கணினி களஞ்சிய அகராதி-2/T

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

digital data transmission : இலக்க முறை தரவு அனுப்புதல் : கணினி சாதனம் உருவாக்கிய மூல மின்னணு சமிக்ஞையை அனுப்புதல். எல்லா வழித் தடங்களும் இலக்கமுறை திறன்கள் உடையவை அல்ல.

digital display : இலக்கமுறைத் திரைக்காட்சி;எண்ணுருத் திரைக் காட்சி : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ்படத் திரைக் காட்சி சாத்தியமாகும் காட்சி முறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ (Colour Graphics Array), இஜிஏ (EGA-Enhanced Graphics Array) ஆகியவை இவ்வகை யைச் சேர்ந்தவை.

Digital Equipment Corporation : DEC;டிஜிட்டல் எக்விப்மென்ட் கார்ப்ப ரேஷன்;டிஇசி : சிறு கணினி அமைப்புகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

digital image processing : இலக்கமுறைப் படிமச் செயல் முறை.

digital imaging : இலக்கமுறைப் படிமமாககல.

digital line : இலக்க முறை இணைப்புத் தடம்;எண்ணுரு வழித்தடம் : இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு சமிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திறன் மிகுப்பு நிலையங்கள் (Repeaters) பயன்படுத்தப்படுகின்றன.

digital linear tape : இலக்கமுறை வரிசை நாடா;எண்ணுரு வரிசை முறை நாடா : ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது. பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தரவு பரிமாற்றம் இயலும்.

digital mail : இலக்கமுறை மின்னஞ்சல்.

digital micromirror display : இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி; எண்ணுரு நுண்ணாடித் திரைக்காட்சி : டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0. 002 மி. மீ. க்கும் குறைவான அகலமுள்ள நுண் ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக்கும். இதனைத் திருகி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச் செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழு வண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். l, 920 x 1, 035 (1, 987, 200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.

digital multipliear : இலக்கமுறை பன்முகப் பெருக்கி.

digital optical recording : இலக்கமுறை ஒளிவப் பதிவாக்கம்.

digital paper : இலக்கக் காகிதம் : அழித்திட முடியாத சேமிப்புப் பொருள். இதனை ICI மின்னணுவியல் நிறுவனம் தயாரித்துள்ளது. இது நாடா மற்றும் வட்டு ஆவணக்காப்பகச் சேமிப்புப் பொருளாகப் பயன் படுகிறது. இது, ஒரு பிரதி பலிப்புப் படுகைப் பூச்சுடைய ஒரு பாலிஸ்டர் படலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் உச்சியில் அகச்சிவப்பு ஒளிக்குச் செயலுணர்வுடைய சாயப் பாலிமர் படலம் ஒட்டப்பட்டிருக்கும்.

digital PBX : இலக்க அஞ்சல் பெட்டி : ஒரு தனியார் கிளைப் பரி மாற்றமைவு. இது, மனிதர் உதவியில்லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தரவு அனுப்பீடுகள் செய்யலாம். உள்ளுர் தரவுப் மாற்றங்களுக்கு அதிர்வினக்கிகளும், அதிர்விணக்க நீக்கிகளும் (Modems) தேவையில்லை.

digital photography : இலக்கமுறை ஒளிப்படக்கலை;எண்ணுரு ஒளிப் படவியல் : இலக்க முறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன் படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத் திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபடடது. ஒர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்கமுறை ஒளிப் படக் கருவியில் பயன்படுத்தப் படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவு செய்கிறது.

digital plotter : இலக்கமுறை வரைவி : வரைபடமுறைகள், வரி ஒவியங்கள் மற்றும் பிற படங்களை வரைவதற்கு மைபேனா அல்லது பேனாக்களைப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம். digital recording : இலக்கமுறை பதிவு செய்தல் : காந்தப் பதிவு ஊடகத்தில் நுட்பமான புள்ளிகளாக தகவலைப் பதிவு செய்யும் நுட்பம்.

digital repeater : இலக்கமுறை மீட்டுருவாக்கப் பொறி : இலக்கமுறை துடிப்புகள் நீண்ட கடத்திகள் வழியாகச் செல்லும் போது பலவீனமடையும் என்பதற்காக அவற்றை மீண்டும் உருவாக்க செய்தி தரவுத்தொடர்புகளின் பாதையில் அமைக்கப்படும் சாதனம்.

digital research : இலக்கமுறை ஆராய்ச்சி : (இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்சியில் முன்னணியில் திகழ்ந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் GEM பலகணிச் சூழல், FlexOS இயல்புநேரச் செயற்பாட்டு முறை, DR DOS ஆகியவை முக்கியமானவை. இந்த நிறு வனத்தை 1991இல் நோவல் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

digital signal : இலக்கமுறை சைகை;இலக்கமுறை சமிக்கை : கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு பைட் அல்லது ஒரு எடடியல் எழுத்து உருவாகிறது. இலக்கமுறை சமிக்கையை அலைவு முறைக்கு மாற்றவும், அலைவு முறையிலிருந்து கணினி புரிந்து கொள்ளும் இலக்க முறைக்கு மாற்றவும் அதிர்விணக்கி (மோடெம்) பயன்படுத்தப்படுகிறது.

digital signal processing : இலக்கமுறைக் குறிப்பு செயலாக்கம்.

digital signature : மின்னணுக் கையொப்பம்;இலக்கமுறைக் கையொப்பம்; எண்ணுருக் கையொப்பம் : மின்னணு ஆவணங்களில் பயன்படுத்தப் இரகசியக் குறியீட்டு முறைக் கையொப்பம். ஒருவர் தானே உரிமைச் சான்றளிக்கும் முறையாகும். மறையாக்கத்தையும் (encryption), இரகசிய சான்றுறுதிக் குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டது.

