கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்

விக்கிமூலம் இலிருந்து

ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்

கயிலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் ஞானப் பாடல்கள்

நூல் – 25

பக்கம் 387

முன் ஞானம் நூறு[தொகு]

1[தொகு]

அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்

அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்

புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம்

புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம்

நிகன்றெனவே எனையாண்ட குருவின் பாதம்

நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்

முகன்றெனை ஈன்றெடுத்த சின் மயத்தின் பாதம்

மூவுலகு மெச்சுதற்குக் காப்புத் தானே 1

2[தொகு]

தாங்கிநின்ற சரியையிலே நின்று சடம் வீழில்

தப்பாது கிரியையுள்ளே சரரப் பண்ணும்

வாங்கி நின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்

மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும்

ஓங்கி நின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்

உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும்

பாங்கில் நின்ற அச்சென்மம் மவுனமுத்தி

பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்து கொள்ளே 2

3[தொகு]

அறிந்திருந்த நான்குக்கும் விக்கினம் உண்டாம்

அப்பனே ஆகாமியம் சித்தி னோடே

மறிந்து நின்ற பிராரத்தந் தோயத் தோடு

மகத்தான நாலுக்கும் விக்கினமாச்சு

பிரிந்து நின்ற நாலினாற் செய்வதென்ன

பேரான வறுமையொடு கிலேசம் துக்கஞ்

செறிந்து நின்ற பெண் பொன்னாம் மண்ணினாலே

சேத்துமத்தில் நெய்ப்போலத் தியங்குவாரே 3

4[தொகு]

தீயங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுந்

சீரியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே

மயங்கினார் நாலு பாதத்தி னுள்ளும்

மனஞ் செவ்வை ஆவதெப்போ அறிவதெப்போ

தயங்கினார் உலகத்தில் கோடி பேர்கள்

சாவதும் பிறப்பதும் காவடி போலாச்சு

துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு

சுடுகாட்டில் அறிவது போல் சுத்தப்பாழே 4

5[தொகு]

பாழான மாய்கை சென்று ஒழிவதெப்போ

பரந்தமனம் செவ்வையாய் வருவதெப்போ

வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்

மயக்கமற்று நிற்பதெப்போ மனமே ஐயோ

காழான உலகமதன் ஆசை யெல்லாங்

கருவறுத்து நிற்பதெப்போ கருதி நின்ற

கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்

கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே 5

6[தொகு]

மூலமதில் ஆறுதலங் கீழே தள்ளி

முதிர்ந்து நின்ற மேலாறும் எடுத்து நோக்கிச்

கோலமுடன் உன்மனையைத் தாண்டி யேறிச்

கொடியதொரு ஞானசகதிக் குள்ளே மைந்தா

பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்

பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்

காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்

கைவிட்ட சூத்திரம் போல்சடமு மோங்கே 6

7[தொகு]

ஓங்காலமுதற் கொண்டைத் தெழுந்தோ டாறும்

உற்றுநின்ற பஞ்சகர்த்தா ளிருந்தி டம்பார்

ஆங்காரம் ஆணவம் நானெனலும் போனால்

அப்பவலோ அகாரமுதல் உகாரம் காணும்

பாபங்கான மகாரமொடு விந்து நாதம்

பரவியதன் மேல் நிற்கும் பராபரந்தான்

வாங்கான மவுனத்தைப் பற்றி யேறு

மருவிநின்ற லகிரியைத் தானொத்துக் காணே 7

8[தொகு]

ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்

உருகியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்

பத்தி நின்ற சலமதுதான் தீயை யுண்ணும்

பாங்கான தீச் சென்று காலை யுண்ணும்

வெத்தி நின்ற கால் சென்று விண்ணையுண்ணும்

விழுந்த தப்பா சடமென வேஆந்தப் பேச்சு

முத்திகண்டு கூடுவதும் எந்தக் காலம்

மூடரே மதுவையுண்டு மேல் பாரீரே 8

9[தொகு]

பாரப்பா அகாரமுதல் உகாரங் கொள்ளும்

பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்

நேரப்பா மகாரமது விந்து கொள்ளும்

நேரான விந்துவது நாதம் கொள்ளும்

சேரப்பா நாதமுற்றுச் சத்தி கொள்ளும்

சேர்ந்து நின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்

ஆரப்பா சிவந்தன்னைப் பரந்தான் கொள்ளும்

அப்பரத்தைக் கொண்டவிடம் அறிந்தே யுன்னே 9

10[தொகு]

உன்னிநின்ற மூலமுதல் ஆறும் பார்த்தே

உருகிநின்ற சுழுமுனையை யறிந்து பின்பு

மன்னி நின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு

மருவிநின்று மனமுறைந்து தேர்ந்தபின்பு

பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம்

பகலிரவு மற்றவிடம் ஞானமார்க்கம்

சன்னிநின்ற விடங்கண்டால் அவனேஞானி

காட்டுவான் கேசரியைக் காட்டுவானே 10

11[தொகு]

காட்டுவான் கிரியுன்னை மேலேயேற்றிக்

கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்

மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக்குள்ளே

மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்

ஆட்டுவாள் ளண்டரண்ட மாலை பூண்டாள்

ஆதிவத்து அனாதிவத்து இரண்டும் ஒன்றே

ஊட்டுவாள் நிர்குணத்தினமுர்த வல்லி

உயர்ந்து நின்ற ஞான சக்தி உறவுதானே

12[தொகு]

உறவென்னத் தாறைவிட வுறவும் உண்டோ

உலுத்தரையோ வாமத்தைத் தூடிப்பார்கள்

குறைவென்ன திரோதாயி சமயந்தோறுங்

கூடியல்லோ மாயவலை கூட்டி யாட்டி

மறவென்ன ஞானமென்ன மங்கித் தள்ளி

மகத்தான சமுசார வலையில் போட்டாள்

நிறவென்ன வாமதத்தால் ஞான மாச்சு

நின்றவனே சிவயோகி வாசியாரே

13[தொகு]

வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை

மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு

தேசி யென்றால் யோகத்துக் காதிவித்தை

திறமான மவுனமென்றால் ஞானவித்தை

மாசியென்ற மனமுடைத்தா ளிரண்டுமாகா

மருவிநின்றே அறிவறிந்தால் இரண்டு மாகும்

தூசியென்ற வெளியல்லோ அண்ட வீதி

சொக்காமல் கிரிகொண்டே ஆக்கியேதே

14[தொகு]

ஆக்கி நின்ற பரிசத்தால் கொசுவிறந்த

ஆச்சரியம் ரூபத்தில் வண்டி றந்த

பாக்கிநின்ற மணியொலியால் மானிறந்த

பாழான வுரிசையினால் மீனிறந்த

தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று

சாதகமாய் மாண்ட திந்த ஐந்தும் பாரு

பாக்கி நின்ற இந்திரிய விடயத் துள்ளே

பாழான மனஞ்சிக்கிப் படுகுவாரே

15[தொகு]

வாரான வுலகத்தில் மனிதர் கோடி

மருவி நின்றே உண்டுடுத்துச் சையோகித்துத்

தாரான கசதூரங்க ரதங்களேறிச்

சகலரத்ன பூடணங்கள் தரித்து விம்மி

மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா

மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை

கூரான சிவபோக ஞானம் வந்தால்

கூடழிந்து போகாது கூடுகூடே

16[தொகு]

கூடுவதும் பரமோகே சரமோ வென்னில்

கூர்மையுள்ள வானோவ தீதமோ வென்னில்

ஆடுவது ஆச்சரிய நின்மலமோ வென்னில்

அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்

பாடுவது பதங்கடந்த பூரணமோ வென்னில்

பகலிரவு மற்றிடமோ பராபரமோ வென்னில்

ஊடுவதெங்கே பின்னை யெங்கு மில்லை

உம்மென்றால் ஊமவெள்ள மோகங் காணே

17[தொகு]

மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி

முசியாம லிடிப்பதற் கைம்பொறியுங் கோல்தான்

பாகமென்ற கோபம் வந்தே உருவாய் நின்று

பதையாமற் சண்ணிச்சே யுலகம் எல்லாந்

தாகமென்ற ஞானம் வந்தென்ன செய்யும்

சண்டாள இந்திரியச் சார்பினாலே

வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு

விண்ணுக்குளே நிற்க வெளியாய்ப் போமே

18[தொகு]

வெளியேது வெளிக்குள்ளே வெளியங்கேது

வேதாந்த வெளிகடந்த வொளியங்கேது

அளியேதவ் வளிகடந்த அண்ட மேது

அப்புறத்தே தோற்றுகின்ற சோதி யேது

நெளியேது நினைவேது நிர்க் குணந்தா னேது

நேரான பூரணத்தின் நாத மேது

சுழியேது சுழியடக்குஞ் சூட்ச மேது

தோற்றும்பபா வானத்தை யொத்துப் பாரே

19[தொகு]

ஓத்துகின்ற சரியையொடு கிரியை ரண்டும்

உறவாதி செய்தவப்பா நன்றாய்க் கேளு

பத்திநின்ற யோகமுதல் ஞானம் ரண்டும்

பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே

அத்திநின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம்

ஆருக்கு மடுக்குமென்றால் யோக மெய்தி

முத்தி நின்ற ஞானத்திற் புகுந்தோர்க் கையா

மூன்றுமிலைப் பிரபஞ்ச முழுதும் போச்சே

20[தொகு]

போச்சென்பர் முக்காலம் பிறகே நின்று

புரிமுருக்குப் போலேறிப் புணர்ந்து கொல்லும்

ஆச்சப்பா காலமென்ன வென்று சொல்லி

அவரவர்கள் ஞபஞ்செய்வார் அறிந்த மட்டும்

நீச்சப்பா அகாலவெள்ளம் கடப்பா ரென்றால்

நேரான ஞானியல்லோ கடந்து நின்றார்

மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு

மூட்டுவிக்கு முகிடந்தான் ஞானத் தீயே

21[தொகு]

தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போலச்

செகசால முதற்கொண்டு காலம் போகும்

தீக்குள்ளே விழுந்தெழுந்த நெய்யைப் போலச்

சிறப்பான ஞானமது திரண்டே யேறும்

தீக்குள்ளே காட்டமெடு கோலுங் கூடித்

திரண்டாற்போற் கருவியெல்லாம் கணத்தில் மாளும்

தீக்குள்ளே பராபரந் தானிருந்த தாயின்

செகமெல்லாம் வித்தையென்று தெளிந்து போமே

22[தொகு]

தெளிந்தவிடங் கண்டாரார் சித்தர் யோகி

செகமெல்லாம் நானென்பார் திருட்டு ஞானம்

ஒளிந்துவிட முனைத்தால கேசரிக்குள் நிற்பாள்

உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி யூதே

அளிந்தவிடம் நிர்க்குணந்தான் அதிலே கேளு

ஆச்சரிய மகாரமென்ற யுண்ட துண்டு

களிந்தவிடம் நிராகர மொன்று மில்லைக்

காட்டுந்தா ரறிவு கொண்டே யுற்றுக் காணே

23[தொகு]

உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே

ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்

பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்

பரந்து நின்ற திரோதாயி தலையிற் சிக்கிக்

கொத்துகின்ற விடங்காண்பாய் கண்ணை மூடிக்

கும்மென்றே யிருளாகும் அறிவும் பொய்யாம்

மற்று நின்ற லகரியினால் கொண்டே யேற

மாட்டார்கள் ஆறுசமய மாடு தானே

24[தொகு]

சமயமெல்லாஞ் சக்தியுண்டு சிவமும் உண்டு

சண்டாளர் பிரித்தல்லோ தள்ளி னார்கள்

சமயமெல்லாம் வேதாந்த சித்தாந்த முண்டு

சாதகத்தைப் பாராமல் தயங்கி னார்கள்

சமயமெல்லாம் நாதமுண்டு விந்து முண்டு

காக்காமற் கெட்டார்கள் உலகத் தோர்கள்

சமயமெல்லாம் அம்பரமாம் ஞான முண்டு

தாயைவிட்ட பாவத்தால் தவறிப் போச்சே

25[தொகு]

