குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/நாயன்மார்களின் அடிச்சுவட்டில்
13
அருள் நெறித் தந்தை தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் மாக்கதையில் சிந்தை ஊன்றித் திளைத்தவர்கள். அவர்கள் "திருத்தொண்டர் மாக்கதையில் பேசப்பெறும் திருத் தொண்டர்கள் ஆற்றிய தொண்டுநெறி நாட்டில் பரவினால் தான் நம் சமயம் மக்களிடத்தில் ஒளிபெற்றுத் திகழமுடியும்” என்று பல்லாண்டுகளாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். இதனை அவர்களே நடைமுறைப் படுத்தியும் வருகின்றார்கள். அவர்கள், கண்ணப்ப நாயனார் திருநாளில் கண் பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடிகள் வாங்கி வழங்கியும், திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாளில் உடல் நலக்குறைவு காரணமாக இளைத்த மாணவிகளுக்கு உயிரூட்டச் சத்துள்ள மருந்துகள் வாங்கி வழங்கியும், திருநாவுக்கரசு சுவாமிகள் திருநாளில் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வித்துத் திருக்கோயில்களைப் பேணியும் துய்மை செய்வித்தும், உருத்திர பசுபதி நாயனார் திருநாளில் அடியார்களுக்கு உடைகள் வழங்கியும் இன்னும் பல நாயன்மார்களின் தொண்டு நெறிகளைச் செயல்முறைப் படுத்தியும் வந்திருப்பது தமிழ்நாடு அறிந்த செய்தியே.
தொண்டு நெறியின் விளைநிலம் சிந்தையே, துயசிந்தை யுடையவர் என்பதை ஒருவரின் புறச்செயல்களை நோக்கியே அறியமுடிகிறது. தொண்டு, புறத்தில் வெளிப்பட்டு நிற்பது. ஆதலால், தொண்டு நெறியின் பெருமை சொல்லாமலே பெறப்படும். இத்தகு தொண்டு நெறியில் ஈடுபடுவதே உண்மையான சமய வாழ்க்கையாகும்.
இந்த வகையில் தவத்திரு அடிகளார் அவர்கள் சிந்தித்து இந்த (விரோதிகிருது) ஆண்டு மகா சிவராத்திரி நாளில் அறுபான்மும்மை நாயன்மார்களின் தொண்டுகள் அனைத்தையும் நடைமுறைப் படுத்தத் தக்கவாறு இந்த அரிய திட்டத்தை உருவாக்கினார்கள். இத்திட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்-ஐந்து கோவில் தேவாலயங்களில் நடைமுறைப் படுத்த உருவாக்கியதாகும். எனினும், தமிழகம் முழுவதிலுமுள்ள திருக்கோயில்கள்-திருமடங்கள் இதனை ஏற்றுச் செயல்படுத்துவது நாடு தழுவிய நலத்தினை விளைவிக்கும். இந்த நோக்கத்துடனேயே இது, புத்தக வடிவமாக வெளியிடப் பெறுகிறது. திருக்கோயில்களின் அறங்காவலர்கள், இறைபணியாளர்கள், பெரியோர்கள் சமயத் தொண்டர்கள், அன்பர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் கண்டுள்ள பணிகளை மேற்கொண்டு நம் சமயத்திற்கும் சமயவழி மேற்கொண்ட மக்களுக்கும் தொண்டுசெய்து, இறைவன் திருவருட் பேற்றினை எய்தி இன்புற வேண்டுகின்றோம்.
'குன்றக்குடி,பதிப்பாசிரியர்.
வரிசை எண் | நாயன்மார் திருப்பெயர் | திருநாள் | அலுவல்கள் | |
1. | அதிபத்த நாயனார் | ஆவணி-ஆயிலியம் | (1) | திருக்குளங்களில் மீன் வளர்த்து, அந்த வருவாயைத் திருக்கோயில்களுக்குப் பயன்படுத்தும் திட்டம் |
(2) | திருக்கோயில் அமைந்துள்ள வட்டத்தில் வாழும் மீனவர்கள் நலன் நாடுதல் | |||
2 | அப்பூதி அடிகள் | தை-சதயம் | (1) | தண்ணீர் பந்தல் வைத்தல் |
(2) | குடிதண்ணிர் வசதி செய்தல், (திருத்தலத் திருவருட்பயணம் செய்பவர்களுக்கும், திருக்கோயில் நின்று விளங்கும் ஊருக்கும், திருக்கோயில் நிலங்கள் இருக்கும் ஊருக்கும்). | |||
(3) | குடி தண்ணீர் ஊருணிகள் தூய்மை செய்தல். | |||
(4) | நடைமுறையில் இருக்கும் குடி தண்ணீர் வழங்கும் நிர்வாகம் பற்றிய ஆய்வு செய்தல்-சீரமைத்தல் |
3. | அமர்நீதி நாயனார் (50) | ஆனி-பூரம் | (1) | திருக்கோயில்-திருமடங்களில் தொண்டு செய்யும் அடியார்களுக்கு உடை வழங்குதல் |
4. | அரிவாட்டாய நாயனார். | தை-திருவாதிரை | (1) | திருமடைப்பள்ளி தூய்மை செய்தல், பழுது பார்த்தல் |
(2) | திருமடைப்பள்ளிப் பாண்டங்கள் (பாத்திரங்கள்).
