குறட்செல்வம்/ஏன் சுற்றம் கெடும்?

விக்கிமூலம் இலிருந்து

20. ஏன் சுற்றம் கெடும்?


குற்றம் செய்தவனுக்கு, குற்றத்திற்குத் தண்டனை. உண்டு. அதுதான்் நியாயமும் நீதியும்கூட. ஆனால் திருவள்ளுவர் ஒருவன் செய்கின்ற குற்றத்திற்காக, அவனுடைய சுற்றம் முழுவதுமே உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்று கூறியுள்ளார். இதில் என்ன நியாய்த்தன்மை இருக்கிறது என்று ஆராய்தல் வேண்டும். ஒரு தனி மின்ரிதன் உருவத்தால், தோற்றத்தால் தனி மனிதனைப் போலவே காட்சியளிக்கிறான். அவன் பருவுடல் தோற்றத்தால் தனி மனிதனே தவிர, உண்மை வில், அவன் தனி மனிதனல்லன். ஒரு தனி மனிதனிடத் தில் முக்கியமாக விளங்குவன மனமும் உள்ளமுமேயாம்.

அதாவது மனச்சாட்சியும், உள்ளத்து உணர்வுமே மனிதனின் வாழ்வில் இன்றியமையாதன. உணர்வோ அறிவோ, ஒழுக்கமோகூட, தனி தனிதனின் விளைவுகளு மல்ல; படைப்புக்களும் அல்ல. அவற்றை அவன் வாழும் மனித சமுதாயத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறான்.

உள்ளுணர்வுகளை உருவாக்குவதில், ஒரு தனி மனிதன் வாழும் . சுற்றம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. திருவள்ளுவர் 'மனத்துளது போலக் காட்டி ஒருவருக்கு இனத்துளதாகும் அறிவு' என்கிறார். . . -

'குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகளுக்கு எல்லாம்’ என்று கம்பனும் பேசுவான். 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழும் ஊரில் வாழ்தல் முப்பையும் தடுக்கும் என்று புறநானூறு பேசும். ஒருவன் ஒருவனுக்கு ஒன்றை வழங்க இருக்கிறான் அதை அழுகாறுடையவன் தடுக்கிறான். தடுக்கும் குணம் தன்னலத்தால் மட்டும் வ்ந்து விடுவதில்லை. தன்னலத் தின் நோக்கம், தான்் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இங்கு அனுபவிக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்வ தில்லை. மற்றவர்களுக்கு வழங்குவதைத்தான்் அழுக் காறுணர்வோடு தடுக்கிறான். அழுக்காற்றுக்கும் அவா வுக்கும் வேறுபாடுண்டு.

அழுக்காறு பிறர் துய்ப்பதைக் கண்டு பொறாதது. எனவே அவன் அனுபவிக்காமல் இருந்தாலும் இருப்பான். மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்றே எண்ணுவான். அழுக்காறுடையவன். தன்னையும் உயர்த்திக் கொள்ள மாட்டான். மற்றவர் உயர்வையும் தாழ்த்துவான். -

இந்த அழுக்காற்றுணர்வு இயல்பாக ஒரு மனித னிடத்து வந்துவிடுவதில்லை. ஏன்? ஒழுக்கமே தனி மனிதன் படைத்துக் கொண்டதல்ல. அவனுடைய குடும்பமும் சூழ்திலையுமே படைத்துக் கொடுக்கின்றன. ஆகவே அழுக்காற்றுக் குணத்தைக் கற்றுக் கொடுத்த சுற்றம் கெடும் என வள்ளுவர் கூறுகிறார்.

மேலும், ஒருவன் தன்னுடைய சுற்றத்திற்குத் தேவுை. யாக இருக்கக் கூடும், என்ற எண்ணத்தில் அழுக்காறு

கொள்கிறான். அந்த அழுக்காற்றுக்கும் காரணமாக இந்தச் சுற்றம் இருப்பதால் திருவள்ளுவர் சுற்றம் கெடும்

என்று சொல்கிறார். ஆதலால் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து வாழும் ஆர்வம் தனி மனிதனுக்குத் தேவையாக இருந்தாலுங்கூட, ஒழுக்க நெறிகளை, இளமையிலேயே பட்ைத்துத் தருவது அவனுடைய சுற்றமேயாகும் என்பதை திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதாஉம் உண்பது உம் இன்றிக் கெடும்.