போச்சப்பா ஆறாறும் பானத்தாலே

புத்தியுள்ளோர் பானத்தாற் கண்டா ரையா

ஆச்சப்பா வாமமென்ன நிசித மென்பார்

அதன் குணமோ திரோதாயி யனுட்டா னந்தான்

ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர்

உயர்ந்தவரைக் கண்டவர் பானத்தா லன்றோ

காய்ச்சமரம் பட்டதென்ன வேரற்றாற் போல்

கசடரென்ற அறுசமயங் கேட்ட பாங்கே

26[தொகு]

பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று

பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று

போங்கான புருவமைய மூலம் ஒன்று

புகழான விந்துவிலே மூலம் ஒன்று

வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று

மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று

தேங்காமல் இவையாறுங் கண்ட ஞானி

சேர்ந்து நின்ற மும்மூல யோகி யாமே

27[தொகு]

ஆம்பபா நகார முதல் யகாரம் நிற்கும்

அவ்வளவும் யோகத்தில் மூலமாச்சு

தாம்பபா அகார முதல் உகாரந் தொட்டுச்

சாதகமாய் மகாரவரை ஞானமூலம்

ஓம்பபா திசைநாத மவுனத்திற் காணும்

உற்றேற வுற்றேற அகண்ட வீதி

காம்பபால் உண்டக்கால் யோகசித்தி

கடுங்கான்றஃ பாலுண்ட ஞான மாச்சே

28[தொகு]

ஆச்சிந்த வரிசைவிட்டே யுலக ஆசான்

ஆதி அந்தமொன்று ரவி மதி தானென்பான்

மூச்சற்ற விடங்காட்டத் தெரியா நின்று

முன்னேது பின்னேது சாங்க மென்பான்

வாச்சிந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார்

மதுவைவிட்டே றியல்லோசை யத்தோர் கேட்டார்

ஓச்சிந்த விதமறிந்தோன் யோக ஞானி

உம்மென்று ஆகுமென்ற நாத மாமே

29[தொகு]

நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம்

நலமான மவுனத்தில் ஐந்து நாதம்

வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம்

வெட்ட வெளிக் குள்ளேயொரு நாதமுண்டு

போதமப்பா கடந்திடத்தே யந்த நாதம்

புகழாகச் சேவித்து நிற்கு மென்றம்

காதமப்பா தூரமல்ல அந்தோ அந்தோ

கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே

30[தொகு]

விண்ணேது வெளியேது வொளியங்கேது

விரைந்திந்த மூன்றுங்கே சரிதா னாச்சு

கண்ணேது காதேது மூக்கங் கேது

கண்டிப்பாய் கண்டவெல்லாம் அழிந்து போச்சே

ஒண்ணிரண் டேது சமரசந்தா னேது

உற்றுப்பார் வெட்டவெளி யொன்று மில்லை

எண்ணேது நினைவேதிங் கறிவு மேது

ஏகமாய்க் கலந்துத்தி யீடத்தைக் காணே

31[தொகு]

உத்தி கொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்தே

உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று

பத்தி கொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார்

பாழான மனத்தையங்கே நிறுத்த மாட்டார்

முத்திகண்ட விடமெங்கே யென்று காணார்

மூச்சற்று நின்றிடத்தை நோக்கிப் பாரார்

சித்திகண்டால் சித்திகொண்டு செய்ய மாட்டார்

சேர்ந்துமதா யிருக்கறியார் திருடர்தானே

32[தொகு]

தானென்ற ஆணவத்தை நீக்க மாட்டார்

சண்டாள கோபத்தைத் தள்ள மாட்டார்

ஊனென்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார்

உற்று நின்ற சையோகம் விடுக்க மாட்டார்

பானென்ற ஞானவெள்ள முண்ண மாட்டார்

பதறாமல் மவுனத்தே யிருக்க மாட்டார்

வானென்ற பொருளென்ன எளிதோ மைந்தா

மகத்தான மனமடங்க எய்யுங் காணே

33[தொகு]

காணிந்த வுலகத்தில் மாயக்கூத்துங்

கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்

பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்

புகழான செனனமொடு மானக் கூத்தும்

ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்

ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும்

தோணிந்தப் படி படைத்த பரமே யையா

சொற் பெரிய பூரணமே யென்று கூவே

34[தொகு]

கூவையிலே யாத்தாளைத் தொழுது கூவக்

குறையாத கருணையினால் திரும்மிப் பார்த்துத்

தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று

சார்வாக எடுத்துப்போ லுன்னை மைந்தா

தேவையிலே யெடுத்தணைத்தே உயிரை வைப்பாள்

செகசால மாடுகிற திருட்டுத் தாய்தான்

பாவையிலே மனஞ் சென்று பரவா விட்டால்

பாராது போலிருப்பாள் பாரு பாரே

35[தொகு]

பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம்

பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி

நேரப்பா இவளைவிட்டு யோகம் பார்த்தேன்

நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்

சேரப்பா சுத்தவிழல் மனமோ பேயாம்

செகசாலக் கூத்தைவிட்டுத் தெளிய மாட்டார்

ஆரப்பா அவளை விட்டு ஞானங் கண்டோர்

அலைக் கழிக்கும் ஆசையென்ற பாம்பு தானே

36[தொகு]

பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்

பரிவாக மதியோடு கொன்றை சூடிப்

பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்

பாங்கான கரியுரித்த பாணி பாணி

பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு

பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கிப்

பாம்பையல்லோ மனைக்கு மோதிரமாய்ப் போட்டு

பாரென்றே அகண்டத்தில் ஆடினாரே

37[தொகு]

ஆடினதோர் கூத்தெல்லாம் ஆத்தாள் மெச்சி

அண்டையிலே யழைத்தானை யிருத்திக் கொண்டாள்

நாடினதோ ரவளருகில் அரனும் எய்வான்

நாமறியோ மவனவளு மொன்றே யொன்றே

ஊடினதோ ரிடமெங்கே ஒலிகேட் பெங்கே

ஒன்றாகக் காணுகிற நடனமெங்கே

கூடினதோ ரகண்டத்தின் சோதி யெங்கே

கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே

38[தொகு]

மெய்ஞ்ஞான குரு காணப்பா மகாரவரை நாத வோசை

கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்

ஊணப்பா வூணப்பா நாதத் தோடே

ஒருமுனையா யொருவழியா யொன்றா யோடும்

தோணப்பாஈ தோற்றுவதங் கொன்று மில்லை

சுத்தவெளி ரவிகோடி சூழ வன்னி

ஆணப்பா மாகோடி கண்கொள் ளாதே

ஆச்சரிய மதிகமென்ற மகாரங் காணே

39[தொகு]

மகராமல் லோமுந்தி யாசான் சுட்டி

வழிகாட்டு முறைமையது ஞான மார்க்கம்

மகாரமல்லோ அடங்கியந்த நாதந் தாண்டி

மருவி நின்ற இடமல்லோ கேசரி மைந்தா

மகாரமென்ன மேலெழுத்தே யென்பார் மாண்பர்

மாட்டுவதை யூன்றெழுத்த தென்று காணார்

மகாரமென்ன மகாரவித்தை யதீத வித்தை

வாய் திறந்து பேசாதே மௌன மாமே

40[தொகு]

மௌனவித்தை யாதெனில் மூன்றெழுத்தே யென்பார்

மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார்

மௌனவித்தை யாவதென வாய்மூட வென்பார்

மாடுமுதற் குதிரையினால் ஆவதென்ன

மௌனவித்தை கேட்டார் கூட்டுறவு காணார்

வாய்மூடி வழியோடே நாதங் கேளார்

மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில்

மணிமுதலாய்த் திசை நாதங் கேட்குந் தானே

41[தொகு]

கேட்கையிலே மதியினிடம் அமிர்தஞ் சிந்துங்

கேடியான துவாசமுர் தங்கடந்து தோன்றும்

வாழ்க்கையிலே ஆசையறும் நினைவும் போகும்

வாரிதிபோ லண்ணாக்கில் அமிர்த மோடும்

தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும்

சச்சிதா னந்தவொளி தானே தோன்றும்

மூட்கையிலே மேலமிர்த லகரி மீறும்

மூன்றுகமும் கணமாகும் மூட்டிப் பாரே

42[தொகு]

மூட்டையிலே யுலகரி கொண்டு மூட்டு

முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும்

கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டுங்

கும்மென்ற நாதத்தில் கூடியேறும்

மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும்

மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே

ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால்

உத்தமனே யச்சின்ன முத்தி யையா

43[தொகு]

ஏறுகிற துறை ஐயனே குருவான அகண்ட மூர்த்தி

அதிதமன்றெ ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்

மெய்யனே ஏறுகிற சாதகஞ் சொல்

வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு

துய்யனே நிலைதோறும் எழுத்தைச் சொல்லு

சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு

தையனே தையமென்ற நிர்த்தஞ் சொல்லு

சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே

44[தொகு]

சாற்றிடென்று கேட்ட மாணாக்கனே கேள்

சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்

ஏற்ற மென்ற மூலத்தில் வாசி வைத்தே

எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி

ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால்

ஆதித்தன் கோடிபைப் போல் காந்தி காணும்

மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு

வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே

45[தொகு]

வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி

மனோன் மணியாம் புருவமையத் தூடே சென்றே

ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்

உத்தமனே சாம்பவியைக் கண்டு கொள்வாய்

நெளிவோ போ யிவ்வளவும் யோக மார்க்கம்

நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு

தெளிவோடே விந்து வென்ற குரு பதத்தில்

தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே

46[தொகு]

ஆம்பபா விந்துரவி மதியோர் கூடி

ஆச்சரியங் கண்கூசி மயக்கமாகி

ஓம்பபா நாதத்தில் செவிடு பட்டே

ஊமையென்ற எழுத்துடைய வுருவங் காணும்

தாமப்பா சத்தியிலே வன்னி யோடு

சதகோடி ரவிமதியும் வொவ்வா வொவ்வா

வாமப்பா லுண்டவர்க்கித் தனையும் காணும்

வாய்பேசா ஞானிக்கு மாயந் தானே

47[தொகு]

தானென்ற சிவத்துக்குள் மௌனஞ் சென்றால்

சதகோடி நவகோடி வன்னிரவி சோமன்

பானென்ற பரத்தின்கீழ் முப்பா ழுண்டு

பார்மகனே அகாரமொன் றுகாரமொன்று

வானென்ற மகாரமொன்று முப்பாழாக

வழங்கிற்றே அதனொளியைச் சொல்லப் போகா

தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்

தேவிபதம் என்ற கேசரிதான் காணே

48[தொகு]

காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி

கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா

ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தான் என்பார்

அவளுக்குள் மவுனமுண் டறிவால் பாராய்

ஊணிந்த மவுனத்தை நிட்களமாய்ப் போவாய்

ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ

தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை

சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே

49[தொகு]

சோதியென்று பராபரத்தி லறுவரை யுண்டு

சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லிக் காணோம்

ஆதியென்ற மூலக்குரு பேரால் மைந்தா

ஆண் பிள்ளைச் சிங்கமென்ற கொங்கணர்கேள்

வாதி யென்றால் அவர்வாதி ஞானவாதி

மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி

பேதியென்றால் மேருப்போலேயும் பண்ணும்

பெருவாதி ரசவாதி பேருள் ளோனே

50[தொகு]

பேருள்ள கொங்கணர்தாம் குளிகை யிட்டுப்

பேரான பூரணத்தில் அறுவரை கண்டார்

ஆருள்ளா ருலகத்தில் வரைகுரு சொல்ல

ஆச்சரியஞ் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்

நேருள்ள ரிடிகளொடு முனி வரையர்

நேராகச் சமாதியிலே கண்டோ ருண்டு

தாருள்ள சலத்தோடுஞ் சென்றா ரில்லை

சமர்த்தான மனத்தினிடச் சத்திதானே

51[தொகு]