(அ) சரிபார்த்தல் (ஆ) பழுது பார்த்தல் (இ) தேவைக்கு வாங்குதல் | |||
(3) | திருவமுதுத் திட்டம் சரிபார்த்தல்-சீர் செய்தல் | |||
(4) | திருமடைப்பள்ளியில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல் | |||
(5) | இறைவனுக்குச் சிறப்புத் திருவமுது செய்வித்து வழிபாடு செய்தல்-(மாவடு சேர்த்தல்). | |||
5. | ஆனாய நாயனார் | கார்த்திகை அத்தம் | (1) | இசைக் கருவிகள் (மேளம், சங்கு, மணி, நகரா, அத்தம். புல்லாங்குழல் முதலியன பற்றி ஆய்தல் - சீரமைத்தல். |
(2) | தேவைக்குப் புதியன வாங்குதல். | |||
(3) | திருக்கோயில்-திருமடத்தில் இசைத் துறையில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |
(4) | இசைப் பள்ளிகளின் நடைமுறை பற்றி ஆராய்தல். | ||
6. இசை ஞானியார் (55) | சித்திரை - சித்திரை. | (1) | சமயச்சார்புடைய மகளிர் மன்றம் அமைத்தல், சங்க வளர்ச்சிக்குரியன எண்ணிச்செய்தல். |
(2) | மகளிர் நலம் பேணுதற்குரியன எண்ணிச் செய்தல். | ||
(3) | கருவுற்ற பெண்களுக்குச் சத்துணவு, நற்செய்திகள் கிடைக்கச் செய்தல். | ||
(4) | மகப்பேறு மருத்துவ மனைகளுக்குச் சென்று திருநீறு முதலியன வழங்குதல். | ||
(5) | குன்றக்குடி ஆதீன தேவாலய மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவத் துறைக்கு வசதிகள் செய்தல். | ||
(6) | குன்றக்குடி இசைஞானியார் மகளிர் மன்றம் ஆண்டுவிழா நடத்துதல். | ||
(7) | குன்றக்குடி மகளிர் மன்ற உறுப்பினருடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||
7. இடங்கழி நாயனார் | ஐப்பசி - கார்த்திகை | (1) | திருக்கோயில் திருமடத்தில் தொண்டு செய்யும் அடியார்களுக்கு அமுதளித்தல். |
(2) | அடியார்களுக்கு வழங்கப்பெறும் படித்தரங்கள் பற்றி ஆய்வுசெய்தல். | ||
(3) | அடியார்களின் நலம் நாடுதல். |
(4) | அடியார்களுடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||
8. இயற்பகை நாயனார் | மார்கழி - உத்திரம் | (1) | திருக்கோயில்களில், திருமடங்களில் |
9. இளையான்குடிமாற நாயனார். (33) | ஆவணி - மகம் | (1) | சிவபூசகர்களுக்கு-அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல். |
(2) | நாற்றங்கால்கள் அமைத்தல்-சீரமைத்தல்-செழிப்புண்டாக்குதல். | ||
10. உருத்திர பசுபதி நாயனார் | புரட்டாசி - அசுபதி | (1) | திருக்கோயில் திருமடத்தில் வடமொழிமறை ஒதவும் திருநாமத்தைத் தொடராக எண்ணுதல் முதலியன முறையாக நிகழவும் ஏற்பாடுகள் செய்தல். |
(2) | உருத்திர செபத்திற்கு ஏற்பாடு செய்தல். | ||
(3) | வடமொழி மறை ஒதும் அந்தணர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||
11. எறிபத்த நாயனார் (21) (36) (57) | மாசி - அத்தம் | (1) | நந்தவனப் பாதுகாப்பு. |
(2) | பூக்குடலைகள் சீர்செய்தல். | ||
(3) | திருமாலை கட்டும் இடம் மேடைகள் சீர்செய்தல். |
12. ஏயர்கோன் கலிக்காம | ஆனி - இரேவதி | (1) | சிவனடியாராக இருப்பவர்களுடன் எவரோடாயினும் நாயனர். இரேவதி தனிப்பட்ட முறையிலோ-ஆட்சி முறையிலோ வருத்தம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த வருத்தத்தை மாற்றி உடன்பாடும், உறவும் - காணுதல். |
13. ஏனாதி நாயனார் | புரட்டாசி - உத்திராடம் | (1) | தூய வெண்மையான திருநீறு தயாரிப்புக்குத் உத்திராடம் திட்டமிடல், உற்பத்தி செய்தல். |
(2) | திருநீறு தூய்மை செய்தல், வேண்டுவோர்க்கு வழங்குதல். | ||
(3) | திருநீற்றுக் கலன்கள்-குங்குமக் கலன்கள் செய்ய ஏற்பாடு செய்தலும், தேவைப்படும் இடங்களில் அமைததலும. | ||
(4) | திருநீற்றுத் தேவைக்குத் திட்டமிடுதல். | ||
(5) | அன்பர்களுக்கு வழங்கத் திருநீற்றுப் பைகள்தைக்க ஏற்பாடு செய்தல். | ||
14. ஐயடிகள் காடவர் கோன். | ஐப்பசி - மூலம் | (1) | அன்பர்களுடன் திருத்தலப் பயணம் செய்தல். |
15. கனநாதர் | பங்குனி - திருவாதிரை | (அ) 1 | சமயப் பாடவகுப்பு, திருமுறைப்பள்ளி நடைமுறைகளை ஆராய்தலும், சிறப்புற நடத்தத் திட்டமிடுதலும். |
2. | சமயப்பள்ளி வகுப்புகளுக்கும், திருமுறைப்பள்ளி வகுப்புகளுக்கும் ஆண்டு விழா நடத்துதல். |
3. | திருமுறை பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுதல். | ||
4. | புதிய வகுப்புகள் திட்டமிட்டுத் தொடங்குதல். | ||
5. | திருமுறைச் சமயப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், ஆசிரியர்களுக்குப் பரிசில்கள் வழங்குதல். | ||
