கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/V

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
V

v:120:வி.120 ஐஎஸ்டிஎன் இணைப்புகளின் வழியாக நடைபெறும் நேரியல் தகவல் தொடர்பு களுக்காக,சர்வதேச தொலை தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய தர வரையறைகள். எளிய அடைவு அணுகல் நெறிமுறை (Lightweight Directory Access Protocol-LDAP) ஒத்த ஒரு நெறிமுறையைப் பயன்படுத்தி தகவல், பொதியுறையிடப்பட்டு அனுப்பப்படுகிறது. ஒரு தகவல் தொடர்புத்தடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை ஒன்று சேர்த்து அனுப்பிவைக்க முடியும். W20,W30:வி20,வி30: என்இசி நிறுவனம் உருவாக்கிய நுண்செயலிகள். இன்டெல் 8088, 8086 ஆகியவற்றை விட சற்றே மேம்பட்டவை. அதே ஆணைத் தொகுதிகளை, ஆனால் வேறுபட்ட நுண் ஆணைகளைக் (microcode)கொண்டவை.

V.27ter:வி.27டெர்: 2,400 மற்றும் 4,800 பிட்/வினாடி (bps) வேகத்தில் படிமங்களைப் பரிமாற்றம் செய்யக்கூடிய குழு-3 தொலைநகல் முறையில் பயன்படுத்தப்படும் பண்பேற்றத் திட்டமுறை (modulation scheme)க்கான சிசிஐடிடி (இப்போது ஐடியு-டீ என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு பரிந்துரைத்த வரன் முறைகள்.

V.29:வி.29: 9,600 மற்றும் 7,200 பிட்/வினாடி (bps) வேகத்தில் தொலைபேசி இணைப்பு வழியாக படிமங்களை அனுப்புகின்ற குழு-3 தொலைநகல் முறையில் பயன்படுத்தப்படும் பண்பேற்ற திட்டமுறைக்கான, சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) பரிந்துரைத்த வரன் முறைகள்.

V.32 turbo:வி.32 டர்போ: 19,200 பிட்/வினாடி (bps) வேக இணக்கி (மோடம்)களுக்காக ஏடி&டி நிறுவனம் உருவாக்கிய நெறிமுறை. சிசிஐடிடி வி.32 தரம் நிர்ணயித்துள்ள வேகத்துடன் ஒத்தியல்பானது. ஆனால் இந்த நெறிமுறை ஏடி&டீயின் தனியுரிமையுடையதாகும். சிசிஐடிடி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிசிஐடிடி-யின் வி-வரிசையில் V.32 டர்போவுக்குப் பதிலாக வி.34 இடம்பெற்றுள்ளது.

V.54:வி.54: இணக்கி(மோடம்)களில் மடக்கு சோதனைச் சாதனங்களின் (Loop test devices) செயல்பாடுகளை வரன்முறைப்படுத்தும்,சிசிஐடிடீ (இப்போது ஐ.டீ.யு.டி) அமைப்பின் பரிந்துரை.

V.56bis :வி.56பிஸ்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) பரிந்துரைத்த பிணையப் பரப்புகை மாதிரியம்.இரண்டு கம்பிகளுள்ள குரல்வழி இணைப்புகளில் இணக்கிகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கானது.

va:விஏ: ஓர் இணையதள முகவரி வாட்டிகன் நகரைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

validation rule:செல்லுபடி விதி; ஏற்புத் தகுதி விதி.

validation suite:செல்லுபடி சோதனைத் தொகுதி:ஒரு நிரலாக்க மொழியின் வரையறுக்கப்பட்ட வரன்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை அளவிடு வதற்கான சோதனைகள் அடங்கிய ஒரு தொகுதி.

validation text:செல்லுபடி உரை.

validity check:ஏற்புத்தகுதிச் சரிபார்ப்பு: செல்லுபடிச் சரிபார்ப்பு : பெறப்படுகின்ற தகவல் முன்வரையறுக்கப் பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர்மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு.

value added network(WAN):மதிப்பேற்று பிணையம்.

value-added reseller:மதிப்பேற்று மறுவிற்பனையாளர்: வன்பொருள், மென்பொருள்களை மொத்தமாக வாங்கி, பராமரிப்பு போன்ற பயனாளர்களுக்கான சேவைகளையும் இணைத்து பொதுமக்களுக்கு மறுவிற்பனை செய்யும் ஒரு குழுமம்.

value list:மதிப்புப் பட்டியல்: தரவுத்தளம் போன்ற பயன்பாட்டுத்தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தகவலைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string),அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்படும் மதிப்புகளின் பட்டியல்.

value, null:வெற்று மதிப்பு: இல் மதிப்பு.

value type:மதிப்பு இனம். சி மொழியில் int,char,float மூல தரவு இனங்களும் "மதிப்பு இனம்" எனப்படுகின்றன.சி# மொழியில் இத்தகு "மதிப்பு இனம்" தவிர ஆகியவை class, interface,delegate ஆகியவை "குறிப்பு இனம்" என வகைப்படுத்தப்படுகின்றன.

.vancouver.ca:வான்கூவர்.சிஏ. ஓர் இணையதள முகவரி கனடா நாட்டு வான்கூவர் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vapourphase refrigiration:ஆவி வழி குளிரூட்டு முறை.

variable address:மாறு முகவரி.

variable block:மாறு தொகுதி.

variable expression:மாறுநிலைத் தொடர். குறைந்தபட்சம் ஒரு மாறியை (variable) அடிப்படையாகக் கொண்டுள்ள கணக்கீட்டுத் தொடர்.எனவே நிரல் இயங்கும்போது கட்டாயமாக மதிப்பு கணக்கிட வேண்டிய தொடராக இது இருக்கும்.

variable field:மாறு புலம்.

variable length:மாறு நீளம்.

variable-length record:மாறு நீள ஏடு: மாறுநீளப் புலங்களைக் கொண்டுள்ள ஏடு. அல்லது மாறுபட்ட எண்ணிக்கையிலான புலங்களைக் கொண்டுள்ள ஏடு,குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில புலங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இதன்காரணமாய் தரவுத் தளத்தில் ஒவ்வொரு ஏடும் வெவ்வேறு நீளத்தில் இருக்க வாய்ப்புண்டு.

variable resistor:மாறு மின்தடை.

variables:மாறிகள்.

variation:மாறுபாடு.