சத்தியுள்ள வாசனையாங் குரங்கு கேளு

தாண்டியல்லோ இந்திரியக் கொம்புக் குள்ளே

பத்தியுள்ளே யலைத்தடித்துப் பேய்க்கூத் தாக்கிப்

பாங்கான மனத்தையல்லோ சின்னம் பண்ணி

முத்தியுள்ள வாசலுக்கே வேறொட்டாது

முழுமோசச் சனியனப்பா ஞானத் துக்குக்

கொத்தியுள்ள வாசனையடக்கிப் பார்த்தால்

குருடனுக்கும் ஞானவழி கூடுங்காணே

52[தொகு]

கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி

குரங்கைவிட்டே அகலுகிற வழியைச் சொல்க

நாடுவது முலகத்து வாதம் வந்தால்

நன்மனமுண் டானால் சாத்திரத்திற் சொல்வார்

ஊடுவது சாதுசங்கம் வேதாந் தம்பார்

உத்தமனே வாசனையாங் குரங்கு போகும்

ஆடுவது தொய்த வாசனையி லேற்றும்

அப்படியே யுலகத்தில் அநேகம் பேரே

53[தொகு]

பேரான வுலகத்தில் ஞான முற்றும்

பேசாமல் அருகிருந்த விடத்தில் மைந்தா

வாரான மோ தத்தி லிங்கமாகும்

வாரிதிக்கு மேருவுக்கும் நடுவே கோடி

காரான காமத்தால் பாண்டி லிங்கம்

கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கந்

தாரான மலைதோறும் பூமி தோறுஞ்

சாற்றரிது சாற்றரிது சார்ந்து பாரே

54[தொகு]

பாரப்பா சுயம்பில்வந்து பிட்சை யேற்றால்

பலித்ததப்பா ஞானசித்தி மவுனசித்தி

நேரப்பா வொன்பது பேரிவரு ளாரு

நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்

காரப்பா விண்ணையென்றால் சாவார் கர்த்தர்

காத்தாலே ஞானசித்தி கலந்து கூடும்

ஊரப்பா வாதியைப்போல் நீங்கள் கெட்ட

உலுத்தரென்பார் சித்தர்கள் தாம் உரைத்திட்டாரே

55[தொகு]

உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்

உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னானையன்

மறைக்க வாசனைலகரி கொள்ளு மென்றான்

மகத்தான தட்சணா மூர்த்தி யாசான்

நிறைக்கவல்லோ யோகமுதல் ஞானஞ் சொன்னான்

நிற்கவிட மற்றநிர் மலமாஞ் சோதி

இறைக்கவல்லோ வூறினதோர் கேணி யைப்போல்

எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே

56[தொகு]

எழிம்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி

ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்

எழும்பாமல் கருவிகளை யிருக்கச் சாடி

இருத்தினவன் சிவயோகி வாத யோகி

எழும்பாமல் லடிப்பதற்குச் சூட்சஞ் சொல்வேன்

என் மக்காள் மவுனத்தே றாருந்தாற் போகும்

எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால்

ஏதுமில்லை சுத்தவெளி யிருளும் போச்சே

57[தொகு]

போச்சென்ற இருக்கிறதோர் ஞானத் துக்குப்

புகழான வல்லமை தானென்ன மைந்தா

வாச்சென்ற அகண்டத்துள் வரைக ளாறு

மருவினால் சடத்தோடே யவனே சித்தன்

நீச்சென்ற வரைபார்த்து வாரேன் மக்காள்

நில்லுகோள் குகையினுள்ளே யென்று சொல்லித்

தோச்சென்ற பூரணத்திற் சொக்கி நின்ற

சுந்தர னந்தன்வந்து தொழுதிட்டானே

58[தொகு]

தொழுதுகொண்டு பதம்பிடித்த அகண்டத் துள்ளே

சொக்குகிறோ மென்று சொன்ன சுந்தரமே யையா

விழுதுகொண்ட ஆலைப்போல் நெட்டிட் டேறி

வெளிகடந்தே ஆறுகலங் கண்டு வாரேன்

முழுதுகண்டா னென்பிள்ளை யென்று கீர்த்தி

மூட்டிவைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா

பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால்

பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே

59[தொகு]

பாரப்பா அகண்டவெளி சுத்தக் கானல்

பார்ப்பதற்கோ அங்கொன்று மிடமேயில்லை

நேரப்பா ரவிகோடி வன்னி கோடி

நேரான மதிகோடி கண்ணோ கூசு

ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி

அதற்குள்ளே செல்லரிது மைந்தா போபோ

காரப்பா குகையென்று பட்டங் கட்டிக்

கடுங்குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டானே

60[தொகு]

கலந்திட்டே னொருவரையில் நாத வோசை

கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கமாச்சு

கலந்திட்டேன் மறுவரையி லிடியோ கோடி

கண்கெட்டேன் மதிகெட்டேன் காதுங்கெட்டேன்

கலந்திட்டேன் மூவரையிற் காந்திக் குள்ளே

கடுகவந்தேன் கொங்கணரை யழைத்திட்டீரே

(வரி விட்டுபாடு)

61[தொகு]

அழையுமென்ற சொற்கேட்டுச் சுந்த ரானந்

தன் கணத்திற் கொங்கணரை அதி சீக்கிரத்தில்

விழைவுடனே யோடிவந்து தெண்டனிட்டு

விரைவுடனே கொங்கணர் தானிக் கணத்தில்

அழையுமென்றோ ரெங்களை யருங்க ளைத்தான்

ஆச்சரியஞ் சொல்லுவதற்கே யடியே வந்தேன்

அழையுமென்ற சீடனுக்கும் பின்னே வந்த

அடியேன் தான் வந்ததென்று பணிந்திட்டாரே

62[தொகு]

பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து

பராபரமே நிர்க்குணமே பண்புள் ளோனே

அணிந்திட்ட அறுவரையிற் சொக்கிச் சென்ற

ஆதியென்ற பராபரமே யையா வையா

மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி

மார்க்கத்தை யெப்படித்தான் ஏறி னீரோ

கணியிட்ட நிர்மலா மனத்தி னாலே

கைலாய தேகமென்ன தங்கமாச்சு

63[தொகு]

ஆச்சப்பா அப்படியே வரணு மென்றே

ஆசைகொண்டே யிருக்கவழைத் தனுப்பு வித்தீர்

வாச்சப்பா மனுவொன்ற வடியேனுக்கு

மைந்தன்மேல் கடாட்சத்தால் சொல்லவேணும்

ஓச்சப்பா கொங்கணரே யுபசார மென்ன

ஓங்கினதை யுவரக்கின்றேன் கேளு கேளு

காச்சப்பா வுலகத்தில் எடுத்த தேகம்

கைலாயச் சாட்டையாம் கருவைச் சொல்லே

64[தொகு]

கருவென்ன வொன்றுமில்லை மேரு நேரே

காணப்பா வீசானங் கைலாய மாச்சே

உருவென்ன வெடுத்து கைலாய தேகம்

உத்தமனே நிராகார ஞான சித்தி

குருவென்ன நிர்குணத்தின் மவுனத்துள்ளே

குவிந்துரைத்த பெருமையின் கைலாய மாச்சே

அருவென்ன மகார வித்தை முட்டிக் கொண்டு

ஆதிவிர்த்த கற்பமது வுண்டு பாரே

65[தொகு]

பாரப்பா சூதமுண்டு மவுனந் தாக்கப்

பளிச்சென்ற ஏழுசட்டை பண்ணாய்ப் போதும்

நேரப்பா அச்சடங்கை லாய தேகம்

நிமிடத்தே சிந்தியா முன்னினைவுக் கையா

ஆரப்பா வுனைப்போல நினைத்த பண்ணல்

அரிதரிது கூடாகி மூடர் பேரால்

சேரப்பா சொல்லி விட்டே ளேன்ற பேச்சுச்

செப்புமுன்னே கைலாயம் உற்றுப் பாரே

66[தொகு]

உற்றுநின்ற பலநூலைப் பார்த்துப் பார்த்தே

உரையா வேதாந்த சித்தாந்த மென்று

பற்றிநின்ற பரவசத்தா னென்றே உன்னிப்

பாராமல் அலைந்துகெட்ட ரனந்தக் கோடி

முற்றிநின்ற விடமெங்கே ஞானமெங்கே

_______

கொற்றிநின்ற மேல்மூலத் துரியமெங்கே

கூடுவார் மெய்ஞ்ஞானக் குரைவி தாமே

67[தொகு]

குறைவேது வாசனையாந் தொய்தத் தோடு

கூடவல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும்

மறைவேது மறையதனின் அந்த மேது

மறைவற்று நின்றதொரு வெளியங் கேது

துறையேது துறைக்குள்ளே சோதி யேது

சூட்டியிருந்த விவரமெல்லாம் ஞானந் தோற்றும்

அறையேது அல்லவென்று சமுசாரத்துள்

அழுத்துமப்பா தொய்தத்தி னாண்மை தானே

68[தொகு]

ஆண்மை யென்றால் தொய்தத்தி ணாண்மை யல்லோ

அகண்டமுத லண்டமெல்லாம் ஞானந்தோற்றம்

மாண்மையென்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில்

மண்ணையள்ளிக் கூறுகொண்டு மலங்கப் பார்த்துக்

கேண்மைகொண்டே யுகமெல்லாங் கெடுத்தே ஆட்டிக்

கெடியான பெண்ணு பொன்னாணி னாலே

தான்மையென்ற பிறப்பிறப்பை மீறப் பாய்ந்து

சண்டாளக் கோபத்தைத் தள்ளு தள்ளு

69[தொகு]

தள்ளுகின்ற வருப்பு வந்தால் கருவைக் கேளு

சாதகமாய்க் குண்டலிக்குள் வாசி வைத்துத்

தெள்ளுகின்ற பிராணாயம் பண்ணித் தீருந்

திரண்டொலியுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்

தள்ளுகின்ற கண்டத்தே யங்கெங் றூணும்

நலம்பெரிய புருவமையந் திறந்து போகும்

அள்ளுகிற கனிபோல யமிர்தம் வீழும்

அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே

70[தொகு]

அறிந்திந்த மதியான விந்து விட்டும்

அப்பனே யோகமிதே யறிந்து கொள்ளு

பரிந்திந்த விந்து முதல் நாதஞ் சித்தி

பாங்கான சிவத்தோடு பரந்தான் கேளு

அறிந்திந்தப் பராபரத்தோ டாறு கேளு

அப்பனே மவுனத்தைத் தூக்கிக் கொண்டால்

செறிந்து நின்ற ஞானத்தின் யோகமாச்சு

செயல் தம்ப மவுனத்தைச் சென்று காணே

71[தொகு]

காணப்பா பராபரத்தின் மேலே யாறு

கைவிட்ட அகண்ட முநிர்க் குணத்தா னொன்று

பூணப்பா நிர்க்குணந்தான் நிராகா ரந்தான்

புகழான நிர்மலந்தான் பொதத் தந்தம்

தோணப்பா விலையாறும் காணப் போகச்

சொல்லுகிற வார்த்தை யென்றால் கேட்டிருப்போம்

ஊணப்பா சடம் விட்டே அறிவுவிட்டே

உற்று நின்ற அண்டத்தே அறிந்து கொள்ளே

72[தொகு]

அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத்துள்ளே

அப்பனே யாறுதலம் அறிந்து காணும்

அறிந்து கொள்ளு விந்து வின்மேல் பாரத்தின் மட்டும்

அறிவுக்குள் சக்ரந்தா னப்பா கேளு

அறிந்து கொள்ளு பரத்தின்மேல் போத மட்டும்

ஆதார நிர்மலத்தின் வரைகளாறும்

அறிந்து கொள்ளு மேலாறுங் காணப் போகா

ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே

73[தொகு]

