காளிதாசன் உவமைகள்/போர்

விக்கிமூலம் இலிருந்து

7. போர்

காற்றோடு கூடிய நெருப்பை அணைக்க முடியுமா? தெளிந்த வானில் உள்ள பகுதியை கண் கூசாது பார்க்க முடியுமா? மதங்கொண்ட யானையை அடக்க முடியுமா?

அவ்வாறே இரகுவுடன் சேர்ந்த திலீபனைப் பகைவரால் வெல்ல முடியவில்லை. ர. 3:37

வீரர் அணியும் தலைக்கவசமே 'கோய்' என்னும் கள் குடிக்கும் பாத்திரம்; அவர்களுடைய குருதியே மது; அவர்கள் எய்த அம்புகளே மதுவைக் கலக்கும் கோல்; வெட்டி வீழ்த்தப் பட்ட தலைகளே மதுவுள் மிதக்கும் பழங்கள்.

போர்க்களம் காலதேவனின் கள்ளுக்கடையாகத் தோன்றுகிறது. ர. 7:49

புகை உள்ள இடத்தில் தீ உண்டு. ஆனால், புகை காற்று அடிக்கும் திசையில்போகும்; தீ ஒரே இடத்தில் இருந்து காற்றின் உதவியால் அருகில் உள்ளனவற்றை எரிக்கும்.

போர் மூண்டது. அஜனின் படைகள் முன்னேறின; பகைவர் பலம் உள்ள இடங்களில் அவை பின்வாங்கின.ஆனால், பகைவருக்கு நெருப்பு என்ன நின்ற அஜனோ, ஒரே இடத்தில் நின்று, அருகில் வந்த பகைவரை அழித்துக்கொண்டே இருந்தான்.

யமன் அரக்கர் குழுவுள் நுழைய அஞ்சி நின்றான்; தன் கடமையைச் செய்யத் தவறினான். இராமனுடைய அம்பு தாடகையின் உரம் உருவித் தொளை செய்தது. அத் தொளையினுடே யமனும் நுழைந்து அவள் உயிரைக் கொண்டான். இனி, அரக்கர் குலத்தோருடைய உயிரைக் கொல்லும் துணிவையும் பெற்றான். ர. 11:18

ண்மையை அறியத் தருக்கமுறை இன்றியமையாதது.பல முரண் கருத்துகள் உதிக்கின்றன.அவற்றுள் பெரும்பாலானவை கருத்தின் அகத்துள் பொதிந்துள்ள முரண்பாட்டால் தகர்ந்து போகும்; சிலவே தெளிவுள்ளன, வலியுள்ளனவாக, நிற்கும். அத்தகைய கருத்தை எடுத்துரைப்போர் தம் நிலை, அதற்கு எதிர்நிலை, குறிக்கோளை அடையும் வழி ஆகிய யாவற்றையும் தொகுத்து உரைப்பர். எதிர்க்கருத்தை வலியுறுத்துவோர் தம் நிலை, முற்கூறினோர்நிலை, தம் குறிக்கோளின் சிறப்பு, தம் நெறி ஆகிய யாவற்றையும் தொகுத்துக் கூறுவர். இருவரும் உண்மை காண விழைபவரே. இவ்விரு தொகுப்புகளிலிருந்தும் ஏற்க வேண்டியதை ஏற்று, நீக்கவேண்டியதை நீக்கினால், புதிதாக இணைப்புக் கருத்துத் தோன்றும்.

இராம - இராவண யுத்தம் அத்தகையது. இருவரும் இவ்வாத முறையைக் கையாண்டனர்.ஒருவருடைய படைகளை மற்றவர் வென்றார். வஞ்சனைப்போரில் இறங்கவில்லை. ஒரு படை அழிந்தால் வேறு உயர்ந்த படைகளைக்கொண்டு சாடினர். இருவரும் காலத்தை வீணாக்கவில்லை; பயனில செய்யவில்லை; எண்ணாது துணியவுமில்லை. தம் பகைமைக்கு விரைவில் முடிவு காண்பதிலேயே ஊக்கம் செலுத்தினர். ர. 12:92

டலுக்கு ஒவ்வாததொன்று புகுந்து விட்டது; அதை அகற்ற உடலின் மற்ற உறுப்புகளினின்று வெண் குருதிக் கணங்கள் படையெடுக்கின்றன. அவற்றால் அகற்ற முடியா விட்டால், சீழ் உண்டாகிப் புரை ஒடி, நாளடைவில் உடல் முழுவதும் அழிகிறது.

சீதையின் துன்பத்திற்கு மூளை இராவணன் நெஞ்சில் இருந்தது. இராமனுடைய அம்பு என்னும் மருந்து இராவண னுடைய உடலில் புகுந்து, அவனுடைய நெஞ்சிலிருந்த தகாத ஆசை என்னும் அம்முனையை வெளியேற்றியது. கு. 13:36

குமாரன் அமரர் பதியில் புகுந்த போது அவன் அங்குக் காண்பன: மக்களுடைய கீழ் நோக்கிய கண்களும், ஒளி அற்ற பார்வையும் அழிந்தவனங்களும், கொம்பு ஒடிந்த யானைகளும், புண் உற்ற குதிரைகளும், அச்சு முறிந்து தேர்களுமே, அமரர் நெஞ்சு தாரகனை எண்ணும் போதல்லாம் அஞ்சித் துணுக்குறு தலைக் குமாரனால் சகிக்க முடியவில்லை.தேவர் நகரம் இன்னும் அழகுடையதே; அதைக் காக்கும் திறனைத் தேவர் இழந்து விட்டனர்.

பருவ மங்கை ஒருத்தி அழகானவள். ஆனால், பேடிக்கு வாழ்க்கைப் பட்டு விட்டாள். அவன் அவளுடைய அழகைப் பாராட்டி, காத்து, துகரும் திறன் இழந்து விட்டான்.

அவளுடைய கதியை அடைந்துள்ளது அமராபதி; குமாரனுக்கு இரக்கம் மிகுந்தது. கு. 13:36

"https://ta.wikisource.org/w/index.php?title=காளிதாசன்_உவமைகள்/போர்&oldid=1533832" இலிருந்து மீள்விக்கப்பட்டது