.va.us:வி.ஏ.யு.எஸ்: ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

VBX:விபிஎக்ஸ்:விசுவல் பேசிக் வழக்காற்று இயக்குவிசை என்பதன் சுருக்கம்.ஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டு மென்பொருளில் ஒரு சிறு பணியை முடிப்பதற்காக தனியே உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கூறு.விபிஎக்ஸ் என்பது ஒரு தனியான இயங்கு கோப்பாகும்.இது பெரும்பாலும் விசுவல் பேசிக் மொழியில் எழுதப்பட்டிருக்கும். பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது இயங்கு நிலையில் பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.விசுவல் பேசிக்கில் எழுதப்படாத பயன்பாடுகளில்கூட விபிஎக்ஸ் இயக்குவிசைகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.விபிஎக்ஸ் தொழில்நுட்பத்தை மைக்ரோ சாஃப்ட் உருவாக்கிய போதிலும் பெரும்பாலான விபிஎக்ஸ் இயக்கு விசைகளை மூன்றாம் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன.விபிஎக்ஸ் இன்னும் பயன்பாட்டில் இருந்தபோதிலும், தற்போது அதற்குப் பதிலாக ஒசிஎக்ஸ்,ஆக்டிவ் எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

.VC:விசி:ஓர் இணையதள முகவரி மேற்கிந்தியத் தீவுகளான செயின்ட் வின்சென்ட், கிரினே டைன்ஸ், விண்டுவார்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VCACHE:விகேஷ்:விண்டோஸ் 95 விஃபேட் (VFAT) இயக்கியுடன் பயன்படுத்தப்படும் வட்டு இடைமாற்று மென்பொருள். 32-பிட் குறிமுறை கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் செயல்படக் கூடியது.ரேம் நினைவகத்தில், இடைமாற்றுப் பணிக்காகப் பயனாளர் தலையிட்டு நினைவக ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. விகேஷ், தானாகவே இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கும்.

WCOMM:விகாம்: விண்டோஸ் 95 இயக்க முறைமையில் இயங்கும் தகவல் தொடர்புக்கான சாதன இயக்கி (device driver). இது, ஒருபுறம் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கும் இயக்கிகளுக்குமான இடைமுகத்தையும், மறுபுறம் துறை இயக்கிகள், இணக்கிகளுக்கான இடைமுகத்தையும் வழங்குகின்றது.

VCR-style mechanism:விசிஆர் பாணி பொறிநுட்பம்: 1.கணினியில் திரைப்படக் கோப்புகளை இயக்க, திரையில் தோற்றமளிக்கின்ற,ஒளிக்காட்சிப் பேழைப்பதிவி (VCR) போன்று தோற்றமளிக்கின்ற ஒரு பயனாளர் இடைமுகம் (user inter face) 2.ஒரு மடிக்கணினியையோ, ஒரு கையேட்டுக் கணினியையோ,பணிநிலையக் கணினி தன்னுடன் பொருத்திக் கொள்வதற்கென அமைந்துள்ள இழுபொறி பொருத்து பொறிநுட்பம். மின்சார அடிப்படையில் முரண்பாடில்லாத பாதுகாப்பான பாட்டை இணைப்பு ஆகும்.

vendor code:விற்குநர் குறியீட்டெண்: வணிகர் குறியீட்டெண்,

venn diagram:வென் வரைபடம்: கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம்.ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும்.அதனுள் இருக்கும் வட்டங்கள்,பொருள்களின் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு கணங்களுக்கிடையேயான உறவுமுறையை இரு வட்டங்களின் இடநிலையைக் கொண்டு அறியலாம்.இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தருக்கவியல் அறிஞர் திரு.ஜான் வென் (1834-1923) அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

verbose:நீள்விளக்கம்; நீள்செய்தி: மிகச் சுருக்கமான குறிமுறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட,ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல்.

verification:சரிபார்த்தல்.

verifier,automatic:தானியங்குச் சரிபார்ப்பி.

verifier,card :அட்டைச் சரிபார்ப்பி.

verifier,key:விசைச் சரிபார்ப்பு.

verifier,paper tap:தாள்நாடா சரிபார்ப்பி.

VERONICA:வெரோனிக்கா: மிக எளிதில் தேடிக் காணக்கூடிய,கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நெவேடா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை.திறவுச்சொற்கள் அடிப்படையில் கோஃபர் காப்பகங்களைத் தேடிக்கண்டறியும். பயனாளர்கள் தேடலை விரிவாக்கவோ, குறுக்கவோAnd,Or,போன்ற தருக்கச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.தேடிய தகவல் கிடைக்கப்பெறின்,ஒரு புதிய கோஃபர் பட்டியலை உருவாக்கித்தரும்.

vertical:நெடுக்கு:செங்குத்து.

vertical application:செங்குத்துப்பயன்பாடு. ஒரு குறிப்பிட்ட வணிகம் அல்லது தொழிலின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புநிலைப் பயன்பாடு.(எ-டு):ஓர் உணவகத்தின் விலைப்பட்டி,அன்பளிப்புகள் மற்றும் கையிருப்புக் கணக்குகளைக் கவனிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்.

vertical bandwidth:செங்குத்து அலைக்கற்றை: ஒரு காட்சித் திரை எந்த வீதத்தில் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் அளவீடு. ஹெர்ட்ஸில் (Hz) குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் காட்சித் திரைகளின் செங்குத்து அலைக்கற்றை 45 ஹெர்ட்ஸ் முதல் 100 ஹெர்ட்ஸ்வரை இருக்கும்.

vertical blanking interval:செங்குத்து வெறுமையாக்க இடைவெளி. கிடைவரி-வருடு திரைக்காட்சியில் செங்குத்துவாக்கில் ஒருமுறை திரும்பிவர மின்னணுக்கற்றை எடுத்துக் கொள்ளும் நேரம்.

vertical feed:செங்குத்துச் செலுத்துகை

vertical frequency:செங்குத்து அலைவரிசை.

vertical retrace:செங்குத்து திரும்புகை: கிடைவரி-வருடு(Raster Scan) திரைக்காட்சியில் மின்னணுக்கற்றை திரைமுழுக்க நிரப்பிய பின், கீழ் வலது மூலையிலிருந்து மேல் இடது மூலைக்குத் திரும்பி வருதல்.

'vertical sync signal:செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கை: கிடைவரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டு கின்ற ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி.

very-high-speed integrated circuit: மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று: மிக அதிக வேகத்தில் செயல்பாடுகளை,குறிப்பாக தருக்கநிலைச் செயல்பாடுகளை நிறைவேற்றக் கூடிய ஒர் ஒருங்கிணைப்பு மின்சுற்று.

