கனியமுது/பின்பனி.

விக்கிமூலம் இலிருந்து

கத்துகின்ற அலைபுரளுங் கடல்க டந்தும்
கணக்கற்ற பொருள்தேடல் கடமை என்று,
முத்தப்பன் இளமையிலே மலாயா சென்றான்.
மூன்றாண்டு முதுகொடியப் பாடு பட்டுச்
சொத்துகளை ஓரளவு சேர்த்துக் கொண்டு,
சொந்தவூர் திரும்பி வந்தான் தாயைக் காண!
பித்துடைய பெற்றமனம் மூப்பை எண்ணிப்
பிள்ளைக்கோர் பெண்பார்த்து மணம்மு டித்தாள்.


கரிய நிறம் ஆனாலும் கவர்ச்சிப் பாவை,
கண்முதலாம் ஐம்புலனும் நுகர்தற் கேற்றாள்.
புரியவில்லை இருதிங்கள் போன மாயம்!
புதுமணத்துப் பின்விளைவும் உருவ மாகப்
பிரியவொரு பிரியமில்லை; எனினும், ஆங்கே
பெற்றுவந்த அனுமதிநாள் தீர்ந்த தாலே,
அரியதிருத் தாயார்க்குத் துணையாய் விட்டே

அயல்நாடு புறப்பட்டான்; கயற்கண் ஏங்க!

1

அடுத்துவந்த மழைக்காலம் கொடிதாம், அந்தோ!
ஆங்காரப் புயற்காற்றின் சீற்றம் வேறு!
கெடுத்ததவர் குடியை, அந்தக் கிழவி மாண்டாள்!
கீழ்வீழ்ந்த சுவர்க்கிடையே மகன் பிறந்தான்!
அடுத்தவீட்டுக் கந்தப்பன் உதவா விட்டால்,
அவள் நிலைதான் பாழாகும்! கணவ னுக்கு
விடுத்திட்ட மடல்களுக்கும் பதிலே யில்லை!
விம்மி விம்மி வறுமையினால் உடைமை விற்றாள்!


கடல்கடந்தோன் மனைவிமகன் தாய்ம றந்து,
கண்மூக்குச் சிறுத்திட்ட சீனாக் காரி
இடம் மயங்கிக் கிடந்திட்டான்! எதுசெய் தாலும்
யார் கேட்பார்? ஆண்மகனின் உரிமை யன்றோ?
உடல்முழுதும் போர்வைக்குள் மறைத்த வாறே
உறங்குவதை விரும்புகின்ற பனிவீழ் காலம்-
உடல் நலிவால் இடருற்ற நீலா வுக்கே

ஓடோடிக் கந்தப்பன் துணைபு ரிந்தான்!

2

அயல்நாட்டில் வாழ்வோர்க்குத் தாய்நாட் டில்ஏன்
அழகான ஒருமனேவி தனியே வாடி,
அயல்வீட்டுக் காளேயரின் தொல்லை ஏற்றே,
அங்கங்கள் குறும்பாலே தவறி ழைக்கும்
செயல்மாற்ற வகையற்றுத் திணறும் போக்கைச்
சிந்திக்க முத்தப்பன் முற்புட் டானா?
பயல்மட்டும் தன்இன்பம் பார்த்துக் கொண்டான்!
பாவையவள்ஏழ்மையினால் பெண்மைகெட்டாள்!

கங்தப்பன் ஊர்வாயை மூடு தற்குக்,
கைக்குழந்தைக் காரியைத்தன் துணைவி என்று
சொந்தமுடன் உறவாடி, வேற்றுார் தன்னில்
சோற்றுக்கும் வகைதந்தான்; வாழ்ந்து வங்தார்!
செங்தழலைத் தண்பனியாய்க் கருதிக் கொண்ட
திறனிழந்த முத்தப்பன், சீனாக் காரி
வங்தவழி மறைந்திடவே, மயக்கங் தீர்ந்து,

மதிதெளிந்து, தாயகத்தை நினைவு கூர்ந்தான்!

3

வேர்விட்ட மரம்போல வீட்டி னுள்ளே
    வினைபுரிவாள் மனைவியெனத் தேடிப் பார்த்தான்!”
ஊர்மட்டும் இருந்ததவன் வீடங் கில்லை!
    உசாவியதில், இருப்பிடத்தை யாரோ சொன்னார்.
“சீர்கெட்டாள் வாழ்வதற்கு விடவோ?” என்று,
    சிறிஎழுங் கடலலைபோல் பாய்ந்து சென்றான்!
“யார் ? எட்டிப் போம் உடனே !” என்ற நீலா:
    “ஏதுமக்கே என்மீதில் உரிமை?” என்றாள்!


“முன்பொருநாள் தாலிகட்டிச் சென்றீர்! அன்று.
    முதியவளின் மரணத்தால் தனித்தேன்! நீரோ.
முன்பனியாய் மூடுபனி போல நின்றீர்;
    முறைகெடவுங் காரணமாய் ஆனீர்! ஆனால்,
பின்பணியாய்த் தண்பனியாய் வந்தே, எம்மைப்
    பேணிவரக் கந்தப்பன் இலாதி ருந்தால்...
என்பொழுது விடிந்திடுமோ” என்று கூறி,
    இரட்டைத்தாழ் இட்டுவிட்டாள் நீலா! தப்பா?

"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/பின்பனி.&oldid=1382807" இலிருந்து மீள்விக்கப்பட்டது