காணப்பா தசதீட்சை கடந்த பின்பு

கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட

ஊணப்பா அது மவுனம் மற்றதெல்லாம்

உரவார்த்தை அகார முதலுகார மென்பார்

வீணப்பா சிரமேல் வேதாந்தக் காட்சி

விரைந் ததிலே யும்மென்றே ஊணென் பார்கள்

பூணப்பா வும்மென்ற நாதமாமோ

போக்கறியான் சொல்லுகிற ஞானந்தானே

74[தொகு]

தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச்

சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி

வானென்ற வெளியோ டறுதலமுங் காட்டி

வாய்மூடி னாதிக்க வகையுங் காட்டி

ஊனென்ற வுடம்பை விட்டுக் கேசரியுங் காட்டி

ஊமை நின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக்

கோனென்ற குருவெனும் வாய் பேசலாமோ

குறும்பரே குருசொல்ல விரண்டுமாமே

75[தொகு]

ஆமிந்த வுலகத்தோர் ஞானவீதி

அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த

ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற

ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம்

வாமிந்த வாமத்தே நின்று கொண்டு

மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும்

சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும்

சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே

76[தொகு]

வாறான குருவினுடைய வாழ்க்கை கேளு

மகத்தான சடையின் மேல் மதியுஞ் சூட்டித்

தாறான நெற்றியிலே தீயை வைத்துச்

சர்ப்பமல்லோ ஆபரண மாகப் பூண்டு

வீறான கரித்துகிலை மேலே போர்த்து

விளங்கியதோர் புலித்தோலை இடையிற் கட்டிச்

கூறான சுடுகாட்டிற் குடியு மாகிக்

கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின் றாரே

77[தொகு]

பலியெடுத்த குருவினிட வாம பாகம்

பகுந்து நின்ற என் தாயின் பரிசு கேளு

பொலியெடுத்த அட்டமா சித்தி நிற்கப்

புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு

நலிவில்லா யோகப்பி யாசஞ் செய்து

நண்ணுமிரு பதச் சேவை காண்ப தற்கே

ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர்

ஒன்றாகக் கணநாதா போற்று வாரே

78[தொகு]

அறிந்துகொள் என் தாயே துரைப்பெண் ணப்பா

அப்பனோ எருதேறும் ஏழை யேழை

அறிந்துகொள் இவளை முன்னே யையா வைத்தே

ஆதரித்துக் கேட்டதெல்லாம் அருளிச் செய்வாள்

அறிந்துகொள் அகண்டத்தே ஞானசத்தி

ஆத்தாளைப் பூசித்தா லறுப தீவாள்

அறிந்துகொள் சடமெல்லா மவளே யாச்சே

அப்பனுக்கு மெலும்போடு நரம்பி ரண்டே

79[தொகு]

இரண்டான வாயுவினில் ஒன்று சக்தி

ஈராகச் சிவமேது பிராண வாயு

ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு

யோகமுமாம் ஞானமுமாம் உற்றே யேறு

தண்டான சுழுமுனை தா னடுவில் நிற்குஞ்

சாதகமா யிதற்குள் முக் கிரத்தி யுண்டு

நன்றான சுழுமுனையிற் பிராண னேரில்

நாதாந்த யோகமிது நாடிக் காணே

80[தொகு]

காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்

கண்டு கொள்ளு தாமரையில் நூல்போ லாடுங்

ஊணப்பா அதிலிரடடிய பான வாயு

உற்று நின்றி ரண்டையு நீ கண்டா யானால்

பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்

புகண்டருக்குச் சித்திகை லாய தேகம்

தோணப்பா நவகோடி மானா கண்டார்

சுகயோக மாவது இந்தத் துறையுமாமே

81[தொகு]

ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்

அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு

சேமப்பா கிரோ தாயி யாரென் றக்கால்

செகமெலாம் பெண்ணான உருத் தானப்பா

ஓமப்பா பொன் மண்வா சனையி னாசை

ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை

நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை

நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே

82[தொகு]

வித்துக்குள் பாவமென்ன புண்யமென்ன

வெகுகோடி புண்ணயத்தால் புருட சன்மம்

பத்துக்குள் வெகுகோடி பாவ புண்யம்

பாழான பெண்செனன மெடுத்த வாறு

கொத்துக்கு ளிவையறிந்து பாலமான

குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடியையோ

எத்துக்கு ளிவையறிந்து வேறாய் நின்றே

இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான வீச னாமே

83[தொகு]

பூரணமே யகண்டமே யகத்தி னந்தம்

பொங்கின்ற நிர்க்குணமே யென்னை யீன்ற

காரணமே யுலகில் பெண்ணாசை போலக்

கலந்து நின்ற சுகமுல்லை கருதிக் கொண்டேன்

ஆரணமே யதீதத்தில் சுகந்தா னென்ன

அப்பவே சொல்லுகிறேன் அறிந்து கொள்ளு

வாரணமாங் குவிமுலையாள் ஆசை விட்டால்

மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே

84[தொகு]

நேரான பெண்ணாசை நீங்கிற் றானால்

நிலையான திரோதாயி மாய்கை போச்சு

தூரான வேதாந்த வெளியிற் சொல்வார்

சம்மென்ற சகஞ் சொல்வா யோகி யல்லை

வாராய் நீ என்மகனே பெண்ணாற் சிக்கி

மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார்

தாரான சித்தரொடு பஞ்ச கர்த்தாள்

தயங்கி நின்று படும்பாடு சாற்று வேனே

85[தொகு]

சாற்றுவேன் வீதிபடு குழிதா னுண்டு

தன்மேலே புல்லோடு செடியு மூடி

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்த

வாறொக்கும் பெண்ணான மாயக் கூபம்

ஆற்றுவே னென்றாலு மாற்றப் போகா

அரகரா பெண்ணரவு கடித்த தானால்

போற்றுவே னென்றாலும் பொல்லாக் காமம்

பொறிஒஇட்ட நெய்போலப் பொங்கும் பாரே

86[தொகு]

பொங்குகின்ற காமமென்ன சிவத்தின் கூறு

பொல்லாத ஆசையென்ன மாலின் கூறு

மயங்குகின்ற மோகமென்ன மகேசன் கூறு

மருவியந்த மூன்றாலும் உலகம் பாழாய்த்

தங்குகின்ற யோகம்பொய் ஞானம் பாழாய்ச்

சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்

தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்

சூனியமாய் ஞானமெல்லாந் தோற்றுமாதே

87[தொகு]

மாறான பெண்ணாசை விட்டே னென்பார்

மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்

தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்

சதாசிவனால் முடியாது மற்றோ ரேது

கூறான விந்துவிடக் கோப மோகங்

குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்

வீறான விந்துவுக்கு மேலே நின்று

விருது பெற்ற மோனியல்லோ வெட்டி னாரே

88[தொகு]

வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை

வேதாந்த மென்றதொரு வாளி னாலே

தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே

சச்சி தா னந்த வெள்ளச் சார்பி னாளே

ஒட்டினார் ஒட்டின நிர்க் குணத்தின் மட்டும்

உத்தமனே யதுவல்லோ ஞான வீதி

தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்

செகசால வித்தையென்று தெளிந்து பாரே

89[தொகு]

தெளிவதுதா னெளிதல்ல வாய்பேச் சல்ல

சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சே

அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்

அதரமுண்டு கூடுவது போக மென்பார்

கழிவதுதான் காலேது வாசி யேது

கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது

ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகா

ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே

90[தொகு]

காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு

கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு

பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு

புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு

தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில்

சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு

ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்

உலகத்தில் திரியாதே விண்ணி லாடே

91[தொகு]

ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி

அந்தந்த மலைகளினால் தாக்க வோடி

ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி

உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி

தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு

சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார்

நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு

நரகமாம் வாசனை தான் நன்றாய்க் கேளு

92[தொகு]

கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி

கேட்டதெல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்

நாளப்பா செகமெல்லாஞ் சாங்கமென்பான்

நலமான நூல்பாரான் தீட்சை யாவான்

காளப்பா மவுன மென்பான் விண்ணைப் பார்ப்பான்

காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான்

நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி

நலமான பெண்ணோடு மயங்கு வானே

93[தொகு]

மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி

மகத்தான ஞான மெல்லாம் வந்ததென்பான்

தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்

சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்

தியங்குவான் நோய்வரிற் பூரணமே யென்பான்

செகசால திரோதாய சிரிப்பாள் பார்த்து

முயங்ருவான் சமாதிவிட்டே னையோ வென்பான்

முடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே

94[தொகு]

பாரப்பா சரீரமிது சமாதிக்காக

பாழான தூலமிது வென்பார் கோடி

நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று

நேராக அலைந்தவர்கள் கோடா கோடி

ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ

ஆராய்ந்து நான் கண்டே னென்பார் கோடி

ஏரப்பா உழுதலோ வெள்ளாமை யாகும்

ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சே

95[தொகு]

கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்

கைகண்டாற் சொல்லாரே கல்போல் நெஞ்சே

அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்

அவன் கையில் ஒன்றுமில்லை யறிந்து கொள்ளே

உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம்

உதுவான வன்வாதி யுண்மை கேளு

கதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம்

கடுவான் பார் ரசயோகி ஞானி தானே

96[தொகு]

தானென்ற வாதியிலே யிருவ ருண்டு

சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து

வானென்ற ஞானமென்ன வேதை பின்பு

மகத்தான பெண்ணோடே கூடியாடிக்

கானென்ற ராக கேளிக்கை பார்த்துக்

கண்ட பெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே

ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான்

உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந்தானே

97[தொகு]

நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு

நாகாந்த வேதாந்த சித்தாந்தம் பார்

நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து

நலமான தேவிகிரி யையிலே நின்று

நரகமென்ன சடமுதல் நாமல்ல வென்று

நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு

நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று

நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே

98[தொகு]

இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்

இத்தனைக்கும் பொருளெ திவன் வறுமைக் கென்பார்

இருக்கையிலே செயநீர் செந்தூரஞ் சுன்னம்

எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி

இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்கும் காட்டார்

இல்லையென்பார் உண்டென்பார் அநேகம் பேர்கள்

இருக்கையிலே சதாநித்தம் அறிவா லூட்டி

இருப்பார்கள் மவுனமுத்த வாதி மாமே

99[தொகு]

வாதியென்றா லவன்வாதி மவுன வாதி

மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன

வாதியென்றால் ரசவாதி ஞான வாதி

வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி

வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி

வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி

வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்

மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே

100[தொகு]

முத்தியிந்த வாதிக்கு வருகுமென்று

மூச்சுமுதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்

பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக்கீந்து

பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி

அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி

ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு

மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகமெய்தி

மாளுவார் கோடி சென்மம் அருளு வாரே

101[தொகு]

மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்

மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ

வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்

வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி

அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி

அலையாமல் நின்றவனே ஆதி யோகி

இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி

ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே

102[தொகு]

ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்

அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு

ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு

அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு

ஆகவப்பா இருபத்தோ டெழுநூறுந்தான்

அறிந்த மட்டும் சொல்லி வந்தேன் வல்லோ ருண்டோ

ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி

ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே

பின் ஞானம் நூறு[தொகு]

1[தொகு]

கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட

கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங்

கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங்

கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்

கைலாய நிர்க்குண நிர் மலமே தேவர்

காட்டுகின்றீர் கேசரிசின் மயமாய்க் கையில்

கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக்

கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே

2[தொகு]

பாடுகின்றேன் சரியை யென்ன தேவி தீட்சை

பரிவாகக் கிரியை யென்ன தேவி பூசை

பாடுகிறேன் யோக மென்மாசற்ற அமுதம்

பாங்கான ஞானமென்ன மோனத் தந்தம்

பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்

பாங்கான அஞ்சலிதான்மனமா தேகம்

பாடுகிறைன் பரன் முனிவளுக்கே யென்றால்

பரிவானால் ஞான வித்தை பலிக்குந் தானே

3[தொகு]