Very Large Database:மிகப்பெரும் தரவுத்தளம்: நூற்றுக்கணக்கான கிகா பைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தகவல்களைக் கொண்ட தரவுத்தள அமைப்பு. பொதுவாக மிகப்பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும்.கோடிக்கணக்கான ஏடுகள் உள்ள ஆயிரக்கணக்கான அட்டவணைகளைக் கொண்டிருக்கும்.வேறுவேறு பணித்தளங்களிலும், வெவ்வேறு இயக்க முறைமைகளிலும் செயல்படுவதாக இருக்கும்.பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுடன் இயைந்து செயல்படுவதாக இருக்கும்.

Very Large Memory:மிகப்பரந்த நினைவகம்: மிகப்பெரும் தரவுத் தளத்தோடு தொடர்புடைய மிகப் பெரும் தகவல் தொகுதிகளைக் கையாள்வதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு நினைவக அமைப்பு.முதன்மை நினைவகத்தை அணுகுவதற்கு 64-துண்மி(பிட்) ரிஸ்க்(RISC) தொழில்நுட்பத்தை இந்தவகை நினைவகங்கள் பயன்படுத்துகின்றன.ஒரு கோப்பின் அளவு 2 மெகாபைட் வரை இருக்கலாம்.14 ஜிபி நினைவகத்தை இடைமாற்று நினைவகமாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

very large scale integration (VLSI): பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்.

Very Long Data Book (VLDB):மிக நீண்ட தரவுப் புத்தகம்.

VESA1:வேசா1: விஎல் பாட்டை விரிவாக்கச் செருகுவாய்கள்.

VESA2:வேசா2: ஒளிக்காட்சி மின்னணுவியல் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப்பு எனப்பொருள்படும் Video Electronics Standards Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒளிக்காட்சி மற்றும் பல்லூடக சாதனங்களின் தரங்களை மேம்படுதுவதை நோக்கமாகக் கொண்ட வன்பொருள் உற்பத்தியாளர்களையும் விற்பனையாளர்களையும் கொண்ட ஓர் அமைப்பு. காட்சித் தரவுத் தடம் (Display Data Channel-DDC), காட்சி மின் சார மேலாண்மை சமிக்கையாக்கம் (Display Power Management-Signalling-DPMS), வேசா உள்ளகப் பாட்டை (VESA Local Bus-VL Bus) போன்ற தர வரையறைகள் இவ்வமைப்பு உருவாக்கியவற்றுள் அடங்கும்.

V.everything வி.எல்லாம்;வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) குறிக்க, சில இணக்கி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்ற சந்தைச் சொல்.ஒரு வி.அனைத்தும் இணக்கி அதே வேகத்தில் செயல்படும் வேறெந்த இணக்கியுடனும் ஒத்தியைந்து செயல்படும்.

V.Fast Class:வி.வேக வகுப்பு: வி.வேக இனக்குழு:வழக்கிலிருந்த தர வரையறையான வி.34 நெறி முறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம்,இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய,ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை.வி.வேக வகுப்பு,வி.34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28.8கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன்பெற்றவை என்ற போதிலும் வி.வேக வகை இணக்கிகள் வி.34 இணக்கிகளுடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாது. வி.வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

VFAT:விஃபேட்: மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் 95 இயக்க முறைமையில்,வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (Installable File System Manager-IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென்பொருள் இது.விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல்படக்கூடியது.விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக் கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache)-ஐப் பயன் படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது.

vg:விஜி:ஓர் இணையதள முகவரி அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VGA:விஜிஏ: ஒளிக்காட்சி வரை கலைத் தகவி என்று பொருள்படும் Video Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இஜிஏ (EGA-Enhanced Graphics Adapter) தகவியின் அனைத்து ஒளிக்காட்சிப் பாங்குகளையும்,கூடுதலான பல பாங்குகளையும் கொண்ட ஓர் ஒளிக்காட்சித் தகவி.

'VHLL:விஹெச்எல்எல்: மீவுயர் நிலை மொழி என்று பொருள்படும் Very High Level Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.Vi:விஐ: ஓர் இணையதள முகவரி பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Vi1:விஐ1:காட்சி எனப்பொருள்படும் visual என்பதன் சுருக்கம். யூனிக்ஸில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முழுத்திரை உரைத்தொகுப்பி.மிகத் திறன்வாய்ந்த விசைப்பலகைவழிக் கட்டளைகளையும் உள்ளடக்கியது.இயலறிவால் எளிமையாகப் புரிந்துகொள்ளும் கட்டளைகள் என்று சொல்ல முடியாது.இமேக்ஸ் (Emacs) போன்ற பல்வேறு நவீன உரைத்தொகுப்பிகள் வந்துவிட்ட போதிலும் யூனிக்ஸில் விஐ உரைத்தொகுப்பி இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Vi2:விஐ2: யூனிக்ஸில் விஐ உரைத்தொகுப்பி மூலம் ஒரு கோப்பினைக் கையாள்வதற்கான கட்டளை,vi letter.txt எனக் கட்டளை அமைப்பின் letter.txt என்னும் கோப்பு திரையில் விரியும். .victoria.ca:விக்டோரியா.சிஏ ஓர் இணையதள முகவரி கனடா நாட்டு விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

video capture device:ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்: தொடர்முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலைவட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்வு சாதனங்கள்,இலக்கமுறை ஒளிக்காட்சிகளை விசிஆரில் பயன்படுத்துவதற்கேற்ற தொடர்முறை சமிக்கைகளாக மாற்றும் திறன் படைத்தவை.

video clip:ஒளிக்காட்சித் துணுக்கு: ஒரு நீண்ட ஒளிக்காட்சிப்பதிவிலிருந்து துணித்து எடுக்கப்பட்ட ஒரு குறுகிய காட்சியை உள்ளடக்கிய கோப்பு.

video compression:ஒளிக்காட்சி இறுக்கம்: இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும் முறை.இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில்,24துண்மி(பிட்) நிறம் கொண்ட 640x480 படப்புள்ளி தெளிவுள்ள ஒர் ஒளிக்காட்சிப் படத்தின் ஒரு சட்டம் ஒரு மெகாபிட் அளவிருக்கும்.ஒரு நிமிடப்படம் ஒரு கிகாபைட் அளவிருக்கும்.படிமத்தின் இயல்பான தரம் குறையாவண்ணம் ஒளிக்காட்சி இறுக்கம் சாத்தியம்.

