உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 22 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (மெய்ப்புப் பார்க்கப்பட்டவை: பெட்டிக் குறியீடுகளை வைத்து குடும்ப கிளைகள்)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலோத்துங்கன்



குலோத்துங்கன் சளுக்கியர் மரபில் வந்தவன்; சோழர் குலத்தை விளங்கவைத்துப் பெருவீரனாய்த் திகழ்ந்த பேரரசன். இவன் தந்தை சளுக்கிய குலத்து இராசராசன்; தாய் கங்கைகொண்ட சோழனின் மகளான அம்மங்கை. இராசராசனும் கங்கைகொண்டானின் உடன் பிறந்தாள் மகனேயாவன்[1]. மூன்று தலைமுறையாக சோழர்களும் சளுக்கியர்களும் ’கொள்வினை கொடுப்பினை’யுடன் உறவு கொண்டிருந்தனர். சோழர்-சளுக்கியர் உறவினை அடியிற் குறிப்பிட்ட மரபு வழிப்படம் ஓரளவு விளக்கும்.

  (சோழர்)                 (கீழைச்சளுக்கியர்)
இராசராசன்-I
         │
    ┌────┴──────────────────┐
    │                       │
இராசேந்திரன் I         குந்தவை X விமலாதித்தன்
    │                       │
┌───┴─────────────┐         │
விசயராசேந்திரன் அம்மங்கை X இராசராச நரேந்திரன்
   │                  │
மதுராந்தகி X குலோத்துங்கன்-I

  1. S. I. I. vol 1. No. 39. A grant of Vira choda, verses 6-8.