தானென்ற ஞானத்தின் பூமி கேளு

சாதகமா யோகமென்ன அபர வீடு

வானென்ற பூமியிலே வித்தை கேளு

அறிவிற்கு மறிவான வுகார வித்து

வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று

வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு

கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்

கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு

4[தொகு]

போச்சப்பா தத்துவங்க ளனித்தியப் பட்டுப்

புலன்கெட்டு நிலங்கெட்டுப் பொறியுங் கெட்டே

ஆச்சப்பா மனவரையில் மயங்கி நின்றே

ஆடுவோ தர் படம்போல அசைந்து தள்ளு

நீச்சப்பா கட நீச்சுத் திரோதாயி வெள்ளம்

நிலையேது கரையேது தவணை யேது

மூச்சப்பா அடங்கு முன்னே மாயை வந்து

முற்றிமுதிர்ந் தறிவுதள்ளு மோசங் காணே

5[தொகு]

காணப்பா மனவரையா மாறுக்குள்ளே

கடைத்தேறப் போகாது கலக்க மெத்த

ஊனப்பா வென்று சொன்னால் மனமூணாதே

உற்று மெள்ளப் பிடித்தாலும் மாயை கட்டும்

வீணப்பா வுலகத்தோர் ஞான மெல்லாம்

வேதாந்த சித்தாந்த மென்பார் கோடி

தோணப்பா ஞானமென்ன கண்டிப் பில்லைச்

சுடர்கோடி யொளிபோலத் தோன்றுந்தானே

6[தொகு]

தானென்ற நிர்மலமா மனத்தின் வீதி

தாண்டரிது தாண்டினா லறிவு போற்றும்

கானென்ற மனத்தின் சாதகத்தைக் கேளு

கற்பமுண்ண வத்துண்ணால் வாசிதோறும்

பானென்ற பாணத்தின் பாதை நில்லு

பகலாலும் கேசரத்தில் மனந்தானெட்டும்

வானென்ற வெட்டவெளி வடிவு காணும்

மாச்சல் மெத்த மாய்ச்சல் மெத்த மருவி கூடே

7[தொகு]

கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டுங்

கூப்பிட்டால் பூரணந்தான் கூடப் பேசும்

ஆடுவது மனவரையில் மாயம் போக்கு

அறாவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கு

நாடுவது பூரணத்தி லேற்றிக் காட்டும்

நலமான சாணையார் கெவுனஞ் சூதம்

தேடுவது சித்தருக்குக் குளிகை கெட்டுச்

செகத்தோர்க்கு வாதமென்றே தேட்டுத் தானே

8[தொகு]

தேட்டான வரைகடந்து மனமுந் தாண்டித்

தெளிவான அறிவனுடை வரையுந் தாண்டி

நீட்டான பூரணத்தின் வரைகா ணென்று

நேரான மூன்றுவரை யேறிச் சொக்கிப்

பூட்டான பூட்டிறங்கி விட்டேன் மைந்தா

புகழான வேறுவெளி லேறப் போகா

ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த

ஆச்சரிய மூலகுரு வாக்குங் கேளே

9[தொகு]

கேளப்பா மூலர்க்கு கா லங்கி பிள்ளை

கெடியான காலாங்கி மைந்தா போகார்

நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர் தான்

நேராக நான்குமுறை பேரனாகித்

தாளப்பா மேருவிலே தவசுப் பண்ணிச்

சாதகமாய்க் கைலாய வர்க்கமானார்

ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை

ஆச்சரிய மின்னமுண்டு சொல்லுவேனே

10[தொகு]

சொல்லுகிறேன் சிங்கென்று முன்னே யூன்றிச்

சோதிகண்ட பின்பதிலே மனத்தை யூன்றிச்

சொல்லுகிறேன் அங்க கென்று பின்னே யூன்றிச்

சோதியிலே அக்கரங்கள் தனமுங் கண்டு

சொல்லுகிறேன் பின்பல்லோ மவுன முன்னித்

தொடர்ந்தேறித் தளமெல்லாம் பார்த்துக் கண்டு

சொல்லுகிறேன் புருவ மையத்திற் கூடித்

துரியமென்ற அறிவினுள்ளே சொக்கினாரே

11[தொகு]

சொக்கியல்லோ அறிவைவிட்டே அகண்ட மேறித்

துயரறவே சமாதியுள்ளே கற்ப முண்டு

சொக்கியல்லோ மூன்றுவரை சடத்தோ டொக்கச்

சுருபவரை காணவென்று துணிந்து பொங்கிச்

சொக்கியல்லோ ஏறுவதற்கிவ் விதமா மென்று

சோதித்துக் குளிகை யெல்லாம் பார்த்துப் பார்த்துச்

சொக்கியல்லோக ஏற்றி வைக்குஞ் சுரூபமணி யொன்று

சூட்சமாய் மூலருடைய நூல் பார்த்தாரே

12[தொகு]

பார்த்தறிந்தா ரிந்தமணி வாத மென்று

பரிவான கயிலாய தெட்சணா மூர்த்தி

சேர்த்தறிந்த தம்முடைய வர்க்க மான

சீடரிலே திருமூலர் சண்டி கேசர்

மாத்தறிஞ்ச சனகாதி நால்வ ரோடு

மருவிநின்ற வியாக்ர பதஞ் சலியினோடு

போக்கறிந்த வடியெனாடொன் பதுபேர் பிள்ளை

புகழான பூரணத்தி லெழும்பென்றாரே

13[தொகு]

எழும்பையிலே நிர்மலம் போற் சடமோ காணா

தேனென்றால் பூரணந்தா னெதுக்குப் பேசும்

எழும்பையிலே குளிகை முதற் காண்டிற் பத்தே

ஏற்றியதோர் தீபத்தின் சுடர்போற் காணும்

எழும்பையிலே தேகமில்லை கோடா கோடி

எடுத்தசடஞ் சூட்சமமா யிருந்த தென்றால்

எழும்பையிலே மேலெழும்பி மௌன முற்றும்

இருந்துரைத்த சமாதியுடைப் பலந்தான் காணே

14[தொகு]

காணப்பா சொரூபமொன்று கலிதானொன்று

கையடங்கா தட்டம்மா சித்தியொன்று

பூணப்பா கைகொடு சின்மயமாந் தேவர்

பொருளோடே அருளான போக்குக் காட்டித்

தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா

சுபமாக இசைந்ததிலே சொக்கு மென்பார்

வீணப்பா மற்ற தென்சின் மயத்தைக் காட்டி

வேதாந்த மூலத்தை விளம்பென்றாரே

15[தொகு]

விளம்பினார் மும்மணிகை லாய வர்க்கம்

கழியாமற் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை

தோணப்பா இவை மூன்றுஞ் சித்தர் சொல்லார்

சொற் பெரிய பூரணமே சொல்ல வேணும்

வீணப்பா ஆராலுஞ் சொல்லக் கூடா

வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்

ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே

ஆருமே யில்லையதை அறியார் காணே

16[தொகு]

காணப்பா மும்மணி கைலாய வர்க்கம்

கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை

தோணப்பா இவை மூன்றுஞ் சித்தர் சொல்வார்

சொற் பெரிய பூரணமே சொல்ல வேணும்

வீணப்பா ஆராலுஞ் சொல்லக் கூடா

வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்

ஆணப்பா அறுபத்து நால் மரபுக்குள்ளே

ஆருமே யில்லையதை அறியார் காணே

17[தொகு]

அறியாத குளிகையுடன் சாரனையிற் குத்து

அதன் பெருமை காணக் கொங்கணரைக் கேளு

அறியாத அண்டமுதற் புவனம் பார்த்து

அருவியதோர் பதம்பார்த்துத் திரிந்தே ஆடிக்

குறியாகக் கற்பமெல்லாம் ஏறிப் பார்த்துக்

கூறாக பூரணத்தைக் காண்பே னென்று

நெறியாக மனமுரைக்கக் குளிகை கட்டி

நேராக மன வரையி லேறினாரே

18[தொகு]

ஏறினா ரறுவரையின் இயல்புங் கண்டே

இதமாக அறிவுடைய வரையிற் சென்று

தேறினார் மனமுரைத்தார் கண்டத் தேறச்

சேர்ந்தேறச் சேர்ந்தேறி வரையிற் றாண்டிக்

கூறினார் இவ்வளவு மொன்றோ வென்றார்

கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்

மாறினால் சென்றுமணம் பிடித்துச் சென்றார்

வரை மூன்றுங் கடக்கவொரு கற்ப மாச்சே

19[தொகு]

ஆச்சப்பா நாள் தரையில் ஏறும் போது

அரகரா எழுகோடி யிடிபோல் நாதம்

மூச்சப்பா வோடாது முன்பின் றோணா

முதிர்ந்த மன மாயையினால் பின்னுஞ் சென்றார்

கூச்சப்பா ஐவரையிற் போக்கி நின்று

குருகுரென மொழிந்ததிலே மனமுந் தேறிப்

போச்சப்பா சடமொன்று நிராசையாகிப்

புக்கினார் அறுவரையிற் புக்கினாரே

20[தொகு]

புக்கியல்லோ சுழல்காற்றின் றுரும்பு போலே

புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்

மக்கியல்லோ மனம் போச்சுக் குளிகை போச்சு

மாறாத மௌனமுன்னே மாண்டு போச்சு

ஓக்கியல்லோ சிலம்பொலிதா னுள்ளே வாங்கி

ஓகோகோ குளிகையது கீழே வாங்கு

சொக்கியல்லோ யென் செய்வே னென்றே யேங்கித்

துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண்டாரே

21[தொகு]

கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாஞ் சித்தர்

கேசரத்தை விட்டு மெல்ல அறிவில் நின்று

நாட்கொண்ட பாடெல்லாம் நினைத்துக் கொண்டு

நான் பிழைத்தே னான்பிழைத்தே னென்று சொல்லி

ஆட்கொண்ட என் குரு பூரணத்தில் நின்றீர்

ஆச்சரிய மெனையன்று மிவர யையா

வேட்கொண்டா யென் றவத்தை யீந்தனையா

வேறு வெளியாஞ் சிலம்பொலியை மேவென்றாரே

22[தொகு]

மேவென்று சொல்லுமுன் மேற்கண்ட போகர்

வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா

கோனென்ற குருவுக்கும் அவரே சீடர் :

கோடி லட்சத் தொருசீட ருண்டோ காணேன்

பானென்ற வேதாந்தம் சித்தாந் தம்பார்

பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்துத்

தேனென்ற கைலாய வர்க்கமாகிச்

சித்தருக்குச் சித்தராய் ரிடியானாரே

23[தொகு]

ரிடியென்ன சிலம்பொலியைக் கண்டா ருண்டோ

நேராக வதற்குள்ளே சேர்ந்தா ருண்டோ

ரிடியென்ன ரசவித்தை யறிந்தாருண்டோ

நிமிடத்தில் கவம்முற்றுத் திரிந்தா ருண்டோ

ரிடியென்ன அண்டமுதற் புவனந்தாண்டி

நின்றநிறை பாய்க்கண்டு வந்தோ ருண்டோ

ரிடியென்ன மவுனமுற்றுச் சமாதிக்குள்ளே

நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே

24[தொகு]

காணப்பா ரிடியாட்டுஞ் சித்த ராட்டுங்

காரணமாய் மவுனத்தே நின்றோ ராட்டும்

பூணப்பா பூரணத்தே நின்றோ ராட்டும்

பொன்னாக மரமுதலாகப் புகழ்ந்தோ ராட்டும்

ஓணப்பா வாசியுடைக் குதிரை யாட்டும்

ஒன்றுமற்றுத் தன்மயமாம் நின்றோ ராட்டும்

தோணப்பா இவைலோங் கொங்கணர்க்கே யல்லால்

சூழுலகிற் சித்தருண்டோ சொல்லி தீரே

25[தொகு]

