கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/S

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

S

s-100 bus : எஸ்-100-பாட்டை : இன்டெல் 8080, ஸி.லாக் இஸட்-80 நுண்செயலிகளை அடிப்படையாகக் கொண்ட கணினிகளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட 100 (பின்கள்) இணைப்பூசிகள் கொண்ட பாட்டை வரன்முறை. மோட்டோ ராலா 6800, 68000, இன்டெல் ஐஏபீx86 குடும்ப நுண்செயலிகளைக் கொண்ட கணினிகளும் எஸ்-100 பாட்டையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. தொடக்ககால கணினி ஆர்வலர்களிடையே எஸ்-100 கணினிகள் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கின. அவை திறந்த நிலைக் கட்டுமான அமைப்பைக் கொண்டவை. பயனாளர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட கூடுதல் விரிவாக்கப் பலகைகளைப் பொருத்திக் கொள்வதற்கு இடமளிப்பதாய் அவை விளங்கியதே இதற்குக் காரணம்.

.sa : .எஸ்ஏ : ஓர் இணையதள முகவரி சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Sad Mac : வருத்த மேக், சோக மேக்: ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்க நிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக்குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் செய்தியுடன் தோற்றமளிக்கும்.

safe mode : தீங்கில்லாப் பாங்கு; பாதுகாப்பு பாங்கு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறு சில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும் போதும் இவ்வாறு நிகழும்.

sample : மாதிரி .

sampling synthesizer : மாதிரி கூட்டிணைப்பி; மாதிரி இணைப்பாக்கி : படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம். எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்க முறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல் வேறு இசைத்துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம்.

SAPI : சேப்பி; எஸ்ஏபீஐ : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் பயன்பாட்டுத் தொகுப்புகள் குரலுணர்தல் மற்றும் உரையைப் பேச்சாக மாற்றல் போன்ற வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

saturated mode : பூரிதப் பாங்கு; முற்றுநிலைப் பாங்கு : ஒரு நிலை மாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டியநிலை. இந்த நிலையில் உள்ளீட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

saturation : பூரிதம்; முற்றுநிலை; முழுநிறைவு : 1. ஒரு நிலைமாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்து நிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (field-effect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத் துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக் கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர்.

Save/Save As : சேமி/எனச் சேமி.

Save as HTML : ஹெச்டிஎம்எல் ஆகச் சேமி.

Save as Type : வகையில் சேமி.

save record : ஏட்டைச் சேமி.

save results : விடைகளைச் சேமி.

save workspace : பணிவெளியைச் சேமி.

saving : சேமித்தல்.

.sb : .எஸ்பி : ஒர் இணைய தள முகவரி சாலமன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.sc : .எஸ்சி : ஒர் இணைய தள முகவரி செய்ச்செலீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

scalable parallel processing : அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம்: பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை. அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக்கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

scalar : ஒற்றைமதிப்பு; அளவீடு: அளவுரு : ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தகவல் கட்டமைப்பு போல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறியை இது குறிக்கும். AB என்கிற ஒரு நெறியம், தொடக்கப்புள்ளி இறுதிப் புள்ளிக்கிடையே தொலைவு மற்றும் திசைப்போக்கு ஆகிய இரண்டு விவரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் AB என்று மட்டுமே குறித்தால், தொலைவை மட்டுமே குறிக்கும் ஒர் அளவீடு ஆகும்.

scalar data type: ஒற்றைமதிப்பு தரவு இனம் : இதைவிடப் பெரியது, அதை விடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர்மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம். முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும் எண்ணல் வகை (user defined enumerated type), பூலியன் ஆகிய தரவு இனங்களையும் இந்த வகையில் அடக்கலாம். மிதவைப்புள்ளி எண்களை இந்த வகையில் சேர்ப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றையும் வரிசைப்படுத்த முடியும், ஒப்பிடமுடியும் என்ற போதிலும் தோராயமாக்கல், இன மாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கருத்தில் கொண்டு புறக்கணிப்பாரும் உளர்.

scenaries : சூழ்நிலைக் காட்சிகள்.

schedule : கால அட்டவனை : குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டவாறு செயல்படுத்த கணினியை நிரல்படுத்தல்.

schottky diode : ஸ்காட்கி இருமுனையம் : ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இருமுனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலை மாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு.

sci.newsgroups: அறி.செய்திக் குழுக்கள்; சை.நியூஸ்குரூப்ஸ் : sci. (அறி வியல்) என்று தொடங்கும், யூஸ் நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

scrap : துண்டு; துணுக்கு : கணினித் தகவல் சேமிப்பில், வேறிடம் நகர்த் தவோ, நகலெடுக்கவோ, அழிக்கவோ குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஒரு பயன்பாடு அல்லது ஒரு முறைமைக் கோப்பு.

scratch filter : அழித்தெழுது வடிகட்டி; கீறல் வடிகட்டி.

scratchpad RAM: அழித்தெழுது ரேம்; எழுதுபலகை ரேம்: ஒரு மையச் செயலகம் தற்காலிக தரவுச் சேமிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நினைவகம்.

screen angle : திரைக் கோணம் : நுண்பதிவுப் படத் திரைகளில் படப் புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும்.

screen, display : திரைக்காட்சி.

screen name : திரைப் பெயர் : அமெரிக்க ஆன்லைன் இணையச் சேவையின் பயனாளர் ஒருவர் அறியப்படும் பெயர். திரைப்பெயர் பயனாளரின் உண்மைப் பெயராகவும் இருக்கலாம்.

screen phone : திரைபேசி : தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஒர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித் திரை, ஒர் இலக்கமுறை தொலைநகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற புறச்சாதனங்களை இணைப்பதற்கான துறைகளையும் கொண்டிருக்கும். திரைபேசிகளை குரல்வழித் தகவல் தொடர்புக்குரிய தொலைபேசி போலவும், இணையம் மற்றும் பிற நிகழ்நிலைச் சேவைகளுக்கான கணினி முனையங்கள்போலவும் பயன்படுத்தலாம்.

screen pitch : திரை அடர்வு : கணினித் திரையகத்தில், திரைக் காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத்தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக .28 புள்ளி அடர்வுள்ள திரை .38 புள்ளி அடர்வுள்ள திரையைக்காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்.

scripting language: உரைநிரல் மொழி : ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அல்லது செயல்கூறோடு தொடர்புடைய தனிச் சிறப்பான அல்லது வரம்புறு பணிகளை ஆற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒர் எளிய நிரலாக்க மொழி. பெரும்பாலும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் ஹெச்டிஎம்எல் ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது.

scroll bar : உருள்பட்டை : சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடுக்கி, திரைக்காட்சியில் மேலும் கீழும், பக்கவாட்டிலும் நகர்ந்து, முழுத் தோற்றத்தையும் பார்வையிட முடியும். சுருள் பட்டைகளில் நான்கு பகுதிகள் உள்ளன. இருமுனைகளிலும் முக்கோணப் புள்ளிகள். அதன்மீது அழுத்தினால் ஒவ்வொரு வரியாக நகரலாம். பட்டையின்மீது ஒரு சிறிய பெட்டி. ஏதேனும் குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்தலாம். பட்டையில் பெட்டியில்லா இடத்தில் சொடுக்கி பக்கம் பக்கமாய் நகரலாம்.

scroll bar arrows : உருள்பட்டை அம்புக் குறிகள்.

scroll lock key : சுருள் பூட்டு விசை : ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகைகளில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப்படுத்தும். சிலவேளைகளில் திரையின் உருள்தன்மையைத் தடுக்கும். மெக்கின்டோஷ் விசைப்பலகைகளில் மேல்வரிசையில் பணிவிசைகளுக்கு வலப்புறம் அமைந்திருக்கும். நவீனப் பயன்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த சுருள்பூட்டு விசையைப் புறக்கணிக்கின்றன.

SCSI : ஸ்கஸ்ஸி : சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9.2 (X3T9.2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடைமுகத்துக்கான தர வரையறை, நிலைவட்டுகள், அச்சுப் பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண்கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது.

SCSI bus : ஸ்கஸ்ஸி பாட்டை : ஸ்கஸ்ஸி சாதனங்களிலிருந்து ஸ்கஸ்ஸி கட்டுப்படுத்திக்கு தகவல்களையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் சுமந்துசெல்லும் ஒர் இணைநிலைப் பாட்டை.

SCSI chain : ஸ்கஸ்ஸி சங்கிலி : ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதனமும் [புரவன் தகவியும் (Host Adapter) கடைசி சாதனமும் தவிர) இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கிலி போன்று தோற்றமளிக்கும்.

SCSI connector:ஸ்கஸ்ஸி இணைப்பி: ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தை ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கும் ஒரு வடஇணைப்பி.

கணினி களஞ்சிய அகராதி-2.pdf

ஸ்கஸ்ஸி இணைப்பி

SCSI device :ஸ்கஸ்ஸி சாதனம்: கணினியின் மையச் செயலகத்துடன் தகவல்களையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் பரிமாறிக் கொள்ள ஸ்கஸ்ஸி தர வரையறைகளைப் பயன்படுத்தும் ஒரு புற நிலைச் சாதனம்.

SCSI ID : ஸ்கஸ்லி ஐடி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தைத் தனித்து அடையாளம் காட்டும் குறியீடு. ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனமும் வெவ்வேறு ஸ்கஸ்ஸி ஐடி-க்களைக் கொண்டிருக்கும். ஒரே ஸ்கஸ்ஸிப் பாட்டையில் உச்சஅளவாக எட்டு ஸ்கஸ்ஸி ஐடிக்களை வைத்துக் கொள்ளலாம்.

SCSI network :ஸ்கஸ்ஸி பிணையம் : ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப்பிணையம்போலச்செயல்படும்.

SCSI port :ஸ்கஸ்ஸி துறை : கணினிக்குள்ளேயே இருக்கும் ஒரு ஸ்கஸ்ஸி புரவன் தகவி (Host Adapter) ஸ்கஸ்லித்துறை எனப்படுகிறது. கணினிக்கும் ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாதனங்களுக்கும் இடையே ஒரு தருக்க நிலை இணைப்பைத் (logical connection)தருகிறது .

S.cuve : எஸ் வளைவு.

.sd : .எஸ்டி : ஒர் இணையதள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SDK : எஸ்டிகே : மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி - எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் குறிப்பிட்டவகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நிரல்கள், செயல்கூறுகள், மொழி மாற்றி, நிரல்திருத்தி போன்ற அனைத்துக் கருவிகளும் அடங்கிய மென்பொருள் தொகுப்பு.

SDLC : எஸ்டிஎல்சி : 1. ஒத்திசைத் தகவல் தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture)அடிப்படை யில் செயல்படும் பிணையங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் தகவல் பரப்பு நெறிமுறை. ஐஎஸ்ஓ உருவாக்கிய ஹெச்டிஎல்சி (HighLevel Data Link Control) நெறிமுறையைப் போன்றது. 2. முறைமை உருவாக்க செயல்படுகாலச் சுழற்சி (System Development Life Cycle) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளப்படும். ஒரு மென்பொருளின் தேவை, இயலும் நிலை, செலவு-பலன் ஆய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, உருவாக்கம், பரிசோதனை, நிறுவுகை, பராமரிப்பு, மதிப்பாய்வு போன்ற ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நிலைகள் கொண்ட மென்பொருள் உருவாக்க வளர்ச்சிப்படிகளைக் குறிக்கிறது.