(ஆ) 1. | திருக்கோயில் திருமடத்தில் சரியைத் தொண்டில் (திருவலகு திருமெழுக்குப் பணிப்பெண்) ஈடுபட்டிருப்பவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், அவர்களுடைய நலனுக் குரியன நாடுதல். | ||
2. | சரியைத் தொண்டுக்கு உரிய கருவிகள் வாங்குதலும் சீரமைத்தலும், (திருவலகு, ஒட்டடைக் கம்பு, ஏணி, குப்பை தொட்டிகள், குடம், வாளி, சவுட்டுப்பு........). | ||
16. கணம்புல்ல நாயனார். (19) (47) | கார்த்திகை - கார்த்திகை | (1) | திருக்கோயில்-திருமடம் திருவிளக்கு எண்ணெய்த் தேவைக்குத் திட்டமிடுதல். |
(2) | தேவைக்குரிய எண்ணெயைப்பெற இலுப்பைத் தோப்புகள் வளர்க்கத் திட்டமிடுதல். | ||
(3) | இலுப்பைத் தோப்புகளை வளர்த்தல்-பராமரித்தல். |
(4) | இலுப்பை வளர்ப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், அவர்கள் - - நலனுக்குரியன நாடுதல். | ||
17. கண்ணப்ப நாயனார். | தை-மிருகசீரிடம். | (1) | திருக்கோயில்-திருமடத்தில் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கண் ஆய்வு செய்தல். |
(2) | தேவையானால் கண் மருத்துவம் செய்தல்-தேவைக்குக் கண்ணாடிகள் வாங்கித் தருதல். | ||
(3) | பக்தி இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல். | ||
(4) | வலையன் சமூக (கண்ணப்பர்குல) மக்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||
18. கலிக்கம்ப நாயனார் | தை - இரேவதி | (1) | திருக்கோயில்-திருமடத்தில் வேலைசெய்யும். கடைநிலை ஊழியர்களின் மதிப்புயரக் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |
(2) | அவர்களுடைய சமய உணர்வு வளர்ச்சிக்கு வழி வகுத்தல். |
19. கலிய நாயனார் (16) (47) | ஆடி - கேட்டை | (1) | திருவிளக்குக்குரிய எண்ணெய் வித்துக்கள். உற்பத்திக்குத் திட்டமிடுதலும், திட்டத்தின் இலக்கை அடைவதற்குரிய பணிகளை மேற்கொள்ளுதலும். |
(2) | இலுப்பைத் தோப்புகள் வளர்த்தல். | ||
(3) | ஆண்டுத் தேவைக்குரிய எண்ணெய் வித்துக்களைச் சேர்த்தல். | ||
20. கழறிற்றறிவார் | ஆடி - சுவாதி | (1) | திருக்கோயில்-திருமடத்தில் கால் நடைகள் வளர்க்கத் திட்டமிடுதல். |
(2) | கால்நடைகள் பாதுகாப்பு. | ||
(3) | மயில், சேவல், கிளி ஆகியன வளர்த்தல். (திருத்தலங்களின் இயல்புக் கேற்றவகையில்). | ||
(4) | அவற்றின் வளர்ப்புத் தோடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்போர் நலம் பேணுதல், கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல். | ||
(5) | திருக்கோயிற் பூசைகள் குறித்த காலத்தில் நடைபெறும் வகைபற்றி ஆராய்தல், நடைமுறைப் படுத்துதல். | ||
(6) | நந்தனவனப் பாதுகாப்பும்-பராமரிப்பும். | ||
(7) | நண்பருக்கு உதவி செய்தல். |
21. | கழற்சிங்க நாயனார் | வைகாசி-பரணி | (1) சிவ பூசைக்குப் பயன்படும் மலர்களை உற்பத்தி செய்யும் நந்தனவனங்களில் பிறபயிர் செய்யாதிருத்தல் | |
(2) நந்தனவனத்தைச் செழுமைப் படுத்துதல். | ||||
(3) இறைவனுக்கு நறுமண மலர்களால் மலர்முழுக்குச் செய்தல். | ||||
22 | காரி நாயனார் | மாசி-பூராடம் | (1) திருக்கோயில் திருத்தல வரலாறுகள் அச்சிடுதல். | |
(2) வரலாறு எழுதுவித்தல். | ||||
(3) வழிபாட்டுப் பாடல்கள் பாடுவித்து அச்சிடுதல். | ||||
(4) வழிபாட்டு நூல்கள், தல வரலாற்று நூல்கள் ஆகியவைகளின் விற்பனை வரவு செலவு பற்றி - ஆராய்தல். | ||||
23 | காரைக்காலம்மையார் | பங்குனி-சுவாதி | (1) திருக்கோயில்-திருமடத்தில் மாந்தோப்பு வளர்க்கத் திட்டமிடல். . | |
(2) மாந்தோப்பு வளர்த்தலும், கண்காணித்தலும். | ||||
(3) மாந்தோப்பு வளர்ப்பு-பாதுகாப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலம் பேணுதல். | ||||
(4) இறைவனுக்கு மாம்பழம் படைத்தல். |
24. | குங்குவியக்கலயர் | ஆவணி-மூலம் | (1) திருக்கோயில்-திருமடங்களில் தூபமிடும் கலசங்கள் சீரமைத்தலும், தேவைக்கு வாங்குதலும். | |
(2) தூபமிடப் பயன்படும் பொருள்களின் தரம் பற்றி ஆய்வு செய்தல். | ||||
(3) தூபமிடும் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நடுதல். | ||||
25. | குலச்சிறை நாயனார் | ஆவணி-அனுடம். | (1) தக்க அன்பர்களுடன் சமய வளர்ச்சிக் கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து திட்டமிடல். | |
(2) தக்க சமயத் தொண்டர்களுடன் நட்புக் கொள்ளுதல். | ||||
(3) சமயத் தொண்டர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||||
(4) சமயப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல். | ||||
(5) நமது மக்கள் மதமாற்றங்களுக்குள்ளாகாமல் பாதுகாத்தல். | ||||
