கனியமுது/மருத்துவரின் மனமாற்றம்.

விக்கிமூலம் இலிருந்து

மருத்துவராய்க் கலைப்பட்டம் பெற்ற போதே

வணிகரது மனப்பாங்கும் பெற்றார் போலும்,

விருத்தகிரி! வாயிலின்முன் பலகை மாட்டி,

விளம்பரமாய்க் கட்டணமும் விதித்து விட்டார்!

கருத்தறியக் கால்நூறு; கைபி டித்துக்

கண்ஊசி மருந்தேற்றப் பத்து ரூபாய்:

அறுத்தெறிய முழுநூறு; அங்கே தங்க

அறைக்கூலி அரைநூறு நாளொன் றுக்கே!


நோய்நாடி, கோய்முதலும் நாடித் தேர்ந்து,

நோயாளர் துயருணர்ந்தே, அதுத ணிக்கும்

வாய்நாடி, வாய்ப்பச்செய்ம் முறையே யில்லை!

வந்தவரின் பைநாடி, வரவு நோக்கித்,

தாய்காடு தலைகுனியத் தன்ன லத்தால்

தகைபிறழும் வகைமனிதர் எனினும்; ஆங்கே

போய்நாடி உணவாக மருந்த ருந்தும்

போக்கற்ற மக்களுக்குக் குறைவே யில்லை!



பார்த்தவர்கள் விருத்தகிரி மருத்து வர்பால்
    பதைபதைத்துத் துடிதுடித்துத் தூக்கிச் சென்று
சேர்த்துவிட்டார்! சிதறாத சிந்தை யோடு-
    செயலற்றுக் கிடப்பவனைக் கவனிக் காமல்
“யார்தருவார் என்தொகையை இவன்சார் பாக?”
    என்றவுடன் எதிர்நின்ற எவனோ தந்தான் !
வேர்த்துவிட்ட முகந்துடைத்துச் சிகிச்சை செய்தார் ;
     விழுந்திருந்த இருகடிதம் படித்துப் பார்த்தார் !


கண் திறந்தார் நோயாளி அல்ல; அந்தக்
    காசாசை மருத்துவரே நூறு ரூபாய் கண்
திறவாக் கருப்புசாமி மனைவி பேர்க்குக்
    கவனமுடன் அஞ்சலிலே அனுப்பி விட்டார் !
புண்துடைத்தார்! நோயாளன் மீதில் அல்ல;
    புன்மனத்தில் தன்னலத்தைத் தூய்மை செய்தார்.
விண்தொடுமோர் உயரத்தை விரைவில் எய்தி,
   விலகாத புகழ்மகுடம் சூட்டிக் கொண்டார்!