குயிற் பாட்டு
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
கழக வெளியீடு: ௧௨௨௩
தேசியகவி, சி சுப்பிரமணிய பாரதியார்
பாடிய
குயிற் பாட்டு
குறிப்புரை :
திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற்புலவர்
திரு அ க நவநீதகிருட்டிணன்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி - 6, சென்னை-1.
1965
அங்கப்ப பிள்ளை தவந்தகிருட்டிணன் (1921)
© 1985
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED,
Ed : July 1965
031,1M82,K
KS
9850
KUYIR PAATTU
Appar Achakam, Madras - 1.
பதிப்புரை
தெய்வீகக் கவிஞர் பெருமான் திருத்தகு சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் என்றாலே உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பொங்கி எழும். வெண் சொல்லும், நுண்பொருளும் அமைந்து கற்போர் கேட்போர் அனைவரையும் ஒருங்கே பிணிக்கும் மாண்பு மிக்கது; கற்றோர்க்கும், கல்லாதார்க்கும் ஒரு புத்தமுதாய் ஒன்பான் சுவையும் ஊறிப் பெருகுவதாய் அமைந்துளது. தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் கற்குந் தொறும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவித்து அறிவை வளர்க்கும் இயல்பு வாய்ந்தது. அழிவின்றி உலகில் நிலைத்து நிற்கும் பெருமை மிக்கது.
தெய்வீகத் தன்மை வாய்ந்த இயற்கைக் கவிஞர் பெருமானாகிய பாரதியார் பாடியருளிய பாடல்களுள் குயிற் பாட்டும் ஒன்று. அது கற்பனைக் கவியாகவே இருப்பினும், உண்மையாகவே நிகழ்ந்த கதைபோன்று காட்சியளிக்கின்றது. அகப்பொருட்டுறைகளும், புறப்பொருட்டுறைகளும் விரவி வரப் பாடியிருப்பது வியந்து பாராட்டுதற்குரியது. வேதாந்தம் பொருளையே காதற் களஞ்சியமாக அமைத்துப் பாடியுள்ளது கவிஞர் பெருமானுக்கு வேதாந்த நூல்களிலும் மிக்க பயிற்சி உண்டு என்பதைக் காட்டுகின்றது. இக்குயிற் பாட்டின் அருமை பெருமைகளை முகவுரையிற் காண்க.
வித்துவான் முதல்நிலை வகுப்புத் தேர்வினுக்குரிய இலக்கிய நூல்களுள் ஒன்றாக இதனையும் சென்னைப் பல்கலைக் கழகத்தார். சேர்த்துக் கொண்டிருப்பதனாலும் இதன் சீரிய மாண்பு நன்கு விளங்கும்.
இவ்வினிய குயிற் பாட்டிற்குத் திரு. நவந்த கிருட்டிணனவர்கள் அரிய, இனிய குறிப்புரையும், நூலின் சாரமே என்று போற்றத் தகும் முன்னுரையும் எழுதி உதவியுள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.
இந்நூலும் குறிப்புரையும் என்றும் நின்று நாட்டு மக்களுக்கு நலம் பயக்கவேண்டும் என்னும் விருப்பத்தால் நாங்கள் இதனைப்பதிப்பித்து வெளியிடலானோம். இந்நூலை மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றவர்களும் வாங்கிப் பயின்று பயன் பெறுவார்களாக.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.