(6) பிற மதத்துக்குப் போனவர்களை நமது மதத்திற்குத் திரும்ப அழைத்தல். | ||||
(7) அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பை வலிமைப்படுத்துதல். |
(8) கள்ளிமந்தயம் அருள் நெறி உயர்நிலைப் பளள நடைமுறை பற்றி ஆய்வு செய்தல். | |||
26 | கூற்றுவ நாயனார் | ஆடி-திருவாதிரை. | (1) அம்பலக்கூத்தன் சந்நிதிகள் தூய்மை செய்தல். |
(2) அம்பலக்கூத்தன் திருமேனிக்குப் பழக்காப்பிடுதல், | |||
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல். | |||
27 | கோச்செங்கட் சோழர் | மாசி-சதயம் | (1) திருக்கோயில்கள் பழுதுறாமல் பாதுகாக்கும் திட்டம் தீட்டுதல்-பாதுகாத்தல். |
(2) திருப்பணிகள் தொடங்குதல். திருக்கோயிலைப் பேணும் பணியாட்கள் (கொத்தனார், உழவாரம்) நலம் பேணுதல், கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல். | |||
(3) திருக்கோயில் காவல், திருமேனி காவல், மெய்காவல் முறை-வகைபற்றி ஆராய்தல். | |||
(4) மேற்படி காவல் செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
28 | கோட்புலி நாயனார் | ஆடி-கேட்டை | (1) திருக்கோயில் திருமடத்தின் தேவைக்கு நெல் சேர்த்தல். |
(2) களஞ்சியங்கள் பழுதுபார்த்தல், தூய்மை செய்தல். | |||
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல். |
29 | சடைய நாயனார் | மார்கழி-திருவாதிரை | (1) திருக்கோயில் சிவாசாரியர்களுக்குத் திருமணத்திற்கு உதவி செய்தல்-திருமணம் செய்வித்தல் |
30 | சண்டேசுவர நாயனார் (46) | தை-உத்திரம் | ((1) இறைவனுக்குப் பால் முழுக்குத் திட்டம் பற்றி உத்திரம். ஆராய்தல். |
(2) பசுமடம் நடைமுறை பற்றி ஆராய்தல். | |||
(3) பசுமடம் அமைத்தல்-பக மாடுகள் வாங்குதல். | |||
(4) பசு மடத்துப் பணியாள்களுடன் கலந்துரையாடல்-விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(5) இறைவனுக்குச் சிறப்பான முறையில் பால் ழுமுக்காட்டுதல். | |||
(6) சண்டேசுவர நாயனார் சந்நிதி தூய்மை செய்தல், சண்டேசுவர நாயனாருக்குச் சிறப்பு வழிபாடு செய்தல் | |||
31 | சத்தி நாயனார் | ஐப்பசி-பூசம் | (1) பெரியபுராணம் வகுப்பு நடத்துதல். |
(2) பெரியபுராண விழா நடத்துதல். | |||
(3) பெரியபுராணத் தொடர்பான புத்தகங்கள் வெளியிடுதல். |
(4) அறுபான்மும்மை நாயன்மார்களுக்கு எண்ணெய்க் காப்பும், திருமுழுக்கும் செய்வித்துச் சிறப்பு வழிபாடு செய்தல். | |||
(5) பெரியபுராணத்தைப் பரப்பும் தொண்டர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தல். | |||
(6) பெரியபுராண மறுப்புரைக்கு மறுப்புரை எழுதி வெளியிடுதல். | |||
(7) அனுபான்மும்மை நாயன்மார் தொண்டை நடைமுறைப் படுத்திய செயல்முறைபற்றி ஆய்வு செய்தல். | |||
32 | சாக்கிய நாயனார் | மார்கழி-பூராடம் | (1) திருக்கோயில் வழிபாட்டில் நம்பிக்கை யில்லாதவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையில் நேரடியாகத் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல். |
(2) அந்த வகையில் பேசுதல்-எழுதுதல்-அரங்குகள் நடத்துதல். | |||
(3) அந்தவகையான நூல்கள் அச்சிடுதல். | |||
33 | சிறப்புலி நாயனார் (9) | கார்த்திகை-பூராடம் | (1) சிவபூசகர்களுக்கும், அடியார்களுக்கும் அமுதளித்தல்-பொருள் அளித்தல். |
34 | சிறுத்தொண்ட நாயனார். | சித்திரை-பரணி | (1) திருமடங்களுக்குப் பிள்ளைகள் சேர்த்தல். |
(2) சமய இயக்கத்துக்குத் தொண்டர்களைச் சேர்த்தல். |
(3) திருக்கோயில்-திருமடத்தின் வழிவழித் தொண்டு செய்யும் பிள்ளைகளுடன் (வயது 5 முதல் 10 வரை) கலந்து பேசுதல், நிறுவன உணர்வை வளர்த்தல், விருந்தளித்தல், அவர்களின் நலனுக்குரியன நாடுதல். | |||
(4) களக்காடு சீராளன் சிறுவர்பள்ளி நடைமுறைபற்றி ஆய்வு செய்தல். | |||
(5) சிறுவர் பள்ளி நடைமுறை பற்றி ஆய்வு செய்தல். | |||
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆடி-சுவாதி | (1) சிவாசாரியர்களுடைய தகுதி-நிலை முதலியன பற்றி ஆராய்தல். |
(2) சிவாசாரியர்களுடன் கலந்து உரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(3) தமிழ் வழிபாட்டு இயக்கம் பற்றி ஆய்வு செய்து மேலும் வளர்க்கத் திட்டமிடுதல். | |||
(4) திருமுறை அர்ச்சனை, திருமுறைச் சாத்து முதலியவற்றை வளர்க்கப் பணி மேற்கொள்ளல். | |||
(5) நண்பர்களுடன் கலந்துரையாடுதல். நட்புறவை வளர்த்துக் கொண்டு செழுமைப் படுத்திக்கொள்ளுதல். |
36. | செருத்துணை நாயனார். (11) (21) (57) | ஆவணி-பூசம் | (1) சிவபூசைக்குரிய மலர்கள் தொடுக்கும் இடத்தில் (ஈ, எறும்பு, கொசு மொய்க்காமல்) மலர்கள் பாதுகாப்புக்குரிய ஏற்பாடு செய்தல். |