digital simultaneous voice and data : இலக்க முறையில் ஒரே நேரத்தில் குரலும் தரவும் மல்ட்டிடெக் சிஸ்டம்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள ஒரு நவீனத் தொழில் நுட்பம். ஒற்றைத் தொலைபேசித் தடத்தில் உரையாடலையும், தகவலைப் பரிமாற்றத்தையும் இயல்விக்கும் தொழில்நுட்பம். குரலை அனுப்பவேண்டிய தேவை எழும்போது பொதித் தகவல் பரிமாற்ற முறைக்கு மாறிக் கொள்ளும். இலக்க முறையாக்கப்பட்ட குரல் பொதிகள், கணினித் தரவு மற்றும் கட்டளைப் பொதிகளோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

digital sorting : இலக்கமுறை பகுத்தல்;இலக்கமுறை வரிசையாக்கம் : பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளை வரிசைப்படுத்துவதிலும், தரவுகளின் மதிப்பாலும் இடைப்பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக எழுத்துகளின் எண்ணிக்கை அமையும முறை.

digital speech : இலக்கமுறைப் பேச்சு : பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன் நிலை. ஒவ்வொரு அலகும் உரத்த ஓசை, பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்கமுறைக் குறியீடாக மாற்றப்படும்.

digital subscriber line : இலக்கமுறை வாடிக்கையாளர் இணைப்பு : இது ஒர் ஐஎஸ்டிஎன் பிஆர்ஐ இணைப்பு அல்லது தடம். வாடிக்கையாளரின் வளாகம் வரை இலக்கமுறைத் தகவல் பரிமாற்றம் இயலும், முந்தைய தொலைபேசித் தடத் தகவல் பரிமாற்றத்திலிருந்து மாறுபட்டது. சுருக்கமாக டிஎஸ்எல் (DSL) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வழித்தடத்தில் இணைய இணைப்புப் பெற்றால் 24 மணி இணையத்தகவல் பரிமாற்றம் இயலும். அதிவேகத் தகவல் பரிமாற்றமும், குறைந்த நேரத்தில் அதிக அளவு பதிவேற்றமும் பதிவிறக்கமும் இயலும்.

digital switching (DVI) : இலக்கமுறை இணைப்பாக்கம்.

digital telephone : இலக்கமுறைத் தொலைபேசி.

digital to analog converter- D-A Converter : இலக்க முறையிலிருந்து அலைவு முறைக்கு மாற்றும சாதனம் : நுட்பமான இலக்கமுறை எண்களை தொடரலைவான சமிக்கைகளாக மாற்றப் பயன்படுத்தப் எந்திர அல்லது மின்னணுச் சாதனங்கள்.

digital tracer : இலக்க வரைபடக்கருவி : படங்களையும், வரை கலைகளையும், வரைபடம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகைக் கீலுடைய கரம். இது கணினிக்குத் தரவுகளை அனுப்புகிறது.

digital transmission : இலக்கமுறை அனுப்பீடு : ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு : ஒரு உள்ளுர்ப் பகுதி இணையம்.

digital versatile disk : இலக்கமுறைப் பல்திறன் வட்டு.

digital video disc : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு;எண்ணுரு நிகழ்பட வட்டு : அடுத்த தலைமுறை ஒளிவட்டுத் சேமிப்பகத் தொழில்நுட்பம். ஒரு குறுவட்டில் கேட்பொலி, ஒளிக்காட்சி மற்றும் கணினித் தரவு ஆகியவற்றை ஒருசேரச் சேமித்து வைக்க இத்தொழில்துட்பம் உதவுகிறது. வழக்கமான குறுவட்டை விட அதிகமான தரவுகளை ஒரு இலக்கமுறை ஒளிக்காட்சி குறுவட்டு சேமிக்க முடியும். ஒருபக்க ஒரடுக்கு வட்டில் 4. 7 ஜி. பி வரை தரவைச் சேமிக்க முடியும். ஒருபக்க ஈரடுக்கு வட்டில் 8. 5 ஜி. பி வரை சேமிக்கலாம். இருபக்க -ஈரடுக்கு வட்டில் 17 ஜி. பி வரை சேமிக்கலாம். இந்த வட்டுகளைப் படிக்க தனியான இயக்ககம் (Drive) உண்டு. இந்த இயக்ககம் (Drive) பழைய லேசர் வட்டுகள், குறுவட்டுகள், கேட்பொலிக் குறுவட்டுகள் ஆகிய அனைத்தையும் படிக்கும். டிவிடி (DVI) என்பது தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

digital video disc-erasable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு அழித்தெழுத முடிவது;எண்ணுரு நிகழ்பட வட்டு-அழித்தெழுத முடிவது : பயன்பாட்டுக்கு வரப் போகிற ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை நுகர்வோர் இந்த வட்டில் உள்ள விவரங்களை பலமுறை அழித்து மீண்டும் எழுதிக் கொள்ள முடியும்.

digital video disc-recordable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது;எண்ணுரு நிகழ் பட வட்டு-எழுதமுடிவது : பயன் பாட்டுக்கு வரப்போகின்ற, இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் ஒரு முறை எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-ROM : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு-படிக்க மட்டும்; எண்ணுரு நிகழ் பட வட்டு-படிக்க மட்டும் : இப்போது பயன்பாட்டில் உள்ள ஒளிக்காட்சி வட்டு. இதிலுள்ள விவரங்களைப் படிக்க மட்டுமே முடியும். அழித்தெழுத முடி யாது. 4. 7 மற்றும் 8. 5 ஜி. பி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒருபுறம் ஒரடுக்கு, ஒருபுறம் ஈரடுக்கு, இருபுறம் ஒரடுக்கு, இருபுறம் ஈரடுக்கு என நான்கு முறைகளில் இந்த வட்டில் தரவுகள் பதியப்படுகின்றன. அதிக அளவாக 17 ஜி. பி வரை தரவு பதியமுடியும்.

