உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/ஸைக்கிள்

விக்கிமூலம் இலிருந்து

29. ஸைக்கிள்

தங்கையே, பார்! தங்கையே, பார்!
      ஸைக்கிள் வண்டி இதுவே பார்! 1

சிங்கார மான வண்டி,
      சீமையிலே செய்த வண்டி. 2

இரும்பாலே செய்த வண்டி,
      எங்கெங்கும் ஓடும் வண்டி. 3
மாடில்லை, குதிரை யில்லை,
       மாயமதாய்ப் பறந்திடும், பார்! 4

தீயில்லை, புகையும் இல்லை,
      தீவிரமாய்ச் சென்றிடும், பார்! 5

காலாலே மிதிப்பதனால்,
      கடும் விசையில் போயிடும், பார்! 6

ஒன்றன்பின் ஒன்றாக
      உருளும்பை தாக்களைப்[1] பார்! 6

அக்காளும் தங்கையும் போல்
     அவைபோகும் அழகைப் பார்!


  1. 7. பைதா - சக்கரம்.