video conferencing:ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்; காட்சிவழி உரையாடல்; ஒளிக்காட்சிக் கருத்தரங்கு நிகழ்பட கலந்துரவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டு ஒரு கலந்துரையாடலில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதிகொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முறை ஒளிக்காட்சிகளையும், செயற்கைக்கோள் தொடர்புகளையும் பயன்படுத்தி இவ்வகைக் கலந்துரையாடல் நடைபெற்றது.தற்போது இறுக்கிச் சுருக்கப்பட்ட இலக்கமுறைப் படிமங்கள் விரிபரப்புப் பிணையம் அல்லது இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.56கே தகவல் தொடர்புத் தடம் உறை நிலை-சட்ட ஒளிக்காட்சியை ஏற்கிறது.1.54 எம்பிபீஎஸ் (T1) தடத்தில் முழு-அசைவு ஒளிக்காட்சிப் படங்களை அனுப்பிவைக்க முடியும்.

video display:ஒளிக்காட்சி திரை: ஒளித்தோற்றக் காட்சி சாதனம்; நிகழ்படக்காட்சி: கணினி வெளியீடான உரைப்பகுதி,வரைகலை போன்ற வற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன்பெற்ற ஒரு சாதனம்.

video display board:நிகழ்படக்காட்சி அட்டை; ஒளித்தோற்றக் காட்சி அட்டை: கணினியின் முதன்மை முறைமைப் பலகையின் அங்கமாக இல்லாமல்,ஒரு விரிவாக்க அட்டையாக இருக்கும் ஒளிக்காட்சித் தகவி.

video display metafile:ஒளி தோற்றக் காட்சி மீஇயல்கோப்பு: படிமங்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பி வைக்கத் தேவையான ஒளிக்காட்சித் தகவல்களைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. video display page:ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்: ஒரு முழுத் திரைப்படிமத்தைக் கொண்டுள்ள,கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி.இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை புதுப்பித்தல் மிக வேகமாக நிறைவு பெறமுடியும்.ஏனெனில் ஒரு பக்கம் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது பார்க்கப்படாத பக்கத்தை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ளமுடியும்.

video display unit (VDU):ஒளித்தோற்றக் காட்சியகம்; '

video driver:ஒளிக்காட்சி இயக்கி: ஒளிக்காட்சித் தகவி வன்பொருளுக்கும் இயக்கமுறைமை உட்பட பிற நிரல்களுக்கும் இடையே ஓர் இடைமுகத்தை வழங்கும் மென்பொருள்.திரையில் தெரியும் படிமங்களின் தெளிவு மற்றும் நிற ஆழத்தைப் பயனாளர் இந்த இயக்கி நிரல் மூலமாக விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும்.

video editor:ஒளிக்காட்சித் தொகுப்பி: ஓர் ஒளிக்காட்சிக் கோப்பின் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் அல்லது நிரல்.

video graphics board:ஒளிக்காட்சி வரைகலைப் பலகை: ஓர் ஒளிக்காட்சித் திரையில் வரைகலைப் படிமங்களைக் காண்பிக்க ஒளிக்காட்சிச் சமிக்கைகளை உருவாக்குகின்ற ஓர் ஒளிக்காட்சித் தகவி.

video graphics adapter card:ஒளிக்காட்சி வரைகலைத் தகவி அட்டை

videoline mail:ஒளிக்காட்சி அஞ்சல்; நிகழ்பட அஞ்சல்,ஒளிப்பட அஞ்சல்,video memory ஒளிக்காட்சி நினைவகம்:ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப்படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்டுள்ள நினைவகப்பகுதி.இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக் காட்சித் துணை அமைப்புக்குத் தான் முன்னுரிமை அதிகம்.எனவே,முதன்மை நினைவகத்தை அணுகு வதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும்.

video mode:ஒளிக்காட்சி பாங்கு: ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும் முறை.பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப் பாங்கும் வரைகலைப் பாங்கும்.உரைப்பாங்கினில் எழுத்து,எண்,குறிகள் போன்ற குறியீடுகள் எதுவும் படப்புள்ளிகளால் திரையில் வரையப்படுவதில்லை. ஆனால்,வரைகலைப் பாங்கினில் எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் அனைத்துத் திரைப் படிமங்களுமே படப்புள்ளிகளின் தோரணிகளாக ஒரு நேரத்தில் ஒரு புள்ளி வீதம் திரையில் வரையப்படுகின்றன.

video noise:ஒளிக்காட்சி இரைச்சல்.

video picture:ஒளிக்காட்சிப் படம்.

videophone:ஒளிக்காட்சிப் பேசி: படப்பிடிப்பி (camera),திரை(screen),நுண்ஒலிவாங்கி(Microphone),ஒலிபெருக்கி(Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம். ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது.வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக்காட்சிப் பேசியினால் உறைநிலை-சட்ட ஒளிக் காட்சியை மட்டுமே அனுப்ப முடியும்.

video port:ஒளிக்காட்சித் துறை: ஒரு கணினியிலிருந்து திரையகத்துக்கு ஒளிக்காட்சிச் சமிக்கைகளை அனுப்பிவைக்கப் பயன்படும் வடத்தினை இணைக்கும் இணைப்புவாய்.

video server:ஒளிக்காட்சி வழங்கன்: கேட்டதும் கிடைக்கும் இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் அகலக்கற்றை ஊடாடு சேவைகளை ஒரு விரிபரப்புப்பிணையம் வழியாகப்பொதுமக்களுக்கு வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட வழங்கன்

video standard:ஒளிக்காட்சி தரம்.

video tape:ஒளிக்காட்சி நாடா.

viewer:காட்சிப்படுத்தி:ஒரு கோப்பின் வெளிப்பாட்டை அதனை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்பு காண்பிக்கும் அதே முறையில் திரையில் வெளிப்படுத்தும் ஒரு மென்பொருள். எடுத்துக்காட்டு: ஜிஃப்,ஜேபெக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள படிமங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் காட்சிப் படுத்தும்.

vine:வைன்,படர்கொடி: ஒலி நாடாத் தகவலை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக்கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர்கொடி நாடாக்களில் இலக்கமுறை வடிவத்தில் தகவல் பதியப்படுகிறது.எனவே நகலெடுப்பதால் ஒலியின்தரம் குறைந்துபோவதில்லை.

virtual card calling:தொலைபேசி அழைப்பு அட்டை:மெய்நிகர்அட்டை அழைப்பு.

virtual channel:மெய்நிகர் தடம்: ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM) ஒரு அனுப்பியிலிருந்து ஒரு வாங்கிக்கு அனுப்பப்பட்ட ஒரு தகவல்,பயணம் செய்கிற பாதை.