.sc : எஸ்இ : ஒர் இணைய தள முகவரி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.sea : சீ; .எஸ்இஏ : ஸ்டஃப்பிட் (stuftit) என்னும் நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கிய மெக்கின்டோஷ் காப்பக - தானாகவே விரித்துக் கொள்ளும் கோப்பின் வகைப்பெயர் (file extension).

search algorithm : தேடு படிமுறைத் தருக்கம் : ஒரு குறிப்பிட்ட தகவல் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத்தருக்கம்.

search, binary : இருமத் தேடல்

search criteria : தேடு நிபந்தனை; தேடல் கட்டுப்பாட்டு விதி : ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10,000 ரூபாய்க்கு மேல் சம்பளம்பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே "pay>10,000 And Sex is Female" என்பது தேடு நிபந்தனை.

search memory associative storage : தேடல் நினைவக தொடர்புறு சேமிப்பகம்.

search string : தேடு சரம் : தகவல் தளத்தில் தேடப்படுகின்ற ஓர் எழுத்துச்சரம். பெரும்பாலும் அது ஒர் உரைச்சரமாக இருக்கலாம்.

search time : தேடல் நேரம்.

search the web : இணையத்தில் தேடு.

searching word : தேடும் சொல்.

seat1 : இருக்கை1 : இருக்கை அடிப்படையிலான மென்பொருள் உரிமம் வழங்கும் முறையில் ஒரு பணி நிலையம் அல்லது ஒரு கணினியைக் குறிக்கிறது. அதாவது ஒரு கணினிக்கென வாங்கப்படும் ஒரு மென்பொருள் ஒரு கணினியில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

seat2 : இருக்கை2 : ஒரு செருகு வாய்க்குள் செருகப்படும் ஒற்றை உள்ளக நினைவகக் கூறு (Single inline Memory Module) ஒன்றாக அமர்ந்து கொள்வதுபோல, ஒரு கணினியில் அல்லது சேர்ந்திணைந்த கருவிகளில் ஒரு சிறிய வன்பொருள் உறுப்பை முழுதுமாகச் செருகி சரியாக நிலை நிறுத்துதல்.

second, micro : மைக்ரோ விநாடி.

secondary service provider : துணைநிலைச் சேவை வழங்குநர் : வலைத் தகவல்களை வழங்குகின்ற, ஆனால் நேரடியான இணைய இணைப்பை வழங்காத ஒர் இணையச் சேவை வழங்கும் நிறுவனம்.

secondary storage : துணைநிலைச் சேமிப்பகம் : கணினியில் குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) தவிர பிற தகவல் சேமிப்பு ஊடகங்கள், குறிப்பாக நாடா அல்லது வட்டினைக் குறிக்கும்.

secret key : மறைக்குறி; மறைத்திறவி.

section : பிரிவு.

secure channel : பாதுகாப்பான தடம்: அனுமதியற்ற அணுகல் மற்றும் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. பொதுப் பிணையத்திலிருந்து விலகித் தனித்திருத்தல். மறையாக்கம் அல்லது பிற கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இப்பாதுகாப்பு அமையலாம்.

Secured Electronic Transaction (SET): பாதுகாப்பான மின்னணு பரிமாற்ற முறை.

Secure Electronics Transactions Protocol : பாதுகாக்கப்பட்ட மின்னணுப் பரிமாற்ற நெறிமுறை : இணையத்தில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கான நெறிமுறை. ஜிடீஇ, ஐபிஎம், மாஸ்டர் கார்டு, மைக்ரோசாஃப்ட், நெட்ஸ்கேப், எஸ்ஏஐசி, டெரிசா சிஸ்டம்ஸ், வெரிசைன், விசா கார்டு ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது.

secure site : பாதுகாப்பான தளம் : பற்று அட்டை எண்கள் மற்றும் பிற சொந்தத் தகவல்களை அனுமதியற்ற நபர்கள் அத்துமீறி அணுகா வண்ணம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்யும் திறனுள்ள வலைத் தளத்தைக் குறிக்கிறது.

secure transaction technology : பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம் : சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பான செருகுவாய் அடுக்கு (SSL - Secure Sockets Layer), பாதுகாப்பான ஹெச்டிடிபீ (S-HTTP) ஆகிய நெறிமுறைகளைப் பயன்படுத்துதல்.

secure wide area network: பாதுகாப்பான விரிபரப்புப் பிணையம் : ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங்களை அத்துமீறி நுழைபவர்களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation), உறுதிச்சான்று (Authentication) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் கணினித் தொகுதி.

security : பாதுகாப்பு : தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தகவலையும் காத்தல். பெரும்பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற கணினி அமைப்புகளில் அனுமதியில்லாத நபர்கள் அத்துமீறி நுழைய அதிக வாய்ப்புள்ளது.

security log : பாதுகாப்புப் பதிகை : தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வுகளின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயனாளர்களின் பெயர்கள் அப்பதிகையில் பதிவாகியிருக்கும்.

seek area : தேடு பரப்பு; நாடும் பரப்பு.

segment, data : தரவுத் துண்டம்.

segmented addressing architecture : துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம் : இன்டெல் 80x86 செயலிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக-அணுகு நுட்பம். இக்கட்டுமானத்தில் நினைவகம் 64 கேபி கொண்ட துண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. நினைவக இருப்பிடங்கள் 16 துண்மி (பிட்) கொண்ட முகவரியால் குறிக்கப்படுகின்றன. 32 துண்மி முகவரித் திட்டம் மூலம் 4 ஜிபி நினைவகத்திலுள்ள துண்டங்களைக் கையாள முடியும்.

segmented programme : கூறுபாட்டு நிரல்.

select all : அனைத்தும் தேர்ந்தெடு.

select all records : அனைத்து ஏடுகளையும் தேர்ந்தெடு.

selecting : தெரிவு செய்தல்.

selection control structure : தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு.

selector : தெரிந்தெடுப்பி.

self-adapting : தன்-தகவமைத்தல் : கணினி அமைப்புகள், சாதனங்கள் அல்லது செயல்பாடுகள் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கேற்ப தம்முடைய செயல்பாட்டுத் தன்மைகளைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.

self-checking digit : தானக சரிபார்க்கும் இலக்கம் : குறியாக்கத்தின்போது ஓர் எண்ணின் இறுதியில் சேர்க்கப்படும் இலக்கம், குறியாக்கத்தின் துல்லியத்தை உறுதிசெய்வது இதன் நோக்கம்.

self-modifying code : தானாக மாற்றியமைக்கும் குறிமுறை : பொதுவாக, ஒரு மொழிமாற்றி (compiler) அல்லது சிப்பு மொழிமாற்றியினால் (assembler) உருவாக்கப்படும் இலக்கு நிரல் குறிமுறை புதிய கட்டளைகளை, முகவரிகளை, தகவல்மதிப்புகளை ஏற்கெனவே இருக்கும் ஆணைத் தொகுப்பில் சேர்க்கும்போது தானாக மாற்றியமைத்துக்கொள்ளும்.

self-validating code : தானாக சரிபார்க்கும் குறிமுறை : சரியாகச் செயல்படுகிறதா என தன்னைத் தானே சரிபார்த்துக்கொள்ளும் நிரல் குறிமுறை. பொதுவாக, சில உள்ளீட்டு மதிப்புகளை தானாகவே எடுத்துக் கொண்டு, கிடைக்கின்ற விடையை, வரவேண்டிய வெளியீட்டு மதிப்புகளோடு சரிபார்த்துக்கொள்ளும்.

send: அனுப்பு: தகவல் தொடர்புத் தடத்தின் வழியாக ஒரு செய்தியை அல்லது கோப்பினை அனுப்பி வைத்தல்.

send later : பின்னர் அனுப்பு.

send now : இப்போது அனுப்பு.

sender : அனுப்புநர்.

send statement : அனுப்பு கூற்று;அனுப்பு கட்டளை : ஸ்லிப் (SLIP), பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை. send to : இவருக்கு அனுப்பு.

send to back : திருப்பி அனுப்பு.

sense wire : உணர்வுக் கம்பி.

sensor glove : உணரிக் கையுறை : மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்துகொள்ளும் கணினி உள்ளீட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச் சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக மாற்றியமைக்கும். தரவுக் கையுறை (data glove) என்றும் அழைக்கப்படும்.

SEPP : எஸ்இபீபீ : இணைநிலைச் செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலிகளுக்கான இணைநிலைப் பயன்பாட்டு நிரல்களை உருவாக்குவதற்குரிய கருவிகளை உருவாக்க, ஒன்பது ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டப்பணி.

sequence character: தொடர் எழுத்து.

sequential : வரிசை முறை.

sequential algorithm: வரிசைமுறைப் படிமுறைத் தருக்கம் : நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும்படி முறைத் தருக்கம்.

sequential file, index : சுட்டுவரிசைக் கோப்பு.

sequential execution : வரிசைமுறை இயக்கம் : நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல்.

sequential logic element : வரிசைமுறைத் தருக்க உறுப்பு : குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளீட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.

serial communication : நேரியல் தகவல்தொடர்பு : இரு கணினிகளுக்கிடையே அல்லது ஒரு கணினிக்கும் பிற புறச்சாதனங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் போக்குவரத்தில் ஒற்றைத் தடத்தில் ஒரு நேரத்தில் ஒரு துண்மி(பிட்) வீதம் தகவல் பரிமாற்றம் நடைபெறல். இத்தகைய தகவல் தொடர்பு நேர ஒத்திசைவு அல்லது ஒத்திசைவில்லா முறையில் நடைபெற முடியும். அனுப்பி, வாங்கி இரண்டுமே ஒரே பாட் (baud) வீதம், ஒரே சமன்பிட், ஒரே வகையான கட்டுப்பாட்டுத் தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.

serial infrared: நேரியல் அகச்சிவப்பு : ஒர் அகச்சிவப்பு ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல்களை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப்பட்டிருக்க வேண்டும் (aligned). இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன.

serialize : நேரியல்படுத்து : பைட் பைட்டாக அனுப்பப்படும் இணைநிலை தகவல் பரிமாற்றத்தை, துண்மி துண்மியாக (பிட் பிட்டாக) அனுப்பப்படும் நேரியல் முறையாக மாற்றியமைத்தல்.

serialkeys : நேரியல் விசைகள் : விண்டோஸ் 95ல் இருக்கும் ஒரு பண்புக் கூறு. தகவல் தொடர்பு, இடைமுகச் சாதனங்களைப் பொறுத்தமட்டில் விசையழுத்தங்களும், சுட்டிச் சமிக்கைகளும் கணினியின் நேரியல் துறை (serial port) வழியாகவே ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

serial machine : நேரியல் பொறி.

serial mouse : நேரியல் சுட்டி : கணினியின் வழக்கமான நேரியல் துறையில் இணைக்கப்படும் ஒரு சுட்டு சாதனம்.

serial port adapter: நேரியல் துறைத் தகவி : நேரியல் துறை அமைந்துள்ள, அல்லது தொடர்நிலைத் துறையை இன்னொன்றாக மாற்றியமைக்கின்ற ஒர் இடைமுக அட்டை அல்லது சாதனம்.

serial transfer : நேரியல் பரிமாற்றம்.

serializability: நேரியலாக்கு இயலுமை.

series : தொடர்கள்.

series circuit : வரிசை மின்சுற்று : இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின்சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின்னழுத்தம் (voltage) உள்ளுறுப்புகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

server-based application : வழங்கன்-சார்ந்த பயன்பாடு : ஒரு பிணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நிரல். பிணைய வழங்கனில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளையன்கள் அந்நிரலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

server cluster : வழங்கன் கொத்து : ஒருங்கிணைந்து ஒற்றை அமைப்பாகச் செயல்படும் தனித் தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்தவரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன் போலவே தோற்றமளிக்கும்.

server error : வழங்கன் பிழை : பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறைவேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழைகள், 5-ல் தொடங்கும் ஹெச்டீடீபீ-யின் பிழைக் குறியீட்டால் உணர்த்தப்படும்.

server push-pull : வழங்கன் தள்ளு-இழு : கிளையன்/வழங்கன் இணைந்த நுட்பங்கள் தனித்தனியாக வழங்கன் தள்ளல், கிளையன் இழுவை என்று வழங்கப்படுகின்றன. வழங்கன் தள்ளலில், வழங்கன், தகவலை கிளையனுக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால் தகவல் இணைப்பு திறந்தநிலையிலேயே உள்ளது. இதன் காரணமாய் தேவையான அளவுக்குத் தகவலை உலாவிக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்க வழங்கனுக்குச் சாத்தியமாகிறது. கிளையன் இழுவையில் வழங்கன், கிளையனுக்குத் தகவலைத் தருகிறது; ஆனால் தகவல் இணைப்பு தொடர்ந்து திறந்திருப்பதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேலும் தகவல் அனுப்பும் பொருட்டு தகவல் இணைப்பை மீண்டும் திறக்குமாறு உலாவிக்கு வழங்கன் ஒரு ஹெச்டீஎம்எல் ஆணையை அனுப்பி வைக்கும். பெரும்பாலும் ஒரு புதிய யூஆர்எல் லைத் திறக்கும்போது இது நிகழும்.

server-side include: பக்கச் சேர்ப்புகள்: வைய விரிவலை ஆவணங்களில் இயங்கு நிலையில் உரையைச் சேர்ப்பதற்கான ஒரு நுட்பம். இவை வழங்கனால் அறிந்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்ற தனிச் சிறப்பான கட்டளைக் குறிமுறைகளாகும். அந்த ஆவணம் உலாவிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக ஆவணத்தின் உடல் பகுதியில் அக்கட்டளைகளின் விடை சேர்க்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, உலாவிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில், அன்றைய தேதி, அப்போதைய நேரத்தை முத்திரையிட்டு அனுப்பி வைக்கலாம்.

server tier : வழங்கன் அடுக்கு.

server type : வழங்கன் வகை.

service : சேவை : 1. தொழில்நுட்ப உதவி அல்லது பிணைய வசதி போன்ற வாடிக்கையாளர் அடிப்படையிலான அல்லது பயனாளர் நோக்கிலான ஒரு பணி. 2. நிரலாக்கம் மற்றும் மென்பொருள்களில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு பிற நிரல்களுக்கு உதவி செய்தல். பெரும்பாலும், வன்பொருளுக்கு நெருக்கமான அடிநிலைப்பணிகளாக இருக்கும்.

