி.
database structure : தரவுத்தளக் கட்டமைப்பு : தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்றைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய வடிவமைப்பு பற்றிய பொதுவான விளக்கக் குறிப்பு. database utilities : தரவுத்தள பயன்கூறுகள்.
database wizard . தரவுத்தள வழிகாட்டி.
data bits : தரவு துண்மிகள் : ஒத்திசைவில்லாதரவு பிட்டுகள் : தரவுத் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்கத் துண்மி (start bit) அனுப்பபடும். அதன்பின், சமன் துண்மி (parity bit) அனுப்பபடும். சமன் துண்மி அனுப்பப்படாமலும் இருக்கலாம். இறுதியில் ஒன்றிரண்டு நிறுத்த துண்மிகள் (stop bits) அனுப்பி வைக்கப்படும்.
data broadcasting : தரவு அலைபரப்பு.
data buffer : தரவு இடையகம் : கணினிச் செயல்பாட்டில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது, தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகின்ற நினைவகப் பரப்பு.
data bus : தரவுத் தடம்; தரவுப் பாட்டை : தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கிறது.
data byte : தரவு எண்மி : எண்மி : துண்மி இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது.
data cable : தரவு வடம் : தரவுத் தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை ஒளிவ வடம் அல்லது கம்பி வடம்.
data capture : தரவுப் பரப்பி : தரவுக் கவர்வு. data capturing : தரவை கவர்தல் : கணினி கையாளு வதற்காக தரவுகளை சேகரித்தல் அல்லது தொகுத்தல், பணியை வகைப்படுத்தலில் முதல் நட வடிக்கையாகும். இதனை தரவு சேகரிப்பு என்றும் கூறுவார்கள்.
data card : தரவு அட்டை : துளையிடப்பட்ட அட்டை ஒன்றுக்கு மேற்பட்ட தரவு களைக் கொண்டது.
data carrier : தரவு ஏந்தி : எந்திரத்தில் படிக்கக் கூடிய தரவுகளை இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வட்டு, நாடா போன்ற ஒர் ஊடகம்.
data carrier store : தரவு ஊர்திச் சேமிப்பி : கணிப்பொறியின் புற நிலைச் சாதனமாக உள்ள நிரந்தரச் சேமிப்புச் சாதனம். எடுத்துக்காட்டு நெகிழ் வட்டுகள் (Floppy disks).
data cartridge : தரவுப் பொதியுறை : காந்த நாடா அடங்கியுள்ள, அப்புறப்படுத்தத்தக்க சேமிப்புத் தகவமைவு.
data catalog : தரவுப் பதிப்பி : தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல்.
data cell : தரவு அறை : நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது.
data center : தரவு மையம் : கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த மையத்தின் கீழ்வரும். இதிலுள்ள கட்டுப்பட்டுப் பிரிவு, பல்வேறு பயன்பாட்டுத் துறை களிடமிருந்து வெளிப்பாடு களைப் பெற்று வெளியிடுகிறது.
data chaining : தரவு சங்கிலி இணைப்பு : தரவு வகைகளை இணைப்பதற்கான ஒரு செய்முறை. ஒவ்வொரு தரவு இனத்திலும், அடுத்த இனத்தின் அமைவிடம் அடங்கியிருக்கும்.
data channel : தரவு வழி : தரவுத் தடம் : இரு புள்ளிகள் அல்லது கருவிகளுக்கிடையிலான தரவுத் தொடர்பு இணைப்பு.
data channel multiplexer : தரவுத் தட ஒன்றுசேர்ப்பி.
data checks : தரவுச் சேர்கைகள் : தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கு முன்பு அதில் செல்லுபடியாகாத தரவுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் பல்வேறு சோதனைகள்.
data clerk : தரவு எழுத்தர் : கணினி ஒன்றில் எழுத்தர் பணிகளைச் செய்யும் ஒருவர்.
data collection : தரவுத் திரட்டு : தரவுத் தொகுப்பு : 1. தரவுகளை வகைப்படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தரவுகளைச் சேகரித்தல். தரவுகளைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப் பகுதிக்கு தரவுகளைக் கொண்டுவந்து சேர்த்தல்.
Data collection form : தரவுத் திரட்டுப் படிவம்.
data command : தரவு ஆணை : ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
data communication equipment : தரவுத் தொடர்புக் கருவி : ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தரவுகளைக் கடத்துவதுடன் தொடர்புடைய துணைக் கருவி. எடுத்துக்காட்டு : மோடெம்கள், தொலை தூர முனையங்கள் மற்றும் தரவுத் தொடர்பை வகை செய்யும் கருவிகள், உள் வீட்டு, வெளியீட்டு வழிகள்.
data communications : தரவுத் தொடர்புகள் : குறியீடாக்கிய தரவுகளைக் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி அனுப்புதல். இதற்கு, உள்ளுர் அனுப்பீட்டுமுறை எதுவும் அல்லது நிலம், ஆகாயம் அல்லது கடல்வழியான தொலைத் தொடர்புமுறை எதுவும் பயன் படுத்தப்படுகிறது. data communications package : தரவுச் செய்தித் தொடர்புத் தொகுதி செய்தித் தொடர்புக் கம்பிகளின் வழியாகத் தரவுகளை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பயன்படுத்துவோரை அனுமதிக்கும் மென்பொருள்.