virtual circuit: மெய்நிகர் மின்சுற்று; அனுப்பிக்கும் வாங்கிக்கும் இடையே நேரடி இணைப்பு இருப்பது போன்று தோற்றமளிக்கும் ஒரு தகவல் தொடர்பு இணைப்பு.ஆனால் உண்மையில் அவ்விணைப்பு பல சுற்றுப் பாதைகளில் சுற்றி இணைக்கப்பட்டிருக்கும்.

virtual classroom training:மெய்நிகர் வகுப்பறைப் பயிற்சி.

virtual community:மெய்நிகர் குழுமம்: மெய்நிகர் சமூகக்குழு.

virtual control programme interlace: மெய்நிகர் கட்டுப்பாட்டு நிரல் இடைமுகம்: இன்டெல் 386 மற்றும் மேம்பட்ட செயலிகள் உள்ள கணினிகளில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற பல்பணிச் சூழலில் எம்எஸ்-டாஸ் நிரல்கள் விரிவாக்கப்பட்ட நினைவகத்தை அணுக அனுமதிப்பதற்கான வரன்முறை.

virtual desktop:மெய்நிகர் முகப்புத்திரை: விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதி யிலும் பரவியிருக்கும்.அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும்.இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குறுவழி (shortcut)/ பயன்கூறுகளை (utilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல்.முகப்புத்திரை மேம்படு நிரல்.

virtual device:மெய்நிகர் சாதனம்: பருநிலையில் நிலவாத ஆனால் நிரல்கள் மூலம் குறிப்பிடப்படும் ஒரு சாதனம்.(எ-டு) மெய்நிகர் நினைவகம் என்பது,முதன்மை நினைவகத்தில் இடமில்லாதபோது நிலைவட்டில் ஏற்படுத்தப்படும் தற்காலிக நினைவகப்பகுதி.இதே போல, நினைவகத்தில்,ஒரு மெய்நிகர் வட்டுப்பகுதியை உருவாக்க முடியும்.

virtual device driver:மெய்நிகர் சாதன இயக்கி: விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள்.வளத்தினை மேலாண்மை செய்கின்ற ஒரு மென்பொருள்.ஒரு வளம்,முதல் அணுகலுக்கும் அடுத்த அணுகலுக்கும் இடையே சில தகவல்களைத் தக்கவைத்துக்கொள்கிறது எனில் (எ-டு:ஒரு வட்டுக்கட்டுப்படுத்தியில் நிலைமைத் தகவல் மற்றும் இடையகங்கள்), அதற்கான மெய்நிகர் சாதன இயக்கி ஒன்று இருக்க வேண்டும்.பொதுவாக,மெய்நிகர் சாதன இயக்கிகள் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும்.முதல் எழுத்து V ஆகவும் கடைசி எழுத்து D ஆகவும் இருக்கும்.நடு எழுத்து சாதன வகையைக் குறிக்கும்.எடுத்துக்காட்டாக D என்பது திரைக்காட்சி (Display),P என்பது அச்சுப்பொறி (Printer),T என்பது நேரங்காட்டி (Timer) என இருக்கும்.குறிப்பிட்ட சாதனவகை இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது எனில் x என இருக்கும். அதாவது,மெய்நிகர் சாதன இயக்கி Vxd என இருக்கும்.

virtual excution system:மெய்நிகர் செயற்பாட்டு முறைமை.

virtual library:மெய்நிகர் நூலகம்.

virtual image:மெய்நிகர் படிமம்: கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால்,முழுப் படிமத்தையும்,அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது.இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை உருட்டி,விரித்துப் பார்வைக்குக் கொண்டுவரமுடியும்.

virtual-image file:மெய்நிகர் படிமக்கோப்பு: ஒரு குறுவட்டில் (CD-ROM) பதியவிருக்கின்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு கோப்பு.குறுவட்டில் பதியவிருக்கின்ற அனைத்துக் கோப்புகளும் ஓரிடத்தில் திரட்டப்படுவதற்குப் பதிலாக,அக்கோப்புகளுக்கான சுட்டுகள் (pointers) மெய்நிகர்-படிமக் கோப்பில் இடம் பெற்றிருக்கும்.பதியப்பட வேண்டிய கோப்புகள் நிலைவட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கலாம்.

virtual home for the holidays:வீடு முறைக் காலத்து மெய்நிகர் இல்லம்.

virtual LAN:மெய்நிகர் லேன்: வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN).இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை.என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவை போலவே தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. virtual memory management:மெய்நிகர் நினைவக மேலாண்மை.

virtual name space:மெய்நிகர் பெயர்வெளி: ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி.அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை,மெய்நிகர் பெயர்வெளியில் அப்பொருளின் இருப்பிடப் பாதையைக் குறிக்கிறது.அக்கணினி அமைப்பில்,அப்பாதையில் குறிப்பிட்ட படிநிலையில் பொருள்கள் அமைந்துள்ளனவா என்பது முக்கியமில்லை.எ-டு): ஒரு வலை வழங்கனின் மெய்நிகர் பெயர்வெளி என்பது,அந்த வழங்கன் செயல்படும் பிணையத் திலுள்ள அனைத்து யுஆர்எல்களின் முகவரிகளைக் குறிக்கிறது.

virtual network:மெய்நிகர் பிணையம்: ஒரு பிணையத்தின் ஒரு பகுதி,பயனாளரைப் பொறுத்தமட்டில் அதனளவில் ஒரு பிணையமாகத் தோற்றமளித்தல்.எடுத்துக்காட்டாக,ஓர் இணையச் சேவையாளர் ஒற்றை ஹெச்டிடிபீ வழங்கனில் பல களங்களை(domains)அமைத்து,ஒவ்வொன்றையும் அவர்களுடைய குழுமத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட களப்பெயரின் வாயிலாகவே அணுகுமாறு செய்யலாம்.

virtual object system (VOS):மெய்நிகர் பொருள் முறைமை.

virtual path:மெய்நிகர் பாதை:1.ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள்.அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும்.ஆனால்,அக்கோப்பு பதிவாகியுள்ள உண்மையான கோப்பக வரிசையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.எடுத்துக்காட்டாக,வழங்கன் கணினியின் பெயரைத் தொடர்ந்து வரும் யூஆர்எல்லின் ஒரு பகுதியை மெய்நிகர் பாதை எனலாம்.2.ஒத்திசையாப் பரிமாற்ற பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM)பிணையம் வழியாக,ஒன்றாக இணைக்கப்படும் மெய்நிகர் தடங்களின் பிணைப்பை மெய்நிகர் பாதை என்று கூறலாம்.

