உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/உணவு தயாராகிறதா?

விக்கிமூலம் இலிருந்து

15
உணவு தயாராகிறதா?


ஒரு கோயிலைச் சேர்ந்த ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில், அரசாங்க அதிகாரி ஒருவன் நின்று கொண்டு உரத்த குரலில், “சீக்கிரம் தயாராகட்டும். அரசர் வரப் போகிறார். ஊர் மக்கள் எல்லோருக்கும் உணவு அளிக்க வேண்டும்” என்று கூறி, பலருக்கு உத்திரவிட்டுக் கொண்டிருந்தான்.

அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் போது, மண்டபத்தின் உள்ளே ஊர் மக்களுக்கு உணவு தயாராகிக் கொண்டிருக்கிறதாகத் தெரியும்.

ஆனால், ஒருவர் பின்புற வழியாகப் போய்ப் பார்த்தார். அங்கே எதுவுமே நடைபெறவில்லை.

திரும்பி வந்து, அந்த அதிகாரியிடம் “ஏன் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் அவர்.

“என்ன செய்வது? மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசரோ, நாடு செழிப்பாக இருக்கிறது. நாட்டில் பட்டினிச் சாவு ஏற்படாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதைத் தெரிவித்து, மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தவே இவ்வாறு கூறினேன். இதுவும் அரசர் கட்டளைதான்” என்றான் அந்த அதிகாரி.