data communications system : தரவுத் தொடர்பு அமைப்பு : கணினிகள், இணையங்கள் மற்றும் தரவுத் தொடர்பு இணைப்பு அமைப்புகளைக் கொண்டமுறை.
data compatibility தரவு ஒத்தியல்பு : ஒருவர் மற்றொரு வரின் தரவு வட்டுகளிலிருந்து படிக்கவும் எழுதவும், ஒருவர் மற்றவரின் தரவுக் கோப்புகளைப் பயன்படுத்தவும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகளின் திறம்பாடு, அவை, ஒரே செயல்முறைகளை இயக்க முடியா விட்டாலும் இவ்வாறு செய்யலாம்.
data compression : தரவு இறுக்கம் : வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல்.
data concentration : தரவுகளை திண்மைப்படுத்தல் : 1. பல குறைவான நடுத்தர வேகங்கொண்ட வழிகளிலிருந்து ஒரு இடைப்பட்ட மையத்தில் தரவுகளைச் சேகரித்தல். 2. ஒரு தரவின் இறுதியில் மற்றொரு தரவைச் சேர்த்து ஒரு நீண்ட தரவு வகையை உருவாக்குதல்.
data conferencing : தரவுக் கலந்துரையாடல் : தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப்
data consistency : தரவு ஒத்திசைவு.
data contamination : தரவு மாசுபடுதல் : தரவுகளைத் தன்னை அல்லது தீய நோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல்.
data control : கட்டுப்பாட்டுத் தரவு : ஆதார ஆவணங் களிலிருந்து, எந்திரம் படிக்கக் கூடிய தரவுகளைத் தயாரிப்பதன் மூலம், பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்தும் செய்முறை.
data control department : தரவு கட்டுப்பாட்டுத் துறை : ஒரு கணிப்பொறியின் தொகுதிச் செய்முறைப்படுத்தும் செயற் பாடுகளில் உள்ளிடுவதற்காகத் தரவுகளைச் சேகரிப்பதற்கும், முடிவுற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் பொறுப்பான செயற்பணி.
data control section : தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு : வகைப்படுத்துதல், உள்ளிடு தரவு ளைச் சேகரித்தல் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீடுகளை வழங்குதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு.
data conversion : தரவு மாற்றம் : தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல்.
data cycle : தரவுச் சுழற்சி : தரவு களை உள்ளிடுதல், செய்யல்முறைப்படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் வரிசை முறை.
data declaration : தரவு அறிவிப்பு : விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுட்டுக்காட்டாக, பணியாளர்களின் விவரங்களைக் கையாள பெயர், வயது, சம்பளம் போன்ற தரவு மாறிலிகளை (variables) அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கும் முறை மொழிக்கு மொழி வேறுபடும். ஆனால், அனைத்து முறைகளிலும் சில கூறுகள் மாறிலியின் பெயர், தரவு இனம், தொடக்க மதிப்பு, உருவளவு ஆகியவை பொதுவானவை.
C, C++, Java char name{15] int age;
double pay;
paScal name : string[15];
age : integer; pay : real,
data definition : தரவு வரையறை தரவு விளக்கம் : அறிக்கை ஒன்றுக்கான நிரல் தொகுப்புகளை வரையறுக்கும்பொழுது, அதில் அளவு, வகை, களம் ஆகியவற்றின் தன்மை, இடம் பெற்றிருக்க வேண்டும்.
data definition language : தரவு விளக்க மொழி : தரவு அடிப்படை நிர்வாகி ஒருவர், தரவு அடிப்படைச் சூழலில், தரவுவை உருவாக்கவும், சேமிக்கவும், பராமரிக்கவும் கையாளும் மொழி. இதனை, தரவு மொழி என்றும் கூறுவார்கள்.
data definition statement : தரவு வரையறை அறிக்கை : ஒரு கோப்பு பற்றிய தரவுகளை அளிக்கும் ஒரு பணிக் கட்டுப்பாட்டு மொழி அறிக்கை.
data description language (DDL) : தரவு விவரிப்பு மொழி (டிடிஎல்) : தரவு அடிப்படைச் சூழலில், தரவு அடிப்படை நிர்வாக முறையில், தரவு விவரணையில் சேமிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் மொழி. இதனை தரவு விளக்கமொழி என்றும் அழைப்பதுண்டு.
data description library : தரவு விவரிப்பு நூலகம் : ஒரு தரவு ஆதார மேலாண்மைப் பொறியமைவில், பல்வேறுவகைத் தரவு குறிப்புகளிடையிலான இடைத் தொதாடர்புகளுடன் சேர்த்துச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல்வேறுவகைத் தரவுகள், விவரங்களின் ஒரு பதிவேடு.
data description standard : தரவு விவரிப்புத் செந்தரம்.
data descriptor : தரவு விவரிப்பி : ஒர் இணைப்புமொழிச் செயல் முறையில், முதன்மை நினைவுப் பதிப்பியில் நிலையான அல்லது காப்பிடச் சேமிப்பு அமைவிடங்களை வரையறுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறைப்படுத்தும் அறிக்கை.
data design : தரவு வடிவமைப்பு : ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது, ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், கோப்புகள் மற்றும் தரவுத் தளத்திற்கான ஒருங்கிணைப்பு விதிமுறைகள் ஆகியவற்றை அளிக்கிறது.