Service Advertising Protocol: சேவை விளம்பர நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை வழங்கும் கணுக்கணினி, பிணையத்திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என் அறிவித்தல். ஒரு வழங்கன் இயக்கப்படும்போது, தனது சேவைகளை விளம்பரப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதே வழங்கன் அகல்நிலைக்கு மாறும்போது, இதே நெறிமுறையைப் பயன்படுத்தித் தன்னுடைய சேவைகள் இனி கிடைக்காது என்பதை அறிவிக்கின்றது.

session layer : அமர்வு அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ ஏழு அடுக்குகளில் ஐந்தாவது அடுக்கு. தகவல் தொடர்பு கொள்ளும் இரண்டு சாதனங்களும் கட்டாயம் ஒப்புக் கொள்ளக்கூடிய விவரங்களை அமர்வு அடுக்கு கையாள்கிறது.

set, data : தரவுக் கணம்.

set database password : தரவுத் தள நுழைசொல் அமை.

set print area : அச்சுப்பரப்பு அமை.

settling time : நிலைநிற்கும் நேரம் : ஒரு வட்டு இயக்கத்திலுள்ள படி/எழுது முனை ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, புதிய இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

settings: அமைப்புகள்.

set-top box : மேல்நிலைப் பெட்டி : வடத் தொலைக்காட்சி சமிக்கைகளை தொலைக்காட்சிப் பெட்டியின் உள்ளீட்டு சமிக்கைகளாக மாற்றித்தரும் ஒரு சாதனம். தொலைக்காட்சி மூலமாக வைய விரிவலையில் உலாவர இத்தகு மேல்நிலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

setup : நிறுவுகை.

setup wizard : நிறுவுகை வழிகாட்டி : மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத்தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனாளரை இட்டுச்செல்லும் ஒரு வழிமுறை.

.sf.ca.us : .எஸ்எஃப்.சிஏ.யுஎஸ் : ஒர் இணையத் தள முகவரி அமெரிக்க நாட்டு, கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sfil : எஸ்ஃபில் : மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ல் ஒலிக்கோப்புகளைக் குறிக்கும் கோப்பு வகைப் பெயர்.

.sg : .எஸ்ஜி : ஒர் இணைய தள முகவரி சிங்கப்பூரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

.sgm : .எஸ்ஜிஎம் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி (Standard Generalized Markup Language - SGML)யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3.x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டுவிடுகிறது.

.sgml : .எஸ்ஜிஎம்எல் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி (Standard Generalized Markup Language) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

SGML : எஸ்ஜிஎம்எல் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி எனப் பொருள்படும் Standard Generalized Markup Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1986ஆம் ஆண்டு பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (ISO) ஏற்றுக்கொண்ட தகவல் மேலாண்மைத் தரவரையறை. பணித்தளம் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் சாராத ஆவணங்களை உருவாக்க வழி கோலுகிறது. இவற்றின் வடிவாக்கம், சுட்டுக் குறிப்பு மற்றும் தொடுப்புத் தகவல்கள், பணித்தளம் மாறினாலும் மாறாமல் காப்பாற்றப்படுகின்றன. பயனாளர்கள் தமது ஆவணங்களின் கட்டமைப்பை இலக்கணப் போக்கிலான நுட்பத்துடன் வடிவமைக்க உதவுகிறது.

.sh : .எஸ்ஹெச் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் ஹெலினா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

SHA : எஸ்ஹெச்ஏ : பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தகவல் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) குறி முறையில் கணக்கிடும் நுட்பம். செய்திச் சுருக்கம் என்றும் கூறப்படும். அனுப்புபவரே எஸ்ஹெச் ஏ-யைப் பயன்படுத்துகிறார். செய்தியைப் பெறுபவர் இலக்க முறை ஒப்பத்தைச் சரிபார்க்க இதனைப் பயன்படுத்துகிறார்.

shadow : நிழல்.

shadow memory: நிழல் நினைவகம்: சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடக்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப்படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்தும் ஒரு நுட்பம். இவ்வாறு நகலெடுத்து வைப்பதால் கணினியின் செயல்திறன் கூடுகிறது. பயாஸ் நிரல்கூறுகளை பயாஸில் சென்று தேடாமல், நினைவகத்திலுள்ள நிழல் நகல்களில் எடுத்துக்கொள்ளும். நிழல் ரேம், நிழல் ரோம் என்றும் கூறுவர்.

shadow printer : நிழல் அச்சுப்பொறி.

shared folder : பகிர்வுக் கோப்புறை : ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்ட மேக்சிஸ்டம் 6.0 அல்லது பின்வந்த இயக்க முறைமையில் செயல்படும் ஒரு மெக்கின்டோஷ் கணினியில், ஒரு பயனாளர் பிணையத்தின் பிற பயனாளர்களுக்கு அணுக அனுமதி வழங்கக் கூடிய ஒரு கோப்புறை. ஒரு பீசியில் வழங்கப்படும் நெட்வொர்க் கோப்பகம் (Network Directory) என்பதோடு ஒத்தது.

shared logic : பகிர்வுத் தருக்கம் : ஒரு செயல்பாட்டை நடைமுறைப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட மின்சுற்றுகள் அல்லது மென்பொருள் நிரல்கூறுகளைப் பயன்படுத்துதல்.

shared memory : பகிர்வு நினைவகம் : 1. ஒரு பல்பணிச் சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்கள் அணுகுகின்ற நினைவகம். 2. இணைநிலைச் செயலிகள் கொண்ட கணினி அமைப்புகளில் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் நினைவகப் பகுதி.

shared printer: பகிர்வு அச்சுப்பொறி : ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி. பிணையத்தில் இணைக்கப்படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

shared resource : பகிர்வு வளம் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் அல்லது நிரல்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் ஒரு சாதனம் அல்லது தகவல் அல்லது நிரல். 2. விண்டோஸ் என்டியில் பிணையப் பயனாளர்கள் அணுகுவதற்குரிய கோப்பகங்கள், கோப்புகள், அச்சுப்பொறிகள் போன்ற வளங்கள்.

shareware : பகிர்வுமென்பொருள் : "வாங்கும் முன் பயன்படுத்திப் பார்" என்ற அடிப்படையில் வினியோகிக்கப்படுகின்ற பதிப்புரிமை பெற்ற மென்பொருள். பரிசோதனை காலத்துக்கு அப்பாலும் அம்மென்பொருளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், அதனை உருவாக்கியவருக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

shareware centre : பகிர்வுமென்பொருள் மையம்; பங்கீட்டு மென்பொருள் மையம்.

shareware and freeware : பகிர்வுமென்பொருள்-இலவச மென்பொருள்.

sharing, time : காலப் பகிர்வு.

sharing resources : வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல். sheet : தாள்.

sheet-fed scanner : தாள் செருகு வருடுபொறி : இவ்வகை வருடுபொறிகளில் ஒரு நேரத்தில் ஒற்றைத் தாள் உள்ளிழுக்கப்பட்டு, நிலைத்திருக்கும் வருடுபொறியமைவின் மீது நகரும்போது பட/உரைத் தகவல் பதியப்பட்டுவிடும். பல பக்கங்கள் உள்ள ஆவணங்களை தானாகவே தொடர்ச்சியாக வருடியெடுக்கும் வசதி இவ்வகை வருடுபொறிகளில் உண்டு.

sheet, coding : குறிமுறைத் தாள்.

shell account: செயல்தளக் கணக்கு : கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்க முறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினி சேவை. பெரும்பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்கும். வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) வழியாக இணையத்தில் உலாவர இதில் வசதியில்லை. இணைய வசதிகள் அனைத்துமே எழுத்து/உரை அடிப்படையிலான கருவிகள் மூலமே பெறமுடியும். இணையத்தில் உலாவ லின்ஸ்க் (Lynx) என்னும் உலாவியும், பைன் (pine) என்னும் மின்னஞ்சல் மென்பொருளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

shift, arithmetical : கணக்கியல் பெயர்வு.

shift, logical : தருக்கப் பெயர்வு.

shift, right : வலப் பெயர்வு.

short : சிறு முழு எண்; சி, சி++, சி#, ஜாவா மொழிகளில் கையாளப்படும் தரவினம்.

shortcut : குறுவழி : விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன்மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தகவல் கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உடனடியாக அணுக முடியும். பிற கோப்புறைகளிலும் இத்தகைய குறுவழிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

shorter wave langth : குறைந்த அலை நீளம்.

shortcut key : குறுவழி விசை.

short-haul : குறைதொலைவு : 20 மைல்களுக்கும் குறைவான தொலைவுக்கு ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், ஒரு தகவல் தொடர்புச் சாதனம் சமிக்கைகளை அனுப்புதல்.

shout : கூவு; சத்தமிடு; அழுத்தமாய்ச் சொல், உரத்துச் சொல் : மின்னஞ்சல் அல்லது செய்திக் குழு கட்டுரைகளில் அழுத்தமாய்ச் சொல்ல விரும்பும் கருத்துகளை அனைத்தும் பெரிய எழுத்தில் தெரிவிப்பது. மிகையான சத்தமிடல் வலைப் பண்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இரண்டு நட்சத்திரக் குறிகளுக்கிடையில் அல்லது இரண்டு அடிக்கீறு (underscore) களுக்கிடையில் குறிப்பிடுவதன் மூலம் கருத்துகளை உரத்துச் சொல்லலாம்.

shovelware : வாரியிடு பொருள்கள்; அள்ளித்தரு பொருள்கள் : இணையத்தில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்ற மென்பொருள்கள், பகிர்வு மென்பொருள்களை ஒரு குறுவட்டில் (சிடிரோம் வட்டு) பதிவு செய்து விற்பது. இவற்றில் பெரும்பாலும் வரைகலைப் படிமங்கள், உரைப் பகுதிகள், சிறுசிறு பயன்கூறுகள் அல்லது பிற தகவல்கள் இடம் பெறுவதுண்டு.

show auditing toolbar : தணிக்கைக் கருவிப்பட்டை காண்பி.

show clock :கடிகாரம் காண்பி .

show log :பதிகை காண்பி .

show small icons in start menu: தொடக்கப் பட்டியில் சிறு சின்னங்களைக் காண்பி,

show sounds :ஒலியைக் காட்டு :விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக் கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்புமாறு அமைத்திருப்பர். அவ்வாறு ஒலி எழுப்பப்படும் போதெல்லாம் கண்ணில் படும்படியாக ஒரு செய்திக்குறிப்பைத் திரையில் காட்சிப்படுத்துமாறு கட்டளையிட வசதியுள்ளது.

shrink-wrapped :முடித்துக்கட்டியது : வணிக முறையில் வினியோகம் செய்யத் தயாராக பெட்டியில் போட்டு முத்திரையிடப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கத் தயாராய் இருக்கும் பொருள். பெரும்பாலும், பீட்டா பதிப்பினை இவ்வாறு அழைப்பதில்லை. முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பிற்கே இவ்வடைமொழி பயன்படுத்தப்படுகிறது.

SHTML : எஸ்ஹெச்டிஎம்எல் : வழங்கன் கூறாக்கும் ஹெச்டிஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியீடு மொழி (Hyper Text Markup Language)யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டிஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பி வைக்கும்.

S-HTTP : எஸ்-ஹெச்டீடீபீ : பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறி முறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைகளை ஏற்பதாகும். அனைத்துப் பரிமாற்றங்களையும் முனைக்குமுனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹெச்டீடீபீயின் நீட்டிப்பு நெறி முறையாகும்.

shutdown : நிறுத்து; முடித்துவை : தகவல் இழப்பு எதுவும் நேரா வகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்.

shut off :நிறுத்துக.

.si : .எஸ்ஐ : ஒர் இணையதள முகவரி ஸ்லோவானிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sibling : உடன்பிறப்பு : ஒரு மரவுரு தரவுக் கட்டமைப்பில் ஒரே மூதாதையரிடமிருந்து கிளைத்த கணுக்கள்.

கணினி களஞ்சிய அகராதி-2.pdf

B, Cஆகியவை உடன்பிறப்புகள் D, E, Fஆகியவை உடன்பிறப்புகள் sideband : பக்கக்கற்றை; ஓரக்கற்றை: பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்துசெல்லுமாறு செய்ய முடியும். இதன் காரணமாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் சுமந்து செல்ல முடியும்.

sidebar: பக்கப் பட்டை; ஓரப்பட்டை : ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத்தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரைமூலம் பிரிக்கப்பட்டிருக்கும்.

side head : பக்கத் தலைப்பு; ஓரத் தலைப்பு : ஒர் அச்சு ஆவணத்தின் இடப்புற ஒரப்பகுதியில் (margin) உரையின் உடல்பகுதியின் மேற்பகுதியோடு கிடைமட்ட சீரமைவாக இருக்கும் தலைப்பு. உரைப் பகுதிக்கு செங்குத்துச் சீரமைவாக இருப்பது இயல்பான தலைப்பாகும்.

sided, double : இருபக்க.

sided, single : ஒருபக்க.

