கனியமுது/பெண் பார்த்தான்.

விக்கிமூலம் இலிருந்து


சுருண்டமுடி, நேர்வகிடு, சிவந்த மேனி,

சுறுசுறுப்பாய் இயங்குகின்ற கால்கள், கைகள்,

மருண்டெதையும் நோக்காத மிதந்த பார்வை;

வாயிதழில் தொத்திகிற்கும் புன்ன கைதான்!

இருண்டநிறக் காற்சட்டை, முழுக்கைச் சட்டை,

ஏற்றவாறு தொங்குகின்ற கழுத்துப் பட்டை!

உருண்டோடி ஒன்றையொன்று துரத்திச் செல்லும்

உந்துவண்டி விரைவுகுன்றி, ஒரம் நிற்க- “,


இடக்கையில் கருப்புகிறச் சிறிய தோல்பை

எடுத்தவாறு கீழிறங்கி நேரே பார்த்தான்.

அடுக்கிவைத்த பெட்டிபோல உயர்ந்து நிற்கும்

அண்ணாந்தால் கழுத்துகோவும் மாடமொன்றில்

முடுக்கிவிட்டால் மேலேற்றும் படியில் சென்று

மூடியதும், பொத்தானில் விரலை வைத்தான்.

மிடுக்காக ஒர்கணத்தில் மூன்றாம் மாடி -

மீதிறங்கி, வெளியேறி, முன்னே நோக்கி,

எதிர்ப்புறத்தில் சாத்தப்பட் டிருந்த தான
    எழில்மிக்க கதவின்மேல் நளின மாக
அதிராமல் கைநுனியால் தட்டும் போதே
    'ஆ'வென்று திறந்திடவே-உள்துழைந்தான்
சதிராடும் மயில்போன்ற மங்கை நல்லாள்-
    “சரியான நேரத்தில் வந்திர்!” என்றே
புதிர்போட்டாள்; சாய்வாக அமரச் சொன்னாள்.
    “புறப்பட்டு வரும்வழியில் பயணம் நன்றாய்



இனிமையுடன் இருந்ததா?” என் றார்வத் தோடும்
    இன்சுவைநீர் சிற்றுண்டி தந்து கேட்டாள்!
“தனிமையினால் தவித்திருப்பீர்?” என்றாள். “என்றன்
    தங்கையினி உடன்வருவாள்; அச்ச மில்லை!
அநியாயக் குறும்பிஅவள்; பேச்சுக் காரி!
    அழகைப்போல் மிகுதியான அறிவும் உண்டு!
சனியனே இன்னுமென்ன வெட்கம்? உன்னைச்
சரியாகப் பார்க்கட்டும் உட்கார்!”: என்றாள்.

ஆனந்தம் கவிதைகள்

திருவாளர் மணிக்குஉன்னைப் பிடித்துப் போகும்!

சென்னையிலே உயர்அலுவல் எனினும், இன்றே

பெருநகராம் பம்பாய்க்குப் புதிதாய் வந்தார்!

பேசுதற்கும், பிரியமுடன் பழகு தற்கும்,

அருவாய்ப்பாய் உங்துவண்டி ஏறி, விேர்

அரைகாளில் ஓரளவு சுற்றிப் பார்த்து,

வருவீர்! நான், அதற்குள் என் கணவர் இங்கே

வரக்கூடு மா,என்று தெரிவேன்” என்றாள் !


திகைப்பாலே வாய்மொழியை மறந்தி குந்த

செல்வனுக்குக் கசக்திடுமோ இவ்வேற் பாடு:

மிகப்பலவாய்ப் பல்தெரியக் குழறிக் கொண்டே

வெளிச்சென்றான், துணையான இளம் பெண்ணோடு!

நகை பண்றி வறுங்கை அணியா மங்கை

நாகரிக உச்சியிலே நிமிர்ந்து நின்றாள்:

புகைபோன்ற புடைவைக்குள் கொப்பூழ் தோன்றும்

புதுமையான கையில்லாச் சட்டை மேலே!

புத்தரைப்போல் உயர்கொண்டை! குதியு யர்ந்த

பொன்னிறத்துக் காற்செருப்பே உதட்டில் சாயம்!

மெத்தவிரை வாய்ச்செல்லும் வண்டி நின்றால்,

மெதுவாக அவள்தோள்மேல் வீழ்வான்; மீள்வான் !

வித்தியாச எண்ணமின்றிச் சிறிது தூரம்

விறுவிறுப்பாய்ப் பேசிவங்தாள் கூச்ச மின்றி

உத்தமனும் அல்லன் அவன்! உணர்வு மங்கி

உதட்டோடும் இதழ்பொருத்தி முத்தம் ஈந்தான்!


அவ்வளவே...! 'பளிர்'என்று மின்னலைப்போல்

அறைந்திட்டாள் கன்னத்தில் மாறி, மாறி!

செவ்வாயில் குருதிகொட்டத் திடுக்கிட்டுப்போய்ச்

சிந்துகின்ற கண்ணிரும் துடைத்தி டாமல்'

"இவ்வளவும் உன் தமக்கை செய்த குற்றம்!

யான் உன்னைப் பெண்பார்க்க வரவே யில்லை!