data dictionary : தரவு அகர முதலி, தரவு அகராதி : ஒரு தரவு அடிப்படை நிர்வாக முறையில் பயன்படுத்தப்படும் கோப்புகள், களங்கள் மற்றும் மாறக்கூடியவற்றை உள்ளடக்கியது. தரவு அகரமுதலி, பயன்படுத்துவோருக்கு எவற்றுடன் தாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதையும், அவை எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதையும் நினைவுபடுத்த உதவுகிறது. குறிப்பாக பெரிய எண்ணிக்கையிலான இணைக்கப்பட்ட நடைமுறைகளை அல்லது நிரல் தொகுப்புகளை தரவு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்பொழுது, எழுதும் பொழுது உதவியாக உள்ளது.
data diddling : தரவு மாற்றியமைத்தல் : தரவுகளை மாற்றும் உத்தி : கணினிக் கோப்பு ஒன்றிற்குள் சேர்க்கும் முன்பு அதனை எளிதில் பெற முடியாத படி தரவுகளை மாற்றும் உத்தி.
data directory : தரவு அடைவு : தரவு அட்டவணை : தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும்.
data directory / data dictionary : தரவு அடைவு/தரவு அகரமுதலி : தரவு அம்சங்களை ஒழுங்கு முறைப்படுத்துதல். இம்முறையில் தரவு அட்டவணை, தரவுப்பொருளுணர்த்தும் அட்டவணை, தரவு அகரமுதலி முதலியவற்றின் பண்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தரவுகளின் அம்சங்களை விவரிப்பதோடு அவற்றின் இடத்தையும் கண்டறிய முடியும்.
data division : தரவு பகுதி : தரவு பிரிவு : கோபால் நிரல் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் மூன்றாவது பகுதி.
data driven processing : தரவு உந்து செயலாக்கம் : தரவு செயலாக்க முறைகளுள் ஒன்று. செயலி (Processor) அல்லது நிரல் (Programme), வரிசைமுறையிலான செயல்பாடுகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தரவின் (data) வருகைக்காகக் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டிய நிலை.
data dump : தரவு சேமிப்பு : தொல்லை நீக்கும் அம்சம். அச்சடிப்பி, தரவு சேமிப்புத் தக வமைவாக இருக்கும்போது, அதுபெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறிலக்கக் குறி மானத்தில் அச்சிடப்படுகிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு என்றும் கூறுவர்.
data editing : தரவு சீரமைப்பு : தரவு உள்ளிட்டில் பிழைகளை, தவறுகளை, முரண்களைக் கண்டறிவதற்கான உத்தி. எடுத்துக்காட்டாக சோதனைகளைக் கூறவேண்டும். விரிவெல்லைச் சோதனை, காரிய சாத்தியமா என்பதற்கான சோதனை, தரவுகள், எழுத்து, எண்ணியல் முறையில் தேவைப்படும் வகையில் முறையாக உள்ளதா என்பதற்கான சோதனைகள்.
data element : தரவு உறுப்பு : தரவுக் கூறு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவு வகைகளின் இணைப்பாகும். அவை ஒரு அலகு அல்லது சிறு தரவைக் குறிப்பிடுகிறது. அத் தகவல் ஒரு தொழிலாளியின் சமூகப் பாதுகாப்பு எண், அல்லது சம்பளப் பட்டியலைப் பற்றிய தரவு அடிப்படையாக அமையலாம்.
data encryption : தரவுக் குறியீட்டு முறை : தரவுக் குறியீட்டாக்கம் : முன்பே தீர்மானிக்கப்பட்ட திட்டப்படி கலந்திருக்கும் மிக முக்கியமான தரவுகளைப் பெறுவதற்கான குறியீட்டு முறை.
data encryption key : தரவு மறையாக்கக் திறவி : ஒரு தரவை மறையாக்கம் (encryption) செய்யவும், மறைவிலக்கம் (decryption) செய்யவும் பயன்படுத்தப்படும் மறைக்குறியீடு.
data encryption standard : தரவு குறியீட்டு முறை தரவரைவு : தரவு முறைக் குறியீட்டுச் செந்தரம் : ஐபிஎம் உருவாக்கிய தரவு பாதுகாப்பு முறை, தேசிய தரங்கள் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இம்முறையில் ஒரு தனிக் குறியீட்டுத் தரவுகளை சேமிப்பிலிருந்து பெற உதவுகிறது.
data entry : தரவு உள்ளிடு : தரவு சேர்ப்பு : 1. தரவுகளை கணினி ஒன்றில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் முறை. அதாவது முனையம் ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா அல்லது துளையிடும் அட்டைகளுக்கு விசைகள் மூலம் அனுப்புதல். 2. கணினி முறை ஒன்றில் நேரடியாகத் தரவுகளை ஏற்றும் முறை.
data entry device : தரவு பதிவுச் சாதனம் : கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம்.
data entry form : தரவு உள்ளீட்டுப் படிவம் : தரவு பதிவுப் படிவம்.
