உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/சுசீந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

31. சுசீந்திரம்

ஆற்றங் கரையுண்டு,
அழகான சோலையுண்டு;
நந்த வனமுண்டு,
நன்செய்கள் சூழவுண்டு;
சத்திரங்கள் உண்டு,
தமிழ்க் கல்விச் சாலையுண்டு;
தெப்பக் குளமுண்டு,
தேரோடும் வீதியுண்டு;

மாளிகைகள் உண்டு,
மடங்கள் பல உண்டு;
நான்கு மதில்கள் உண்டு,
நடுவிலொரு கோவிலுண்டு;
கோபுர வாசலுண்டு,
கொடிமரம் இரண்டுண்டு;
சித்திரையும் மார்கழியும்
திருவிழாக் காட்சி உண்டு;
பார்த்திடக் கண்கள்
பதினாயிரம் வேண்டும்;
தொன்னகரம் ஆன
சுசிந்தைச் சிறப்பெல்லாம்
என்னொரு நாவால்
எடுத்துரைக்க ஏலாதே.