சொல்லிடமாய் ஞானமுண்டோ குளிகை யுண்டோ

சூட்சித்த கற்பமுண்டோ வாசியுண்டோ

மல்சுட்ட வாதமுண்டோ சுன்னமுண்டோ

மகத்தான சிக்கியுண்டோ செய நீ ருண்டோ

வெல்லிடீர் விடமுண்டோ சாரணை யுண்டோ

வெவ்வேறே கூட்டுகிற குடோரி யுண்டோ

அல்லிடீர் வேதைக்கு வணந்தா னுண்டோ

அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே

26[தொகு]

அமைத்தவர் முக் காண்டம் பாடியதோ ரங்கம்

வந்தித்த பிள்ளைக்கு மறிவு தோன்றும்

அமைத்தவர் பாடினபொற் கம்பி போல

அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி

அமைத்தவர் சுருவெட்ட வெளிய தாக

அங்கங்கள் மறையாமற் சொன்னார் சொன்னார்

அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான்

அருகாக மறைப்பென்றே அறைந்திட்டாரே

27[தொகு]

அறைந்திட்டா ரைந்நூறு பிள்ளை வேண்டி

அப்பப்பால் வெகுதெளிவு சாத்தி ரந்தான்

நிறைந்திட்ட ஆரணம்போல் வெளியதாக

நீங்காமற் றுறந்து விட்டா ரருளொடு பொருளும்

குறைந்திட்ட புத்தியல் நிட்களமாம் புத்தி

கூறாத பொருளையெல்லாங் கூறி விட்டார்

வறைந்திட்ட மவுன மெல்லாம் வெளியதாக

வாய்திறக்க வித்தையெல்லாம் விளக்கி னாரே

28[தொகு]

விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க

மகத்துவந்தா னுண்டாச்சு மக்காள் மக்காள்

விளங்கியதோர் கீர்த்தியுண்டோ உங்க ளாலே

வெட்டவெளிக் கப்புறத்தே செல்ல மாட்டீர்

முளங்கியதோர் குளிகை யென்ன காய சித்தி

மூச்சற்ற விடத்திலே நோக்க மென்ன

பிளங்கியதோர் சித்தருட வர்க்க மென்ன

பேய்மக்கள் மூவைந்து பேரிற் றானே

29[தொகு]

தானென்று சொன்னதென்ன என்னைப் பெற்ற

சச்சிதா னந்தவெள்ளத் தயவுள்ளாரே

கோனென்ற முக்குளிகை நமக்குண்டையா

கொடியதொரு மவுனவித்தை நமக்குண்டையா

பானென்ற வாசிவித்தை நமக்குண்டையா

பாங்கான காயசித்தி நமக்குண்டையா

வானென்ற வெட்டவெளி யேறி யாடி

வருகிறேன் விடை கொடுத்து வாழ்த்திடீரே

30[தொகு]

வாழ்த்தியுன்னை யனுப்பினால் பூரணந் தான்

வரை கடந்தே ஆறு வரையேறு வாயோ

வாழ்த்தியுன்னை யனுப்பினால் நரகத்துள்ளே

மயங்காமற் செல்லுவையோ மைந்தா சொல்லு

வாழ்த்தியுன்னை யனுப்பினா லிடியிற் குள்ளே

மயங்காமற் றியங்காமல் மருவுவாயோ

வாழ்த்தியுன்னை யனுப்பினா லென்ன முன்னால்

வாய்பேச்சோ வரை படக்கும் மார்க்கம் தானே

31[தொகு]

மார்க்கமென்ன எனையீன் கைலாய மூர்த்தி

மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்

சேர்க்கமென்ன சிவாலயங்கள் பலியேற் றுண்டேன்

சிவமேது நீரன்றி வேறு காணேன்

ஆர்க்கமென்ன குளிகையிட்டுச் சென்று போறேன்

அங்கங்கே மனந்தேறிப் போறேன் போறேன்

தீர்க்கமென்ற சொக்கினாற் சொக்கிப் போறேன்

திரும்பினால் சடத்தோனே திரும்பு வேனே

32[தொகு]

திரும்புவையோ என் மகனே திடந்தா னுண்டோ

சிறுபிள்ளை புத்தியல்லோ செப்பு றாய நீ

வளர்பிறையோ தேய்பிறையோ ரவியி னுள்ளே

வருவதுபோ லல்லவது மாட்டி வாங்கும்

பரும்பிறையோ யோகமது பிறவி கோடி

பாங்கான வொளிக்குள்ளே கண்ணோ கூசும்

அரும்பிறையோ மனத்தளும்பு மேலொட்டாதே

அரகரா என் மகனே யறிவாய் நீயே

33[தொகு]

அறியாத வரைபார்க்க நான்தா னேறி

அய்யனே மூன்றுவரைக் குள்ளே சிக்கி

நெறியாக நால்வரையி லேறொட்டாமல்

நிமிடத்தில் அறிவினிலே வந்து நின்றே

மறிவானம் படைத்த கொங்கணரே சித்தர்

மற்றோரை யான்காணேன் மைந்தா சொல்லு

பொறியான வழியடக்கிச் சூட்சமாகிப்

போனவரார் போகருடைப் பிள்ளை தானே

34[தொகு]

பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப்

புகழான ரிடிகளெல்லாஞ் சித்த ரென்பார்

தள்ளையென்றா லவர்தாமூல ரிடம் போன

சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை

கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞானவீதி

கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்

விள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு

வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சு

35[தொகு]

போச் சென்று சொல்வதென்ன போய்வா னையா

புத்தி சொன்ன புத்தியெல்லாம் போட்டிட் டாயோ

வாச்சென்று நின்வயிற்றிற் பிறந்த பிள்ளை

வந்தானென் கெட்டாலென் மகத்வ முண்டோ

கோச்சென்ற நாவமென்ன விடிந்தா லென்ன

கோடிரவி காந்தி யென்ன பயமுண்டாமோ

ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன்

ஒருமனமாய்ப் பூரணத்தி லுன்னி டீரே

36[தொகு]

உன்னிடீர் அண்டமுதற் புவனந் தாண்டி

ஒரு நொடிக்குள் பதந்தாண்டி முப்பாழ் தாண்டி

மன்னுதிரு வருள்மனையைக் கண்டு போற்றி

மருவியதோர் பூரணத்திற் சென்றே யேறிப்

பன்னிடுவீர் தினந்தோறும் பழக்க மையா

பாயுடனே யது நடந்து வரைக ளாறும்

தன்னிடிர்யோ கறியேனும் தருளாற் போறேன்

தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே

37[தொகு]

அனுப்புவது பிறகுனையான் சென்று வாரேன்

அவ்வளவுங் குகைக்குள் நீ பட்ட மாய்நில்

தனுப்பிறந்த தளிபோலச் சென்று தாண்டிச்

சாதகமாய் சொரூபமணி மூன்றுஙு காட்டி

கணுப்பிறந்த கமலியது பூண்டுங் காட்டிக்

காட்டிலே யட்டமா சித்தியினால் காட்டி

உணுப்பிறந்தோ தாண்டி லொரு வரையி லேறி

உற்றுமறு வரையதனி லோடி னேனே

38[தொகு]

ஓடினேன் மூவரையிலிடி யோ கோடி

ஓகோ கோரவிகோடி வன்னி கோடி

வாடினேன் மனமிளைத்தேன் மயக்க மானேன்

வாயிலிட்ட குளிகை சென்றே யேறிப் போறேன்

நாடினேன் கற்பமொன்று மூவரையிற் றாண்டி

நலமாக நாலுவரைக் குள்ளே சென்றேன்

ஆடினே னாடினே ன்றிவு கெட்டேன்

அரகரா மோசமென்றே யிறங்கினேனே

39[தொகு]

இறங்கினே னால்வரைக் கப்புறமே போக

என்னாலே முடியாதே யே தோ அஞ்சில்

இறங்கினேன் என்மக்கா ளும்மா லாமோ

ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளா யென்ன பேச்சு

இறங்கினேன் இந்நாள் பின் னையார் சொல்லார்

ஏகவெளி திக்காடு மிடியோ கோடி

இறங்கினே னென்னாலே முடிவு காணேன்

ஏறினார் கொங்கணர்தா மேறினாரே

40[தொகு]

  • கொங்கணர் மகத்துவம்

ஏறியதோர் கொங்கணரைப் போலே யில்லை

ஏகவெளி தீக்காட்டெப் படியோ போனார்

மாறியதோர் மனம்பிடித்தார் யோகமானார்

மாளுவது நிசமென்று வாய்மை பூண்டார்

கூறினதோ ரறுவரையைக் கண்டு மூட்டக்

குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்

ஆறியதோர் மனங்கண்டா ரவரே சித்தர்

ஆச்சரியங் கொங்கணர்போ லார்கா ணேனே

41[தொகு]

காணரிது காணரிது கோடா கோடி

கண்டு நான் பாபருட்ச சித்தர்க் குள்ளே

பூணரிது பூணரிதே அகண்ட வீதி

புக்கல்லோ சிலம்பொலியைக் கேட்க மாட்டார்

ஊணரிது ஊணரிது வெளியிற் பார்த்து

ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்

தோணரிது தோணரிதாய் நின்ற ஞானம்

சீடருக்குள் ளோடுறது துரியந்தானே

42[தொகு]

சாங்கத்தார் தானென்ற பூரணத்தைச் சாங்கத்தோர்கள்

சகமெல்லாம் நிர்க்குணமாய் நின்ற தென்பார்

வானென்ற வெளியென்பா ரில்லை யென்பார்

வாய்பேசார் சொன்னக்காற் போமோ சொல்லு

கோனென்ற குருவருளால் சமாதி கூட்டிக்

குவிந்து நின்று மவுனத்தின் நிலையைப் பற்றி

ஊனென்ற வுடம்பை விட்டே அறிவாய் நின்று

உலாவுறதே காங்கமென்றே யுரைத்திட்டாரே

43[தொகு]

உரைத்திட்ட காரமென்ற பிருதிவி போக்கு

ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து

மறைத்திட்ட மவினத்துடன் மவுன மூட்டி

மருவியந்த வறிவோடே வாசமாகி

நிறைத்திட்ட அகண்டத்திற் சென்றே ஆடி

நேரான அண்டமுதற் புவனம் பார்த்து

முறைத்திட்டந் தப்பாமற் ஞமாதி நின்றால்

முழுயோகி முழுஞான முமூட்சா வாயே

44[தொகு]

ஆமப்பா விதற்கு முன்னப் பியாச மார்க்கம்

அறைகுவே னட்டாங்கம் நன்றாய்க் கேளு

ஓம்பபா வகையாக விரித்துச் சொல்வேன்

உத்தமனே சாட்சிநித் திரையைப் போக்கு

தாமப்பா சதாநித்தம் தார கத்தே

சார்ந்து நின்ற கேசநிலை சதாநித் தம்பார்

சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால்

சொல்லாத முத்திரையைச் சொல்லுறேனே

45[தொகு]

சொல்லுறேன் ரவிமதியும் வன்னி கூடிச்

சொலித்து நின்ற விடமல்லோ கேசரிதா னப்பா

சொல்லுறே மதைப்பார் மனஞ் செயநீ ராகுஞ்

சுத்தவெளி யடியோடே தாக்கி யேத்தும்

சொல்லுறேன் மனம்புத்தி சித்த மென்பார்

தொடர்ந்துநின்ற குருபதத்தைச் சூட்டிக் கேளு

சொல்லுறே னறிந்தமட்டும் புருவமையம்

சூட்சந்தொட் டேறியட்டால் சுத்துறை கேனே

46[தொகு]

கேளப்பா ஏமத்தைச் சொலவே நானுங்

கெடியான நேம்மூட னாசங் கொண்டு

வாளப்பா பிராணாயம பிரத்யா காரம்

மகத்தான கயானமொடு தாரணை கேளு

தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம்

தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு

வேளப்பா ஏமமென்ற பத்தஞ் சொல்வேன்

வேதாந்த பொறியறிந்தோர் பெரியோர் தாமே

47[தொகு]