data entry operator : தரவு உள்ளிட்டாளர் தரவுப் பதிவு ஆள் : குறிப்புப் பதிவாளர் : விசைப் பலகைச் சாதனத்தைக் கணினி ஒன்றில், தரவுகளைப் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகிறவர். அவர் பெரும்பாலும் கணினியை இயக்கும் குழுவில் ஒரு உறுப் பினராக இருப்பார். கணினி முறையில் தரவுகளைப் பதிவு செய்யும் பொறுப்பு அவருடையது.
data entry programme : தரவுப் பதிவுச் செயல்முறை : விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செய்தியறிவித்தல் ஆகியவற்றைச் செய்திடும் ஒரு பயன் பாட்டின் ஒரு பகுதி யாக இருக்கலாம். இந்தச் செயல் முறை, தரவுத் தளத்தில் தரவை நிலை பெறச் செய்கிறது. உட்பாட்டுப் பிழைகள் அனைத்தையும் சோதனை செய்கிறது.
data entry specialist : தரவு பதிவு வல்லுநர் : கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர்.
data export : தரவு ஏற்றுமதி : எழுதப்பட்ட தளங்களை ஒரு தரவு அடிப்படையிலிருந்து மற்றொரு நிரல்தொகுப்பில் பயன் படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள், விரிநிலைத்தாள்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான தொகுப்புச் சொற்களை வகைப்படுத்துவது தரவு இறக்குமதிக்கு எதிர்நிலையானது.
data facts தரவு மெய்ம்மை : தரவுகளுக்கான மூலச்செய்திகள்.
data/fax modem : தரவு/தொலை நகல் இணக்கி : துண்மித் தாரை (bit stream) வடிவிலான, தகவலையும், பட உருவங்களையும் அனுப்பவோ பெறவோ பயன்படும் இனக்கி.
data field : தரவுக் களம் : தரவூ புலம் : தரவுகளை வகைப்படுத்தும் வடிவத்தில் ஒரு உயர் பகுதி அல்லது அடுத்தடுத்த உயர்பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தரவு அம்சத்தைப் பதிவு செய்வதற்கான துளையிடப் பட்ட அட்டை, 2. தரவு ஆவணம் ஒன்றின் பகுதி.
data field masking : தரவு மறைப்பு : தரவுகளுக்கு மூடியிடல் : தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 07/12/86. தொலைபேசி எண்களைக் குறிப்பிட பிறை அடைப்புக்குறிகள், கிடைக்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. (999) 999-9999, இதே போன்ற குறியீடுகள் பகுதி எண்களைக் குறிக்கவோ, எழுத்துக் கோவையின் பரப்புத்திறனை மேம்படுத்தவோ கையாளப்படுகின்றன. இத்தகைய மூடிகளை கணினியால் செருக இயலும். அவற்றை இயக்குவோர் தானாகச் சேர்க்கவேண்டிய தில்லை. தேதிக்கான பகுதியில் 07. 1286 என்ற எண்களை மட்டும் பதிவு செய்தால்போதும். கணினி ஆணைத்தொகுப்பு சாய் கோடு களைத் தானாகச் சேர்த்து விடும். இம்முறை தரவுப் பதிவை எளிதாக்குகிறது. பணிகளைத் தரப்படுத்துகிறது. சில நிரலாக்கத் தொடர்கள் மூடியிடும் பணியை முறையாகச் செய்கின்றன.
data file : தரவுக் கோப்பு : தொடர்புடைய தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுகின்றன. இதனை உரைக் கோப்பு என்றும் கூறுவார்கள்.
data file processing : தரவுக் கோப்புச் செயலாக்கம் : தரவுக் கோப்பு வகைப்படுத்துதல் தேதிக்கோப்புகள் நடைமுறைத் தரவுகளைப் பிரதிபலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல்.
data flow : தரவு பாய்வு : தரவு ஒழுகை : பதின்ம முறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தரவுகளின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளைச் செய்யும் எந்திரங்கள்.
data flow analysis : தரவு பாய்வுப் பகுப்பாய்வு : முறைப்படுத்தும் நடவடிக்கை களிடையே தரவுகளின் ஒட்டம் பற்றிய ஆய்வு.
data flow diagram : தரவுப் பாய்வு வரைபடம் : ஒரு முறைமை வழியாக தரவுகளின் பாய்வை பிரதி நிதித்துவப்படுத்தும் முறைமை யைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிற வரைபட ஆய்வு முறைமை மற்றும் வரைபடக் கருவி.
data fork : தரவுக் கவைமுனை : தரவுகளைக் கொண்ட ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் பகுதி. எடுத்துக்காட்டு : ஒரு மிகை அட்டை அடுக்கில், வாசகம், வரைகலை, மிகைப் பேச்சுப் படிகள் ஆகியவை தரவு கவை முனையில் அமைந்திருக் கின்றன. சேமக்கலங்கள், ஒலிக் கட்டுப்பாட்டுத் தரவுகள், புறச்செயற்பணிகள் ஆகியவை ஆதாரக் கவை முனையில் அமைந்திருக்கின்றன.
data form : தரவுப் படிவம்.
data format : தரவு படிவம் : கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அக்கட்டமைப்பையே தரவு வடிவம் என்கிறோம்.
data formatting statements : தரவு வடிவாக்கக் கட்டளைகள் : தரவைப் படிக்கிறபோது அல்லது வெளிப்படுத்துகிறபோது, தரவின் வடிவத்தை வரையறுக்கிற செயல்முறைப்படுத்தும் மொழிகளின் கட்டளைத் தொடர்கள்.