Sieve of Eratosthenes : ஏரட்டோஸ்தீன்ஸின் சல்லடை : பகா எண் ளைக் கண்டறிவதற்கான ஒரு தருக்கமுறை. ஒரு கணினியின் அல்லது ஒரு மொழியில் படிமுறைத் தருக்கத்தில் எழுதப்பட்ட ஒரு நிரலின் வேகத்தைக் கண்டறியும் அளவுகோலாக இது பயன்படுத்தப்படுகிறது.

.sig : .சிக்; .எஸ்ஐஜி : மின்னஞ்சல் அல்லது இணையச் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படும் ஒப்பக் கோப்புகளின் வகைப்பெயர் (Extension). இந்தக் கோப்பின் உள்ளடக்கம், மின்னஞ்சல் மடல் அல்லது செய்திக்குழுக் கட்டுரையின் இறுதியில் அவற்றுக்குரிய கிளையன் மென்பொருள்களால் தாமாகவே சேர்க்கப்பட்டுவிடும்.

sigel density : தனிச் செறிவு.

SIGGRAPH : சிக்வரைகலை; சிக்கிராஃப் : கணினி வரைகலைக்கான சிறப்பு ஆர்வலர் குழு எனப்பொருள்படும் Special Interest Group on Computer Graphics என்ற தொடரின் சுருக்கம். கணிப்பணி எந்திரச் சங்கத்தின் (Association for Computing) ஓர் அங்கம்.

signature : ஒப்பம்; கையொப்பம்; குறியீட்டெண்.

signature block : ஒப்பத் தொகுதி : ஒரு மின்னஞ்சல் செய்திக் கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும் உரைப் பகுதி. ஒப்பத் தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள் அடங்கியிருக்கும்.

signature capture : கையெழுத்து கவர்வு.

significance : முகமையான.

significant character, least : குறைமதிப்பு எழுத்து.

silabi structure : அசை பிரித்தல்.

silicon-controlled rectifier : சிலிக்கான் கட்டுப்பாட்டு மின்திருத்தி : ஒரு வாயில் (gate) சமிக்கை மூலம் மின் கடத்து திறனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு குறைகடத்தி மின் திருத்தி. silicon-on-sapphire : மாணிக்கத்தில் சிலிக்கான் : குறைகடத்திகளை உருவாக்குதலில் ஒருவகை. செயற்கை மாணிக்கக் கல்லினால் கடத்தல் தடுப்பு செய்யப்பட்ட ஒற்றைச் சிலிக்கான் அடுக்கினால் ஆன குறை கடத்திச் சாதனங்கள்.

silicon valley :சிலிக்கான் வேலி; சிலிக்கான் பள்ளத்தாக்கு : கலிஃபோர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோவிலிருந்து சான் ஜோஸ் வரையுள்ள பகுதி இது. மிகப் பெரும் மின்னணு மற்றும் கணினி ஆய்வு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

SIMD : எஸ்ஐஎம்டி : ஒற்றை ஆணை பல தகவல் என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒரு வகை. ஒரு ஆணைச்செயலி ஆணையைக் கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு ஆணைகளை அனுப்பிவைக்கும்.

SIMM : சிம் : ஒற்றை உள்ளக நினைவுகக் கூறு என்று பொருள்படும் Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக் கூடியவாறு வடிமைக்கப்பட்ட ஒரு சிறிய மின்சுற்றுப் பலகை.

Simple Mail Transfer Protocol : எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர்.

simple querry wiz : எளிய வினவல் வழிகாட்டி.

simple type : சாதாவகை; எளிய இனம். simultaneous : 2 Le flap; 905ri கியல்; ஒரே நேர.

sine wave : சைன் அலை : ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை. மற்ற பல செயலிகளுக்கு ஆணை களை அனுப்பிவைக்கும். நேரம்


கணினி களஞ்சிய அகராதி-2.pdf
சைன் அலை

single : தனி; ஒற்றை.

single bit error :ஒற்றை பிட் பிழை; ஒற்றைத் துண்மி வழு.

single-board : ஒற்றைப் பலகை : கணினியில் இருக்கும் ஒருவகை மின்சுற்றுப் பலகை. ஒரே ஒரு பலகை மட்டுமே இருக்கும். பொதுவாக, கூடுதலாக வேறு பலகைகளைச் செருவதற்கு இடம் இருக்காது.

single-board computer : ஒற்றைப் பலகைக் கணினி.

single click : ஒற்றைச் செடுக்கு.

single setup : ஒற்றை அமைவு.

single-sided : ஒற்றைப் பக்க : ஒரே ஒரு பக்கத்தில் மட்டுமே தகவல் பதிய முடிகிற நெகிழ்வட்டுகளைப் பற்றியது.

single tasking : ஒற்றைப் பணி.

single threading : ஒற்றைப் புரியாக்கம் : 1. ஒரு நிரலுக்குள் ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலாக்கத்தை மட்டுமே இயக்குதல். 2. ஒரு மரவுரு தகவல் கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு இலைக் கணுவும் அதன் பெற்றோரைக் குறிக்கும் சுட்டினைக் கொண்டிருக்கும் நிலை.

single user : ஒற்றைப் பயனாளர்.

single-user computer : ஒற்றைப் பயனாளர் கணினி : ஒரேயொரு நபர் மட்டுமே பணிபுரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி. சொந்தக் கணினி என்றும் அழைக்கப்படும்.

signal, zero output: வெளியீடில்லாக் குறிகை; வெளியீடில்லாச் சமிக்கை.

sink : வாங்கி : வேறொரு சாதனம் அனுப்புவதைப் பெறு கின்ற சாதனம் அல்லது சாதனத்தின் ஒரு பாகம்.

SIP : சிப்; எஸ்ஐபி : ஒற்றை உள்ளகத் தொகுப்பு எனப் பொருள்படும் Single Inline Package என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைப்பு முனைகள் அனைத்தும் சாதனத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள, ஒரு மின்னணுக் கருவியின் கட்டுமான வகை.

SIPP : எஸ்ஐபீபீ : ஒற்றை உள்ளகப் பின்னமைந்த தொகுப்பு என்று பொருள்படும் Single Inline Pinned Package என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.sit : .சிட்; .எஸ்ஐடி : மெக்கின்டோஷ் கணினிகளில் ஸ்டஃபிபீட் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர் (File extension).

site license : தள உரிமம் : ஒரு வணிக நிறுவனம் அல்லது நிறுமத்தில் ஒரே மென்பொருளின் பல நகல்களை (தள்ளுபடி விலையில்) பயன்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தம்.

site registration : தளப் பதிவு.

size box : உருவளவுப் பெட்டி : மெக்கின்டோஷ் கணினித் திரையில் தோன்றும் விண்டோவின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் இயக்குவிசை. பயனாளர் இந்தப் பெட்டிமீது சொடுக்கும்போது, சாளரம் உச்ச அளவுக்கும் பயனாளர் வரையறுத்த அளவுக்கும் இடையே மாறும்.

.sj : .எஸ்ஜே : ஒர் இணைய தள முகவரி ஸ்வால்பார்டு-ஜேன்மாயென் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.sk : .எஸ்கே : ஒர் இணைய தள முகவரி ஸ்லோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sketching : உருவரைவு. skew : சாய்வு; திரிபு; கோணல் : எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கிடையேயான வேறுபாடு. (எ-டு) ஒர் ஆவணத்தை அச்செடுக்கும்போது உள்ளபடி அச்சாகாமல், சீரமைவு சரியின்றி அச்சாதல். மின்சுற்றுகள் பரப்பப்படும் சமிக்கைகளுக்கு ஒன்று போலப் பதிலிறுக்காத சூழ்நிலையில், உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே வேறுபாடு இருத்தல்.

skutch box : ஸ்கட்ச் பெட்டி : ஸ்கட்ச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு சாதனத்தின் பேச்சுவழக்குச் சொல். ஒரு தொலைபேசி இணைப்புபோன்ற பாவிப்புகளை (simulations) உருவாக்க இந்த சாதனம் உதவும். தொலைத் தொடர்பு அமைப்புகளையும் சாதனங்களையும் சோதனை செய்ய இச்சாதனம் உதவும்.

skip forward : முன்னோக்கி நகர்.

.sl : .எஸ்எல் : ஒர் இணைய தள முகவரி சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

slave system : அடிமை முறைமை.

slide show : படவில்லைக் காட்சி; படப்பலகைக் காட்சி.

SLIP : ஸ்லிப் : 1. நேரியல் இணைப்பு இணைய நெறிமுறை என்று பொருள்படும் Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபீ தரவுப் பொட்டலங்களை தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்கும் ஒரு தரவுத் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol). ஒரு தனிக் கணினி அல்லது ஒரு குறும்பரப்புப் பிணையம், இணையத்துடனோ இன்னபிற பிணையங்களுடனோ இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள இது வசதி செய்கிறது.

SLIP emulator : ஸ்லிப் போன்மி; ஸ்லிப் ஒப்பாக்கி; ஸ்லிப் போலாக்கி: யூனிக்ஸ் செயல்தள இணைப்புகளில் நேரடியான ஸ்லிட் இணைப்பு வழங்காமல், ஸ்லிப் இணைப்பு போலவே செயல்படும் மென்பொருள். பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் யூனிக்ஸ் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. பயனாளர்களுக்கு செயல்தளக் கணக்கு மூலம் இணைய அணுகலை வழங்குகின்றன. ஸ்லிப் இணைப்பு போன்றே, ஸ்லிப் போன்மிகளும் பயனாளர், இணையத்தில் இணையும்போது, நேரடியாக, சேவை நிறுவனத்தின் யூனிக்ஸ் சூழலை அணுகுவதைத் தவிர்த்து, வரைகலை வலை உலாவிகளைப் போன்றே இணையப் பயன்பாடுகளை நுகர்வதற்கு வாய்ப்பளிக்கின்றன.

slotted ring : செருகுவாய் வளையம்.

Slow Keys : மெதுவிசைகள் : மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் போது கவனக்குறைவாக அருகிலுள்ள பிற விசைகள் மீது விரல்கள் லேசாகப்பட்டாலும் விரும்பத்தகாத எழுத்துகள் பதிவாவதுண்டு. இந்நிலைமையைப்போக்கவே இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விசைமீது சிறிது நேரம் விரலை அழுத்தி வைத்திருந்தால்தான் அதற்குரிய எழுத்துத் திரையில் பதிவாகும்.

.sm:.எஸ்எம்:ஓர் இணையதள முகவரி சான் மாரினோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

small caps:சிறு பெரிய எழுத்துகள்: ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்து,பெரிய எழுத்து வேறுபாடு உண்டு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் சிறிய எழுத்துகளும் பெரிய எழுத்துகளும் உண்டு.ஓர் எழுத்துருவில் வழக்கமாக இருக்கும் பெரிய எழுத்துகளின் உருவளவைவிடச் சிறியதாக இருக்கும் பெரிய எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.(எ-டு):small,SMALL,SMALL.

small icons:சிறு சின்னங்கள்.

small model:சிறிய மாதிரியம்:இன்டெல் 80 x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம்,இதில் நிரல் குறிமுறைக்கு 64 கேபி இடமும்,தகவல்களுக்கு 64 கேபி இடமும் மட்டுமே ஒதுக்க முடியும்.

smart linkage:துடுக்குத் தொடுப்புகை:ஒரு நிரலில்,அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு.(எ-டு):சி# மொழியில்,

void swap (ref int x, ref int y)

    {                         
    - - - - - - - -
    - - - - - - - - 
            }

என்று ஒரு செயல்கூறு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கூறினை swap (ref a, ref b); என்று அழைக்கும்போது a,b ஆகியவை int இனத்தைச் சேர்ந்தவைதானா என்பது சரிபார்க்கப்பட்டு செயல்கூறு இயக்கப்படும்.

smart quotes:துடுப்பு மேற்கோகோள் குறிகள்: பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் "என்னும் சாதாரண மேற்கோள்குறி விசையை அழுத்தும்போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் (" ")குறிகளாக மாறிக்கொள்ளும் வசதி உள்ளது.

SMART system:ஸ்மார்ட் முறைமை:ஸ்மார்ட் அமைப்பு:SMART என்பது தானாகவே கண்காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சாதனத்தின் செயல்திறனையும் நம்பகத்தன் மையையும் கண்காணித்து முன்னறிந்து சொல்லும் தொழில்நுட்பம்.இத்தொழில்நுட்பத்தில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு பழுதாய்வுச் சோதனைகளை மேற்கொண்டு சாதனங்களின் குறைகளைக் கண்டறிந்து சொல்கின்றன.உற்பத்தியைப் பெருக்குதல்,தகவல் களைப் பாதுகாத்தல் இதன் நோக்கம்.

