உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/சுண்டெலிகளின் ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

6
சுண்டெலிகளின் ஏமாற்றம்


ஒரு விவசாயியின் தானியக் களஞ்சியத்தின் அருகில், சுண்டெலி ஒன்று வசித்து வந்தது.

அந்தக் களஞ்சியத்தில் சிறு துவாரம் இருந்தது. அதன் வழியாகச் சிந்தும் தானியங்களைச் சுண்டெலி வயிறு நிறையத் தின்று ககமாகத் திரிந்தது. அது தன்னுடைய சுகத்தை மற்ற சுண்டெலிகளுக்குக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, களஞ்சியத்தின் துவாரத்தை பெரிதாக்கிவிட்டது. உடனே மற்ற சுண்டெலிகளை தன் வளைக்கு, விருந்துக்கு வருமாறு அழைத்தது. மேலும் ஒவ்வொன்றுக்குத் தேவையான அளவு தானிய உணவு கிடைக்கும் என, பெருமையாகக் கூறியது அந்தச் சுண்டெலி.

மற்ற சுண்டெலிகள் எல்லாம் விருந்து உண்ண ஆவலாக வந்தன. அவற்றை தன் வளைக்கு அருகில் இருந்த களஞ்சியத்தின் துவாரத்துக்கு அழைத்துச் சென்றது சுண்டெலி. ஆனால், அந்தக் களஞ்சியத்தில் துவாரமே காணப்படவில்லை. ஏமாற்றம் அளித்தது சுண்டெலிகளுக்கு, களஞ்சியத்தின் துவாரம் சிறிதாக இருந்த போது, அதைக் கவனிக்காமலிருந்த களஞ்சியத்தின் சொந்தக்காரன், அது பெரிதானவுடன், அதைக் நன்றாக மூடிவிட்டான் கண்டெலிகள் ஏமாற்றத்துடன் ஓடின.