எவ்வளவோ தடுத்துரைக்க எண்ணிக் கூட

என்பேச்சை எங்கேஉன் அக்கா கேட்டாள்?

நண்பனுக்குத் திருமணந்தான் கடந்த போது

நலிந்திருந்தாள் என்மனைவி பிள்ளைப் பேற்றால்:

அன்புடனே அழைத்தும்வர இயல வில்லை;

அலுவலகம் விடுமுறையால் இன்று வந்தேன்! என்பொல்லாக் காலமன்ருே? இரண்டாம் மாடி ஏறுதற்குத், தவறுதலாய் மூன்றில் வந்து, முன்பல்லைப் பறிகொடுத்தேன்! எங்கே சொல்வேன்?

முகத்தையெங்கே வைத்திடுவேன்" எனக் கரைந்தான்.

வண்டியோட்டி வியப்புடனே நிறுத்தி விட்டான்.

மராட்டிமொழி பேசவல்ல அழகு கங்கை, கண்டேகர் என்கின்ற மருத்து வர்பால்

கடிதாக ஒட்டுமாறு சொல்லிக் கொண்டேதண்டனையால் தவிக்கின்ற பிள்ளைக் குத்தன்

தலைப்புச்சே அலகிழித்துத் துடைத்தாள் வாயை! மண்டிவரும் குருதியினைப் பார்த்த பின்னே,

மன்னிப்புக் கோருகின்ருள் தவற்றுக் காக1

37

அங்கிதற்குள் நிகழ்ந்த ஒன்றை அறிய லாமா?

அதேநேரம், அதே வீட்டின் இரண்டாம் மாடி

சங்கீதச் சீழ்க்கைஒலி எழுப்பிக் கொண்டே

"சட்டென்று, திறந்திருந்த அறைநு ழைங்து'

சிங்காரச் சென்னோகர் வாழ்வோன்; நான்தான்!

சிறியவன்என் பெயர் மணியன்! ஆமாம், மீன!

எங்கேஉன் அத்திம்பேர் காண வில்லை?

எதிர்பார்க்கும் அக்காவும் எங்கே போள்ை?


புதிதாக வந்தாலும் சரியாய் வந்தேன்!

புரிகிறதா என் திறமை? போகப் போக

அதியாகக் காண்பாய் நீ; அதிருக் கட்டும்;

அலங்காரம் போதுமென்றா நிறுத்தி விட்டாய்?

குதிகாலை மறைப்பதற்கா ? என்ன...

குடும்பப்பெண் போல் காலின் விரலில் மெட்டி:

இதில்ஏது சட்டமென்ரு சொல்லு கின்றாய்

இங்கெல்லாம் இப்படியா? அறியேன்!” என்று

மூதடுற்கு மறந்துவிட்ட குழாய்த்தண் ணீர்போல்

மொள்ளாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டே

கூடுதலாய்ப் பேசுகின்றான் ஒருவன்! நல்ல

கோமாளியா? பித்தனா? என்றேங்கி

வாடுகிறாள் தனிமையிலே உள்ளி ருக்கும்

வனிதையவள், அண்மையிலே மணந்து வங்தாள் !

ஒடுதற்கும் வழியின்றி மறைக்கின்றானே:

ஒருவழியுங் காணேனே!' எனத்த வித்துத்


'தவறாக...' எனப்பேச்சைத் துவக்கு தற்குள்-

"தயவுசெய்து நீ அவ்வா றெண்ண வேண்டாம்,

சுவரா நான்? அவர்களெல்லாம் வரும்வரைக்கும்

சுவையாகப் பாட்டொன்று பாடேன் கேட்போம்!

எவருடைய இசையரங்கும் நானில் லாமல்

என்ஊரில் நிகழாது பைத்தி யங்தான்!

நவராத்ரிப் பொம்மைபோல் அசைய மாட்டேன்!

நாணமென்ன? பக்கத்தில் அமர லாமே!”

படபடெனப் பேசியவன் பின் நகர்ந்தான்

பளபளக்கும் சலவைக்கல் தரைவழுக்கித்

தடதடெனக் குப்புறவே வீழ்ந்தான்! கீழே

தரைமீது முகம் பதிய-மூக்கும் பல்லும்
கடகடென மோதியதால் நிலம்சி வக்கக்
கண்டுகின்ற பெண்தகையாள் கதிக லங்கிச்
சடசடென நீர்தங்து கழுவச் சொல்விச்
'சடுதியிலே என்பின்னர் வாரும்' என்று

கண்டேகர் மருத்துமனே அழைத்துச் சென்றாள்!

கனவேக மாய்வந்த இருவர் கண்டு,

பண்டுவந்த நோயாளி முறைத்துப் பார்த்தான்:

பழையநண்பன் மணியெனவும் புரிந்து கொண்டான்.

பெண்டிருமே சந்தித்து விவசம் பேசிப்

பிழைநேர்ந்த காரணங்கள் அறிந்து விட்டார்!

திண்டாட்டம் தீர்ந்துண்மை தெளிந்த தேனும்

சிதறிவிட்ட பற்களுக்குப் பொறுப்பு யாரோ?