SMDS:எஸ்எம்டிஎஸ்:இணைப்பிடு பல் மெகாபிட் தகவல் சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இது ஒரு மீஉயர் வேக,இணைப்பிடு தகவல் போக்குவரத்துச் சேவை ஆகும்.குறும்பரப்புப் பிணையங்களையும், விரி பரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலைபேசிப் பிணையம் மூலமாக இணைக்கிறது.

smiley : குறுநகையி.

S/MIME : எஸ்/மைம் : பாதுகாப்பான பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் என்று பொருள்படும் Secure/Multipurpose Internet Mail Extensions என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். பொதுத் திறவி (Public Key) மறையாக்கத்தை (encryption) பயன்படுத்திக்கொள்கிற ஒர் இணைய மின்னஞ்சல் பாது காப்புத் தர வரையறை. SMTP (Simple Mail Transfer Protocol): எஸ்எம்டிபீ - எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை.

smoke test : புகைச் சோதனை : ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுது பாாதது முடிததவுடன. அதனை இயக்கிப் பரிசோதித்தல். அக்கருவி யிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர் பாராக் கடும்விளைவு ஏற்பட்டாலோ அது நன்றாக இயங்குவதுபோல் இருந்தாலும், சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.

SMP server : எஸ்எம்பி வழங்கன் : செவ்வொழுங்கு பல்செயலாக்க sugiisair (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளை யன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகு விக்க ஒரு கணினி எஸ்.எம்.பீ கட்டு மானத்தில் வடிவமைக்கப்படுகிறது.

.sn : .எஸ்என் : ஒர் இணைய தள முகவரி செனகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

snapshot programme : நொடிப்பு நிரல்; நொடிப்பார்வை நிரல் : குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நினைவகத்தின் ஒரு பகுதியை நொடிப்பார்வையிட்டு கண் காணிக்கும் நிரல்.

snail mail : நத்தை அஞ்சல் : மரபு முறையிலான அஞ்சல் போக்கு வரத்தை அதன் வேகங்கருதி இணையப் பயனாளர்கள் கிண்ட லாகக் குறிப்பிடுவது. மின்னஞ் சலோடு ஒப்பிடுகையில் மரபுமுறை அஞ்சல் நத்தை வேகமே.

.snd : .எஸ்என்டி : சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக் கொண் டிருக்கும். ஒர் உரை அடையாளங் காட்டி தொடக்கத்தில் இருக்கும்.

sneakernet : மறைநிலைப் பிணையம்; மறைமுகப் பிணையம் பிணையத்தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடை பெறும் தகவல் பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ் வட்டில் நகலெடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் சென்று இன்னொரு கணினியில் கோப்புகளை நகலெடுப்பார்.

SΝΜΡ : எஸ்என்எம்பீ எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எஸ்என்எம்பீ-யில் முகவர்கள் எனப்படும் வன்பொருள் அல்லது மென்பொருள்கள், பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சாதனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, பிணையப் பணி நிலையத் திரையில் காட்டுகின்றன. ஒவ்வொரு சாதனத்தின் கட்டுப் பாட்டுத் தகவல்களும் மேலாண்மைத் தகவல் தொகுதி என்னும் கட்டமைப்பில் பராமரிக்கப்படுகின்றன.

Society For Information Management: தகவல் மேலாண்மைக் கழகம்: சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில்முறை அமைப்பு. தகவல் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம்.

soft/hard copy : மென்/வன் நகல்: வட்டு/அச்சு நகல்.

soft page break: மென்பக்க முறிப்பு.

software-based modem : மென் பொருள் அடிப்படையிலான இணக்கி (மோடம்): மறுநிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல்பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்படை யிலான நிரல் நினைவகத்தைக் கொண்டுள்ளன. மென்பொருள் அடிப்படையிலான இணக்கிகளின் பண்புக் கூறுகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைக்க எளிதாக தகவமைவுகளைத் திருத்திய மைக்க முடியும்.

software-dependent : மென்பொருள் சார்பானது : அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிரலோடு அல்லது நிரல் தொகுப்போடு இறுகிப் பிணைக்கப்பட்ட ஒரு கணினி அல்லது ஒரு மின்னணுச்சாதனம்.

software error control : மென்பொருள் பிழைக் கட்டுப்பாடு.

software flexibility : மென்பொருள் நெகிழ்வுத் தன்மை.

software handshake : மென்பொருள் கைகுலுக்கல் : பொதுவாக தகவல்கள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு இணக்கிகளுக் கிடையே தொலை பேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் தொடர்பில் இருப்பதுபோலத் தகவல்கள் அனுப்பப்படும் அதே இணைப்புக் கம்பிகள் வழியாகவே கட்டுப்பாட்டுச் சமிக்கைகளையும் அனுப்பிவைத்தல்.

software installation engineer: மென்பொருள் நிறுவு பொறியாளர்.

software, integrated : ஒருங்கிணை மென்பொருள்.

software integrated circuit:மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று : சுருக்கமாக மென்பொருள் ஐசி என்றழைக்கப்படுவதுண்டு. ஒர் ஒருங்கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவதுபோல, ஏற் கெனவே உள்ள ஒரு மென் பொருள் கூறினை ஒரு நிரலுக்குள் பொருந்து மாறு வடிவமைத்தல்.

software patent :மென்பொருள் காப்புரிமை.

software publishing :மென்பொருள் பதிப்பீடு : வழக்கத்துக்கு மாறான மென்பொருள் தொகுப்புகளை வடிவமைத்து உருவாக்கி வினியோகித்தல்

software suite :மென்பொருள் கூட்டுத்தொகுப்பு.

softwhite: மென்வெண்மை.

solid model :திண்ம மாதிரியம்.

solid state:திடநிலை;திண்மநிலை.

solid-state disk drive: திண்மநிலை வட்டு இயக்ககம் : காந்தமுறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புச் சாதனம்.

solid-state relay: திண்மநிலை இடைமாற்றி : ஒரு மின்சுற்றினைத் திறக்கவும் மூடவும் திண்மநிலை உறுப்புகளைக் கொண்ட இடைமாற்றி.

SOM : சாம்; எஸ்ஓஎம் : முறைமை பொருள் மாதிரியம் எனப்பொருள் System Object Model என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கோர்பா (CORBA) தர வரையறைகளை செயல்படுத்துகின்ற, ஐபிஎம்மின்மொழிசாராக்கட்டுமானம்.

SONET : சோநெட் : ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு (51.84 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ் வரை) வழி வகுக்கும் இழைஒளித் தகவல் தொடர்பு தரவரையறைகளின் ஒரு வகைப்பாடு.

sort order :வரிசை ஒழுங்கு.

sort/merge :வரிசையாக்கு/ ஒன்று சேர்ப்புநிரல்.

sorter : பிரிப்பி, வகைப்படுத்தி; வரிசையாக்கி.

sorting : வரிசையாக்கம்.

sound buffer : ஒலி இடையகம் : கணினியிலிருந்து ஒலிபெருக்கி களுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித் தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி.

sound card :ஒலி அட்டை :பீசி ஒத்தியல்புக் கணினிகளில் இருக்கும் ஒருவகை விரிவாக்க அட்டை. ஒலியைப் பதிவுசெய்ய, ஒலியை மீண்டும் இசைக்கச் செய்ய முடியும். ஒரு WAV அல்லது MIDI கோப்புகளை அல்லது ஒரு இசைக் குறுவட்டிலிருந்து பாடல்களைக் கேட்க முடியும். தற்காலத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கணினிகளில் ஒலி அட்டை தனியாக இருப்பதில்லை. தாய்ப்பலகையிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

sound clip : ஒலித்துணுக்கு: ஒலி நறுக்கு : ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித்துணுக்கு.

sound editor : ஒலித்தொகுப்பி, ஒலி திருத்தி : பயனாளர் ஒலிக்கோப்புகளை உருவாக்கிக் கையாள வகை செய்யும் ஒரு நிரல்.

sound format : ஒலி வடிவம்.

sound generator : ஒலி இயற்றி; ஒலி உருவாக்கி : செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்புநிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள் வழியாக செயற்கை ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.

sound recorder:ஒலிப் பதிவு.

Sound Sentry : ஒலிக் காவலாள்; ஒலிக் கண்காணி : சரியாகக் காது கேளாதோர், மிகுந்த இரைச்சலுக் கிடையே பணியாற்றுவோர் - இவர் களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போதெல்லாம் பீப் ஒலியெழுப்பி எச்சரிக்கை செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் திரையில் பயனாளரின் கவனத்தைக் கவரும் வண்ணம் எச்சரிக்கைச் சின்னம் தோன்றும். திரை பளிச்சிடலாம் அல்லது பணியாற்றும் சாளரத்தின் தலைப்புப் பட்டை மினுக்கலாம்.

source data : மூலத் தகவல் : ஒரு கணினிப் பயன்பாடு, அடிப்படை யாகக் கொண்டுள்ள மூலத் தகவல்கள்.

source data acquisition : மூலத் தரவுக் கொள்முதல் : பட்டைக் குறி மானப் படிப்பி அல்லது பிற வருடல் சாதனங்களைப்போல, தகவல்களை உணரும் செயலாக்கம். அல்லது ஒலித் தகவல்களைப் பெறுவதையும் குறிக்கும்.

source directory : மூலக் கோப்பகம் : ஒரு கோப்பு நகலெடுப்புச் செயல் பாட்டில் நகலெடுக்கவிருக்கும் கோப்புகளின் மூலப் பதிப்புகள் இருக்கும் கோப்பகம்.

source worksheet: மூலப் பணித்தாள்.

space character:இடவெளி எழுத்து; இடவெளிக் குறி : விசைப்பலகை யில் இடவெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி.திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும்.

space-division multipiexing: இட வெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு : மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடிவம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலைவரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது.

spaghetti code : திருகுமுறுகுக் குறிமுறை : ஒரு நிரலின் இயல்பான பாய்வு கெட்டு குழப்பத்தில் முடியும் நிலை. பெரும்பாலும் பொருத்தாத, அதிகப்படியான GOTO அல்லது JUMP கட்டளைகளைப் பயன் படுத்துவதால் இந்நிலை ஏற்படும்.

spambot : குப்பைசேர்த்தி : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களுக்கு தேவையற்ற செய்திகளையும் கட்டுரைகளையும் ஏராளமாகத் தாமாகவே திரும்பத் திரும்ப அனுப்பிவைக்கும் ஒரு நிரல்.

SPARC : ஸ்பார்க் : அடுக்குநிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள் படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க் (RISC - Reduced Instruction set Computing -சுருக்க ஆணைத் தொகுதிக் கணிப்பணி) கட்டுமானத்தின் அடிப்படையில் அமைந்தது.

spatial data management :இடப்பரப்பு தகவல் மேலாண்மை: தகவல்களை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும்பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப்பரப்பில் தகவல்களைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை.

spead, transmission : பரப்பு வேகம்.

speaker : ஒலிபெருக்கி.

specific address:குறிப்பிட்ட முகவரி.

specification systems : முறைமை வரன்முறை.

spectrum : நிறமாலை : ஒரு குறிப்பிட்ட வகைக் கதிர்வீச்சின் அலை வரிசை வரம்பெல்லை ஆகும். சூழ் நிலையைப் பொறுத்து ஒரு பொருளினால் உமிழப்படலாம் அல்லது உட்கவரப்படலாம்.

spell checker : சொற்பிழை திருத்தி; சொல்திருத்தி.

spew : கக்கல்; உமிழ்வு : இணையத்தில் அளவுக்கதிகமான எண்ணிக் கையில் மின்னஞ்சல் செய்திகளையோ, செய்திக்குழுக் கட்டுரை களையோ வெளியிடல்.

spider : சிலந்தி : இணையத்தில் புதிய வலை ஆவணங்களைத் தேடி அவற்றின் முகவரிகளையும் உள்ளடக்கத் தகவலையும் ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கும் தானியங்கு நிரல். குறிப்பிட்ட கால இடை வெளியில் தானாகவே இப்பணியைச் செய்து கொண்டிருக்கும். தேடு பொறிகள் மூலம் இத்தரவுத் தளத்தின் வாயிலாக வேண்டிய தகவல்களை எளிதாகத் தேடிப் பெறலாம். சிலந்தி நிரல்களை இணைய எந்திரன் (Internet Robot)என அழைக்கலாம்.

spin rate : சுழல் வேகம்.

split : பிரி.

split bat : பகுத்த பட்டை, பிரிந்த பட்டை.

split cell : கலம் பிரி.

