உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/ஔவை

விக்கிமூலம் இலிருந்து

40. ஔவை

ஔவைக் கிழவி நம்கிழவி,
     அமுதின் இனிய சொற்கிழவி ;
செவ்வை நெறிகள் பற்பலவும்
     தெரியக் காட்டும் பழங்கிழவி. 1

நெல்லிக் கனியைத் தின்றுலகில்
     நீடு வாழும் தமிழ்க்கிழவி;
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
    வியந்து போற்றும் ஒருகிழவி. 2

கூழுக் காகக் கவிபாடும்
    கூனக் கிழவி; அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
    மறவோம் மறவோம் மறவோமே! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/ஔவை&oldid=1673245" இலிருந்து மீள்விக்கப்பட்டது