37. | சோமாசிமாற நாயனார். | வைகாசி-ஆயிலியம் | (1) நாள்தோறும் வேத வேள்வி (நித்யாக்கினி) செய்யும் திருக்கோயில் வேத அந்தணர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |
(2) அன்றையதினம் சிறந்த முறையில் வேத வேள்வி செய்யச் செய்தல். | |||
(3) திருக்கோயில்களில் உருத்திர வேள்வி. உருத்திர செபம்-சிறப்புத் திருமுழுக்கு ஏற்பாடு செய்தல். | |||
38 | தண்டியடிகள் | பங்குனி-சதயம் | (1) திருக்குளம் தூய்மை செய்தல்-திருக்கோயில் கிணறுகள் தூய்மை செய்தல்-திருக்குளம் புழுது பார்த்தல்-திருக்குளத்துக்குத் தண்ணிர் வரத்துக் கால் வெட்டுதல். |
39. | திருக்குறிப்புத் தொண்டர். | சித்திரை-சுவாதி | (1) (அ) பரிவட்டங்கள் இருப்பு எடுத்துச் சரிபார்த்தல். (ஆ) தூய்மை செய்தல். (இ) தூய்மை, செய்யும் இடம், முறை முதலியன பற்றி ஆய்தல். |
(2) பரிவட்டம் தூய்மை செய்யும் தொண்டு செய்வோருடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன செய்தல். |
40. | திருஞானசம்பந்தர் | வைகாசி-மூலம் | (1) | ஆதீன-தேவாலய மருத்துவமனை நடைமுறை பற்றி ஆய்வு செய்தல். |
(2) | உடல் நலக்குறைவு காரணமாக இளைத்த பெண்களுக்கு-மாணவிகளுக்குச் சத்துணவு கொடுக்க ஏற்பாடு செய்தல். | |||
(3) | தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபடுதல். | |||
(4) | திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் வளர்ச்சி-பணி பற்றி -> ஆய்வு செய்தல், திட்டமிடுதல். | |||
41. | திருநாவுக்கரசு சுவாமிகள் | சித்திரை-சதயம். | (1) | (அ) அப்பர் சுவாமிகள் திருமேனிக்குச் சிறப்பு வழிபாடு செய்தல். |
(ஆ) உழவாரத் தொண்டு செய்தல். | ||||
(இ) உழவாரப் பணி செய்யும் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||||
(2) | (அ) திருமுறைக் கோயில்கள் அமைத்தல். | |||
(ஆ) திருமுறை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||||
(3) | (அ) திருவுலகு, திருமெழுக்கு இடும் முறை கவனித்தல்-சீரமைத்தல். | |||
(ஆ) மேற்படி பணிசெய்யும் பணியாட்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |
(4) | (அ) அப்பர் வரலாறு திருமுறை பற்றிய கருத்தரங்குகள் நிகழ்த்துதல். | |||
(ஆ) நமது சமயத்திலிருந்து மக்கள் மதமாற்றக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்கத் திட்டமிடுதல்-செய்தல். | ||||
(5) | சாதி வேற்றுமைகள் அகற்றும் பணியில் ஈடுபடுதல் | |||
(6) | நிறுவனத்தின் உடைமை பொதுமக்களின் நலனுக்குப் பயன்படும் வகையில் துப்புரவு வாழ்க்கைக்குத் திட்டமிடுதல், மேற்கொள்ளுதல். | |||
(7) | குன்றக்குடி கிராம வீதிகளின் தூய்மைக்குரிய பணிகளை மேற்கொள்ளல். | |||
42. | திருநாளைப்போவார் நாயனார் | புரட்டாசி-உரோகிணி | (1) | தீண்டாமை விலக்கல் பணிகள் செய்தல். |
(2) | ஆதீன-தேவாலய நிலங்களை உழவடை செய்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருக்கோயில் சிறப்பு வழிபாடு செய்தல். | |||
(3) | அவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
43. | திருநீலகண்ட நாயனார் | தை-விசாகம். | (1) | திருக்கோயில்களுக்குத் திருவமுது படையலுக்கு எடுத்துச் செல்லும் கலன்கள் தூய்மை செய்தல்-தேவைக்கு வாங்குதல். |
(2) திருக்கோயில் திருமடங்களின் சார்பாளர்களின் மவைாழ்க்கை மாறுபாடின்றி நிகழும் வகையை ஆராய்தல். | ||||
(3) கருத்து மாறுபாடு இருப்பின் உடன்பாடு செய்வித்து இன்ப உறவினை வளர்த்தல். | ||||
(4) குடும்பத்துடன் அழைத்து விருந்து வைத்தல்-மகிழ்வித்தல். | ||||
(5) தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், சீலம் நிறைந்த வாழ்க்கைக்கு முயலுதல். | ||||
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | வைகாசி-மூலம் | (1) திருமுறைப் பண்ணுக்குத் துணை இசைக் கருவிகள் இயக்குபவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக் குரியன நாடுதல். | |
(2) இயலுமாயின் அந்நாளில் துணை இசைக் கருவிகளுடன் திருமுறைப் பண்ணிசையரங்கு அமைத்தல். | ||||
(3) திருமுறைப் பண்ணிசை யரங்கிற்குச் சிறந்த முறையில் துணை இசைக் கருவிகள் இயக்கும் ஒருவரைப் பராட்டிப் பரிசு வழங்குதல். |
45 | திருநீலநக்க நாயனார் | வைகாசி-மூலம் | (1) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதிப்புக் கிடைக்கும் வகையில் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடிச் செய்தல். |