data frame : தரவுத் தொகுதி : தரவுச் சட்டம், தரவு பொதி : தரவு பொட்டலம் : கணினிப் பிணையங்களில் ஒற்றைத் தொகுதியாக அனுப்பப்படுகின்ற ஒரு தரவுப் பொதி பிணையங்களின் தரவுத் தொடுப்பு அடுக்கு (Data Link Layer) தரவுச் சட்டத்தை நிர்ணயம் செய்கின்றது. பிணையக் கணுக்கள் (Network Nodes) இரண்டுக்கிடையே இணைக்கும் கம்பிகளில்தான் தரவுச் சட்டம் நிலவுகிறது. கணினிக்குள் நுழைந்த பிறகு சட்டம், பொதி என்ற பரிமாணத்தை இழக்கிறது.
data gathering : தரவு சேகரிப்பு : உள் அல்லது வெளி ஆதாரங் களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் பணி.
data general corporation : தரவு பொதுக் கார்ப்பரேஷன் : குறுங்கணினிகளைப் பெருமளவில் தயாரிக்கும் நிறுவனம்.
data glove : தரவு கையுறை : ஒரு கணினியில் பயனாளர் ஒருவரின் கைகள், விரல்களின் நிலையைத் தெரிவிப்பதற்கு விபிஎல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கையுறை.
datagram : தரவு செய்தி : இணைய (internet) ஆதாரம். சேரி முகவரிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட்டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு.
data hierarchy : தரவு படிநிலை : தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல்.
data import : தரவு இறக்குமதி : மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட தரவுகளைப் பல னிரல் தொகுப்புகள் பயன்படுதுகின்றன. தரவு ஏற்றுமதிக்கு எதிரானது.
data independence : தரவு சார்பின்மை : தரவு சுயேட்சை : பயன்பாட்டில் பெரும் மாறுபாடு இல்லாமல் மாற்றக்கூடிய, மற்றும் நடைமுறையைக் கொண்ட தரவு முறைமை ஒன்றின் நிலை.
data input & verification : தரவு உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்.
data integrity . தரவு ஒருங்கிணைவு தரவு : ஒழுங்கமைவு : கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் விகிதத்தை அடிப்பையாகக் கொண்ட பணி அலகு.
data interchange format : தரவு பரிமாற்ற வடிவம் : மென்பொருள் உருவாக்குவோர் மத்தியிலான தர நிலை. அது ஒரு நிரல் தொகுப்பின் தரவுகளை மற்றொரு நிர்ல தொப்பு பெற அனுமதிக்கிறது.
data item : தரவு வகை : உருப்படி : ஒரு மதிப்பீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் தரவு வகை . பெயரிடப்பட்ட தரவின் மிகச் சிறிய அலகு.
data leakage : தரவுக் கசிவு : கணினி ஒன்றிலிருந்து திருட்டுத்தனமாக தரவுகளை அகற்றுதல். data librarian : தரவு நூலர் : தரவு ஆதாரங்களான வட்டுகள், நாடாக்கள் மற்றும் நடைமுறைக் குறிப்புகளை அட்ட வனைப்படுத்தி பொறுப்பாகப் பராமரிப்பவர். அவற்றின் பயன்பாட்டையும் கண்காணிப்பவர். வழக்கமாக நூலகர் அல்லது காப்பாளர் என்று அழைக்கப் படுகிறார்.
data library : தரவு நூலகம் : வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு கோப்பு களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு தரவு நூலகம் எனப் படுகிறது.
data line : தரவுப் பாதை : ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை.
data line monitor : தரவுப் பாதைத் திரையகம் : செய்தித் தொடர்புகளில், ஒரு செய்தித் தொடர்புப் பாதையில் குறியீடுகளையும், நேரத்தையும் பகுப்பாய்வு செய்கிற ஒரு வாசகக் கருவி. இது செய்தி அனுப்புவதற்குத் தேவையான மென் பொருள்கள், வன்பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்.
data link : தரவு இணைப்பு : செய்தி ஒன்றைத் தரவு வடிவில் அனுப்ப அனுமதிக்கும் கருவி.
data link escape : தரவுத் தொடர்புப் போக்கு வழி : அடுத்துவரும் எழுத்து, தரவு இல்லை என்பதையும், ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு என்பதையும் குறிக்கின்ற செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து.
data link layer : தரவு தொடுப்பு அடுக்கு : இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் (ISO/OS model) என்று அழைக்கப்படுகிறது. தரவு பரிமாற்றத்தில் ஏழு அடுக்குகள் (Layers) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை ஒஎஸ்ஐ அடுக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் இரண்டாவது அடுக்கு தரவுத் தொடுப்பு அடுக்கு எனப்படுகிறது. பருநிலை அடுக்குக்கு (Physical Layer) மேலாக அமைந்துள்ளது. இரண்டு சாதனங்களுக்கிடையே உண்மையில் தகவலைப் பரிமாற்றம் செய்கின்ற மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம் மற்றும் போக்குவரத்து அடுக்குகள் கீழ் நிலையில் இந்த அடுக்கு அமைந்துள்ளது.
