காளிதாசன் உவமைகள்/குழந்தை

விக்கிமூலம் இலிருந்து

5. குழந்தை

ங்களகரமான தீபம் அதன் சுடரால் விளங்குகிறது; விண்வெளி ஆகாய கங்கை எனப்படும் வெண்மையான உடுத்திரளால் தூய்மை பெறுகிறது; கல்விமான் நன்கு பயின்ற இலக்கண மரபுக்கு ஏற்ற சொல் அமைப்பால் பொலிகிறான். சொற்களுக்குத் துய்மை மேதகு செயல்களைக் கூறுவதால் உண்டாகும்.

முன்பே உயர்ந்தவன், ஒளிமிக்கவன், தூயவன் ஆக இருந்த இமவானை மேலும் விளங்கச் செய்தாள் உமை. கு. 128

குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குப் புறச்சூழ்நிலையும் அக நிலையும் வேண்டியுள்ளன.

புறச்சூழ்நிலை குழந்தைக்குக் கிடைப்பது அன்னப்பறவைகள் தாமாகவே கங்கையாற்றை வேனிற் காலத்தில் வந்து அடைவது போன்றது. அன்னம் பகுத்து அறிந்து சாரத்தை மட்டும் பருகவல்லது. வேனிற் காலத்தில் நீரும் வானும் தெளிவுற்றிருக்கும். அவ்வாறு பகுத்தறியும் ஆற்றலும், தெளிவும்,உரியகாலத்தில் வெளியே இருந்து உமையைச் சார்ந்தன.

அவ்டதவாதிகளுக்கு இயற்கையாக உள்ள ஒளி இரவில் வெளிப்படும். அவ் ஒளியை யாராலும் மறைக்க முடியாது. அவ்வாறு அகநிலையில் இருந்த புத்திகூர்மை உமை கல்வி தொடங்கும் காலத்தில் ஒளி கான்றது. கு. 1:30

ழகுத்தெய்வம் நிலவைப் பெற்றது; தாமரையையும் பெற்றது; இரண்டுமே அழகியவைதாம். எனினும், நிலவின் ஒளியில் தாமரையின் மலர்ச்சியை நுகர இயலவில்லையே என அத்தெய்வத்துக்கு ஒரு குறை இருந்தது. உமை தோன்றினாள் அவளுடைய முகத்தில் நிலவி ஒளியையும் தாமரையின் அழகையும் ஒருங்கே கண்டு அத்தெய்வம் தன் குறை நீர்ந்தாள். கு. 1:43

ருதியின் கதிர் பரவுவதால் தாமரை மொட்டு மலர்ந்து விரிகிறது. உமை மங்கைப்பருவம் அடைகிறாள். இதுவரை சதைப் பற்று இன்றி, முயன்று அழகு செய்யவேண்டியதாக இருந்த அவள் உடலின் ஒடுக்கங்கள் மறைந்தன. தசை நிரம்பி, மார்பும் பிட்டமும் சம பாகங்களாகப் பிரிந்து, மெலிந்த இடையும் தோன்றியது. ஒவியனுடைய தூரிகையால் ஒவியம் முழுமைபெறுவதுபோல, மங்கைப் பருவத்தால் உமை அழகின் முழுமை பெற்றாள். புத்திளமையின் கிரணங்களால் அவள் அவயவங்களில் அழகு பொழிந்தது. கு. 1:32


மை தவக்கோலம் பூண்டிருந்தாள்; முன்பு அவள் கூந்தலிலும், காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த அணிகளால் அவள் முகத்தாமரை பொலிவுற்றிருந்தது. இப்போது சடையாகிய குழலோடு மரவுரி உடுத்துத் தோன்றினாலும், உமையின் முகத்தாமரை சேற்றில் பாசி சூழ்ந்ததாக இருந்தாலும், அதன் அழகு குறையவே இல்லை. கு. 5:9


திலீபன் குழந்தையின் முகத்தழகைத் தன் கண்களால் பருகினான். அவன் கண்கள் காற்று வீசாத காலத்துப் பொய்கையில் பூத்த தாமரை மலர்களைப்போல விரிந்தன. தன் இன்பத்தைத் தன் குடிமக்களுடன் சேர்ந்து நுகர்ந்தான். கடல் முழு மதியைக் கண்டதும் தன் திரைக்கைகளை எடுத்து ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுவதுபோல மக்களுக்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களுடன் களிப்பில் திளைத்தான். ர. 3:17


குந்தலை தன் பேரெழிலின் சிறப்பை அறியாத பேதைப் பெண். அவள் துஷ்யந்தனைக் காதலித்தாள். அவன் அரசன் என்பதை அறிந்தபின், அவன் தன்னை ஏற்பானோ, ஏற்க மாட்டானோ, என்ற அச்சம் அவள் மனத்தை வாட்டியது. அவ் அச்சத்தை அவள் தன் தோழிகளிடம் கூறும் போது துஷ்யந்தனே மறைந்திருந்து கேட்கிறான்.