46 | திருமூல நாயனார் (30) | ஐப்பசி-அசுபதி. | (1) கால் நடைகள் பாதுகாத்தல். |
(2) பாதுகாக்கும் திட்டமிடுதல். | |||
(3) திருமந்திரக் கருத்தரங்குகள் நடத்துதல். | |||
47 | நமிநந்தியடிகள் (16) (19) | வைகாசி-பூசம் | (1) திருவிளக்குகள் சீரமைப்பு-துய்மை செய்தல், விரிவாக்கல். |
(2) திருவிளக்கு எண்ணெய்த் திட்டம் ஆராய்தல். | |||
(3) திருவிளக்கிடும் பணியாட்களுடன் கலந்து பேசுதல், விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(4) திருவிளக்குக்குப் பயன்படும் இலுப்பை மரங்கள் வளர்த்தல். | |||
(5) திருக்கோயில்களில் நூறாயிரம் திருவிளக்குகள் (இலட்சதீபம்) ஏற்றுவித்தல். | |||
(6) திருக்கோயில்களில் தீவட்டிகள் எடுக்கும் முறை-வகை பற்றி ஆராய்தல். |
(7) தீவட்டி எடுக்கும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(8) திருக்கோயில்களில் கைவிளக்கு எடுக்கும் முறை-வகைபற்றி ஆராய்தல். | |||
(9) திருக்கோயில்களில் கைவிளக்கு எடுக்கும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், - பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
48 | நரசிங்கமுனையரைய நாயனர் | புரட்டாசி-சதயம். | (1) திருக்கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களின் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, சிவாகமப் பயிற்சி, திருமுறைக் கல்வி ஆகியன குறித்து ஆராய்தல். |
(2) அந்தக் குழந்தைகளுடன் (5 வயது முதல் 15 வயதுவரை) கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல். | |||
49. | நின்றசீர் நெடுமாற நாயனார் | ஐப்பசி-பரணி | (1) கிறித்தவ, இசுலாமிய சமயங்களிலிருந்து நமது சமயத்திற்கு மாறியோர் நலன் பேணுதல். |
(2) விரும்புவோரை மதம் மாற்றுதல். | |||
(3) நம்முடைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் பிறமத மாற்றத்துக்கு ஆளாகாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்தல். |
50 | நேச நாயனார் (3) | பங்குனி-உரோகிணி. | (1) திருமடத்து அடியார்கள், திருக்கோயில்களில் பணி செய்யும் அடியார்கள் ஆகியோருக்கு உடை வழங்குதல். |
(2) கைத்தறியாளர்களுக் குரிய நலம் நாடுதல் | |||
51 | புகழ்ச்சோழ நாயனார் | கார்த்திகை-ஆயிலியம் | (1) திருக்கோயில்-திருமடத்துச் சூழலில் இதர பொதுப்பணி மனைகளின் சூழலில் எல்லாரும் சிவசின்னம அணிதற்குரிய வாய்ப்புகளை உருவாக்குதல். |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆவணி-ஆயிலியம். | 1. (அ) சிவாசாரியர்களையும், ஒதுவார்களையும், மற்ற பணியாளர்களையும் தீக்கை முதலியன செய்துகொள்ளத் தூண்டுதல். (ஆ) தீக்கை செய்வித்தல். |
(2) சிவாகமப் பயிற்சி செய்வித்தல், குறுகியகாலப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், சிறப்பாக சிவாசாரியர்களுக்குச் சமய, விசேட, ஆசிரிய தீக்கைகள் செய்வித்தல். | |||
(3) திருக்கோயிலில் மூல மூர்த்தியின் சிவ பூசைக்குரிய திட்டங்கள் ஆய்வு செய்தல்-இயன்றால், சிவ பூசகர்களை அழைத்துச் சிவ பூசை செய்வித்தல். | |||
53 | பூசலார் நாயனார் | ஐப்பசி-அனுடம். | (1) திருக்கோயில் திருமடத்துச் சூழலில் தியானம் செய்வதற்குரிய இடங்கள் அமைத்தல், சூழல் உருவாக்கல் |
(2) அகப்பூசை, தியான முறைகளை விளக்குதல்-செய்யத் தூண்டுதல் | |||
54 | பெருமிழலைக் குறும்ப நாயனர் | ஆடி-சித்திரை. | (1) யோகக்கலை வல்லாரைக் கொண்டு வல்லவர்களுக்கும், தக்கவர்களுக்கும் யோகக் கலை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தல். |
(2) பிராணாயாமப் பயிற்சி செய்யக் கற்றுக் கொடுத்தல். | |||
(3) யோகாசனங்கள் கற்றுக்கொடுத்தல். | |||
(4) இயலுமாயின் திருப்புத்தூர்த் திருத்தனி நாதருக்கும், பிரான்மலை மங்கை நாயகருக்கும், குன்றக்குடி காளத்தியப்பருக்கும் கயிலைப் பதிகம் ஓதிச் சிறப்பு வழிபாடு செய்தல். | |||
55 | மங்கையர்க்கரசியார் (6) | சித்திரை-உரோகிணி. | (1) திருக்கோயில் அமைந்திருக்கும் ஊர்களில் மங்கையர்க்கரசி மகளிர் மன்றங்கள் நிறுவி வழிபாட்டில் ஈடுபடுத்திப் பணிகள் குறித்து ஆராய்தல். |
(2) நம்மோடு தொடர்புடைய மங்கையர்க்கரசி மகளிர்
மன்றங்களின் பணிகளை ஆய்வுசெய்து ஊக்கம் தருதல். | |||
(3) அருள்நெறித் திருக்கூட்டம் மாதர் பகுதி இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து வலிமைப்படுத்துதல். |
(4) சிறந்த சமயப் பற்றும் கல்வித் திறனும் உள்ள மாணவிக்கு மேற்படிப்புக்கு ஊக்கமளித்தல். | |||
