குறுந்தொகை 81 முதல் 100 முடிய
Appearance
பாடல்: 81 (இவளே)
[தொகு]- தோழி கூற்று
- இவளே நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
- பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
- புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
- உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்
- நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
- கடலுங் கானலுந் தோன்றும்
- மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.
என்றது, தோழியிற் கூட்டங் கூடிப்பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
- பாடியவர்
- வடமவண்ணக்கன் பேரிசாத்தன்.
- மேற்கோளாட்சி
- குறுந்தொகை :[[]]