data link level : தரவுத் தொடுப்புநிலை : தரவு இணைப்புப் படித்தளம்.
data logging : தரவாக்கம் : தரவுபதிவு : ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்டிடம் எங்குமுள்ள பல்வேறு அறைகளிலுள்ள வெப்ப உணர்விகளிலிருந்து வரும் தரவுகளை திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறது. இந்தத் தரவுகள் வெப்பமூட்டுவதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
data management : தரவு நிர்வாகம் : தரவு மேலாண்மை : கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். 2. தரவுகளை முறைப்படுத்துதல், அட்டவணைப்படுத்துதல், இருக்குமிடம் அறிதல், பெறுதல், சேமித்தல், மற்றும் பராமரித்தல் ஆகிய பெரும் பணிகளைக் கொண்ட இயக்க முறைமை ஒன்றின் முக்கியப் பணிகள்.
data management system : தரவு மேலாண்மை அமைப்பு : தரவு நிர்வாக முறைமை : 1. தரவு முறைமைகளுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் நிரல் தொகுப்பு நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தரவு சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தரவு உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினை வழங்கும் முறைமை.
data manager : தரவு செயலாக்க மேலாளர்.
data manipulation : தரவுகளில் திருத்தம் : மொழி நிரல்கள் மூலம் தரவு அடிப்படை அல்லது தரவுக் கோப்பு ஒன்றுடன் தரவுகளைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை.
data manipulation & analysis : தரவு கையாள்தல் மற்றும் பகுப்பாய்வு.
data manipulation instruction : தரவு கையாள்தல் ஆணை. data manipulation language : DML : தரவு பராமரிப்பு மொழி : தரவுகளைத் திருத்தும் மொழி : ஆங்கில மொழி ஆணைகளைப் பயன்படுத்தி, கணினி ஒன்றின் தரவு சேமிப்பு ஒன்றினை அணுகுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயனாளர் ஒரு வரை அனுமதிக்கும் மொழி.
data mart : தரவுக் குறுங் கிடங்கு : மிகப்பரந்த அளவிலான தரவு சேமிப்பு, தரவு தரவு கிடங்கு (Data Warehouse) எனப்படுகிறது. தரவுக் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தரவுக் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் தரவுகளைக் கொண்டுள்ள கிடங்கு.
data matrix : தரவுப் படிமம் : தரவு அச்சுவார்ப்புரு : தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை.
data medium : தரவு ஊடகம் : பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தரவுகளைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு : காந்தவட்டு அல்லது காந்த நாடா.
data migration : தரவு இடப்பெயர்வு : 1. தரவுத் தளம் போன்ற ஒரு சேமிப்பிடத்திலிருந்து இன்னொன்றுக்கு தரவைப் பெயர்த்தெழுதும் செயல்முறை. பெரும்பாலும் இத்தகைய இடப்பெயர்வு தானாக இயக்கப்படும் நிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இடப்பெயர்வில் தரவு பெரும்பாலும் ஒருவகைக் கணினி அமைப்பிலிருந்து வேறுவகைக் கணினியியல் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். 2. மீத்திறன் கணினிப் (Super Computer) பயன்பாடுகளில், அகல் நிலை (offline) -யில் ஏராளமான தரவு களை பதிவுசெய்து அவற்றை வட்டுக் கோப்புகளாய் நிகழ் நிலை (online) தகவலாய்க் கிடைக்கச் செய்யும் முறை தரவு இடப்பெயர்வு எனப்படும்.
data mining : தரவுச் சுரங்கம் : தரவு அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அது போன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளி நுட்பம் மூலமாகக் கண்டறியும் செயல்முறை.
data model : தரவு மாதிரி : தரவு படிமம் : தரவு வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நடவடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தரவு விவரணை மொழி : இரண்டு தரவு திருத்த மொழி.
data modelsing : தரவு உருமாதிரி : தரவு கூறுகளிடையிலான தொடர்புகளை அடையாளங்கண்டு, தரவு உருமாதிரிகளை உருவாக்குவதற்கான ஒரு செய்முறை ஒரு தரவு உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறிமுறைகளை அடையாளங்காண்ல்.
data module : தரவு தகவமைப்பு ; முத்திரையிட அப்புறப்படுத்தத்த வட்டட் தொகுதியை குறிக்கும் சொல்.
data movement time : தரவு இயக்க நேரம்; தரவு இடப் பெயர்வு நேரம் : ஒன்றை இடமாற்ற எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அல்லது ஒரு வட்டு ஒன்றின் வழியில் படிக்கும் அல்லது எழுதும் தலைப்பகுதி முறையாகப் பொருட்தப்பட்டதும் எடுத்துக் கொள்ளும் நேரம்.
data name : தரவு பெயர் : மாறக் கூடியதன் பெயர், தரவு தரவு மடிப்பீடு ஒனறைக் காடடக் கூடியது. எடுத்துக்காட்டு 3. 14159-க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது.
data network : தரவு இணையம் : தரவுகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம்.
data, numeric : எண்வகைத் தரவு.
data organization : தரவு அமைப்பகம் : தரவுகளை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்தரம் உண்ரக்கூடிய வடிவத்திற்க்கு மாற்றுதல்.
data origination : தரவுத் தோற்றம் : தரவை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உரைக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல்.