virtual printer:மெய்நிகர் அச்சுப்பொறி: அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் ஒரு வெளியீட்டுத் தகவலை,அச்சுப்பொறி கிடைக்கும் வரை (தயாராகும் வரை) ஒரு கோப்பினில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி.பெரும்பாலான இயக்க முறைமைகளில் இவ்வசதி உள்ளது.

virtual private network:மெய்நிகர் தனியார் பிணையம்:1.இணையம் போன்ற பொதுப் பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக் கணினிகளின் தொகுதி.மறையாக்கத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி,வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம்,ஒரு தனியார் பிணையம் போன்றே பாதுகாப்பான முறையில் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளல். 2.வேறொரு பிணையத்தின்மீது நிலையான மெய்நிகர் மின்சுற்றுகளின் வழியாக அமைக்கப்பட்ட ஒரு விரிபரப்புப் பிணையம். குறிப்பாக,ஏடிஎம் அல்லது சட்டகம் (frame) போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணையம். virtual reality helmet:மெய்நிகர் நடப்புத் தலைக்கவசம்.

virtual real mode:மெய்நிகர் உண்மைப் பாங்கு:இன்டெல் 80386 (எஸ்எக்ஸ் மற்றும் டிஎக்ஸ்),மற்றும் அதைவிட மேம்பட்ட நுண்செயலிகளில் இருக்கும் ஒரு பண்புக்கூறு. ஒரே நேரத்தில் பல்வேறு 8086 (உண்மைப் பாங்கு) சூழல்களை உருவாக்கிக் காட்டமுடியும்,ஒவ்வொரு மெய்நிகர் 8086 சூழலுக்கும் தேவையான மெய்நிகர் பதிவகங்கள் (registers),மெய்நிகர் நினைவகப்பகுதி ஆகியவற்றை இவ்வகை நுண்செயலிகள் வழங்குகின்றன.ஒரு மெய்நிகர் 8086 சூழலில் செயல்படும் ஒரு நிரல்,பிற மெய்நிகர் 8086 சூழல்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன்,கணினியின் முழுக்கட்டுப்பாடும் இந்த நிரலின் கீழ் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தையும் தருகிறது.

virtual root:மெய்நிகர் மூலம்:ஹெச்டீடீபீ அல்லது எஃப்டீபீ வழங்கன் போன்ற இணைய வழங்கனோடு பயனாளர் ஒருவர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது,காண்கின்ற மூலக்கோப்பகம்.மெய்நிகர் மூலம் என்பது உண்மையான மூலக்கோப்பகத்தைச் சுட்டுகின்ற ஒரு சுட்டு ஆகும்.மூலக்கோப்பகம் வேறு கணினியில் இருக்கலாம்.மெய்நிகர் மூலம் வழியாகக் கிடைக்கும் நன்மை என்னவெனில்,ஓர் இணையதளத்துக்கு மிக எளிதாக ஓர் யூஆர்எல் உருவாக்க முடியும்.யூஆர்எல்லுக்கு எவ்விதத் தீங்குமின்றி மூலக்கோப்பகத்தை வேறிடத்துக்கு மாற்ற முடியும்.

virtual screen:மெய்நிகர் திரை:கணினித் திரையின் எல்லைக்கு அப்பாலும் திரையிடப் பயன்படுத்திக்கொள்ளும் பகுதி.மிகப் பெரிய அல்லது மிகப்பல ஆவணங்களைக் கையாள இக்கூடுதல் பரப்பு பயன்படுகிறது.

virtual server:மெய்நிகர் வழங்கன்: ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் கணினிக்குள் இருந்து செயல்படும் ஒரு மெய்நிகர் கணினி,ஆனால் பயனாளரைப் பொறுத்தவரை ஒரு தனி ஹெச்டீடீபீ வழங்கனாகவே காட்சியளிக்கும்.ஒரே ஹெச்டீடீபீ வழங்கனில் பல மெய்நிகர் வழங்கன்கள் இருக்க முடியும்.ஒவ்வொன்றும் தத்தமது நிரல்களை இயக்கிக்கொள்ள முடியும்.ஒவ்வொன்றும் உள்ளிட்டு,வெளியீட்டுச் சாதனங்களைத் தனிப்பட்ட முறையில் அணுக முடியும்.ஒவ்வொரு மெய்நிகர் வழங்கனும் தனிக்களப்பெயரையும் ஐபி முகவரியையும் கொண்டிருக்கும்.பயனாளருக்கு அது தனி வலைத்தளமாகவே தோற்றமளிக்கும். பல இணையச் சேவையாளர்களும்,தத்தமது தனி களப்பெயர்களை வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற மெய்நிகர் வழங்கன்களை வழங்குகின்றனர்.

virtual storefront:மெய்நிகர் அங்காடி.இணையத்தில் ஒரு நிறுவனத்தின் இருப்பு.நிகழ்நிலை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தளம்.

virtual troolfair:மெய்நிகர் காட்சி.

virutal university:மெய்நிகர் கலைக் கழகம்.

virtual world:மெய்நிகர் உலகம்: முப்பரிமாண மாதிரியங்கள் கொண்ட சூழல்.வீஆர்எம்எல் (VRML - Virtual Reality Modelling Language) மொழியில் உருவாக்கப்பட்டது.பயனாளர் அதில் தோற்றமளிக்கும் பொருள்களோடு,நடப்புலகப் பொருள்களைப் போன்றே ஊடாட முடியும்.

virus signature:நச்சுநிரல் அறிகுறி: ஒரு நச்சுநிரலை அடையாளங்காட்டும் கணினிக் குறிமுறை.நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள், பாதிக்கப்பட்ட நிரல்களையும் கோப்புகளையும் கண்டறிய,ஏற்கெனவே அறியப்பட்ட நச்சுநிரல்களின் கணினிக் குறிமுறையைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன.

visible page:தோன்றும் பக்கம்; வெளித்தெரி பக்கம்:கணினி வரைகலையில், திரையில் காட்டப்படும் படிமம்.திரைப் படிமங்கள் காட்சி நினைவகத்தில்,பக்கம் எனப்படும் பகுதிகளில் எழுதப்படுகின்றன.ஒவ்வொரு பக்கமும் ஒரு திரைக்காட்சியைக் கொண்டுள்ளன.