Digital Video Interactive (DVI) : இலக்கமுறை ஒளிக்காட்சி உறவாடல்; எண்ணுரு நிகழ்பட ஊடாடல் : ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து, நுண்கணினிப் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்காக உருவாக்கிய, இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தரவு சுருக்க முறை. வன்பொருள், மென்பொருள் இணைந்த ஒர் அமைப்பு.

digit, binary coded : இருமக் குறிமுறை இலக்கம்.

digit, check : சரிபார்ப்பு இலக்கம்.

digitize : இலக்கமாக்கு : பட ஒவியம் போன்ற வரைபட முறைத் தோற்றத்தை இலக்க முறை குறியீடு செய்து வரை முறைப் படமாக மாற்றுதல்.

digitized type : இலக்கமாக்கிய எழுத்துரு : கணினி படிக்கத்தக்க வடிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துரு. இது புள்ளிகளின் அல்லது கோடுகளின் ஒரு தொகுதியைக் கொண்டது.

digitizer : இலக்கமாக்கி : பேனா போன்ற எழுது கருவி மூலமோ அல்லது பிற சுட்டுவி (கர்சர்) மூலமோ இயக்குபவர் எழுத உதவும் தட்டையான பலகையைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். இயக்குபவர் எழுதும் வடிவங்கள் கணினி அமைப்பின் நினைவகத்தில் தானாகப் பதிவாகி செயலாக்கம் பெறும்.

digitizing : இலக்கமுறை ஆக்கல் : படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினி அமைப்பு செயலாக்கம் செய்யக்கூடிய இலக்க முறை தரவுகளாக மாற்றுதல்.

digitizing tabtet : இலக்க முறையாக்கும் பலகை : வரைமுறை மற்றும் படத் தரவுகளை கணினியில் பயன்படுத்தும் இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளீட்டுச் சாதனம். இதில் ஒரு மேல் தகடும் அதன் அடியில் மெல்லிய கம்பித் தொகுதிகளும் இருக்கும். digit, octal : எண்ம இல்க்கம்;எட்டியல் இலக்கம்.

digit place : இலக்க இடம் : ஒரு எண்ணைக் குறிப்பிடும் சொல் இடம்பெற்றுள்ள இலக்கத்தைக் குறிப்பிடும் இடக்குறிப்பு எண் அமைப்பு, அமைப்பில் 10-களின் இடம், ஒன்றுகளின் இடம் போன்றவை உள்ளன.

digit position : இலக்கு நிலை.

digit punch : இலக்கத் துளை.ஒரு 80. பத்தி அட்டையில் எந்த ஒரு வரிசையிலும்'0'முதல்'9'வரையில் இலக்கத்திற்கு இடப்பட்ட துளையின் இடநிலை.

digit punching place : இலக்கத் துளையிடுமிடம்.

digit punching position : இலக்கம் துளையிடும் இடம் : 1, 2, .... 9 என்ற வரிசையில் துளையினைக் குறிப்பிடும் பதின்ம இலக்கத்திற்காக துளையிட்ட அட்டையில் ஒதுக்கப்பட்ட இடம்.

digit, sign : அடையாள இலக்கம்;குறியீட்டு இலக்கம்.

DikuMUD : டிக்குமட் : 1 டச்சு நாட்டில் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பணியாற்றிய இந்து பேரின் டேனிஷ் மொழித் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிக்கு (DIKU) உருவாக்கிய மென்பொருள், பல்பயனாளர் பாழ்பொந்து என்று பொருள்படும் Multi User Dungeon என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கத்துடன் (MUD) சேர்ந்து டிக்குமட் (DIKUMUD) என்றாயிற்று. டிக்குமட் பல்லூடகப் பயன்பாடு உடையது. பொருள் நோக்கிலானது. ஆனால் இவற்றின் இனக்குழுக்கள் (Classes) நிலை நிரல் (Hard code) கொண்டது. பயனாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாது. இந்த மென்பொருளுக்கு உரிமம் பெற்றவர்கள் பணத்துக்காக இதனை விற்பனை செய்ய முடியாது. 2 டிக்கு மட்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கபபடட ஒரு கணினி விளையாட்டும் இதே பெயரில் அழைக்கப் படுகிறது.

dimensjon : பரிமாணம் : ஒரு வரிசையில் உள்ள பொருள்களின் வரிசையமைப்பின் அதிகபட்ச அளவு அல்லது எண்.

dimensional, multi : பன்முகப் பரிமாணம்;பல் பரிமாணம்.

dimensional storage, two : இரு பரிமாணச் சேமிப்பு.

dimensioning : பரிமாணமாக்கல்.

dimmed : மங்கிய தேர்வு;மறுக்கப்பட்ட : வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில் இல்லாமல் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். கருப்புப் பின்புலத்திலுள்ள வெள்ளை எழுத்துகளும் மங்கிய நிலையில் இருக்கும். இவற்றைப் பயனாளர் தேர்வு செய்ய முடியாது. எடுத்துக் காட்டாக, சொல் செயலித் தொகுப்புகளில், உரைப் பகுதி எதையும் தேர்வு செய்யாதபோது Cut Copy என்ற விருப்பத் தேர்வுகள் மங்கிய நிலையில் இருக்கும். அதேபோல, ஏற் கெனவே ஒரு பகுதியை வெட்டியோ (Cut), நகலெடுத்தோ (Copy), இடைச்சேமிப்புப் பலகை (Clip Board) -யில் வைத்திராத போது Paste என்னும் பட்டியல் தேர்வு மங்கலாக இருக்கும்.

dimmed command : மங்கிய ஆணை : ஒரு பட்டியலில் மங்கலாக்கப்பட்டுள்ள ஆணை. தற்போதைக்கு விருப்பத்தேர்வு எதுவுமில்லை என்பதை ஒரு மங்கிய ஆணை கட்டுகிறது. அந்தத் தேர்வினைச் செய்வதற்கு முன்னர் இன்னொரு செயற்பணி வேண்டும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

dimmed icon : மங்கிய உருவம் : மங்கிய கருநிற உருவம். இது, அது குறித்துக்காட்டும் வட்டு, மடிதாள் அல்லது வட்டு ஆவணம் போன்ற பொருள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது, அல்லது வட்டு இயக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என்பதைக் குறிக்கிறது.