data output & presentation : தரவு வெளியீடு மற்றும் சமர்ப் பித்தல்.
data packet : தரவு சிப்பம் : தரவு வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்க்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும்.
data pen : தரவு பேனா ; பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம்.
data phone : தரவு தொலைபேசி : AT&T நிறுவனத்தின் வணிக இலச்சினை. பெல் முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தரவுகளை அனுப்பவும் பெறவும் பயன் படுத்தப்படுகிறது.
data planning : தரவு திட்டமிடல் : தரவு ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தரவு ஆதாரத்திற்காக ஒர் ஒட்டு மொத்தத் தரவு கொள்கையினை வகுப்பதையும், தரவு கட்டமைப்பை உருவாக்குவதையும் இது உள்ளடக்கும்.
data plotter : வரைவு பொறி.
data point : தரவு முனை : புள்ளி வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரை படத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் தரவு மையம் ஆகும்.
data preparation : தரவு தயாரிப்பு : தரவுகளை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல்.
data preparation device : தரவு தயாரிப்பு கருவி : கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தரவுகளைச் சேகரித்து மாற்றும் கருவி.
data privacy : : தரவு ரகசியம் : தரவு கமுக்கம்; தரவுத் தனி மறைவு.
datapro : டேட்டா புரோ : கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங் வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியிட்டு நிறுவனம்.
data processing : தரவு செயலாக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தரவில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் 2. மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தரவுத் தயாரிப்புக் கருவியின் பணிகள். 1. பயனாளருக்குப் பயனுள்ள தரவுகளை வழங்க தரவுகளில் செய்யப்படும் பணிகள்.
data processing, automatic : தானியங்கு தரவு செயலாக்கம்.
data processing centre : தரவு தயாரிப்பு மையம் : தரவுகளைப் பெறவும் மனிதர்களின் நிரல்களுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம் தரவு தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவடிக்கை மையம் என்றும் கூறுவதுண்டு.
data processing, commercial : வணிகத் தரவுச் செயலாக்கம்.
data processing curriculum : தரவுத் தயாரிப்புக் கல்வி : பள்ளி அல்லது கல்லூரி ஒன்று வழக்கமாக வழங்கும் வகுப்புக் கல்வி. இக்கல்வி பயன்படுநிரல் தொகுப்புகளைக் கையாளவும், முறைமை ஆய்வாளராகப் பணிபுரியவும், உள்ளிடு நிலையிலான பணிகளைச் செய்யவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனம்.
data processing cycle : தரவுத் தயாரிப்புச் சுழல் : தரவுச் செயலாக்கச் சுழல் உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங் கிணைந்த பணிகள்.
data processing department : தரவுச் செயலாக்கத் துறை.
data processing, electronic : மின்னணு தரவுச் செயலாக்கம்.
data processing management : தரவுத் தயாரிப்பு நிர்வாகம் : தரவுத் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான கருவிகளை நிர்வகித்தல், இந் நிர்வாகத்தில் திட்டமிடல், கட்டுப்பாடு, செயல்பாடு ஆகியன. ஏற்கப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில் மற்ற நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் திறனே இதற்கும் தேவைப்படுகிறது.
data processing manager : தரவுச் செயலாக்க மேலாளர்.
data processing system : தரவுத் தயாரிப்பு முறைமை : தரவுச் செயலாக்க அமைப்பு : தரவுத் தயாரிப்பு இணைப்பு, வன்பொருள் மென்பொருள், உழைப் பவர், தரவுகளை ஏற்றல், திட்டப்படி அதனைத் தயாரித்தல், மற்றும் விரும்பும் முடிவுகளைத் தயாரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு.
data processing technology : தரவுத் தயாரிப்பு தொழில் நுணுக்கம் : தரவுச் செயலாக்கத் தொழில் நுட்பம் தரவுகளைக் கையாளு வதற்கான அறிவியல்.
data processor : தரவுத தயாரிப்புக் கருவி : தரவுகளின் மீதான செயல்பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக் கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி. data propagator : தரவு பரப்பி : DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது.
data protection தரவுப் பாதுகாப்பு : தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்.
Data Protection Act : தரவு பதுகாப்புச் சட்டம் : இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தரவுகளை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தங்களைப் பற்றிய கோப்புகளைப் பார்வையிடுவதற்குத் தனிமனிதர்களுக்கு உரிமையுண்டு. காவல் மற்றும் மருத்துவத்துறை பதிவேடுகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. தவறான தரவுகளைக் கொண்ட ஒரு பதிவேட்டினை மாற்றும்படி ஆணையிடப்படலாம்
data protection register : தரவுக்காப்புப் பதிவேடு.
data purification : தர்வுத் தூய்மையாக்கம் : தரவுகளின் செல்லும் தன்மையை உறுதிப் படுத்தும் செய்முறை.
data range properties : தரவு எல்லைப் பண்புகள்.
data rate : தரவு வேக விகிதம் : தரவுகள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும்.
data, raw : செப்பமிலாத் தரவு.
data record : தரவு ஆவணம் : ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறு களைப்பற்றிய தரவுத் தொகுப்பு, தரவு கோப்பு ஒன்றின் பகுதி.