Visual Baisc editor:விசுவல் பேசிக் தொகுப்பி:

Visual Basic For Applications : பயன்பாடுகளுக்கான விசுவல் பேசிக்: விண்டோஸ் 95/98 பயன்பாடுகளுக்கு நிரல் எழுதப் பயன்படுத்தப்படும் விசுவல் பேசிக் மொழியின் ஒரு குறுகிய வடிவம்.மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு பயன்பாடுகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

Visual Basic,Scripting Edition: விசுவல் பேசிக்,உரைநிரல் பதிப்பு: பயன்பாடுகளுக்கான விசுவல் பேசிக் நிரலாக்க மொழியின் ஓர் உட்பிரிவு.இணையம் தொடர்பான நிரலாக்கத்துக்கென உருவாக்கப்பட்டது.ஜாவா ஸ்கிரிப்ட் போன்றே விசுவல் பேசிக் உரைநிரல் பதிப்பின் கட்டளைகளும் ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவி,இதன் நிரல்களை புரிந்து செயல்படுத்தும்.வி.பி ஸ்கிரிப்ட்,விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் என்றும் அழைக்கப்படும்.

Visual C++:விசுவல் சி++;விண்டோஸில் செயல்படக்கூடிய,சி++ நிரலாக்க மொழியின் பயன்பாட்டு உருவாக்க வடிவம்.மைக்ரோ சாஃப்ட் வெளியிடும் விசுவல் ஸ்டுடியோ கூட்டுத் தொகுப்பின் ஓர் அங்கம்.காட்சியடிப்படையான நிரலாக்கப் பணிச்சூழலை வழங்குகிறது.

visual display unit:காட்சித் திரையகம்:

visual display unit,cathode ray tube: எதிர்மின்வாய் கதிர்க்குழாய் காட்சித் திரையகம்:

Visual J++:விசுவல் ஜே++: மைக் ரோசாஃப்டின் காட்சியடிப்படையிலான ஜாவா நிரலாக்கப் பணிச்சூழல். ஜாவா மொழியில் பயன்பாடுகளையும் குறுநிரல்ளையும் உருவாக்கப் பயன்படுகிறது.மைக் ரோசாஃப்ட் விசுவல் ஸ்டுடியோவின் ஓர் அங்கம்.

visual programming:காட்சிநிலை நிரலாக்கம்: நீண்ட கட்டளைத் தொகுதிகளை எழுதிச் செல்வதற்குப் பதில்,பட்டித் தேர்வுகள், பொத்தான்கள்,சின்னங்கள் மற்றும் பிற முன் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து அடிப்படை நிரலாக்கப் பொருள்கூறுகளைத் தேர்வுசெய்து பயன்பாடுகளை உருவாக்க வகைசெய்யும் ஒரு நிரலாக்க வழிமுறை.

visual symbols:காட்சிக்குறியீடுகள்:

VL bus: விஎல் பாட்டை: வே.சா (VESA) உள்ளமை பாட்டை என்பதன் சுருக்கம்.வீடியோ எலெக்ட் ராணிக்ஸ் ஸ்டேண்டர்டு அசோஷியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்திய உள்ளமை பாட்டைக் கட்டுமானத்தில் ஒருவகை.இதன்படி ஒரு பீசி தாய்ப்பலகையில் மூன்று விஎல் பாட்டை செருகுவாய்களை வைத்துக்கொள்ளமுடியும். சி.பீ.யு.வின் துணையின்றி நுண்ணறிவுத் தகவி அட்டைகள் தாமே சில செயல்பாடுகளை நிறைவேற்றும்,பஸ் மாஸ்டரிங் இதில் இயலும். ஒரு விஎல்பாட்டைச் செருகுவாய் வழக்க மான இணைப்பியுடன் கூடுதலாக 16-பிட் நுண்தடக் கட்டுமான இணைப்பியைக் (Micro Channel Architecture Connector)கொண்டிருக்கும். ஆனால்,தயாரிப்பாளரே இதனைத் தாய்ப்பலகையில் உள்ளிணைத்திருக்க வேண்டும். வழக்கமான இணைப்பிகளை விஎல் பாட்டைச் செருகுவாய்களாகப் பயன்படுத்த முடியாது.விஎல் பாட்டைத் தகவி அல்லாத அட்டையை ஒரு விஎல் பாட்டைச் செருகுவாயில் பயன்படுத்த முடியும். ஆனால் அது உள்ளமை பாட்டையைப் பயனபடுத்த முடியாது.எனவே ஒரு சாதாரண பாட்டைச் செருகுவாய் போலவேதான் செயல்படும்.

VLF radiation: விஎல்எஃப் கதிர்வீச்சு: மிகக் குறைந்த அலைவரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலைவரிசைகளில் நிகழும் மின்காந்தக் கதிர்வீச்சு.வானலைக் கதிர்வீச்சு என்றும் கூறுவர். கணினித் திரையகங்கள் இத்தகைய கதிர்வீச்சை உமிழ்கின்றன.கணினித் திரையகம் இத்துணை அளவுதான் விஎல்எஃப் கதிர்வீச்சை உமிழ வேண்டும் என்கிற வரையறையினை எம்பீஆர் ll என்னும் தன்னார்வத் தர வரையறை உள்ளது.

WLIW:விஎல்ஐடபிள்யூ: மிகநீண்ட ஆணைச்சொல் என்ற பொருளைக் குறிக்கும் Very Long instruction Word என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சிறுசிறு எளிய ஆணைகளை ஒன்றுசேர்த்து நீண்ட ஒற்றை ஆணைச்சொல்லாக உருவாக்கும் ஒருவகைக் கட்டுமானம்.இந்நீண்ட ஆணைச்சொல் பல பதிவகங்களை எடுத்துக்கொள்கின்றது.

VM:விஎம்:மெய்நிகர் பொறி எனப்பொருள்படும். Virtual Machine என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெய்நிகர் பொறிச்செயல்திறனை வழங்கும் ஐபிஎம்மின் பெருமுகக் கணினிகளுக்கான இயக்கமுறைமை.