"திருவை பெறுவதற்காகப் பலர் தவம் கிடக்கிறார்கள். அவர்களுக்கு திரு அருள் புரியட்டும், புரியாமல் இருக்கட்டும்; ஆனால், திருமகளே ஒருவனை விரும்பினால், அவள் அவனை அடைவதற்கு என்ன தடை இருக்க முடியும்?”

இது துஷ்யந்தன் தனக்குள் கூறுவது.

"உன் எழில்வனப்பை நீ இகழ்கிறாய், தன்மை தரும் இள வேனில் கால முழு நிலவினுடைய ஒளியை முன்தானையால் யாரால் மறைக்க முடியும்?" சா.3:13

னிச்ச மலர் மெல்லிது. எனினும், அதில் உள்ள தேனை நுகர வரும் வண்டைத் தாங்க வல்லது; ஆனால் பறவைகளின் பாதங்களைத் தாங்க வல்லதன்று.

மகளிர் உடலும் அத்தகையதே. காதலனைத் தழுவி ஏற்கவல்லது:ஆனால் ஊன் வாடத் தவம் செய்யும் வெம்மையைத் தாங்க இயலாதது. கு. 5:4

லைகளில் ஆறு தன் போக்கில் ஒடுகிறது; மலை குறுக்கிடுகிறது. என் செய்வது என ஒரு கணம் ஆறு திகைக்கிறது; ஒட்டம் தடைப்படுகிறது; மலையைச் சுற்றியோ, பள்ளத்தில் வீழ்ந்து நிரப்பியோ, ஆறு தன் வழிச் செல்லும்.

உமை சிவபெருமானை வலம் வந்தோ, அடியில் விழுந்து வணங்கியோ செல்ல உரியவள். நாணத்தால் எடுத்த காலை எங்கு வைப்பது என்று அறியாமல் திகைக்கிறாள். கு. 5:85

மத்தீயினின்று எழுந்த புகையால் புரோகிதரின் கண்கள் கலங்குகின்றன அவியைக் கையில் ஏந்தி அதை எங்கு இடுவது என அவர் திகைத்திருந்தபோது, அவி கையிலிருந்து நழுவித் தானாகவே ஒமத்தீயில் வீழ்ந்து விட்டது.

கண்வர் கண் மறைந்திருந்த நேரத்தில் சகுந்தலை உரியவரனிடம் சேர்த்துவிட்டாள்; நல்ல கல்வியைத் தக்க சீடனுக்கு நல்கியது போல, இச்சேர்க்கை நல்ல பயன் தரும் எனக் கண்வர் சகுந்தலையை வாழ்த்தினார். சா. 4:3

டநாட்டில் வேனிற்கால இரவு குறுகியது; சூரியன் மறைந்து இருள் சிறிதே பரவியதும், மீண்டும் ஒளி பரவிக் கதிரவன் உதயமாகிவிடுகிறான்; அக்குறுகிய இரவில் விண்மீன் கூட்டங்கள் காணப்படுவதில்லை. மதியும் ஒளி இழந்து தோன்றும்.

கரு உற்ற அரசி உடல் வெளுத்து, முகப்பொலிவு இழந்து, அணிகலன்கள் அன்றித் தோற்றமளிக்கிறான் பொலிவு அற்ற முகம் விடியற்காலையில் தோன்றும் மதி போலம், அணி கலன்களின் நீக்கம் விண்மீன் திரள் மறைவு போலும், வெளிறிய உடல் அவ் இரவு போலும், கவி கற்பனை செய்கிறார். ர.3:2

ருவுற்ற பெண்ணுக்கு மண்ணைத்தின்ன மசக்கை எழுவதுண்டு. அரசிக்குப் பலவகை உணவுகள் கிடைக்குமெனினும், அவள் மண்ணை உண்ண விரும்பினாள்; ஏன்? தன் கருவில் வளரும் குழந்தை ஒரு காலத்தில் இந்த மண்ணுலகம் முழுவதும் ஆளப்போகிறான்; கருவிலேயே மண்ணுலகின் சுவையையும் அவன் அறியட்டுமே, என்பதனால். ர.3:4