DIN connector : டின் இணைப்பான்;டின் இணைப்பி : ஜெர்மன் தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (Deutsch industries Norm-DIN)

டின் இணைப்பி

வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு டின் இணைப்பான்கள் பயன் படுத்தப்படுகின்றன. dingbats : டிங்பேட்ஸ் : எழுத்துருவாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக் குறியீடுகளின் தொகுதி'இன்டர்னேஷனல் டைப்ஃபேஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், கட்டுக் கைகள், நட்சத்திரக் குறிகள், வட்டமிட்ட இலக்கங்கள் அடங்கியிருக்கும். இவை"ITC Zapf Dingbats"என்று அழைக்கப்படுகின்றன.

dinousaurs : டினோசார்ஸ் : 'கம்மோடோர்-64'என்ற இல்லக் கணினியில் பயன் படுத்துவதற்கான ஒரு மென்பொருள்.

diode : இருமுனையம் : ஒரு திசையில் மட்டும் மின் ஒட்டத்தைத் தடுத்து அடுத்த திசையில் மின்ஒட்டத்தை அனுமதிக்கும் மின்னணுச் சாதனம்.

diode transistor logic : டயோடு டிரான்சிஸ்டர் லாஜிக்;இரு முனைய மின்மப்பெருக்கி இணைப்புமுறை : ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்கற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

diogonal : மூலைவிட்டம்.

DIP : டிஐபி : Dual Inline package என்பதன் குறும்பெயர்.

dipole : இருதுருவம் : சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ள நேர் எதிர்மின் செறிவுகள். இருவேறு எதிரெதிர் காநதத துருவங்கள்.

DIP switches : டிஐபி நிலை மாற்றிகள் : பல கணினிகளிலும் வெளிப்புறப் பொருள்களிலும் காணப்படும் சிறிய நிலை மாற்றிகள். சாதனங்களை நிலை நிறுத்தவும், சரிசெய்யவும் பயன்படுகிறது.

dir : (டிர்) : டாஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளை. இக் கட்டளை இருப்புக் கோப்பகம் அல்லது கோப்புறையிலுள்ள கோப்புகள் மற்றும் உள்கோப்பகங்களின் பட்டியலைத் திரையில் காட்டும். ஒரு குறிப்பிட்ட கோப்பக அல்லது உள்கோப்பகத்தின் உள்ளடக்கத்தையும் உரிய பாதையைக் குறிப்பிட்டு அறிய முடியும்.

direct access : நேரடி அணுகுமுறை;நேர்வழிச் சேர்வு : சுற்றிலும் உள்ள தரவுகளைத் தொடாமல் நேரடியாக, தேவையான தரவுகளை மட்டும் தேடி எடுக்கும் அல்லது தரவுகளை சேமிக்கும் செயல்முறை, வரிசை முறை அணுகுமுறையில் ஒவ்வொரு கோப்பையும் படித்தே செல்லவேண்டியிருக்கும் என்பதால் இது விரைவான முறை.

direct access file:நேர்வழிக் கோப்பு.

direct access processing:நேரடி அணுகல் செயலாக்கம்:நேரடி செயலாக்கம் மற்றும் தற்செயல் செயலாக்கம் போன்றது.

direct access storage:நேர்வழிச் சேகரம்.

Direct Access Storage Device(DASD):நேரடி அணுகல் சேமிப்புச் சாதனம்: தகவல் இருப்பிடங்களை நேரடியாக முகவரியிட அனுமதித்து தேவையான தகவலை நேரடியாக எந்திர முறையில் அணுக அனுமதிக்கும் சேமிப்பு ஊடகம்.

direct address:நேரடி முகவரி:ஒரு இயக்கப்படும் ஒரு பொருளின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் முகவரி.

direct cable connection:நேரடி வட இணைப்பு:இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ(I/O)துறை வழியாக,இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி,நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல்.பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு வெற்று இணக்கி வடம்(NULL Modem Cable)என்னும் சாதனம் தேவைப்படும்.

direct connect modem:நேரடி இணைப்பு அதிர்வினக்கி(மோடெம்):தரவுப் பரப்புதலுக்குப் பயன்படுவதற்காக தொலைபேசியுடன் நேரடியாக இணைக்கப் படும் அதிர்விணக்கி(மோடெம்).

direct conversion:நேரடி மாற்றல்:ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றி புதிய முறையை மட்டும் செயல்படுத்தும் மாற்றல் முறை.

Direct Coupled Transister logic;DCTL:நேரடி இணைப்பு மின் பெருக்கி அளவை:மின் பெருக்கிகளை மட்டுமே செயல்படும் பொருள்களாகக் கொண்ட மின் இணைப்பு முறைமை.

direct current:நேரடி மின்சக்தி:மின்கலத்திலிருந்து அளிப்பது போன்று ஒரு திசையில் மட்டும் மின்னணுக்களின் ஒட்டம்.

direct data entry:நேரடி தரவுப் பதிவு:நேர்முக முகப்புகள் மூலமோ அல்லது எந்திரம் படிக்கக்கூடிய மூல ஆவணங்கள் மூலமோ கணினியில் நேரடியாக தரவுகளை பதிவு செய்தல். direct data organization : நேரடித் தரவு அமைவாக்கம் : இயற்பியல் தரவு ஊடகத்தினுள் தருக்க முறைத் தரவுக் கூறுகள் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்யப்படுகிற ஒரு தரவு அமைவாக்க முறை. எடுத்துக் காட்டு தருக்கமுறைத் தரவு மற்றும் பதிவேடுகளை ஒரு காந்த வட்டுக் கோப்பின் மேற்பரப்பில் குறிப்பின்றிப் பகிர் செய்தல். இதனை 'நேரடி அமைவாக்கம்' (Direct organization) என்றும் அழைப்பர்.

direct digital colour proof : நேரடி இலக்கமுறை வண்ண மெய்ப்பு.

direct distance dialing : நேரடி தொலைதூர அழைப்பு.

direct file organization : நேரடி கோப்பு அமைவாக்கம் : ஒவ்வொரு பதிவேடுகளையும் தனித்தனியே அணுகக்கூடிய அமைவாக்கம்.

direct file processing : நேரடிக் கோப்புச் செய்முறைப்படுத்துதல் : ஒரு பதிவேட்டு விடைக் குறிப்பினைப் பயன்படுத்தி, அப்பதிவேட்டினை நேரடியாக அணுகுவதற்குப் பயனாளரை அனுமதிக்கிற செயல்முறை.

direct input/output : நேரடி உள்ளீடு/வெளியீடு : ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள்.

directive : பொதுஆணை;பணிப்பு.