split table : அட்டவணை பிரி.

splitting a windows : சாளரத்தைப் பிரித்தல்.

spoken media:பேச்சு ஊடகம்.

spoofing : ஏமாற்றுதல் : இணையத்தில் ஒரு தகவல், அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குதல். எடுத்துக்காட்டாக, ஒரு பிணையத்தில் அனுமதிபெற்ற பயனாளர் ஒருவரின் ஐபி முகவரியைக் காட்டி ஏமாற்றி உள்ளே நுழைதல் ஐபீ-ஏமாற்றல் எனப்படுகிறது.

spot : புள்ளி; குறியிடம் : ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும். ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணி யில் பல புள்ளிகள் ஒரு குழுவாக இடம் பெறுகின்றன.

spot colour: குறியிட நிறம், புள்ளி நிறம் : ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழிமுறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரையறுத்துவிட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு குறியிட நிறத்துக்கும் அச்சுப்பொறி ஒவ்வொரு அடுக்காக அச்சிடும்.

spot function:குறியிடச் செயல்பாடு: ஒளி-நிழல் வேறுபாட்டு அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வகைத் திரைக்காட்சி உருவாக்கப் பயன்படும் போஸ்ட்-ஸ்கிரிப்ட் செயல்முறை.

spraycan : தெளிப்பான் : பெயின்ட் பிரஸ், பெயின்ட் போன்ற ஒரு வரைவோவிய பயன்பாட்டு மென் பொருளில் படிமம் ஒன்றில் புள்ளிகளின் தோரணியை உருவாக் கப் பயன்படும் கருவி.

spreadsheet programme :விரிதாள் நிரல் :வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணி களைச் செய்வதற்கென உருவாக்கப் பட்ட மென்பொருள் தொகுப்பு. தகவல் மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படுகின்றன. வாய்பாடுகள் மூலம் தகவல்கள் உறவுபடுத்தப்படுகின்றன. ஒரு கலத்தில் இருக்கும் மதிப்பினை மாற்றினால் தொடர்புடைய அனைத்துக் கலங்களிலுமுள்ள மதிப்புகள் மாற்றப்படும். விரிதாள் பயன்பாடுகள் பெரும்பாலும் வரை பட வசதிகளையும் கொண்டிருக்கும். உரை, எண் மதிப்புகள் மற்றும் வரை படங்களுக்கான எண்ணற்ற வடிவமைப்பு (formating) வசதிகளைக் கொண்டிருக்கும்.

spring tension : வில் இழுவிசை.

sprocket feed :பற்சக்கரச் செலுத்துகை : அச்சுப் பொறியில் தாளினை உட்செலுத்தும் அமைப்பு. பற்சக்கரம் போன்ற அமைப்பு தாளின் துளை களில் பொருந்தி தாளை நகர்த்திச் செல்லும். இதில் பின் செலுத்துகை, இழுவைச் செலுத்துகை இருவகை உண்டு.

SPX : எஸ்.பீ.எக்ஸ் : 1. வரிசைமுறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequenced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transport Layer) செயல்படும் நெறிமுறை. நாவெல் நெட்வேரில் பயன்படுத்தப் படுகிறது. பொட்டலங்களை அனுப்பிவைக்க, எஸ்.பீ.எக்ஸ், செய்தி முடிந்துவிட்டதா என்பதை உறுதி செய்கிறது. பொதுவாக எஸ்.பீ.எக்ஸ்/ ஐபிஎக்ஸ் எனச் சேர்த்தே குறிப்பிடுவர். 2. சில வேளைகளில், ஒரு திசை எனப் பொருள்படும் Simplex என்ற சொல்லின் சுருக்கமாகவும் குறிக்கப்படும்.

.sr : .எஸ் ஆர் : ஒர் இணைய தள முகவரி சுரினாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SRAPI : எஸ்ஆர்ஏபிஐ; ஸ்ரேப்பி : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடை முகம் எனப் பொருள்படும் Speech Recognition Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நாவெல், ஐபிஎம், இன்டெல், பிலிப்ஸ் டிக்டேஷன் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கிய குரலறிதல், உரையினைப் பேச்சாக மாற்றுதல் போன்ற தொழில் நுட்பத்துக்கான, பணித்தளம் சாரா பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

SSA : எஸ்எஸ்ஏ : நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள் படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டியணைப்பு (Ring Topology) முறையில் சாதனங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் ஒத்திசைவானது. ஒவ்வொரு திசையிலும் வினாடிக்கு 20 மெகாபைட் வரை தகவல் அனுப்பிவைக்க முடியும்.

.st : .எஸ்.டீ : ஒர் இணைய தள முகவரி சாவோ டோம்-பிரின்ஸ்பீ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ST506 interface :எஸ்டீ 506 இடைமுகம் :நிலைவட்டு இயக்ககக் கட்டுப்படுத்திகளுக்கென சீகேட் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய வன்பொருள் சமிக்கை வரன் முறை. இந்த இடைமுகத்தின் எஸ்டி506/412 பதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறையாகிவிட்டது.

stable : தொடக்குவிசை சுற்று.

stable tigger circuit: நிலை தொடங்கு விசைச்சுற்று.

stairstepping : மாடிப்படி: ஒரு வரைகலைக் கோடு அல்லது வளை கோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடையதாக அமைத்தல்.

stale link : நாட்பட்ட தொடுப்பு: பயனற்ற தொடுப்பு : நீக்கப்பட்ட அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தைச் சுட்டுகின்ற பயனற்ற மீத்தொடுப்பு.

stand alone server:தனித்தியங்கு வழங்கன்.

stand alone graphics: தனித்தியங்கு வரைகலை.

standard analog signals: நிலையான தொடர்முறைக் குறியீடுகள்.

standard buttons : இயல்பான பொத்தான்கள்.

standard function : முன்னிருப்பு செயல்கூறு: உள்ளிணைந்த செயல்கூறு ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக்கப்பட்டுள்ள, பயன்படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு.

standard newsgroup hierarchy : இயல்பான செய்திக்குழு படிநிலை.

standard parallel port : இயல்பான இணைநிலைத் துறை.

standard tool bar :மரபுநிலைக் கருவிப் பட்டை.

standard width:இயல்பான அகலம் .

stand by button : மாற்று பொத்தான்.

star-dot-star : ஸ்டார்-டாட்-ஸ்டார் (*.*) எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பகத்திலுள்ள அனைத்துக் கோப்புகளையும் என்பதைக் குறிக்கிறது. கோப்பின் முதன்மைப் பெயர் எதுவாக இருப்பினும், வகைப்பெயர் எதுவாக இருப்பினும் என்பது இதன் பொருள்.

star network: நட்சத்திரப் பிணையம்.

start : தொடக்கம்; தொடங்கு: விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்துதான் பணிகளைத் தொடங்க வேண்டும்.

starting point :தொடக்கப் புள்ளி : பயனாளர்கள் வலைத் தளங்களைப் பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரி வலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

start menu :தொடங்கு பட்டி.

startup application:தொடக்கப் பயன்பாடு : கணினி இயக்கப்பட்டவுடன் கணினியின் கட்டுப்பாடு முழுமையையும் எடுத்துக் கொள்ளும் பயன்பாடு.

startup.cmd : ஸ்டார்டப்.சிஎம்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில் தொடக்க இயக்க வட்டில் மூலக் கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பயன் தொகுதிக்கோப்பு. எம்எஸ் டாஸில் இதற்கு இணையான கோப்பு ஆட்டோ இஎக்ஸ்இசி.பேட்

startup ROM : தொடக்க ரோம்: கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க ஆணைகள் செயல்படுத்தப் படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்துகொள்ளவும், விசைப்பலகை, வட்டு இயக்ககங்கள் போன்ற சாதனங் களைச் சரிபார்க்கவும் ரோமில் பதியப்பட்டுள்ள நிரல் கூறுகள் உதவுகின்றன. இறுதியில் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் நிரலை இயக்கும் தூண்டு நிரல் செயல்படுத்தப்படுகிறது.

startup screen :தொடக்க திரை: ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன் முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித் திரை. தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும்.

stateful: நிலைமைக் கண்காணி : ஒரு கணினி அல்லது செயலாக்கம் தான் பங்குபெறும் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாகக் கண்காணிப்பது. (எ-டு) செய்தி களைக் கையாளுகையில் அவற்றின் உள்ளடக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது.

stateless : கண்காணிக்காமல்; நிலை கருதாமல் : ஒரு கணினி அல்லது செயலாக்கம் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் கண்காணிக்காமலே பங்கு பெறுவது. (எ-டு): செய்திகளைக் கையாளும்போது அவற்றின் மூலம் (source), சேரிடம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது. உள்ளடக்கத்தை விட்டுவிடுவது.

statement : கூற்று : ஒரு நிரலாக்க மொழியில் நிறைவேற்றப்படச் கூடிய மிகச்சிறிய சொல்தொடர். ஆணை என்றும் அறியப்படும்.

statement, arithemetic : கணக்கீட்டுக் கூற்று.

statement, control : கட்டுப்பாட்டு கூற்று.

statement, label : சிட்டைக் கூற்று.

state-of-the-art :புத்தம் புதிய;நவீன; இற்றைத் தொழில்நுட்பம் : காலாவதி ஆகிப்போன வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்காமல், மிகநவீன இற்றைநாள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருத்தல். .state.us :ஸ்டேட்.யுஸ்:ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாநில அரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

static object : நிலை பொருள்; மாறாப் பொருள்.

static allocation:நிலைத்த ஒதுக்கீடு: ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப்பட்ட நினைவகம் விடு விக்கப்படாமலே கட்டுண்டிருக்கும்.

static binding :நிலைத்த பிணைப்பு: நிரலை மொழிமாற்றும்போது (compiling)அல்லது தொடுப்புறுத்தும்போது (linkage) நிகழ்வது. நிரலிலுள்ள குறியீட்டு முகவரிகளை சேமிப்பிடஞ் சார்ந்த முகவரிகளாய் மாற்றியமைத்தல்.

static memory:மாறாநிலை நினைவகம்.

staticizing : பதிவக மாறா ஏற்றம்.

station : நிலையம்.

station, data :தரவு நிலையம். station, work : பணி நிலையம்.

stationery நிலையாவணம் :ஒருவகை ஆவணம், பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறு பெயரில் சேமித்துக் கொள்ளலாம். மூல ஆவணம் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும். நிலையா வணங்களை ஆவண முன்படிவங் களாகவும் அச்சுவார்ப்புருக்களாகவும் பயன்படுத்தலாம்.

stationary, continuous : தொடர்தாள்.

statistical multiplexer : புள்ளியியல் ஒன்றுசேர்ப்பி : தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்றுசேர்ப்புச் சாதனம்.இடையகச் சேமிப்புகளைப் பயன் படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். அதன்பின் ஒரு நுண்செயலி அனுப்புகின்ற தாரைகளை (streams) ஒன்றுசேர்த்து ஒற்றைச் சமிக்கையாக மாற்றும். இயங்குநிலையில் இருக்கின்ற அலைக்கற்றையில் இத் தகவலுக்கென ஒதுக்கீடு செய்யும்.

status bar :நிலைமைப் பட்டை : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பெரும்பாலான பயன்பாட்டு நிரல்களில் சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு பட்டை தென்படும். நிரலின் தற்போதைய நிலையைக் குறிக்கும் செய்தி அதில் தெரிந்துகொண்டிருக்கும். சில நிரல்களில் தற்போது தேர்வுசெய்துள்ள பட்டிக் கட்டளைக்கான விளக்கத்தை நிலைமைப் பட்டையில் காணலாம்.

status codes : நிலைமைக் குறிமுறைகள் : ஒரு நடவடிக்கையின் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதைச் சுட்டும், இலக்கங்கள் அல்லது பிற எழுத்துகள் சேர்ந்த சரம். பழைய கணினி நிரல்களே குறிமுறைகளைப் பயன்படுத்தின. இப்போதைய மென்பொருள்கள் பலவும் சொற்கள், படங்கள் வழியாக நிலைமையைச் சுட்டுகின்றன. யூனிக்ஸில் செயல்தளக் (shell) கணக்கு வைத்திருப்பவர்கள், வலையில், எஃப்டீபீயில் பணிபுரியும் போது நிலைமைக் குறிமுறைகளைக் கண்டிருக்கலாம். status, line :இணைப்பு நிலைமை.

step counter : படி எண்ணி.

step-frame : படிநிலைச் சட்டம் : ஒர் ஒளிக்காட்சிப் படிமத்தை ஒரு நேரத்தில் ஒரு சட்டம் வீதம் பதிவு செய்யும் செயல்முறை. நிகழ் நேரத்தில் தொடர்நிலை ஒளிக்காட்சிப் படிமங்களைப் பதிவுசெய்ய மிக மெதுவாகச் செயல்படும் கணினிகள் இந்தச் செயல்முறையைப் பின்பற்றுகின்றன.