செல்வங்களுக்கு உறைவிடம் நிலம்.உழைப்பால், நிலத்தின் செல்வங்கள் உணவுப்பொருள்களாகவும், கணிப்பொருள்களாகவும் வெளிப்படும் அவ்வாறே தீயில் வீரமும், நீரில் தூய்மையும் உள்ளன. நிலம், நீர், தீ ஆகிய மூன்றிலும் பொதிந்துள்ள ஆற்றல்களைப் பாதுகாத்து, உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்து குடி உயருவதற்கு இயக்க வேண்டும். இவற்றை எண்ணி, அரசன் நிலமாக, வன்னி மரமாக, சரசுவதி நதியாக அரசியைக் கற்பனை செய்தான். வளத்தையும் வீரத்தையும் தூய்மையையும் தாங்கி இருப்பவள் அரசி.

கருப்பம் உற்று இருந்தபோது உடல் வனப்பு புலப்படவில்லை. தற்போது மெல்லிய வயிற்றை உடைய கோசலை வெண்மையான விரிப்புள்ள அகன்ற படுக்கையில் கிடக்கிறாள். அவள் அப்போதே கரு உயிர்த்த இராமன் தாமரை மலர் போல அப்பாயலில் காணப்படுகிறான். ர.10:69

ல்வி கற்கத் தக்க முயற்சியும் தளரா உழைப்பும் உடல் காவலிட்டுத் தான் வாடவாட ஆற்றும் தவமும் இன்றியமையாதவை. அத்தகைய கல்வியே மெய் அறிவையும் புலன் அடக்கத்தையும் தரும்.

சுமித்திரை அக்கல்வி போன்றவள்; அவள் வருந்தி ஈன்ற இரட்டையர் நற்கல்வி தந்த மெய் அறிவும் புலன் அடக்கமும் ஒத்தவர்; பிறர் பணிக்கெனத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். ர.10:71

ந்துமதி சுயம்வரத்திற்குப் பல அரசகுமாரர்கள் வந்திருந்தனர். அவர்கள் வரிசையாக வீற்றிருந்தனர். ஓர் அரசகுமாரனை நோக்கி அவள் வரும்போது, அவள் தன்னை மாலை இடப் போவதாக எண்ணி அவன் முகம் மலர்கிறான். அவள் அவனைத் தாண்டியதும், அவன் முகம் வாடிப் பொலிவு இழக்கிறது.

இந்துமதியின் மேனி 'சுடர்மணி விளக்கங்கள் எழில் கெடப்பொலிகின்றது'. அரசகுமாரர் அரச வீதியில் உள்ள மாளிகைகள். விளக்கு தாண்டியதும் மாளிகையில் இருள் சூழ்ந்தது. ர.6:67

சுங்கொடியில் பல வண்ண மலர்கள் பூத்திருத்தல் பகற் பொழுதில் காணத்தக்கது. வானில் விண்மீன்கள் சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் திரளாகவும், இரவில் ஒளி காட்டுகின்றன.

பரந்த ஆற்றுநீரில் சக்ரவாகப் புட்களும் அன்னப் பறவைகளும் அமருகின்றன. அவ்வாறு, உமையின் கரும் பச்சை நிறமுள்ள திருமேனியில் பலநிற மணிகள் குயிற்றிய,பொன்னால் ஆகிய அணிகலன்கள் மிளிர்கின்றன. பொன்னும் மணிகளும் வேறு எங்கோ தோன்றி, உமையை அணி செய்ய வந்தன. கு. 7:21

திருமணம் நடந்த புதிதில் கணவனோடு இன்னும் பேசிப் பழகி அறியாத இளம் பெண் ஒருத்தி. அவள் தன் கணவனது வீரச் செயலை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றாள் அதைப் பாராட்ட அவளுக்கு இயற்கையாக உள்ள நானம் தடுக்கிறது.

விண்ணிலிருந்து மழைத்துளிகள் மண்ணில் விழுகின்றன. மண் முகிலைப் பாராட்டுவது எப்படி? மயில்கள் அகவுகின்றன; தோகை விரித்து ஆடுகின்றன; அவற்றால் நில கங்கை முகிலுக்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள் இந்துமதி உள்ளூர மகிழ்ச்சி அடைந்தும், நாணம் மீதூரத் தான் கூற இயலாததைத் தன் தோழிகளின் வாயால் வெளிப்படுத்துகிறாள். ர.7:69

நிலம் அரசனுக்கு இல்லாள் அரசனுக்கு வயது முதிர்ந்தது; தன் மகனுக்கு முடிசூட்டி அரசன் துறவு மேற்கொள்கிறான். அப்போது, அதே நிலம் புதிய அரசனுக்கு இல்லாள் ஆகி பழைய அரசனுக்கு மருமகள் நிலையில் உள்ளாள்.