Direct Memory Access (DMA) : நேரடி நினைவக அணுகல் (டிஎம்ஏ) : மையச் செயலக அலகின் தலையீடு இல்லாமல் உட்புற நினைவகத்திலிருந்து வெளிப்புற சாதனங்களுக்கு தரவுகளை நேரடியாக மாற்றல் செய்யும் முறை.

direct mode : நேரடி முறை.

direct processing : நேரடி செயலாக்கம் : ஒரு கணினி அமைப்பானது, தரவு பெறப்பட்ட உடனேயே அதனை செயற்படுத்துவது. ஒத்தி வைக்கப்பட்ட செயலாக்கத்துக்கு மாறானது. அதில், தரவு, பகுதி பகுதியாக சேமிக்கப்பட்டுப் பிறகு செயலாக்கம் நடைபெறுகிறது.

direct recovery plan : நேரடி மீட்புத் திட்டம்.

direct screen copy device : நேரடித் திரைப்படியெடுப்புச் சாதனம் : முனையத் திரையில் காண்பவற்றை அப்படியே படியெடுக்கும் ஒரு சாதனம். direct search index : நேர் வழித்தேடல் (அட்டவணை).

direct sequence : நேரடித் தொடர் வரிசை : அகலக்கற்றைத் தரவு தொடர்பில், பண்பேற்றத்தின் ஒரு வடிவம். தொடர்ச்சியான இருமத் துடிப்புகளால் சுமப்பி அலை பண்பேற்றம் செய்யப்படுகிறது.

direct X : டைரக்ட் எக்ஸ் : கணினியின் ஒலி மற்றும் வரைகலைக்கான வன்பொருள் சாதனங்களை, ஒரு பயன்பாடு நேரடியாக அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித்தரும் ஒரு மென்பொருள். இது விண்டோஸ் 95/98-ல் செயல்படக் கூடியது.

directory : விவரப்பட்டியல்;தரவுக் குவியல்;அடைவு : 1. மென் பொருளை பல தனித்தனி கோப்புகளாகப் பிரித்து, அந்தக் கோப்புகளின் இருப்பிடத்தைக் கண்டுரைக்க தகவல் பட்டியலைக் கொண்டுள்ள ஒரு சாதனம். 2. சேமிப்பு ஊடகத்தில் உள்ள அனைத்துப் பெயர்கள் மற்றும் இடங்களைக் கொண்ட, எல்லா கோப்புகளையும் உள்ளடக்கிய பட்டியல் கோப்பு.

Directory Access Protocol : கோப்பக அணுகு நெறிமுறை : எக்ஸ் 500 கிளையன் (Client) களுக்கும் வழங்கன் (Server) களுக்கும் இடையே நடை பெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை.

directory management : விவரக்குறிப்பேட்டு மேலாண்மை : ஒரு வட்டில் விவரக்குறிப்பேடுகளைப் பேணிக் கட்டுப்படுத்துதல். இது பெரும்பாலும் பட்டி யலிடும் மென்பொருளைக் குறிக்கிறது. இது, நிரல்களைப் பதிவு செய்வதை விடப் பயன்பாட்டுக்கு எளிதானது.

directory replication : கோப்பக நேர்படியாக்கம் : ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறு களப் பகுதியிலுள்ள இறக்கு மதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்களிலோ பணிநிலையங் களிலோ நகலெடுத்து வைத்தல். இவ்வாறு நேர்படியாக்கம் செய்வதில் நன்மை உள்ளது. கோப்புகள் மற்றும் கோப்பகங்களின் ஒரே மாதிரியான தொகுதிகளை பல்வேறு கணினிகளில் பதிவுசெய்து வைத்துப் பராமரிக்கும் பணியை நேர்படியாக்கம் எளிமையாக்குகிறது. மூலத் தொகுதியின் ஒரேயொரு படியை மட்டும் பராமரித்தல் போதும். directory service : கோப்பக சேவை : பிணையத்திலிருக்கும் ஒரு சேவை. ஒரு பிணையத்தில் பணிபுரியும் பயனாளர் ஒருவர் பிற பயனாளர்களின் அஞ்சல் முகவரிகளை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரு பயனாளர், பிணையத்திலுள்ள புரவன் கணினிகளையும் (hosts) சேவைகளையும் அறிந்து பயன்பெற உதவுகிறது.

directory structure : விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு : துணைச் சேமிப்புச் சாதனங்களில் பல்வேறு விவரக் குறிப்பேடுகளைப் படியடுக்கு முறையில் வரிசைப்படுத்துதல், இந்த விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு, விவரக் குறிப்பேடு களுக்கிடையிலான உறவுநிலைகளைக் குறிக்கிறது. பல்வேறு மென்பொருளைப் பயன்பாடுகள் விவரக்குறிப்பேட்டுக் கட்ட மைவினைத் திரையில் அச்சு நகலாகக் காட்டுகின்றன அல்லது வன்படியாகத் தருகிறது.

directory tree : விவரக் குறிப்பேட்டு மரம் : ஒரு வட்டினுள் பல்வேறு தகவல் குறிப்பேடுகளையும் துணைக் குறிப்பேடுகளையும் காட்டுகிற படிமுறை உருக்காட்சி.