பெரியோர்கள் ரண்டமென்ற ஆன்மா நோக்கிப்

பேரான பரிச்சின்ன மனமு மாகி

அறியோர்கள் சாதியென்ற ஆச்சிரம் விட்டே

ஆசையென்ற விகற்பமெல்லா மடித்துத் தள்ளிப்

பரியோங்க ளிங்கிசையை நீக்கிப் போட்டு

பராபரத்தை நோக்குவதங் கிசம தாகும்

சரியோரா வதுஞ்சகல மதத்தி னாலுந்

தனித்தனியே கண்டிக்கப் பாடாதென் பாரே

48[தொகு]

என்பார்க ளிங்கிசையா யிருக்கு மாண்பர்

எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி

அன்பார்க னிதுவல்லோ சத்தி யந்தான்

ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம்

வன்பார்க ளபகரிப்பை விட்டு விட்டு

மனமுரைத்தா லூரதிக மென்று பேரு

தன்பார்கள் பிறசரீ ராதி சுபாவந்

தானென்ற தற்குலலட் சணந்தான் பாரே

49[தொகு]

பாரப்பா பிரமமது சுபாவ மாகப்

பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று

நேரப்பா பிரமசரியமிதுவாங் கண்டால்

நிரந் தரமுந் தயவினுடை நினைவு கேளு

தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச்

சகலசனம் நமைப்போ லென்றே யெண்ணி

ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார்

அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே

50[தொகு]

காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை

கரைகற்ற சமயம் பொய் யென்று தள்ளி

ஆணப்பா திடப்பட்டாட சேப மென்பார்

வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக்கத்தால்

வீணப்பா மானாபி மானம் வந்து

வெறும் வெளிபோல் சொப்பனமா மென்று தள்ளி

தோணப்பா தாங்காம லகண்டத்துள்ளே

சொக்குவது சமயமென்று சொல்ல லாமே

51[தொகு]

சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி

தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை

வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம்

வேறில்லை நாமதுதான் எனலே முத்தி

அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு

அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி

நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று

நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே

52[தொகு]

தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்

சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்

வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு

மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா

கோனென்ற தன்னிடத்தே யொன்று மில்லை

கூடி நின்று போனதில்லை யென்றே யெண்ணி

வேனென்ற நிர்க்குணமும் வேறொன் றில்லை

வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே

53[தொகு]

ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு

அறைகுவேன் நன்றாகப் பூரணந்தான்

வாச்சப்பா சத்யமென்ன மித்தையென்ன

மருவியதோர் நானேதான் என்ற தாரு

வீச்சப்பா நமக்குவந்த பந்தமேது

வேதாந்த சாத்திரத்தால் விளங்கப் பார்த்துக்

கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்

குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே

54[தொகு]

நோக்கப்பா பரமமதி லோகத் துள்ளே

நுகர்ந்து நின்ற காமியத்தை நரகென் றெண்ணி

வாக்கான வெறுப்பது சொப்பனம் போலெண்ணி

மசகமிது வென்றதள்ளி மன மீதேறித்

தாக்கான பொருளல்லோ சச்சிதானந்தம்

தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு

போக்கான வேதாந்தப் பிரம சாரம்

புகட்டுகிற குருச் சொல்பூ ரணமென் றெண்ணே

55[தொகு]

எண்ணியதோர் மூன்றையுந்தா னுண்மை யென்றே

எண்ணியிருக் கிறதார் என்றியம்பு வார்கள்

தண்ணியதோர் குருவுரைத்த வுபதேசத்தைத்

தானறிந்து பூரணமாய் முத்தனாகிப்

பண்ணியதோர் ரபராதம் குருவுக் கீந்து

பராபரத்தைத் தன்தேகம் போல யெண்ணி

அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம்

ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே

56[தொகு]

காணப்பா இப்படியே தீர்த்தியானால்

கைகடந்த சிவபூசை யென்று சொல்வார்

வீணப்பா சகல நூலென்று தள்ளி

விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி

ஊனப்பா குருபிறகே நிழலைப் போலே

உத்தமனே சச்சி தா னந்த னானாய்

ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று

அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே

57[தொகு]

அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும்

அப்பனே வாசனைபா பஞ்சந் தாண்டி

மறிந்திந்த புத்ராதி பாசத் தாலே

மாயம் வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச்

செறிந்தவதை யடிச்சகவே காந்தம் பார்த்துச்

சீராக நிற்கிறதே செம்மை யாகும்

நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில்

நினைவோடு வருகிறதே யாசை தானே

58[தொகு]

ஆசையென்றும் மதியென்றும் அதற்கு நாமம்

அப்பனே தாம்பிரம மென்றே ஆசான்

நேசை யென்ற வுபதேசப் படியே யென்றும்

நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப்

பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால்

உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள்

காசையென்றே என்னென்ன கார்யம் வந்தங்

கைவிட்ட துக்கம் வந்துங் கலங்கிடாரே

59[தொகு]

கலங்காமல் நாப்பிரம மென்றே யெண்ணிக்

கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே

மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா

மகத்தான நேமமென்ற பத்தும் ஆச்சே

இலங்காம லிருபதையும் மனுட்டித் தாக்கல்

என்மகனே மனந்திடமா யில்லா விட்டால்

துலங்காத சுவரில் சித்திரம் போலாகும்

60[தொகு]

வாறாகச் சுகாசனமா யிருந்து கொண்டு

மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி

கூறாகக் கும்பித்து மாத்திரையை யேற்றிக்

குறியோடே சிகாரத்தால் ரேசி ரேசி

சாறாக விப்படியங் கென்று கும்பி

சாதகமா யிவைமூன்று தீர்ந்த பின்பே

ஆறாக அகாரமுத லுகாரங் காட்டி

அப்பனே மவுனத்தாற் கும்பித் தேறே

61[தொகு]

கும்பித்து மௌனந்தான் குவிந்த பின்பு

கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயுந்

தம்பித்துக் கண்டதே நின்றே யூது

தாலடங்கி யுரைத்தபின் மேல் மூலம் நின்று

சொம்பித்தே யறிவோடே மௌனம் பூரி

சுகமாகப் பூரணத்தை யதற்குட் கும்பி

தம்பித்து மனத்தொடு ரேசகத்தைப் பண்ணு

தலமான பிரமமென்று பிராண னாச்சே

62[தொகு]

ஆச்சப்பா இதுவல்லோ பிராணா யாமம்

அறிந்தவனார் சிவயோகி அறியார் மற்றோர்

ஓச்சப்பா பிரபஞ்ச வாசை விட்டே

ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்

வாச்சப்பா வந்ததென்ற காரணமாக

மருவியதோர் ஞானமென்ற மார்க்கத் தூடிக்

கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணக்

கூரான கர்மமெல்லாம் விடுக்க நன்றே

63[தொகு]

நன்றாக வேதாந்த சித்தி ரத்தால்

நாம் சாட்சியென்று நித்த முரைத்து நின்று

பன்றான மற்றவை நாம் அல்ல வென்று

பரவி நின்றே யுலகமெல்லாம் மித்தை யென்று

கன்றாக வுரைப்பு நிரந்தரமு நினைவாய்க்

காரண காரியங்க ளெல்லாந் தவிர்ந்து போட்டு

ஒன்றான வொரு பொருளாய் நின்றா யானால்

உத்தமனே பிரத்தியா கார மாச்சே

64[தொகு]

ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்

அப்பனே சுத்த சைதன்ய மூன்றும்

போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்

ஓடியெங்கும் மறைந்திருக்கும் கண்டாலுந்தான்

ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி

யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண

வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு

விளம்புகிறேன் ஐந்து வகைச் சமாதிதானே

65[தொகு]

தானென்று அதிட்டான சைதன் யத்தை

தனையளித்து நிலவரையில் தீபம் போல

ஆனென்ற அலைவற்றுத் திடம தாக

அப்பனே அகண்டமது தானாய் நின்று

வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்

விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு

வானென்ற சவ்விகற்பச் சமாதி கேளு

மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே

66[தொகு]

உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்

உறவாகக் கேட்டாக் காந்தாணு வித்தை

தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று

தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு

விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்

விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது

தள்ளாகத் தன்னையனு சந்தானித்துத்

தலமான சந்தானந் தரிசான மாச்சே

67[தொகு]

ஆச்சப்பா இதன் போசவ் விகற்பமென்பார்

அருளியதோர் நிருவிகற்பச் சாதி கேளு

ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி

உத்தமனே சாத்தனுத்தங்கே மறந்து

ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல

ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால்

கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே

கொண்டாற் பூரணத்தில் நிரு விகற்பமாமே

68[தொகு]

ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும்

அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும்

ஓமப்பா காலமென்ற நிறையு மில்லை

உத்தமனே பிரபஞ்ச மில்லை யென்று

சோமப்பா விகாரந் தோற்றும் ப்ரபஞ்சஞ்

சொப்பனம் போல் பாசமென்ற மதி யடக்கில்

ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும்

அகத்தான காரணனா மென்றே யெண்ணே

69[தொகு]

எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி

ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே

அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி

அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே

ஒண்ணியல்லோ சொரூபத்திற் வயிச்சு நின்றே

உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந்

தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா

சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே

70[தொகு]

போச்சதுவுங் கடிகையொன்று தானாய் நின்றாற்

புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா

ஆச்சதவு மவுனமுற்று வாயை மூடி

ஆறையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி

வாச்சதும் ப்ரபஞ்சத்திற் கண்ட தெல்லாம்

வாலையு னுரைபோலும் மலைபோற் காணும்

கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக்

கூறுமத னங்கம்போற் குறியைக் காணே

71[தொகு]

குறியான விண்ணுதித்த மேகம் போலுங்

கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும்

நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா

நேராக வுண்டாகில் இற்றுப் போச்சு

பறியான வெவ்வேறு காம மாகிப்

பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோன்றும்

மறியாக வழிந்து போம்நாமே பிரமம்

மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே

72[தொகு]

மயக்கமற்று நானொருவன் எனக்கு ளெல்லாம்

மற்றொன்று மில்லையென்று தீர னாகித்

தியக்கமற் றெந்நேரமு முள்ளிட்டுக் கொண்டு

சேர்ந்துவருஞ் சந்தோடத் துக்கந் தள்ளி

முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து

முன்னின்று விகற்பங்கள் பண்ணினாலும்

அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி

ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே

73[தொகு]

நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்

நேராகச் நசாதியிலே யிருக்கும் போதே

அல்லப்பா தோய்தம்வந்தாலா தரவு பண்ணி

அசையாத மலைபோல விருக்க நன்று

சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்

சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று

வெல்லப்பா வாசனையை விண்டாயா னால்

மேவிநயோ ராரூடச் சமாதி யாச்சே

74[தொகு]

  • மாயை யுத்தி

ஆச்சப்பா மாயை புத்தி சொல்லவென்றால்

அனேகமுண்டு சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு

வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்

மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்

ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்

ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்

வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்

வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே

75[தொகு]

  • ஞானவான்

காணப்பா வின்ன மயமாகி நின்று

கலந்து நின்ற புராண மய கோச மாச்சே

ஊனப்பா விக்யான மயமு மாகி

உத்தமனே மனோ பயமாங் கோச மாச்சு

பூணப்பா ஆனந்தமயமு மாகப்

பொங்கிற்றே யஞ்சுதிறை போகத் துக்குத்

தோணப்பா திறையஞ்சு மாயை மாயை

சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே

76[தொகு]

பூட்டியதோர் விசிட்டனென்றும் விராட னென்றும்

புகழ்பெரிய ஏ மகற்ப்பஃ போக்கே தென்றும்

நீட்டியதோ ரண்டமென்றும் புவனமென்றும்

நேரான பதங்க ளென்றும் மாயை யாச்சே

ஆட்டியதோ ராட்ட மெல்லாம் மாயை யாட்டே

அறிந்துகொள்ளு முன்மனமே மட்டை மாயை

மூட்டியதோர் மனமும் வந்த வரைக்கே நிற்கும்

மூதண்ட மனங்கடக்க முடியா வாறே

77[தொகு]