.vn :.விஎன்: ஓர் இணையதள முகவரி வியத்நாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

vocal sounds:பேச்சொலிகள்.

voice answer back:குரல் பதிலுரை; குரல் மறுமொழி:கட்டளைகள்,வினவல்களுக்குப் பதிலுரையாக ஒரு கணினி,ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளைப் பயன்படுத்துதல். voice-capable modem:குரலறி திறனுள்ள இணக்கி: தன்னுடைய தகவல் கையாளும் செயல்பாடுகளோடு குரல்வழிச் செய்திகளையும் ஏற்கும் திறனுள்ள ஒரு இணக்கி.

voice-grade channel:குரல் தரத் தடம்: ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம்.300-3000 ஹெர்ட்ஸ் கேட் பொலி அலைக்கற்றை கொண்ட,குரல் தகவலை அனுப்புவதற்கு ஏற்றது.வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல்,தொடர்முறை,இலக்கமுறைத் தகவல்களை அனுப்பிட ஒரு குரல்-தரத் தடத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

voice.net:குரல்பிணையம்: இணையத்தில் நடைபெறும் தொலைபேசி வழியான தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கும் சொல்தொடர். பெரும்பாலும்,மின்னஞ்சல் ஒப்பத்தின் முன்பாக இடம் பெறுவது.

voice recognition software:குரலறி மென்பொருள்.

voice recorder:குரல் பதிப்பி.

voice synthesizer:குரல் இணைப்பாக்கி.

void:அற்றநிலை.

volt:வோல்ட்: இரு முனைகளுக்கிடையேயான மின்னூட்ட வேறுபாடு அல்லது மின்னியக்கச் சக்தி.1 கூலம்ப் மின்னூட்டம்,1ஜூல் வேலையை முடிக்கும் முனைகளின் மின்னியக்க அளவு 1 வோல்ட் எனக் கணக்கிடப்படுகிறது.(அல்லது) ஓம் மின்தடுப்பி மீது,பாயும் 1ஆம்பியர் மின்னோட்டத்தை வழங்கும் மின்னியக்க வேறுபாடு.

volts alternating current:வோல்ட் மாறுநிலை மின்னோட்டம்: ஒரு மின்சார சமிக்கையின் உச்சம் முதல் உச்சம் வரையிலான மின்னழுத்த வீச்சுகள் அளவீடு,

volume:தொகுதி: பாகம்/ஒலியளவு: 1. கணினித் தகவல்களைச் சேமித்து வைக்கும் ஒரு வட்டு அல்லது நாடா.சில வேளைகளில் மிகப்பரந்த நிலைவட்டுகள் பல்வேறு பாகங்களாகப் பிரிக்கப்படும்.ஒவ்வொரு பாகமும் ஒரு தனி வட்டாகவே கருதப்படும். 2.கேட்பொலி சமிக்கையின் ஒலியளவு.

volume control:ஒலியளவுக் கட்டுப்பாடு.

volume serial number:தொகுதி வரிசை எண்: ஒரு வட்டு அல்லது நாடாவை அடையாளங் காணப்பயன்படும் வரிசை எண். தேவையெனில் வைத்துக்கொள்ளலாம்.எம்எஸ் டாஸ் முறைமையில் தொகுதி வரிசை எண் என்று குறிப்பிடப்படுகிறது.ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் தொகுதிக் குறிப்பு எண்(Volume Reference Number) எனப்படுகிறது.தொகுதி வரிசை எண் என்பது தொகுதிச் சிட்டை (volume label),தொகுதிப்பெயர் என்பதிலிருந்து வேறுபட்டது.

VON:வோன்:இணையத்தில் குரல் எனப் பொருள்படும். Voice on Net என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தின் வழியாக நிகழ்நேரக் குரல் மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை அனுப்புவதற்கான வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பத்தின் ஒரு பரந்த வகைப்பாடு. இச்சொல்தொடரை உருவாக்கியவர் ஜெஃப் புல்வர் (Jef Pulver).வான் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்கியவர்.வான் தொழில்நுட்பத்தை வரைமுறைப்படுத்துவதை எதிர்த்தார்.வான் தொழில்நுட்பத்தை பொதுமக்களிடம் கொண்டுசெல்ல ஆர்வம் காட்டினார்.

Von Neumann Architecture:வான் நியூமன் கட்டுமானம்: சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான் வான் நியூமன் உருவாக்கிய,கணினி அமைப்பின் மிகப்பொதுவான கட்டமைப்பு.நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது.நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்துக்கொண்டு கையாளமுடியும்.பொறி அடிப்படையிலான ஆணைகள் மூலம் அதனை மாற்றியமைக்க முடியும்.வரிசைமுறையிலான செயலாக்கம் இக்கட்டு மானத்தின் சிறப்புக்கூறு. வரிசை முறை ஆணைகளினால் ஏற்படும் குறைபாடுகளைப் போக்க பிற்காலத்தில் இணைநிலை கட்டுமானங்கள் உருவாயின.

VPD:விபீடி: மெய்நிகர் அச்சுப் பொறிச் சாதன இயக்கி என்று பொருள்படும் Virtual Printer Device Driver என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VRML:வீஆர்எம்எல்: மெய்நிகர் நடப்பு மாதிரிய மொழி என்று பொருள்படும் Virtual Reality Modelling Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சில ஒளிக்காட்சி விளையாட்டுகளில் இருப்பதுபோன்ற முப்பரிமாண ஊடாடு வலை வரைகலைக்கான காட்சி விளக்க மொழி.பயனாளர்,வரைகலைப் படிமங்களுடனும், பொருட்களுடனும் சேர்ந்து நடமாடலாம்.1994இல் மார்க் பெஸ்ஸி,டோனி பாரிசின் (Mark Pesce And Tony Parisin)ஆகியோரால் உருவாக்கப்பட்டது. சிலிக்கான் கிராஃபிக்ஸ் நிறுவன இன்வென்டார் கோப்பு வடிவாக்கத்தின் உட்பிரிவாகும் இது. விஆர்எம்எல் கோப்புகளை ஓர் உரைத் தொகுப்பியில் எழுத முடியும்.விஆர்எம்எல் கோப்புகள் ஒரு ஹெச்டீடீபீ வழங்கனில் சேமிக்கப்படுகின்றன.இவற்றுக்கான தொடுப்புகளை ஒரு ஹெச்டீ எம்எல் ஆவணத்தில் சேர்ப்பதன் மூலம் பயனாளர் இக்கோப்புகளை நேரடியாக அணுக முடியும்.

VT-52:TV-100:VT-200:விடீ-52:விடீ-100:விடீ-200: டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் தயாரித்து வெளியிட்ட முனையங்களின் மாதிரி எண்கள்.செல்வாக்குப் பெற்ற கட்டுப்பாட்டுக் குறிமுறைகள் இந்த முனையங்களில் பயன்படுத்தப்பட்டன.ஒரு நுண் கணினியை இதுபோன்ற முனையங்களாகச் செயல்படுமாறு மாற்றியமைக்க அதற்குரிய மென்பொருள் பயன்படுத்தப்படவேண்டும்.

VTD:விடீடி:மெய்நிகர் நேரங்காட்டிச் சாதன இயக்கி என்று பொருள்தரும் Virtual Timer Device Driver என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.vt.us:.வி.டி.யு.எஸ்: ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டு வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

.VU: வியு: ஓர் இணையதள முகவரி வானுவாட்டு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.