அந்நிலையில், பழைய அரசன் நிலத்தைத் துறந்த போதும், நிலம் அவ் அரசனை, மருமகள் மாமனாரை வழிபடுவது போல, போற்றிக்காக்கிறது. அவர் உள்ள இடத்தை அலகிட்டுமெழுகி, பூவையும் பழத்தையும் உணவுப் பொருள்களையும் கொண்டு அருச்சிக்கிறாள். அவ் அருச்சனையை மட்டும் இரகு ஏற்றான். அருச்சனையைத் தன் உரிமை என அவன் கருதவில்லை; அதில் இன்பத்தைக் காணவுமில்லை. ர.8:14

லைவனைப்பிரிந்த நங்கை அயோத்தி மாநகரம் இராமன் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பியபோது அந்நகர மாந்தர் நகரை அணி செய்கின்றனர்; அகில்புகை கமழுகிறது. அப்புகை மாளிகைகளின் கூந்தலைப்போல கரு நிறத்ததாக மேலே எழுகிறது. மேடையிலே வீசுகின்ற பூங்காற்றில் அப்புகை சுருண்டு அயோத்தி நங்கையின் வகிர்ந்த, அறல் துன்னிய, குழல்போல விளங்குகிறது. ர. 14:12

வேனிற்காலத்தில் வெப்பத்தால் வருந்தும் ஆறு இங்கு ஒரு கரையை அடையும்; சற்று தூரத்தில் மறு கரையை அடையும். ஆற்றின் இயல்பு அது.

சூர்ப்பணகை காம வெப்பத்தால் வருந்தி, அது தணிய இராமனையும், இலக்குவனையும் மாறி மாறி அடைந்தாள். குறித்த நாயகனுடன் பொருந்தி வாழ்வது அவள் இயல்பு அன்று; தன் காம விடாயை ஆற்றிக்கொள்ள அங்கும் இங்கும் அலைகிற ஆறு அவள். ர. 12:35

சீதை நிறைமாதச் சூலி தண்டக வனத்தைக் காண அவள் கொண்டிருந்த ஆசையை நிறைவேற்றுவான் போல், இராமன் அவளை இலக்குவனுடன் காட்டுக்கு அனுப்பி அங்கே விட்டுவர ஆணை இட்டிருந்தான். காட்டில் தனியாக அவனிடம் இந்த ஆணையை எவ்வாறு, எச் சொற்களால் அறிவிப்பது என இலக்குவன் ஆய்ந்து முடிவு செய்திருந்தான். ஆனால், அவன் நெஞ்சில் இறங்கிய கண்ணீர் தொண்டையை அடைக்க, இராமனது ஆணையைக் கல்மாரி பொழிவது போல விரைவில் உளறிக் கொட்டிவிட்டான்.

கேட்ட சீதை அவமானம் என்னும் சூறைக்காற்றால் தடியடிப்பட்ட கொடிபோல துவண்டு தன் பிறப்பிடமான, எதையும் தாங்கும், நிலத்தில் விழுந்தாள். அக் கொடியிலிருந்து விழும் பூக்கள்போல அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் உடலிலிருந்து நழுவின. ர.14:53, 54

சீதையின் அழகு வனத்திற்குச் சென்றதால் வாடவில்லை. அநுசுயை அளித்த மாலை, அணிகலன்கள், ஆடை, சந்தனம், முதலியவற்றால் அவள் முன்னிலும் பொலிவுற விளங்கினாள். அரசியாக இருக்கவேண்டிய சீதையைப் போலவே காட்டில் இருந்த சீதையும் காணப்பட்டதால், மக்கள் அவளை இராமன் குணங்களில் ஈடுபட்டு அவனுடன் காட்டுக்குச் சென்ற அரசத் திருமகள் என்றே கருதினார்கள்.

ஆனால் உண்மை அது அன்று.