step-rate time : நகர்-வீத நேரம் : ஒரு வட்டின் உந்துமுனை ஒரு தடத்தி லிருந்து அடுத்த தடத்திற்கு நகர்ந்து செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம்.

stereolithography : திண்ம வார்ப்பு நுட்பம்.

stereo viewing :பலதிசைக் காட்சி; இருதடக் காட்சி.

stickykeys :நிலைத்த விசைகள் : தொடர்ந்து பல விசைகளை ஒரு சேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift),கட்டுபாடு(control),மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும் முறை. பயனாளர் ஒரு விசையை அழுத்திப் பிடித்தவாறே இன்னொரு விசையை அழுத்த வேண்டியிருப்பதை இந்த மாற்று விசைகள் தவிர்க் கின்றன. முதலில் மெக்கின்டோஷில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பிறகு டாஸ், விண்டோஸிலும் இவ்வசதி தரப்பட்டுள்ளது.

stochastic : குறிப்பிலா, ஏதேச்சையான : குறிப்பின்றி நிகழும் நிகழ்வு களை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக, குறிப்பிலா மாதிரியம் என்பது, ஏதேச்சையாக நிகழும் நிகழ்வுகளையும், திட்டமிட்ட நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

stop button : நிறுத்தும் குமிழ் நிறுத்து பொத்தான்.

storage area : சேமிப்பகப் பரப்பு; தேக்ககப் பரப்பு.

storage area, common : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

storage, buffer: இடையகச் சேமிப்பு.

storage, bulk :மொத்தச் சேமிப்பு.

storage, core : உள்ளகச் சேமிப்பு.

storage, data :தரவு சேமிப்பகம்.

storage density : சேமிப்பக அடர்த்தி.

store device, direct access: நேரணுகு சேமிப்புச் சாதனம்.

storage, disk : வட்டுச் சேமிப்பகம். storage, fast-access :விரைவணுகு சேமிப்பகம்.

storage, internal : அகச்சேமிப்பு.

storage, random accessகுறிப்பிலா அணுகுச் சேமிப்பகம்.

storage, read-only: படிப்புச் சேமிப்பகம்.

storage register:சேமிப்பக பதிவகம்.

storage, secondary :துணைநிலை சேமிப்பகம்.

storage, temporary :தற்காலிகச் சேமிப்பகம்.

storage, two-dimentional : இருபரிமாணச் சேமிப்பகம்.

storage unit :சேமிப்பக அலகு.

storage, virtual: மெய்நிகர்ச் சேமிப்பகம்.

storage, working: செயல்படு சேமிப்பகம்.

storage, zero access : சுழி அணுகு சேமிப்பகம். store : இருப்பகம், சேமிப்பகம்.

store-and-forward:சேமித்து செலுத்து; இருத்தி அனுப்பு: தேக்கித் திருப்பல்: தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிக மாக ஒரு திரட்டு நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

store, associative :சார்பபுநிலைச் சேமிப்பகம்.

store, auxcillary : கூடுதல் சேமிப்பு.

store, backing :காப்பு சேமிப்பு.

store, bulk : மொத்தச் சேமிப்பு.

store, core : உள்ளகச் சேமிப்பு.

store, magnetic:காந்த சேமிப்பு.

stored programme concept:சேமிப்பு நிரல் கருத்துரு : ஒரு முறைமைக் கட்டுமானத் திட்டமுறை. கணி தவியல் அறிஞரான ஜான் வான் நியூமன் உருவாக்கிய கருத்துரு. நிரல்களும் தரவும் நேரடி அணுகு சேமிப்பகத்தில் (குறிப்பிலா அணுகு நினைவகத்தில்) இருக்கும். நிரல் கட்டளைகளையும், தரவுகளையும் மாறி மாறிக் கையாள இது வழிவகுக்கும்.

store and forward operating satellites: சேமித்துச் செலுத்து செயற்கைக்கோள்.

store and forward switching message: இருத்தி அனுப்பும் இணைப்புறு செய்தி.

STP : எஸ்டீபீ :உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகள் இருக்கும். கம்பிகள் முறுக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின் இடையூறு இருக்காது. வெளியிலிருந்துவரும் இடையூறுகளிலிருந்து பாதுகாகக பாதுகாபபு உறைகள பயன்படுகின்றன. எனவே நீண்ட தொலைவு, அதிவேக தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வகை வடங்கள் உகந்தவை.

stream : தாரை; பாயல்.

stream cipher: தாரை மறையெழுத்து: மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தகவல் தொடரை மறையாக்கம் செய்யும் வழிமுறை.

streaming : தாரையாக்கம் : காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக நாடா இயங்கத் தொடங்குவதும் நிற்பதும் மெதுவாக நடைபெறுகிறது. எனினும் இதனால் மிகுந்த நம்பகத் தன்மையான சேமிப்பும், தகவல் பெறுகையும் இயலக்கூடிய தாகியுள்ளது. ஏதேனும் ஒரு பயன் பாட்டுக்கு அல்லது கணினிக்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க நேர்ந்தால் இம்முறை மிகவும் உகந்ததாகும்.

streaming audio :தாரையோட்ட கேட்பொலி.

streaming video :தாரையோட்ட ஒளிக்காட்சி.

street price :சில்லறை விற்பனை விலை : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்புக்கு நுகர்வோர் செலுத்தும் உண்மையான சில்லறை விற்பனை விலை. பெரும்பாலான வேளைகளில் பரிந்துரைக்கப் பட்ட சில்லறை விற்பனை விலையை விடக் குறைவாகவே இருக்கும்.

stress test : தகைவுப் பரிசோதனை; அழுத்தச் சோதனை : ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தகவல்கள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல்.

strikethrough : குறுக்குக் கோடிடல் : தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப்பகுதி மீது ஒன்று அல்லது மேற்பட்ட கோடுகளைப் போடுதல். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி நீக்கப் பட்டதைக் குறிப்பதற்காக இவ்வாறு உரை வரிகளின் மீது குறுக்குக் கோடு போடப்படும்.

strike out : வெட்டி அகற்றல்.

string arithmetic : சரக் கணக்கீடு.

string alphabetic : அகர முதலிச்சரம்.

string buffer : சர இடையகம்.

string, character : எழுத்துச்சரம்.

string constructor : சரம் ஆக்கி.

string data : சரத்தரவு.

string, null : வெற்றுச்சரம்.

strobe : நேரச் சமிக்கை : விசைப் பலகை அல்லது அச்சுப்பொறி போன்ற உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதன இடைமுகங்களின் வழியே, தகவல் கடந்து செல்வதைத் தொடங்கிவைத்து ஒழுங்குபடுத்தும் நேரச் சமிக்கை.

stroke font : கோட்டு எழுத்துரு : கோடுகளின் மூலம் உருவாக்கப்படும் எழுத்துரு. திண்ம வடிவிலான வடிவங்களை நிரப்பிப் பெறப்படும் எழுத்துருக்களுக்கு மாற்றானது.

strong typing : ஆழ இன உணர்வு : நிரலாக்க மொழியிலுள்ள ஒரு பண்புக் கூறு. நிரல் செயல்படுத்தப் படும்போது ஒரு மாறியின் தரவினம் (Data type) மாற்றப்படுவதை அனுமதிக்காமை. அது போலவே, ஒரு செயல்கூறில் வரையறுக்கப் பட்டுள்ள அளபுருக்களும் அச்செயல் கூறினை அழைக்கும்போது தருகின்ற மதிப்புகளும் இனமொத்து இருக்க வேண்டும் என்பதைக் கட்டாய மாக்கும் பண்பு.

structure, file: கோப்புக் கட்டமைப்பு.

structure, tree : மரவுரூக் கட்டமைப்பு.

studies, feasibility: சாத்தியக் கூறாய்வு.

stylus printer: எழுத்தணி அச்சுப்பொறி.

.su : .எஸ்யூ : ஒர் இணைய தள முகவரி முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

subcommand : துணைக் கட்டளை : ஒரு துணைப் பட்டியில் (submenu) இருக்கும் ஒரு கட்டளை. (ஒர் உயர்நிலைப் பட்டியிலிருந்து ஒரு விருப்பத்தேர்வை தேர்வுசெய்யும் போது கிடைக்கும் இன்னொரு பட்டி துணைப்பட்டி எனப்படும்).

subdomain : உள்களம்; கிளைக் களம்.

sub form data sheet : உள்படிவத் தரவுத்தாள்.

subject : உள்ளடக்கம்; உட்பொருள்: கருப்பொருள்.

subject tree : கருப்பொருள் மரம் : வைய விரிவலையில் தகவல்களை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தப்படும் முறை. ஒவ்வொரு வகையும் பல்வேறு கிளைகளாக- உள் வகைகளாக- பிரிக்கப்படும். அடி நிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக்கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வையவிரி வலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு யாகூ தளத்தின் முகப்புப் பக்கப் பட்டியல்.

subnet : கிளைப் பிணையம்; உட்பிணையம் : ஒரு பெரிய பிணையத்தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம்.

subnotebook computer : சிறு கையேட்டுக் கணினி : வழக்கமான மடிக் கணினியைவிடச் சிறிய, எடை குறைந்த கையடக்கக் கணினி.

subscribe : உறுப்பினராகு; சந்தாதாரர் ஆகு : 1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக் குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சேவைகளில் பயனாளர் ஒருவர் உறுப்பினராதல்.

substitute : பதிலீடு.

subtracter : கழிப்பி.

subtraction : கழித்தல்.

subtree : கிளைமரம் : மரவுரு தரவுத் கட்டமைப்பில், ஒரு கணுவிலிருந்து கிளைத்துச் செல்லும் கணுக்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு கிளை மரவுருவாகவே தோற்றமளிக்கும்.

suggestion : கருத்துரை.

suitecase : குட்கேஸ்; (கைப்பெட்டி): மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன் கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக் கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத் தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்.

sum : தொகை.

summary : சுருக்கம்; பிழிவு.

summarize : தொகுத்துக் கூறு : செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்களில் கருத்துக் கணிப்பு நடத்தி மின்னஞ்சல் மூலமாக கருத்துகளைச் சேகரித்து, முடிவுகளைத் தொகுத்து வெளியிடல்,

super : மீத்திறன்; மிகுதிறன்.

super disk : மீத்திறன்வட்டு; மிகுதிறன் வட்டு.

superpipelining : மீத்திறன் இணைச் செயலாக்ககம்: ஒரே நேரத்தில் நுண்செயலி, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்ற வழி செய்யும் முறை இணைச் செயலாக்கம் (pipelining) எனப்படுகிறது. கொணர்தல், குறிவிலக்கல், இயக்குதல், திரும்பி எழுதல் போன்ற நுண்செயலிச் செயல்பாடுகள் சிறுசிறு கூறாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் நுண்செயலி வாளா இருக்கும் நேரம் குறைந்து அதன் செயல்திறன் அதிகரிக்கிறது.

superscalar : மீப்பெரும் அடுக்ககம்: நுண்செயலிக் கட்டுமான வகை. நுண்செயலி, ஒரு கடிகாரச் சுழற்சியில் பல ஆணைகளை இயக்கிட வகைசெய்யும் கட்டுமான முறை. superuser : தலைமைப் பயனாளர் : யூனிக்ஸில் வரம்பற்ற அணுகல் சலுகைகள உடைய பயனாளர். பெரும்பாலும் அவர் முறைமை நிர்வாகியாக இருப்பார்.

super VAR : மீப்பெரும் வார்; மீப் பெரும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் : மிகப்பெரிய அளவிலான விற்பனையை மேற்கொள்ளும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் (Value-Added Retailer) என்பதன் சுருக்கம்.

supervisory programme : மேற்பார்வை நிரல்.

surf : உலாவு; மேய்; பார்வையிடு : இணையத்தில் உலாவுதல். செய்திக் குழுக்கள், கோஃபர் வெளிகள், குறிப்பாக வைய விரி வலையில் தகவல் குவியல்களுக்கு மத்தியில் உலா வருதல். தொலைக்காட்சியைப் பார்க்கும்போது பல்வேறு அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிப் பார்ப்பதுபோல இணையத்திலும் வேறுவேறு தலைப்புகளில் தகவலைத் தேடி இணையத்தளங்களிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி மேலோட்டமாகப் பார்வையிடல்.

surface of revalution: சுழற்சிப் பரப்பு.

surges : எழுச்சிகள்.

surround : சுற்றுவெளி.

surround sound : பல்திசையொலி; சுற்றுவெளி ஒலி.

surge protection: எழுச்சிப் பாதுகாப்பு.

suspend command : இடைநிறுத்தக் கட்டளை: விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிற வகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டித் தேர்வில் இடைநிறுத்து (suspend) என்னும் கட்டளையைத் தேர்வுசெய்தால், கணினியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால் கணினிக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது. விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்தியதும் கணினி மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும்.

sustained transfer rate : தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்; தளராப் பரிமாற்ற வீதம் : வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தகவலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தகவல் பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது.