dirty : அழுக்கு;மாசு : தரவு தொடர்புத் தடத்தின் தரத்தைக குறிக்கப் பயன்படும் சொல். அதிகப்படியான இரைச்சல் காரணமாக தரவு சமிக்கையின் தரம் தாழ்ந்து போதல்.

dirty bit : அழுக்கு பிட்;மாசுத் துண்மி : முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக் கொண்டே முதன்மை நினைவகத்திலுள்ள தகவலும் மாற்றம் செய்யப்படுகின்றது.

dirty power : சீரற்ற மின்விசை : அழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஒசை, இறுக்கம், பெருக்கம் போன்ற சீரற்ற மாற்று மின்னோட்ட விசை. இது அலுவலகத்திலுள்ள மின் பயன்பாட்டு அல்லது மின்னணுவியல் சாதனத்தினால் உண்டாகிறது.

dirty ROM : அழுக்கு ரோம்;அழுக்குறு அழியா நினைவகம் : படிக்க மட்டுமே முடிகிற (திருத்த/அழிக்க முடியாத) நினைவகத்தை ரோம் என்கிறோம்.

disable : செயலற்றதாக்கல்;முடக்கமாதல் : இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல்.

disabled folders : செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள் : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப் பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (Extension Manager) எனப்படும் மென்பொருள் கருவி கொண்டு கணினி யிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்புகளையும் இக்கோப்புறைகள் கொண்டுள்ளன. செயல்முடக்கப்பட்ட கோப்புறையில் தற்போதுள்ள உறுப்பு கள், கணினியை இயக்கும் போது தொடக்கத்தில் நிறுவப் படுவதில்லை. ஆனால், அதன் பிறகு நீட்டிப்பு மேலாளர் நிரலால் அவ்வுறுப்புகள், அவற்றின் இயல்பான கோப்புறைகளுக்கு தாமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

disassembler : பிரிக்கும் நிரல் தொடர்;பிரிப்பி : எந்திர மொழிக் குறி யீட்டை ஏற்று பொறிமொழிக் குறியீட்டை உருவாக்குதல்.

disassociate : தொடர்புநீக்கம் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென் பொருளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன் பாட்டுடனும், xls ஆவணங்கள் எக்செல், mdb ஆவணங்கள் அக்செஸ், ppt ஆவணங்கள் பவர்பாயின்ட், . htm ஆவணங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர்பினை மாற்றி முடியும். bmp ஆவணங்கள் பெயின்ட் பயன் பாட்டுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. . bmp ஆவணம் ஒன்றின் பெயர்மீது இரட்டைக் கிளிக் செய்தால், அந்த ஆவணம் பெயின்ட் பயன்பாட்டில் திறக்கப்படும். இதனை மாற்றி, கோரல் பெயின்ட் பயன்பாட்டில் அல்லது பெயின்ஷாப் புரோவில் திறக்கும்படி செய்யலாம்.

disaster dump : அபாய ஏற்பாடு : மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமானால் அதற்கு மாற்றுச் செயல் திட்டம். disaster planning : பேரிடர் திட்டப் பதிகை.

disaster recovery : இடர் மீட்சி : ஒர் இடர்ப்பாட்டிலிருந்து முழுமையான செயற்பாட்டிற்கு மீள்வதற்கான மேலாண்மை உத்தி. (எடுத்துக்காட்டு : நெருப்பு அல்லது தளச் சேதம்). இது, அனைத்தையும் கூடுதல் படியெடுத்து வைத்துக் கொள்வதையும், வேறிடங்களில் சேமித்து வைப்பதையும் உள்ளடக்கும்.

disaster recovery specialist : சேதமீட்புச் சிறப்பாளர்;இடர் மீட்சி வல்லுநர்.

disc : வட்டு : (குறிப்பாக ஒளி வட்டு) : வட்டினைக் குறிக்க Disc, Disk ஆகிய இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. லேசர் ஒளிக்கதிர் மூலம் எழுத/படிக்க முடிகிற, காந்தத் தன்மையற்ற உலோகப் பூச்சுள்ள பிளாஸ்டிக் வட்டுகள் Disc என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. அவையல்லாத ஏனைய வட்டுகள், நெகிழ் வட்டு, நிலை வட்டு, ரேம் வட்டு (நினைவகத்தில் உருவாக்கப்படும் மெய்நிகர் வட்டு) ஆகியவை Disk என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. லேசர் வட்டு, குறுவட்டு, கேட்பொலி/ஒளிக்காட்சி வட்டு, டிவிடி வட்டு ஆகியவை பெரும்பாலும் Disc என்று குறிக்கப்படுகின்றன.

disclaimer : ஒதுங்கல் உரிமைத் துறப்பு : அந்தப் பொருளைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் வணிக இழப்புகளுக்கு விற்பனையாளர் பொறுப்பல்ல என்று பல மென்பொருள்களுடன் வரும் நிபந்தனை.

disconnect : துண்டிப்பு;துணி (த்தல்) : ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல்.

discrete : தனியான : உதிரி எழுத்துகள் அல்லது துண்மிகளைப் போன்ற தனிப்பட்ட பொருட்களால் குறிப்பிடப்பட்ட அல்லது தனிப்பட்ட பொருள்கள் தொடர்பான.

discrete component : தனி உறுப்பு : ஒரே ஒரு செயலை மட்டும் செய்கின்ற மின்சாதனப் பொருள். ஒருங்கிணைந்த மின் சுற்றுக்கு மாறானது.

discrete cosine transform : பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம் : படக்கூறுகள் (Pixels) அலையுருவங்கள் போன்ற தரவுகளை அதிர்வெண் தொகுதியாக மாற்றுகிற படிநிலை முறை. இதில் முதல் அதிர்வெண்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. கடைசி அதிர் வெண்கள் மிகக் குறைந்த பொருள் கொண்டவை.

discrete device : பிரிநிலைச் சாதனம் : ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி.