அரசத் திருமகள் அயோத்தியிலேயே இருந்தாள்.இராமன் தன்னைப் புறக்கணித்துச் சீதையுடன் காட்டுக்குச் சென்றதற்காக கறுவிக்கொண்டு இருந்தாள். பதினான்கு ஆண்டுகள் கழிந்தன. இராமன் அயோத்திக்குத் திரும்பி சீதையுடன் பட்டாபிடேகம் செய்துகொண்டான். அரசத் திருமகளுக்கு இது பொறுக்க வில்லை. சீதை பதினான்கு ஆண்டுகள் இராமனை ஏகபோகமாக அநுபவித்ததுபோல தான் இனியேனும் இராமனை ஏக போகமாக அனுபவிக்க வேண்டுமென எண்ணி உலக அபவாதத்தைக் காரணமாகக் காட்டி, சீதையைக் காட்டுக்குத் துரத்திவிட்டான் போலும்.

இது சீதையின் வாக்கு. ர.14:63

சிவபெருமான் மன்மதனை அழித்தார். மன்மதனையும் ரதியையும் இணைத்திருந்த அணையும் அழிந்தது. இரதி புலம்புகிறாள்: "உன்னை அண்டி உன்னால் நான் வாழ்ந்தேன். உனக்கு அழிவு நேர்ந்தது; அவ் அழிவால் நம் தொடர்பு நிலை மாறியது; அன்பு என்னும் அணை ஒரு கணத்தில் உடைந்தது; நிலை மாறியதால், நீ ஒட நேர்ந்தது இயற்கைதானே. நான் தனியே நிற்கிறேன்.” கு. 4:6


"கோடைக்காலத்தில் சூரியகிரணங்கள் ஆற்றுநீரை உறிஞ்சுவதால் ஆறு வற்றிப்போகிறது. ஆனால் ஆறு அழிந்து போவதில்லை.கோடைக்குப்பின் மழை வரும்; நீர்ப்பெருக்கால் ஆறு நிறைந்து ஓடி மக்களுக்குப் பயன்படும். இப் பிரிவெனும் துயர் நீங்க, நற்காலம் வரும். அதற்காக உன் உடலைப் பாதுகாக்க வேண்டும், உடலை அழித்துக்கொள்ளள முற்படாதே."

காமன் எரிந்ததும் தன்னையும் அழித்துக்கொள்ள முற்பட்ட இரதியைத் தேவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கு.4:44

புற வெப்பம் எந்தப் பொருளையும் உறுதி குலையச் செய்கிறது; தளர்ச்சி அடைவிக்கிறது. இரும்பையும் பழுக்கக் காய்ச்சினால் அது இளகி மென்மை அடையும்.

அழியும் உடலைப் பற்றி சொல்லவா வேண்டும்? துயரத்தால் உண்டாகும் அக வெப்பம் அசையாத சிந்தையையும் அழியாத உள்ளத்தையும் இளக்கிக் குலைத்துவிடும்.

உன் துயரத்திற்கு ஒரு காரணம், அன்பு பூண்டோரைப் பிரிந்தது. ர.8:43

"கொழுந்தோடிப் படர்கின்ற கொடி கொள் கொம்பை நாடுகிறது.அதன் நிலைக்கு இரங்கி, ஒரு கொம்பைத் தேடித்தா: அன்றி. அதுவே கொம்பைப் பற்றிக் கொள்ளட்டும் என உன் வழியே போ. அந்தோ, அக் கொடியின் மேல் கொதிக்கும் நீரை வார்த்துவிட்டுச் செல்கிறானே! என்ன கொடுமை!”

சகுந்தலை கருவுற்றிருக்கிறாள்; தன்னை நீங்கிய காதலன் வருவான் எனக் கருதி திசைகள் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்; உடல் சேர்வுடன், மனத்துயரமும் வாட்ட, அவள் தன்னையே மறந்துள்ள நிலைமையில் வாசலில் வந்த முனிவனை உபசரித்து 'அதிதி ஸத்காரம்' செய்யவில்லை. அவள் தன்னைப் புறக்கணித்தாள் என முனிவன் சினந்து, அவளைச் சாபம் இட்டு அகன்றாள். அச் சாபத்தையும் அவள் அறிந்தவள் அல்லள். ச. 4:1

'ஒல்கி நடக்கும்', மெதுவாகப் போகும், ஆற்றில் அயிரை மீன்கள், மணிகளைப்போல் மிளிர்ந்து விளையாடுகின்றன; பறவைகள் முத்தாரம் போல் வரிசையாக ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளன; நீர் சுருங்க, வெண்மணல் பரப்பும் திட்டுகளும் அகன்றும் உயர்ந்தும் காணப்படுகின்றன.