.sv : .எஸ்வி : ஒர் இணைய தள முகவரி எல்சால்வாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ᏚVC : எஸ்வீசி : இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்கநிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டி இருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்.

ᏚVᏀᎪ : எஸ்விஜிஏ : மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தருவதற்காக 1989ஆம் ஆண்டு ஒளிக் காட்சி மின்னணுத் தரக்கட்டுப்பாட்டு சங்கம் (Video Electronics Standards Association-VESA) உருவாக்கிய ஒளிக்காட்சித் தர வரையறை. எஸ்விஜிஏ ஒரு தர வரையறை என்ற போதிலும் சிலவேளைகளில் ஒளிக்காட்சி பயாஸுடன் ஒத்தியல்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

S-video connector: எஸ்-ஒளிக்காட்சி இணைப்பி : ஒளிக்காட்சிச் சாதனங்களின் நிறச்செறிவு (Chrominance), ஒளிச்செறிவு (Luminance) ஆகியவற்றைத் தனித்தனியே கையாளும் ஒரு வன்பொருள் இடைமுகம். ஆர்சிஏ -வகை அல்லது பிற கலவை இணைப்பிகளைப் பயன்படுத்திப் பெறுகின்ற படிமத்தைவிடக் கூர்மையான படிமத்தை இவ்வகை இணைப்பிகள் தரவல்லவை.

swap . இடமாற்று, மாறுமிகள் : 1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக் கொள்ளல். இரண்டு மாறிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ் வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப் பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுதியையோ, தகவல்களையோ நினைவகத்திலிருந்து வட்டுக்கு, வட்டிலிருந்து நினைவகத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளல்.

switch board manager : நிலைமாற்றிப் பலகை மேலாளர். -

switch mode power supply : நிலைமாற்றிப் பாங்கு மின்வழங்கி.

switch, console: பணியக நிலைாற்றி

switch, toggle : இருநிலைமாற்றி.

switched Ethernet : இணைப்புறு ஈதர்நெட் : ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஒர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம்.

switcher : சுவிட்சர் (நிலைமாற்றி) : மெக்கின்டோஷ் கணினிகளில் உள்ள ஒரு தனிச்சிறப்பான பயன்கூறு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை நினைவகத்தில் தங்கியிருக்கச் செய்யும். பின்னாளில் சுவிட்சருக்குப் பதிலாக மல்ட்டிஃபைண்டர் (பல் முனைத் தேடி) என்னும் வசதி புகுத்தப்பட்டது.

switching : இணைப்பித்தல் ; இணைப்புறுத்தல் : இருமுனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழிமுறை. எடுத்துக்காட்டாக, தொலைபேசி வழியான பிணைய இணைப்பில் அழைத்தவர்க்கும் அழைக்கப்பட்டவர்க்கும் இடையேயான தொடர்பு ஒர் இணைப்பக மையம் வழியேதான் நடைபெறுகிறது. கணினிப் பிணையங்களில் இரண்டு முனைகள் தகவல் பரிமாறிக் கொள்ள செய்தி இணைப்புறுத்தல் பொதி இணைப்புறுத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு முறையிலுமே இடைநிலை நிலையங்கள் மூலம் செய்திகள் திசைவிக்கப் படுகின்றன. இதனால் அனுப்பி/ வாங்கி இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.

switching hub : இணைப்பகக் குவியம் : வெவ்வேறு தகவல் தொடர்பு இணைப்புகளை ஒரு பிணையத்தில் இணைத்து, பிணையத்திலுள்ள கணினிகளுக்கிடையே செய்திகளையும், தகவல் பொதிகளையும் திசைவித்து அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையச் சாதனம்.

switching speed : இணைப்புறு வேகம் : ஏடீம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தில் தகவல் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது. இணைப்புறு வேகம் வினாடிக்கு இத்துணை கிலோபிட்ஸ் அல்லது மெகாபிட்ஸ் என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.

Switch Mode Power Supply (SMPS): நிலைமாற்று முறைமை மின்வழங்கி.

.sy : .எஸ்ஒய் : ஒர் இணைய தள முகவரி சிரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

SYLK file : சில்க் கோப்பு: குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link File என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோப்பு. விரிதாள்களிலுள்ள வடிவமைப்புத் (Formating) தகவல்கள் மற்றும் கல மதிப்புகளுக்கிடையேயான உறவு முறைகள் பாது காக்கப்படுகின்றன.

syllable structure : அசைபிரிப்பி.

symbol font: குறியீட்டு எழுத்துரு : சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு.

symbolic link: குறியீட்டுத் தொடுப்பு: வட்டில் ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புப் பட்டியலில், கோப்பகத்திலுள்ள ஒரு கோப்பினைச் சுட்டும் தொடுப்பினைப் பதிவுசெய்து வைத்தல்.

symbol set : குறியீட்டுத் தொகுதி : ஒரு நிரலாக்க மொழிக்குரிய குறியீடுகள் அல்லது ஆஸ்கியின் நீட்டிப்புக் குறியீடுகள் போன்ற ஒரு தரவுக் குறியாக்க முறைமை (Data Encryption System)யில் அனுமதிக்கப்பட்டுள்ள குறியீடுகளின் திரட்டு.

symbol string : குறியீட்டு சரம்.

symbol table: குறியீட்டு அட்டவனை.

symbolic address: குறியீட்டு முகவரி.

symmetric digital subscriber line : சீரொழுங்கு இலக்கமுறை சந்தாதாரர் இணைப்பு: செப்புக் கம்பிகளில் இரு திசைகளிலும் வினாடிக்கு 384 கிலோ பிட்டுகள் வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை இயல்விக்கும் இலக்கமுறைத் தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்.

SYN : சின்; எஸ்ஒய்என் : ஒத்திசைவு செயல்படா எழுத்து என்று பொருள்படும் Synchronized ldle Character என்பதன் சுருக்கம். நேர ஒத்திசைவுள்ள தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் எழுத்து/குறி. அனுப்பும்/ பெறும் சாதனங்கள் நேர ஒத்திசைவைப் பராமரிக்க இது உதவும்.

synchronous DRAM : ஒத்திசைவு டிரேம் : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகத்தின் (Dynamic Random Access Memory) ஒருவகை. வழக்கமான டி'-ரேம் நினைவகத்தை விட உயர்கடிகார வேகத்தில் செயல் படக் கூடியது. ஒருவகை வெடிப்பு நுட்பத்தின் மூலம், அடுத்து அணுக விருக்கும் நினைவக இருப்பிடத்தை முன்னறிந்து செயல்படும் திறன் படைத்தது.

sychromized : ஒத்திசைந்த.

synchromize now : ஒத்திசைவி.

synchronous UART : ஒத்திசைவு யுஏஆர்டி : யுஏஆர்டி என்பது உலகப் பொதுவான ஒத்திசையா வாங்கி/அனுப்பி (Universal Asynchronous Receiver/Transmitter) என்பதைக் குறிக்கிறது. அனுப்பியும் வாங்கியும் ஒரே நேரச்சமிக்கையைப் பகிர்ந்து கொண்டால் ஒத்திசைவு நேரியல் தகவல் பரிமாற்றம் இயலும்.

sync signal : ஒத்திசை சமிக்கை : ஒத்திசைவுச் சமிக்கை (Synchronization Signal) என்பதன் சுருக்கம். கிடைவரி (Raster) ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. ஒவ்வொரு வருடுவரியின் இறுதியையும் (கிடைமட்ட ஒத்திசைச் சமிக்கை), கடைசி வருடுவரியின் இறுதியையும் (செங்குத்து ஒத்திசைச் சமிக்கை) இது கொண்டிருக்கும்.

syntax analyser: சொற்றொடர் பகுப்பி; சொற்றொடரிலக்கண பகுப் பாய்வி.

synonym dictionary : இணைச்சொல் அகராதி (அகரமுதலி).

syntax checker : தொடரமைப்பு சரிபார்ப்பி : ஒரு நிரலாக்க மொழியில் கட்டளைத் தொடர் அமைப்புகளிலுள் பிழைகளை அடையாளம் காட்டும் ஒரு நிரல்.

synthesis : ஒருங்கிணைவு; இணைப் பாக்கம் : தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு): தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கிணைத்து மனிதப் பேச்சினை செயற்கையாக உருவாக்க முடியும்.

.sys : .சிஸ்: முறைமை தகவமைவுக் கோப்புகளின் வகைப்பெயர். (extention).

sysadmin : சிஸ்அட்மின் : பெரும்பாலான யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் முறைமை நிர்வாகியின் புகுபதிகைப் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி.

system administrator : முறைமை நிர்வாகி : ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழைசொல் (password) வழங்குகிறார். பல்வேறு பாதுகாப்பு அணுகுநிலைகளை உருவாக்குகிறார். சேமிப்பு இடப் பரப்புகளை ஒதுக்கீடு செய்கிறார். அத்துமீறி நுழையும் நபர்களை, நச்சுநிரல்களைக் கண்காணிக்கிறார்.

system, audit of computer : கணினி முறைமைத் தணிக்கை.

system, binary number : இரும எண் முறைமை. system console : முறைமைப் பணியகம் : பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும்.

system, database management : தரவுத் தள மேலாண்மை முறைமை,

system development : முறைமை உருவாக்கம் : ஒரு புதிய முறைமையை வரையறுத்து, வடிவமைத்து, பரிசோதித்து, நடைமுறைப்படுத்தும் செயல்முறை.

system design : முறைமை வடிவமைப்பு.

system disk : முறைமை வட்டு : இயக்க முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம்.

system, disk operating : வட்டு இயக்க முறைமை.

system engineer : அமைப்புப் பொறியாளர்; முறைமைப் பொறிஞர்.

system error : முறைமை பிழை : இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

system file : முறைமைக் கோப்பு : மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள், முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு.

systems flowchart: முறைமை பாய்வு நிரல் படம்.

system font : முறைமை எழுத்துரு : மெக்கின்டோஷ் மற்றும் சில பீசி பயன்பாடுகளில், பட்டித் தலைப்புகள், பட்டித் தேர்வுகள் போன்ற திரைத்தோற்ற உரைகளுக்கு கணினியால் பயன்படுத்தப்படும் எழுத்துரு. (ஆனால் சொல்செயலி அல்லது பிற பயன்பாடுகளில் உருவாக்கப்படும் ஆவணங்களில் இருக்கும் எழுத்துரு அல்ல).

system house : அமைப்பு அகம்; முறைமை அகம்.

system integration : முறைமை ஒருங்கிணைப்பு.

system integrator : முறைமை ஒருங்கிணைப்பி.

system, knowledge based : அறிவு வழி முறைமை.

system library : முறைமை நூலகம்; அமைப்பு நூலகம்.

system, management information : மேலாண்மைத் தகவல் முறைமை.

system manual: முறைமை விளக்க நூல்.

system maintenance : முறைமைப் பராமரிப்பு.

system monitor : முறைமைக் கண்காணி.

system, operating : இயக்க முறைமை.

system priorities : முறைமை முன்னுரிமைகள்.

system programmer : முறைமை நிரலர். system programming : முறைமை நிரலாக்கம்.

system recovery : முறைமை மீட்சி : கணினி செயல்படாமல் முடங்கிப் போகும்போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்பட்ட போது செயல்பாட்டில் இருந்த பணிகளை மூட வேண்டியிருக்கும். பழுதின்போது நினைவகத்திலிருந்து கட்டமைப்புகளை மீட்டுருவாக்க வேண்டியிருக்கும்.

system resource : முறைமை மூலம்; முறைமை வளம் : மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல்கூறுகள், எழுத்துரு வரையறைகள், புறச்சாதன இயக்கிகள் இவற்றுள் அடங்கும்.

system tools : முறைமைக் கருவிகள்.

systems analysis: முறைமை பகுப்பாய்வு,

systems analyst : முறைமை பகுப்பாய்வாளர்.

systems specification : முறைமை விவர வரையறை: முறைமை விளக்கக் குறிப்பு.

systems integration : முறைமை ஒருங்கிணைப்பு : பல்வேறு மூலக் கருவித் தயாரிப்பாளர்களின் (OEMs) பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக உருவாக்கப்படுகின்ற ஒரு கணினி அமைப்பு.

System V : சிஸ்டம் V : ஏடீ&டீ நிறுவனத்தினர் வெளியிட்ட யூனிக்ஸின் ஒரு பதிப்பு. இது தரப்படுத்திய பதிப்பாகும். இதனடிப்படையில் பல்வேறு வணிகத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன.

.sz : .எஸ்இலட் : ஒர் இணைய தள முகவரி ஸ்வாஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.