வாறான வுலகத்திற் சுத்த வீரன்

மனத்தோடே போராடி யருவில் மாள்வான்

கூறான ஞானியென்றால் லிங்கம் புக்குக்

குறியான அம்பலத்தில் சேர்வா னப்பா

தாறான வுலகத்தோர்க் கடுத்த ஞானஞ்

சகத்திரமாங் கொடியிலே யொருவர் சொல்வார்

வீறான சிலபேய்கள் சாங்கம் பேசி

விழிந்திறந்து விழிந்திறந்து திரிவர் தானே

78[தொகு]

தானென்ற பிரமருமோ ரறிவிற் சென்றார்

சாதகமாய் மாலென்றால் அறிவிற் றோன்றும்

கோனென்ற ருத்திரனோ ர்ருவி வந்தங்

கொள்கின்ற மகேச்சுரனோ ரறிவிற் றோன்றும்

வானென்ற சதாசிவனோ மணியைக் காண்பான்

மகத்தான ஐவருந்தா னாக்கிப் பீடம்

வேனென்ற பஞ்சகர் த்தாள் மட்டுஞ் சென்றால்

வேதாந்தியென மட்டுஞ் சொல்வார் பாரே

79[தொகு]

பாரப்பா சித்தரென்றார் குளிகை போட்டுப்

பகுத்தறிவா ருள்மனையைப் பரிந்து போற்றி

நேரப்பா தம்மொடு பூரணத்தி னின்று

நேராக வோடம்போல் நீஞ்சி யாடிச்

சேரப்பா திரும்பி வந்து புகுது வார்கள்

செகத்திலுள்ள சித்தருக்கே அடுத்தவாறு

கூறப்பா பூரணத்தில் நாதந் தாண்டிக்

கொங்கணர் தாம் சிலம்பொலியைக் கூடினாரே

80[தொகு]

கூடினார் மூலகுரு பேர னென்று

கோடானு கோடிசித்த ராடிப் பார்த்தார்

ஆடினா ராடினா ரேற மாட்டார்

ஆச்சரியங் கொங்கணர்தா மகண்டில் சித்தர்

ஓடினா ரோடினா ரனேகங் கோடி

ஓங்கிநின்ற காகத்திலொன்றிப் போட்டுத்

தேடினார் தேடினார் குளிகை தன்னைச்

சித்தருக்குச் சொருபனிது கிட்டும் வாறே

81[தொகு]

வாறான சுரூபமணி யாரின் வர்க்கம்

மகத்தான தெட்சிணா மூர்த்தி வர்க்கம்

கூறான தொன்றாய் நிட்களங் கமாகிக்

குவிந்து நின்ற பொருளாகிக் கூறொ ணாதே

தாரான தற்பதமாய் அதுவு மற்றுச்

சச்சிதா னந்தத்தில் நின்ற ஆசான்

பேரான பிள்ளைகட்கு மணியு மீந்து

பெரும்பாதை மகார மென்று பேசினாரே

82[தொகு]

பேசியதுர்க் கந்த மென்ன வென்று கேட்டால்

பெருவிரலே நீயாய் மெய் விரலே போத

மாசியது வற்றக் காற் கவிக்கு முன்னே

மக்களே யிந்தப்பா ரென்று காட்டித்

தேசியது மகாரவித்தை சென்று கூட்டிச்

செப்பாதே மகாரவித்தை குளிர்ந்த ஞானம்

வாசியதுக் கருகாகும் கண்டு கொள்ளும்

மக்களே சின்முகத்தில் நடுப்பா லாமே

83[தொகு]

நடுவென்ன வெட்டவெளி யொன்று மில்லை

நானுமில்லை நீயுமில்லை யகண்ட வீதி

கடுவென்ன லகுவென்ன மனஞ் செவ் வானால்

கண்டு கொள்ளுமென்று சொல்லிக் கரத்திற் காட்டிச்

சுடுவென்ன தாபமென்ற முளையை முந்திச்

சுடுகின்ற துத்தி யென்ன மோனத் தீதான்

விடுவென்ன இந்திரியப் பாம்பை நீயும்

விட்டகன்றே யறிவோடா மேவு மேலே

84[தொகு]

மேவுமென்கை லாயபரம் பரையா மாணா

வெகுகோடி ரிடிகளுக்கும் உபதே சித்தார்

மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி

மேருவிலே யிருந் தார்க்கு முபதே சித்தார்

மேவுமென்றேன் னோடுபதி னாறுபேர்க்கு

விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார்

மேவுமென்றே யெழுவருடன் திருமூலர்க்கு

விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே

85[தொகு]

விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம்

மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள்

அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே

அரைக்கணமும் பிரியார்கள் அடியை விட்டுத்

தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே

சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக்

கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை

கெடியிட்டு மாட்டியங்கே கிட்டினாரே

86[தொகு]

கிட்டினங் கைலாய பரம்பரையி னாலே

கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று

கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே

கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக்

கிட்டினோ மீசானத் துதித்தோ மென்று

கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக்

கிட்டினோ மென்று சொல்லித் தட்சிணா மூர்த்தி

கெடியான பதம்பிடித்துப் பணித்திட்டாரே

87[தொகு]

பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன்

பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால்

மணிந்திட்ட சடம் போக்கிக் கைலாயத் தேக

மானதுதான் வெகுகடின மதிக மெத்தக்

கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே

கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற்

தணிந்திட்ட பத்திகொண் டிங்கே வந்தாய்

சாதகமா யொருவரையுங் கண்டி லேனே

88[தொகு]

கண்டிலே னாச்சரியங் குமாரனே பார்

கலந்தநற் சென்மமிவர்: கைலாய மானார்

ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன

உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு

கண்டிலே னிவரைப் பொற்சித்தர் காணேன்

காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்

பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா

பரம்பரமாய் வயதுதந்த மோனந் நானே

89[தொகு]

மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்

மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார்

மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்

மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார்

மௌனவித்தை யகண்டாதி யறிந்து கொள்ளும்

மற்றொன்று மயக்கமற்று மௌனத்தார்க்கு

மௌன வித்தை யெய்திக் காலவனே ஞானி

வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே

90[தொகு]

நன்றான மௌனத்திற் கடிகை சேர

நல்வினையுந் தீவினையும் நாசமாகும்

நன்றான மௌனமென்று நினைக்க முத்தி

நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்

நன்றான மௌன மல்லோ ரிடிகள் சித்தர்

நாலுதிக்குஞ் சொரூபமல்லோ ஞானி யானார்

நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே

நலமாகக் கூப்பிடுவது கண்டி லாரே

91[தொகு]

கண்டிலார் மோனத்தி லனேக சித்தி

காணும்பபா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே

அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது

அப்பனே மௌனமென்ற தீட்சை கேளு

ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே

ஒருசேரச் சமைத்துண்ணு ஒருபோ தப்பா

விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால்

விளங்கியதோ ரேழுலட்ச மந்திரஞ் சித்தே

92[தொகு]

சித்தாகுஞ் சித்தியுமாம் எட்டெட் டாகும்

திறமாக நின்றவர்க்கு மந்திரஞ் சித்தி

சத்தாகும் வேத மந்திரத்தைப் பாவி

சலசலெனப் பேசிச் சேவிப்பார் கோடி

கத்தாதும் நாய்போல கத்தியென்ன

காசுக்கு மாகாது சித்தி யில்லை

முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு

மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே

93[தொகு]

பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப்

போச்சதனா லேயகத்தின் பேத மாச்சு

கையென்று யோகத்தில் மௌன முட்டக்

கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு

சையென்ற நிர்த்தம்பபா ஆறிற் காணுஞ்

சாதகமாய் மேல் மூலந் தாண்டிக் காணும்

மெய்யென்று பிடித்தக் காலவனே யோகி

விரைந்தனை யறியாவிட்டால் விருதா மாடே

94[தொகு]

விருதன்றோ வுலகத்தில் ஆசா னென்று

வேடமிட்டு வேடமிஞ்சி மோடி யேற்றி

விருதன்றோ பணம் பறித்துப் பிழைப்பா யையோ

வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார்

விருதன்றோ கெடுத்துவிட்டா ருலகத் தோரை

வேடமென்று மயக்காலே மயங்கிப் போனார்

விருதன்றோ சீடருடைப் பாவ மெல்லாம்

விளையாட்டுப் போல் வாங்கி விழுந்திட்டாரே

95[தொகு]

விழுந்திட்டா ரென்றறிந்து கொங்காணரே நீர்

வெகுபிள்ளை பெற்றீர் முந் நூறு பிள்ளை

நழுந்திட்ட பிள்ளையுண்டோ திறந்தா னுண்டோ

நலமாக வுமைப்போலா னாருமுண்டோ

அழுந்திட்ட சமாதியுண்டோ தியானமுண்டோ

ஆகாத பிள்ளையுண்டா சொல்லுஞ் சொல்லும்

கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே

கொஞ்சமறப் பிள்ளையிலே கூடிலேனே

96[தொகு]

கூடாத நல்லபுத்தி சித்தர் வென்றார்

கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி

நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக் கொண்டு

நிமிடத்திற் குகையினுள்ளே நேர்ந்து போனார்

ஆடானா லதுமாட்டு வன்றே சித்தர்

ஆனந்த போகமுண்ட ஆண்மை யாண்மை

ஓடானா லோட்டுநிர்க் குணத்தின் வீதி

ஒருமனமாய் நின்றுபுத்தி யுரைப்புத் தானே

97[தொகு]

தானென்ற கொங்கணர்போல் பிள்ளை பெற்றால்

தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி

வானென்ற சுந்தரா னந்தன் விந்து

வரவற்ற பூரணமே தாப மென்னக்

கானென்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள்

கரையற்ற போகத்தைப் பானஞ் செய்வோம்

கோனென்ற கைலாய பூரணமே தேவர்

கொள்கியதோ ருற்பனமும் லயமுஞ் சொல்லே

98[தொகு]

சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள்

சுகமாக வாரிதியல் மேக நீர்போல்

அல்லுகிற துவலையைப்போற் பிறப்புண் டாச்சே

அதுவோங்கும் விவரமென்ன சொல்லீ ரையா

பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு

பாங்கான ரவியங்கே நன்றாய்ப் பாரு

சொல்லுகிற கெற்பத்தில் விந்து வுன்னிச்

சிந்தூளி பரஞ்சத்தால் சின்ன மாச்சே

99[தொகு]

ஆச்சப்பா சனன மிந்தப்படியே யாகில்

ஆடங்கிறதக் கினியும் ரவி மதியுங் கூடி

வாச்சப்பா சந்திரனிற் கலந்து போனால்

மாளுகிற விதமிதுதான் குளிர்ந்து போகும்

நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும்

நேராக மனோன்மணியைத் தொட்டு மீறாம்

ஓச்சப்பா லக்கமில்லை யெழுவகைத் தோற்றம்

உத்தமனே நாலுவகையோனி காணே

100[தொகு]

காணிந்தப் படியெல்லாங் கண்டு கொண்டு

கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி

வானிந்த சாயமட்டே சாலமெல்லாம்

மனந்தாண்டி அறிவில்வந்த தெல்லாம் போச்சே

ஆனிந்தப் படி நீங்கள் சமாதி கொண்டே

அரைவிட்டால் குளிகையிட் டோடிப் பாரு

தோணிந்தப் படி சொன்னேன் முன்னைத் தூக்குச்

சுழல்காற்றுத் துரும்பதுபோல் மவுன மாமே

101[தொகு]

மௌனமென்றீ றெனையாண்ட தட்சிணாமூர்த்தி

மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்

மௌனமென்ற நாதாக்கள் பதத்தைப் போற்றி

வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்

மௌனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி

வாகான செயமண்டி போட்டே நூற்றில்

மௌனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்

வாகான ஞானமுறை முற்றுங் காணே

முற்றும்