உள்ளடக்கத்துக்குச் செல்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எழுதியவர்: காரல் மார்க்ஸ் பிடெரிக் ஏங்கெல்ஸ்


1872-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை

[தொகு]

தொழிலாளர்களது சர்வதேச நிறுவனமாகிய கம்யூனிஸ்ட் கழகம் அக்காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம் கட்சியின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்திடும்படி அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. இவ்வாற பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெபத்துப் பிரதி பிப்ரவரி புரட்சிக்கு1 ஒருசில வாரங்களக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது. முதற்கண் ஜெர்மன் மெழியில் வெளிவந்தது, பிறகு ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாய் ஆங்கிலத்தில் இது 1850ல் லண்டன் Red Republican 2 பத்திரிக்கையில் வெளியாயிற்று. இந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென். 1871-ல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்தன. பிரெஞ்சு மொழி பெயர்ப்பு 1848-ம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் 3 சிறிது காலத்துக்கு முன் முதன்முதல் பாரிசில் வெளியாயிற்று. அண்மையில் நியூயார்க் Le Socialiste 4 பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. புதிய ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதல் ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின் சிறிது காலத்துக்கு எல்லாம் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டது. அறுபதாம் ஆண்டுகளில் ருஷ்யப் பதிப்பு ஒன்று ஜினீவாவில் வெளிவந்தது. முதன்முதல் வெளியாகிய பின் சிறிது காலத்துக்குள் டேனிஷிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்5 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சின் உள்நாட்டுப்போர்; அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, ஜெர்மன் பதிப்பு பக்கம் 19; இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது. தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சம் இன்றைய நிலவரத்துககுப் பற்றாக்குறையானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட, நடைமுறையில் காலங்கடந்தவை என்பதும் தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
ஆனால், இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகி விட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. 1847-க்கும் இன்றைக்கும் உள்ள இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு பிற்பாடு ஒரு பதிப்பு வெளிவரலாம். தற்போது இந்த மறுபதிப்பு எதிர்பாராத முறையில் வெளியாவதால் இதைச் செய்ய எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன் 1872, ஜூன் 24.