குறட்செல்வம்/எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

விக்கிமூலம் இலிருந்து

16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்


மனிதனைக் கெடுதலில் வீழ்த்தும் குணக் கேடுகளில் தலையாயது ஆணவம். ஆணவத்தின் வழிப்பட்டது அகங் காரம், அகங்கார குணம் படைத்தவன் பிறரை மதிக்க மாட்டான், நல்ல வார்த்தைகள் பேச மாட்டன் இழித்துப் பேசுதலையும், பழித்துக் கூறுதலையுமே தொழிலாகக் கொள்வான். அதன் காரணமாகப் பகை வளர்ப்பான்; நண்பர்களை இழப்பான். தான்் உயர்ந்தவன் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருப்பதனால், வளர்ச்சிக் குரிய கூறுபாடுகள் அவனிடம் இரா.

அவன் வாழ்க்கையில் மாறுதலும் இருக்காதுவளர்ச்சியும் இருக்காது. ஆணவத்தின் பகை அடக்க முடைமை. அடக்கமுடைமையை அணிகலனாகக் கொண்டவர்களுக்கு ஆணவத்தின் வாசனையே இருக் காது. பணிவும் இன்சொல்லுமே அவர்கள்பால் குடி கொண்டிருக்கும். - .

அடக்கமுடைமை என்பது அச்சத்தினால் பணித்து செல்லும் கோழைத்தனத்தைக் குறிப்பதன்று. எதிர்த் தாக்குதல் செய்யும் ஆற்றல் இருந்தும், அதனைச் செய்யாமையே அடக்கமுடைமை! அறிவு, செல்வம், புகழ் ஆகியவைகள் இல்லாமற் போயினும் அடக்கமுடைமையின் காரணமாக மேற்கண்டவற்றைப் பெறுவதோடன்றிச் சிறப்பாகவும் வாழமுடியும் ஆனால், மேற்கண்ட எல்லா வற்றையும் பெற்றிருந்தாலும் அடக்கம் இல்லாமற் போனால், அவர் பெற்றிருக்கிற அனைத்திலுமாய சிறப்புக்களையும் இழந்து இழிநிலை எய்துவார். ஆகை யால் நற்குணங்களுள் மிகமிகச் சிறந்தது அடக்கம் உடைமை!

அடக்கமுடைமை எல்லோருக்கும் தேவை. எப்பொழு

தும் தேவை. அதுவும் எல்லாவிதமான தகுதிப்பாடுகளும்

இருக்கின்ற போழ்து, அடக்கமுடையவராக இருத்தல் சிறப்பிற்கெல்லாம். சிறப்பு.

‘ஒருவனுடைய இயல்பான பண்பை அவனுடைய செல்வம், புகழ், பதவி ஆகிய தகுதிப்பாடுகள் உயர்கின்ற போழ்து காணவேண்டும் என்பது ஒர் ஆங்கிலப் பழமொழி. பொதுவாக அறிவினாலும், செல்வத்தி னாலும், பதவியினாலும், தவத்தாலும் இன்ன பிறவற்றா லும் செருக்கு தோன்றுவதுண்டு.

அறிவினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று அருணந்தி சிவாச்சாரியார்; செல்வத்தால் செருக்கடைந்து அடக்கப்பெற்றதற்குச் சான்று ஜார் பேரரசன். பதவியினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று நான்முகன். தவத்தினால் செருக் கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று கொங்கண

ஆதலால், திருவள்ளுவர் அறிவு, செல்வம், புகழ், பதவி முதலிய இல்லாதார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பதைவிட இவையனைத்தும் உடையார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பது ஆபத்தான்து என்று குறிப்பிடுகிறார். . . . . . . ஆம், செல்வத்திற்குப் பிறிதொரு செல்வமாகத் திகழக் கூடியது அடக்கமுடைமை. ஆதலால், எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அடக்கமுடைமை விரிந்த ஒழுக்க நெறி. ஒழுக்கத்தின் பாற் பட்டதாகவும் அடக்கத்தினைக் கருதலாம். கற்றோர் போற்றும் கலித்தொகை அடக்கம் அறிவால் சிறந்த தென ஆராயப் பெற்று முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது’ எனக் குறிப்பிடுகிறது. .

வேண்டியவாறு ஒழுகுதலை அடக்கமின்மை என்றும், ஆற்றல் இருந்தும் அடங்கி நிற்றலே அடக்கமுடைமை என்றும் கலித்தொகை பேசுகிறது.

"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"

என்பது கலித்தொகை. தோற்றத்தால் புரவலன்-வாரி வழங்குவதில் வள்ளல்-எனினும் இரந்து வாழ்வோர் கூறி இரக்கின்ற பணிவான மொழிகளைச் சொல்லிப் பழகு கின்றானாம். இதற்குப் பழங்கால அரசர்கள் புலவர் களிடத்தே பழகிய முறையைச் சான்றாகக் காட்டலாம்.

'கொள்ளிக் கட்டை கூரையைக் கொளுத்தும் ஆற்றல் உடையது. ஆயினும் கூரையைக் கொளுத்தும் முன், கூரையில் செருகப் பெற்ற பொழுது அது பலருக்குத் தெரிவதில்லை. அதுபோல அதியமான் மாற்றாரை வீழ்த்தும் வல்லமையுடையோனாகக் கனத்தே தோன்றி விளங்குவான். ஆயினும் தன்னுடைய நண் பர்கள், உறவினர்கள் மத்தியில் இருக்கும் பொழுது அடங்கியே இருப்பாள்' என்று அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாராட்டுகிறார். -

'இல்லிடைச் செருகிய ஞெலிகோல் போல’ என்பது ஒளவையின் வாக்கு. அடக்கமின்றி நடத்தலை தருக்கித் தலையில் நடந்தேன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கிறார். தருக்கித் திரிவோரை நெறியில் நீங்கியோர்’ என்று பேசுகின்றார் இளங்கோவடிகள்.

அதனாலன்றோ சிவநெறி விளக்க நூலாகிய சிவஞான சித்தியார். 'சைவ சீலங்களுள் முதன்மையாக எடுத்துக்கொள்ளக் கூடியது தாழ்ந்து செலல்’ என்று குறிப்பிடுகின்றது.

"தாழ்வெனும் தன்மையோடு

சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது’ என்பது சித்தியார் வாக்கு.

ஆக, அடக்கமுடைமை ஒர் உலகியல் ஒழுக்கம். ஏன்?

அருளியல் ஒழுக்கமும்கூட. அடக்கமுடைமை இம்மையில் ஏற்றம் தரும், இனிய புகழ் சேர்க்கும். மறுமையில்

திருவடி இன்பம் தரும்.

எல்லார்க்கும் கன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

என்பது திருக்குறள்.

○ ・ ○ ○