discrete multitone : தொடர்சியற்ற பல்தொனி : தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல் வரை அனுப்ப, இத் தொழில் நுட்பம் வகை செய்கிறது.

discretionary access control : தனிவிருப்ப அணுகுக் கட்டுப்பாடு.

discretionary hyphen : பிரிநிலை ஒட்டுக்குறி : ஒரு சொல்லில் இணைப்புக் குறியிடுவதற்காகப் பயனாளர்குறித்துள்ள இடம். சொல், ஒரக் கோட்டுக்கும் மேலே செல்லுமானால், அது அந்த இடத்தில் பிளவுபடும்.

discussion groups : இணைய விவாதக் குழுக்கள்;இணையக் கலந் துரையாடல் குழுக்கள் : தமக்கிடையே பொதுவான ஆர்வமுள்ள பொருள்பற்றி கணினிப் பிணையத்தில் கலந்துரையாடும் பயனாளர்களைக் குறிக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் பட்டியல், இணையச் செய்திக் குழுக்கள் மற்றும் ஐஆர்சி எனப்படும் இணையத் தொடர் அரட்டை போன்றவற்றைக் குறிக்கவே இப்போது இச்சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

disk : வட்டு;மின்காந்தத் தட்டு : கணினியால் அணுகக்கூடிய தகவல் மற்றும் நிரலாக்கத் தொடர்களை சேமிக்கும் மின்காந்த சாதனம். நிலைத்த வட்டு அல்லது வளையக்கூடிய செயற்கை இழை வட்டுகளின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

disk access : வட்டு அணுகல் : வட்டில் எழுத/படிக்க உதவும் முனை தரவை வட்டில் எழுதவோ படிக்கவோ அணுகுதல்.

disk access time : வட்டு அணுகல் நேரம் : வட்டில் குறிப்பிட்ட ஒன்றின் இருப்பிடம் அறிய தேவைப்படும் நேரம். தேடும் நேரம் என்றும் அழைக்கப் படும். மொத்த அணுகு நேரத்தில் ஒரு பகுதி.

disk array : வட்டு வரிசை : ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள்.

disk back : வட்டுத் தொகுதி.

disk based : வட்டு அடிப்படை : வட்டுகளைச் சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்துகிற கணினிப் பொறியமைவு. வட்டிலிருந்து தரவுகளை மீட்கிற பயன்பாடு. இது, நினைவுப் பதிப்பி அடிப்படையிலிருந்து மாறுபட்டது.

disk buffer : வட்டின் இடைநிலை நினைவகம் : வட்டில் எழுதப்படாத தரவுவை ஒதுக்கி வைக்க கணினியின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி.

disk cache : வட்டுப் பொதியறை : வட்டிலிருந்து தரவுகளைப் படிப் பதற்கான ஒரு இடைநிலை. இது வட்டு அணுகுதலை விரைவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.

disk capacity : வட்டுக் கொள்ளளவு.

disk cartridge : வட்டுப்பொதியுறை : தனியொரு நிலை வட்டினை அல்லது ஒரு செருகு வட்டினைக் கொண்டிருக்கிற அப்புறப்படுத்தத்தக்க வட்டுப் பொதிவுச் சாதனம்.

disk change : EuLG) onOg).

disk change sensor : வட்டு மாற்று உணரி.

disk cleanup : வட்டு செம்மை செய்.

disk, compact : குறுவட்டு.

disk controller : வட்டுக் கட்டுபாட்டுக் கருவி : சைகைகளை மீட்டு, வட்டு இயக்கிக்கு அனுப்புகிற மின்சுற்று வழி. ஒரு சொந்தக் கணினியில், இது ஒரு விரிவாக்கப் பலகை. இது தாய்ப்பலகையிலுள்ள விரிவாக்கப் பள்ளத்தில் பொருந்தச் செய்கிறது. ஒரு வட்டு இயக்கிக்கும் மையச் செயலகத்துக்கும் (CPU) இடையிலான இடைமுகப்பாக உள்ள மின்னணு வியல் சுற்றுநெறி.

disk controller card : வட்டுக் கட்டுப்பாடு அட்டை : வட்டு இயக்கியை கணினியுடனும் அதன் கட்டுப்பாட்டு இயக்கத்துடனும் இணைக்கும் வெளிப் புற மின்சுற்று அட்டை.

disk copy : வட்டுப் படி : ஒரு செருகு வட்டின் உள்ளடக்கங்களை இன்னொரு செருகு வட்டில் படியெடுப்பதற்கான DOS ஆணை. இதில், செருகு வட்டுகள் முழுவதையும் தடவாரியாகப் பயன்படுத்தப்படும் DOS, OS/2 பயன்பாடு. disk copying : வட்டு நகலெடுத்தல் : ஒரு வட்டில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் வேறொரு வட்டிற்கு மாற்றும் செயல்.

disk crash : வட்டுப் பழுது;வட்டுக் கேடு : பயன்படுத்த முடியாத தாகிப்போன வட்டு அலகின் நிலை. வட்டு இயக்கியின் படிக்கும்/எழுதும் முனைக்கும் தட்டின் மேற்பகுதிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதால் இது ஏற்படுவதுண்டு.

disk directory : வட்டு விவரக் குறிப்பேடு : கணினியின் ஒவ்வொரு கோப்பும் அல்லது செயல்முறையும் வட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பட்டியல். விவரக் குறிப்பேடு, பொதுவாக ஒரு வட்டின் தொடக்கத்தில் சில தடங்களில் பதிவு செய்கிறது.

disk doctor : வட்டுப் பொருளறி சாதனம் : ஒரு வட்டில் என்னென்ன சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பயனாளர் ஆராய்ந்தறிய உதவுகிற ஒரு செயல்முறை. ஒரு வட்டு சேதமடையுமானால், அதிலுள்ள மதிப்புமிக்க தரவுகளை மீட்பதற்கு இது பயன்படுகிறது.

disk drive : வட்டு இயக்கி, வட்டு செலுத்தி : கணினி பயன் படுத்துவதற்காக, நினைவகத்தில் வட்டிலிருந்து தரவுகளைப் படிக்கும் சாதனம். கணினியின் நினைவகத்திலிருந்து சேமிப்பதற்காக தட்டில் எழுதவும் செய்யும்.


