குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)/மலைப்பாறை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. ஸூரத்துல் ஹிஜ்ர்(மலைப்பாறை)[தொகு]

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 15:1 15:1 الۤرٰ تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ‏ 15:1. அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும். ஜுஸ்வு : 14 15:2 15:2 رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ‏ 15:2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். 15:3 15:3 ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 15:3. (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். 15:4 15:4 وَمَاۤ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ‏ 15:4. எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை. 15:5 15:5 مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَاْخِرُوْنَ‏ 15:5. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். 15:6 15:6 وَ قَالُوْا يٰۤاَيُّهَا الَّذِىْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌؕ‏ 15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். 15:7 15:7 لَوْ مَا تَاْتِيْنَا بِالْمَلٰۤٮِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ 15:7. “நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.) 15:8 15:8 مَا نُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ اِلَّا بِالْحَـقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِيْنَ‏ 15:8. நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள். 15:9 15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ 15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 15:10 15:10 وَلَـقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ شِيَعِ الْاَوَّلِيْنَ‏ 15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். 15:11 15:11 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ 15:11. எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. 15:12 15:12 كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ‏ 15:12. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம். 15:13 15:13 لَا يُؤْمِنُوْنَ بِهٖ‌ۚ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ‏ 15:13. அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன. 15:14 15:14 وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ‏ 15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்). 15:15 15:15 لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ‏ 15:15. “நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள். 15:16 15:16 وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ‏ 15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். 15:17 15:17 وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏ 15:17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம். 15:18 15:18 اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَ تْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ‏ 15:18. திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும். 15:19 15:19 وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ‏ 15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம். 15:20 15:20 وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِيْنَ‏ 15:20. நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம். 15:21 15:21 وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏ 15:21. ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை. 15:22 15:22 ‌وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏ 15:22. இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. 15:23 15:23 وَ اِنَّا لَــنَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ‏ 15:23. நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். 15:24 15:24 وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَـاْخِرِيْنَ‏ 15:24. உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம். 15:25 15:25 وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ‌ؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ‏ 15:25. நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன். 15:26 15:26 وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏ 15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். 15:27 15:27 وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏ 15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். 15:28 15:28 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும், 15:29 15:29 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏ 15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! 15:30 15:30 فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏ 15:30. அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். 15:31 15:31 اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ‏ 15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். 15:32 15:32 قَالَ يٰۤاِبْلِيْسُ مَا لَـكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ‏ 15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். 15:33 15:33 قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். 15:34 15:34 قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ‏ 15:34. “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.” 15:35 15:35 وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏ 15:35. “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான். 15:36 15:36 قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏ 15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான். 15:37 15:37 قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏ 15:37. “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;” 15:38 15:38 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ‏ 15:38. “குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான். 15:39 15:39 قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏ 15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 15:40 15:40 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏ 15:40. “அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான். 15:41 15:41 قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ‏ 15:41. (அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 15:42 15:42 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ‏ 15:42. “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான். 15:43 15:43 وَاِنَّ جَهَـنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ‏ 15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். 15:44 15:44 لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ‏ 15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும். 15:45 15:45 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍؕ‏ 15:45. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள். 15:46 15:46 اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ‏ 15:46. (அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). 15:47 15:47 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏ 15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். 15:48 15:48 لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ‏ 15:48. அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். 15:49 15:49 نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ‏ 15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.” 15:50 15:50 وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ‏ 15:50. “(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்). 15:51 15:51 وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَ‌ۘ‏ 15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக! 15:52 15:52 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ‏ 15:52. அவர்கள் அவரிடம் வந்து, “உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!” என்று சொன்ன போது அவர், “நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்” என்று கூறினார். 15:53 15:53 قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள். 15:54 15:54 قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ‏ 15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார். 15:55 15:55 قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَـقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ‏ 15:55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள். 15:56 15:56 قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ‏ 15:56. “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார், 15:57 15:57 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏ 15:57. “(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார். 15:58 15:58 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏ 15:58. அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். 15:59 15:59 اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ‏ 15:59. “லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம். 15:60 15:60 اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ‏ 15:60. ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள். 15:61 15:61 فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ۨالْمُرْسَلُوْنَۙ‏ 15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது. 15:62 15:62 قَالَ اِنَّـكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ‏ 15:62. (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார், 15:63 15:63 قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ‏ 15:63. (அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்; 15:64 15:64 وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏ 15:64. (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம். 15:65 15:65 فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ‏ 15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள். 15:66 15:66 وَقَضَيْنَاۤ اِلَيْهِ ذٰ لِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ‏ 15:66. மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”. 15:67 15:67 وَجَآءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَـبْشِرُوْنَ‏ 15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். 15:68 15:68 قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ‏ 15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;” 15:69 15:69 وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ‏ 15:69. “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார். 15:70 15:70 قَالُـوْۤا اَوَلَمْ نَـنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ‏ 15:70. அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். 15:71 15:71 قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْۤ اِنْ كُنْـتُمْ فٰعِلِيْنَؕ‏ 15:71. அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார். 15:72 15:72 لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ‏ 15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். 15:73 15:73 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏ 15:73. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:74 15:74 فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ‏ 15:74. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 15:75 15:75 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ‏ 15:75. நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 15:76 15:76 وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ‏ 15:76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது. 15:77 15:77 اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَؕ‏ 15:77. திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது. 15:78 15:78 وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ‏ 15:78. இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர். 15:79 15:79 فَانْتَقَمْنَا مِنْهُمْ‌ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍؕ 15:79. எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன. 15:80 15:80 وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ‏ 15:80. (இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். 15:81 15:81 وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ‏ 15:81. அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள். 15:82 15:82 وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ‏ 15:82. அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். 15:83 15:83 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏ 15:83. ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது, 15:84 15:84 فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَؕ‏ 15:84. அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. 15:85 15:85 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ‌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ‏ 15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும். 15:86 15:86 اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏ 15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். 15:87 15:87 وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ‏ 15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம். 15:88 15:88 لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ‏ 15:88. அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும். 15:89 15:89 وَقُلْ اِنِّىْۤ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُ‌ۚ‏ 15:89. “பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக; 15:90 15:90 كَمَاۤ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ‏ 15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, 15:91 15:91 الَّذِيْنَ جَعَلُوا الْـقُرْاٰنَ عِضِيْنَ‏ 15:91. இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்). 15:92 15:92 فَوَرَبِّكَ لَـنَسْـٴَــلَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏ 15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம். 15:93 15:93 عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 15:93. அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்). 15:94 15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏ 15:94. ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! 15:95 15:95 اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ‏ 15:95. உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். 15:96 15:96 الَّذِيْنَ يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள். 15:97 15:97 وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ‏ 15:97. (நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். 15:98 15:98 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ‏ 15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! 15:99 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!