குழந்தைச் செல்வம்/கம்பன்
Appearance
44. கம்பன்
ஆரியம் நன்குணர்ந்தோன் - தமிழின்
ஆழம் அளந்து கண்டோன்;
மாரி மழைபோலக் - கவியின்
மழைபொ ழிந்திடு வோன்.
1
உலக உண்மைகளை - எவரும்
உணரக் கூறிடு வோன்;
அலகி லாக்கலைகள்-உறையும்
ஆலய மாகிடு வோன்.
எவரும் போற்றிடவே - தமிழில்
இராம கதைபுனைந்தோன்;
புவனம் உள்ளளவும் - அழியாப்
புகழ் பரந்திடு வோன்.
3
மூவர் முடிவேந்தர் - போற்றும்
முத்தமிழ்ப் பாவேந்தன்,
தேவி அருள்பெற்றான் - தமிழ்த்தாய்
செய்தவத் தால்பிறந் தான்.
4
கம்பன் கவிவாழ்க! - இராம
கதை நிதம் வாழ்க!
அம்புவி மீதெங்கள் - அருமை
அமுதத் தமிழ் வாழ்க!
5