data reduction : தரவு இறுக்கம் : தரவுக் குறைப்பு : வகை செய்யப் படாத தரவுகளைப் பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர் செய்தல், வகைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
data representation : தரவு உருவகிப்பு.
data resource management : தரவு ஆதார மேலாண்மை : ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் தள நிருவாகம், தரவு நிருவாகம், தரவு திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள்.
data scope : தரவு காட்டி : தரவு காட்ச்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தரவுகளின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது.
data security : தரவு பாதுகாப்பு : தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தரவுகள் அழிந்து விடாமலும், வெளிப்படுத்துல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்பட மேலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நுலகம், பதிவு நாடா நூலகம் ஆகியவற்றையும் காண்க.
data security officer : தர்வுக் காப்பு அலுவலர்.
data segment : தரவுக் கூறு : கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி.
data service unit : தரச் சேவை அலகு.
data set : தரவுத் தொகுப்பு : தரவுத் தொகுதி : 1. தாவுத் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக் கூடிய வடிவத்துக்கு தரவுகளை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தர்வுகளை அதன் பழைய வடிவத்திற்க்கு மாற்றுகின்றது. அதனால் கணினி அல்லது பிற எந்திரங்களுக்கு அந்தத் தரவுகள் ஏற்புடையவை ஆகின்றன. 2. தொடர்புடைய தரவு வகைகளின் தொகுபபு, குறிப்பாக தொடர்புடைய ஆவணங்களின் தொகுப்பு, கோப்பு எனப்படும்.
data set control block : தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி : ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தரவு தொகுதியின்அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி. data set label (DSL) : தரவுத் தொகுதி முகப்புச்சீட்டு (டிஎஸ் எல்) : தரவுத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு அதன் பெயர், வடிவளவு, எழுதப்படிக்க வசதிகள், சேமிப்பகத்தில் அதன் அமைவிட எல்லைகள் போன்ற விவரங்களை கொண்டுள்ள முகப்பச் சீட்டு .
data sharing : தரவு பகிர்வு : கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தரவுகளைப் பெறுவதற்கான திறன்.
data sheet : தர்வுத் தாள் : உள்வீட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சு செய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம்.
data sheet view : தரவுத் தாள் தோற்றம்.
data signai : தர்வௌக் குறிப்பு : ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தரவு (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின்விசை அல்லது ஒளி).
data sink : தரவு சேமிப்புக் கலன் : தரவுகளை அனுப்பும் கருவி ஒன்றின் வழியாக அனுப்பப் படும் சமிக்கைகளை ஏற்கக் கூடிய பதிவுக் கருவி அல்லது எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கும் கருவி.
data source : தரவு ஆதாரம் : தரவு அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி.
data station : தரவு நிலையம்.
data storage : தர்வுச் சேமிப்பகம். தரவு தேக்ககம்.
data storage device : தரவுத் தேக்கக் கருவி : தரவு சேமிப்புக் கருவி : ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை
data storage media : தரவு சேமிப்பு ஊடகம்.
data storage techniques : தரவுத் தேக்க நுட்பங்கள் : தரவு சேமிப்பு உத்திகள் : தரவு கோப்புகளை சேமிக்க, ஆனைத்தொகுப்பு ஒன்றில் கையாளப்படும் உத்திகள்.
data store tier : தரவுச் சேப்பிப்பு அடுக்கு.
data stream : தரவு ஓடை : ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தரவு வழி ஒன்றின் மூலமாக அனுப்பப்படும் தொடர் வரிசைத் தரவு.
data structure : தரவு அமைப்பு : தரவு கட்டமைவு தரவு அடிப் படை ஒன்றின் கோப்புகளுக் கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தரவு வகைகளுக்கிடையிலான உறவு.
data switch : தரவு விசை : ஒர்தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிற விசைப் பெட்டி எடுத்துக்காட்டு : பன் முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறது. இதனைக் கையாலோ, தானியங்கு விசையினாலோ செய்யலாம்.
data table : தரவு அட்டவணை.
data tablet : தரவுப் பலகை : வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி.
data terminal : தரவு முனையம் : கணினி முறைமை ஒன்றில் தரவுத் தொடர்பு இணைப்பில் தரவுகளை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம்,
data terminal equipment : தரவு முனையச் சாதனங்கள் : ஒரு முனையத்திலிருந்து தரவை அனுப்புவதற்கு உதவுவதற்குத் தேவையான சாதனம். எடுத்துக் காட்டு : தரவு வட்டு, தரவு ஆதாரம்.
data terminator : தரவு முடிவுறுத்தி : உட்பாட்டுத் தரவுகள் முடிவுற்று விட்டன என்பதைக் குறித்துக் காட்டும் ஒரு தனி வகைத் தரவு சாதனம். இதனைக் காவல் சாதனம் (Sentinal) அல்லது (Trailer) மோப்பச் சாதனம் என்றும் கூறுவர்.
data, test : சோச்தனைத் தரவு.
data traffic : தரவுப் போக்குவரத்து : கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்) அனுப்பப்படுகிறது என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றது.
data transaction : தரவுப் பரிமாற்றம்.
data transfer : தரவு மாற்றம் : கணினி அமைவுக்குள் தரவுகளை இடமாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தரவுகள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இடமாற்றம் என்பது உண்மையில் ஒரு படியெடுப்பு பணியேயாகும்.