(5) நம் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் நலன்-மகளிர் பள்ளிகள் வளர்ச்சி ஆகியன குறித்து ஆராய்தல். | |||
(6) சமயப் பணியில் ஈடுபட்டுள்ள மகளிருக்குப் பாராட்டுச் செய்தல். | |||
56 | மானக்கஞ்சாற நாயனார் | மார்கழி-சுவாதி | (1) திருக்கோயில் முடியெடுக்கும் இடங்கள் சீர் செய்தல். |
(2) முடியெடுக்கும் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
57 | முருக நாயனார் (11) (21) (36) | வைகாசி-மூலம் | (1) நந்தனவனம் அமைத்தல், வளர்த்தல், பேணுதல். |
58 | முனையடுவார் நாயனார் | பங்குனி-பூசம் | (1) திருக்கோயில் பாதுகாப்பிலும், அருள் நெறி இயக்கத்திலும் உறுதியாகப் பகை, துன்பம், இழப்புப் பாராமல் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |
59 | மூர்க்க நாயனார் | கார்த்திகை-மூலம் | மூர்க்க நாயனார் பெயரால் பரிசுச்சீட்டு வாங்குதல், பரிசு விழுந்தால் அந்தத் தொகையைத் திருக்கோயில் பேணலுக்குக் கொடுத்தல். |
(2) வெளி-நிழல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பந்தயங்கள் நடத்தி, வெற்றிபெற்ற கட்சியின் பந்தயத் தொகையைத் திருக்கோயில்களுக்குக் கொடுக்கச் செய்தல். | |||
(3) "மூர்க்க நாயனார் விளையாட்டுப் போட்டி” என்று விளையாட்டுக்குப் போட்டிக்குப் பெயர் வைத்தல். | |||
60 | மூர்த்தி நாயனார் | ஆடி-கார்த்திகை | (1) திருக்கோயில்களில் சந்தனத் திட்டம் சரிபார்த்தல். |
(2) சந்தனம் அறைவைக் கட்டை தரம் பார்த்தல். | |||
(3) மேடை-அறைவைக்கல் சீர் செய்தல். | |||
(4) இயலுமானால் சந்தனமுழுக்கு-சந்தனக் காப்புச் செய்து சிறப்பு வழிபாடு செய்தல். | |||
(5) சந்தன அறைப்புப் பணியாள்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
61 | மெய்ப்பொருள் நாயனார் | கார்த்திகை-உத்திரம் | (1) நம்முடனும், நம்முடைய நிறுவனத்திடமும் கருத்து வேறுபாடு அல்லது மாறுபாடு - கொண்டிருப்பவர்களுடன் உடன்பாடு கண்டு உறவு வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தல். |
(2) நம்முடைய திருக்கோயில்கள் மடங்களில் வழிவழி வழிபாடு செய்யும்-செய்துகொள்ளும் எந்த அன்பரோடாயினும் ஏற்பட்டுள்ள வழக்கில் விட்டுக்கொடுத்து உடன்பாடு காண முயற்சி செய்தல். | |||
62 | வாயிலார் நாயனார் | மார்கழி-இரேவதி. | (1) சிவபூசை செய்வோர், திருக்கோயில்-திருமடங்களைச் சார்ந்து பணிசெய்வோர் ஆகியோருடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக் குரியன நாடுதல். |
(2) எல்லோரையும் சிவபூசை செய்யத் தூண்டுதல். | |||
(3) சமய-விசேட தீக்கை செய்ய ஏற்பாடு செய்தலும், பலரைச் சிவபூசை செய்யத் தூண்டுதலும். | |||
(4) பலர்கூடிச் சிவபூசை செய்ய ஏற்பாடு செய்தல். | |||
(5) சிவபூசை செய்வோருக்குப் பூசைக்குரிய கலன்கள் வழங்குதல். | |||
63 | விறன்மிண்ட நாயனார். | சித்திரை-திருவாதிரை | (1) தக்க சிவனடியார்களுக்குப் பாங்காக இருந்து பரிவு காட்டுதல். |
அறுபான்மும்மை நாயன்மார் அடிச்சுவட்டில்
திருத்தொண்டு நடை முறைச் செயல் குறிப்பு விதி முறைகள்.
1. அறுபான் மும்மை நாயன்மார் திருத்தொண்டு நடைமுறைச் செயற் குறிப்பினை நடை முறைப் படுத்த ஆதீனம் அலுவலகத்தில்-வளர்ச்சித் துறையில்-ஒரு துறை அமைக்கப் பெற்று, எழுத்தர் ஒருவரும் நியமிக்கப் பெற்றுள்ளார்.
2. இந்தத் துறை "திருத் தொண்டு” என்று அழைக்கப்பெறும்.
3. ஒவ்வொரு நாயன்மார் திரு நட்சத்திரம் வருகின்ற நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அந்தந்த நாயன்மார் திருத் தொண்டைச் செயற்படுத்தக் கோப்பைத் தொடங்கி விடவேண்டும்.
4. நாயன்மார் திருத்தொண்டைச் செயற்படுத்துதற்குரிய அறிக்கை, அறிவிப்பு ஆகியவற்றைத் திருத் தொண்டுத் துறை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அனுப்பிவிட வேண்டும்.
5. (அ) திருத் தொண்டுச் செயல் முறை சுற்றறிக்கைகளைப் பெற்றவர்கள் வாங்கிய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் முறையாகப் பூர்த்தி செய்து அனுப்பிக் கொள்ள வேண்டும்.
(ஆ) திருத்தொண்டுச் செயல் முறை அறிவிப்புகளின் படி செய்யத் தேவையான தொகைக்கு அறிவிப்புக் கிடைத்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் அனுமதி (சாங்ஷன்)க்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
6. கிளை அலுவலகங்களிலிருந்து அறிக்கைகள் வந்து தலைமையலுவலகம் சேர்ந்தவுடன் (15 நாட்களுக்குள்) படிவங்களை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்குவதுடன், தேவைக்குரிய தொகைகளையும் அனுமதி வழங்கி விடுதல் வேண்டும்.