வட்டு இயக்கி

வட்டு இயக்கி

disk drive controller : வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி.

disk drive, floppy : நெகிழ்வட்டு இயக்ககம்.

disk dump : வட்டுக் குவியல் : அறிக்கை உருவமைவாக்கம் இல்லாமல் வட்டின் உள்ளடக்கங்களை அச்சுப்படியாக எடுத்தல்.

disk duplication : வட்டு பிரதியெடுத்தல்;வட்டு நகலாக்கம் : ஒரு காந்த வட்டில் பதியப்பட்டுள்ள தரவு வேறொரு வட்டுக்கு மாற்றும் செயல் முறை.

disk emulator:வட்டு உரு மாதிரி:ஒரு வட்டு இயக்கியின் திண்மநிலை உருப்படிவாக்கம். இது, மைய முறைகளுக்கும், முனையங்களுக்கும் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது.

disk envelope:வட்டு உறை:செருகு வட்டுகளை கையாளும் போதும் சேமித்து வைக்கும் போதும் பயன்படுத்தும் காகித உறை. வட்டு இயக்கியில் வட்டை துழைப்பதற்குமுன் வெளியே எடுக்கப்பட வேண்டும்.

diskette:டிஸ்கெட்:செருகு வட்டு:நுண் கணினிகள்,சிறு கணினிகளுக்கான குறைந்த விலை,அதிக சேமிப்பு தரும் சாதனம்.

diskette tray:டிஸ்கெட் தட்டு:செருகு வட்டுகளைச் சேமிக்கப் பயன்படும் கொள்ளகம். திறந்தோ மூடியோ இருக்கலாம்.

disk failure:வட்டுச் செயலறவு:ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செயலற்றுப் போதல். இவை, மின் எந்திரச் சாதனங்கள் என்பதால்,வட்டுகள்,வட்டு இயக்கிகள் அனைத்தும் இறுதியில் செயலிழந்து போவது இயற்கையே. ஒரு நிலை வட்டின் சராசரிச் செயலறவு நேர்வு 20,000 மணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

disk file:வட்டுக் கோப்பு:காந்த வட்டில் தங்கி இருக்கும் கோப்பு. ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுத் தொகுதி.

disk format:வட்டின் உருவமைவு:ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: 5.25' 360 KB செருகு வட்டு(எ) 8.89 செ.மீ. 1.4 MB செருகுவட்டு.

disk,hard:நிலைவட்டு.

disk interface:வட்டு இடைமுகம்: 1.வட்டகத்தை(disk drive) கணினியுடன் இணைக்கப் பயன்படும் இடையிணைப்பு மின்சுற்று அமைப்பு. 2. வட்டகங்களைக் கணினியுடன் இணைப்பதற்கென உருவாக்கப்பட்ட தர வரையறை. எடுத்துக்காட்டாக,எஸ்டீ 506 (ST 506) என்பது,நிலை வட்டுகளை கணினியுடன் இணைக்கப் பின்பற்றப்படும் வட்டு இடைமுகத் தர வரையறை ஆகும். disk jacket : வட்டு மேலணி : காகிதம் அல்லது செயற்கை இழையில் செய்யப்படும் வட்டுக்கான நிரந்தர பாதுகாப்பு முனை. வட்டு இயக்கியில் நுழைக்கும்போது உள்ளிட்ட எந்த சமயத்திலும் மேலணியிலிருந்து வட்டு எப்போதும் நீக்கப்படுவதில்லை.

diskless workstation : வட்டிலா வேலை நிலையம் : ஒர் இணையத் திலுள்ள வட்டுச் சேமிப்பி இல்லாத கணினி. அனைத்துச் செயல் முறைகளும், தரவுகளும் இணைய வட்டிலிருந்து மீட்கப் படுகின்றன.

disk library : வட்டு நூலகம் : சுற்றுப்புறக் கட்டுப்பாட்டு சூழ்நிலைகளில் பாதுகாப்பாக வட்டுத் தொகுதிகளை வைத்திருக்கும் தனி அறை அல்லது வட்டுகளின் கோப்பை வைப்பதற்கான இருப்பக வசதி.

disk, magnetic : காந்த வட்டு.

disk management : வட்டு மேலாண்மை : ஒரு நிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உருவமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறுபாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒரு வட்டில் தரவுகளைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்பாக்கக் கட்டமைவு.

disk memory : வட்டு நினைவகம் : சுழலும் வட்டுகளை தற்காலிக நினைவகமாக பயன்படுத்தும் சேமிப்பகம்.

disk mirroring : வட்டுப் பிரதிபலிப்பு : தவறுகை தாங்கும் செயற் பாட்டிற்காகத் தேவைக்கு அதிகமாகவுள்ள தரவுகளைப் பதிவு செய்தல், தரவுகள் ஒரே வட்டில் இரு பகுதிகளில் அல்லது ஒரே பொறியமைவில் இரு தனித்தனி வட்டுகளில் இரு தனித்தனிக் கணினிப் பொறியமைவுகளில் எழுதப்படுகின்றன.

disk operating system : வட்டு இயக்க முறைமை : நிரலாக்கத் தொடர் களை மின்காந்த வட்டுகளில் சேமித்து வைக்கும் இயக்க அமைப்பு. கோப்புகளின் இருப்பிடத்தை அறிதல், கோப்புகளைச் சேமித்துத் திரும்ப எடுத்தல், சேமிப்பகத்தை ஒதுக்குதல், வட்டு சேமிப்பு தொடர்பான பிற கட்டுப்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்வது வழக்கம்.

disk optimiser : வட்டுச் சிக்கனம் : தரவு கோப்புகள் சிதறுவதைக் கண்காணிக்கும் ஒரு பயனிட்டுச்