7. 'திருத்தொண்டு' தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் கூடுமானவரை திருநட்சத்திர தினத்திற்கு முன்பே நடத்திவிடுதல் வேண்டும்.
8. சில நாட்கள் தொடர்ந்து சேய்ய வேண்டிய பணிகளாக இருப்பின், திருநட்சத்திர தினத்தன்று நிறைவேறத்தக்க வகையில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கி முடிக்க வேண்டும்.
9. திருநட்சத்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு, பாராட்டு, விருந்து ஆகியவை நடைபெற வேண்டும்.
10. திருத்தொண்டு செயல் குறிப்புக் கூட்டங்களில் எடுக்கப் பெறும் முடிவுகளைத் தொடர்ந்து கோப்புகள் திறந்து செயல்படுத்தி நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தர வேண்டும்.
11. திருத் தொண்டுச் செயல் முறைத் திட்டம் செயலாக அமையும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரவாரமான விழாவாக மாறிவிடக் கூடாது. அது போலவே ஒரு புது வழிபாட்டுச் சடங்காகவும் மாறிவிடக் கூடாது. ஆனாலும், விழாப் பொலிவு இருக்கலாம்.
12. பாராட்டுக்கும், அபிவிருத்திக்கும். உரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி செய்தல் அவசியம்.
13. ஆதீன அலுவலகத்திலுள்ள வளர்ச்சித் துறையில் அமைந்துள்ள திருத் தொண்டுத்துறை, இந்த அறுபான் மும்மை நாயன்மார் திருத்தொண்டுத் துறையை வழிநடத்தும் அலுவலகமே. ஆதீன-தேவாலய-சமூக கல்வித் துறைகளின் மேலாளர்கள் இதனை உண்மையில் நிறைவேற்றும் பொறுப்புடையவர்கள்.மாதம் | நட்சத்திரம் | நாயன்மார்கள் |
---|---|---|
சித்திரை | சித்திரை | இசை ஞானியார். |
பரணி | சிறுத்தொண்ட நாயனார். | |
சுவாதி | திருக்குறிப்புத் தொண்டர். | |
சதயம் | திருநாவுக்கரசு சுவாமிகள். | |
உரோகிணி | மங்கையர்க்கரசியார். | |
திருவாதிரை | விறன்மிண்ட நாயனார். | |
வைகாசி | பரணி | கழற்சிங்க நாயனார். |
ஆயிலியம் | சோமாசிமாற நாயனார். | |
திருஞானசம்பந்தர் | ||
முருக நாயனார். | ||
திருநீலகண்ட யாழ்ப்பாணர். | ||
திருநீலநக்க நாயனார். | ||
பூசம் | நமிநந்தியடிகள். | |
ஆனி | இரேவதி | ஏயர்கோன்கலிக்காமர். |
பூரம் | அமர்நீதி நாயனார். | |
ஆடி | கேட்டை | கோட்புலி நாயனார். |
கலிய நாயனார். | ||
சுவாதி | கழறிற்றறிவார். | |
சுந்தரமூர்த்தி சுவாமிகள். | ||
திருவாதிரை | கூற்றுவ நாயனார். |
ஆடி | சித்திரை | பெருமிழலைக்குறும்ப நாயனார். |
கார்த்திகை | புகழ்ச்சோழ நாயனார். | |
மூர்த்தி நாயனார். | ||
ஆவணி | மகம் | இளையான்குடிமாற நாயனார். |
அனுடம் | குலச்சிறை நாயனார். | |
மூலம் | குங்குலியக்கலய நாயனார். | |
பூசம் | செருத்துணை நாயனார். | |
ஆயிலியம் | அதிபத்த நாயனார். | |
புகழ்த்துணை நாயனார். | ||
புரட்டாசி | சதயம் | நரசிங்கமுனையரையர். |
அசுபதி | உருத்திர பசுபதி நாயனார். | |
உரோகிணி | திருநாளைப்போவார் நாயனார். | |
உத்திராடம் | ஏனாதி நாயனார். | |
ஐப்பசி | அனுடம் | பூசலார் நாயனார். |
மூலம் | ஐயடிகள் காடவர்கோன். | |
அகபதி | திருமூலர். | |
பரணி | நெடுமாற நாயனார். | |
கார்த்திகை | இடங்கழி நாயனார். | |
பூசம் | சத்தி நாயனார். | |
கார்த்திகை | மூலம் | மூர்க்க நாயனார். |
பூராடம் | சிறப்புலி நாயனார். . | |
கார்த்திகை | கணம்புல்ல நாயனார். |
கார்த்திகை | உத்திரம் | மெய்ப்பொருள் நாயனார். |
அத்தம் | ஆனாய நாயனார். | |
மார்கழி | பூராடம் | சாக்கிய நாயனார். |
இரேவதி | வாயிலார் நாயனார். | |
திருவாதிரை | சடைய நாயனார். | |
உத்திரம் | இயற்பகை நாயனார் | |
சுவாதி | மானக்கஞ்சாற நாயனார். | |
தை | சதயம் | அப்பூதியடிகள். |
இரேவதி | கலிக்கம்பர். | |
மிருகசீரிடம் | கண்ணப்ப நாயனார். | |
திருவாதிரை | அரிவாட்டாய நாயனார். | |
உத்திரம் | சண்டேசுவர நாயனார். | |
விசாகம் | திருநீலகண்ட நாயனார். | |
மாசி | சதயம் | கோச்செங்கட் சோழ நாயனார். |
அத்தம் | எறிபத்த நாயனார். | |
பூராடம் | காளி நாயனார். | |
பங்குனி | உரோகிணி | நேச நாயனார். |
திருவாதிரை | கணநாத நாயனார். | |
பூசம் முனையடுவார். | ||
சுவாதி காரைக்காலம்மையார். | ||
சதயம் | தண்டியடிகள் நாயனார். |