சீனத்தின் குரல்/சாசனம்

விக்கிமூலம் இலிருந்து

சாசனம்

தான் சாவதற்கு முன்பு சாசனம் ஒன்று எழுதி வைத்திருந்தார் அதில் :--

"நாற்பது ஆண்டுகளாக என் நாட்டு மக்களின் புரட்சி இயக்கத்திற்காக நான் இடைவிடாமல் உழைத்து வந்திருக்கின்றேன், சீனா சுதந்திரம் பெறுவதுதான் அதன் நோக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் நான் பெற்றுள்ள அனுபவத்திலிருந்து இந்த நோக்கத்தை முடிப்பதற்காக பெருவாரியான மக்களை விழிப்படையச் செய்து, உலகத்தின் மற்ற நாட்டார்கள் நம்மை சமத்துவமாக நடத்துகின்றவர்களோடு நாமும் நேசம் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன்."

"புரட்சி இன்னும் முற்று பெறவில்லை. நான் எழுதி வெளியிட்ட நூல்களான, தேசிய புனர்நிர்மாணம், குடியரசின் முக்கிய அம்சங்கள், ஆகியவைகளிலும், தேசிய பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள தத்துவங்களையும் கொள்கைகளையும் இடைவிடாமல் பின்பற்றி நம் நோக்கம் முழுவதும் நிறைவேறும்படி நடக்க வேண்டுமென்று என் சகோதர ஊழியர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றேன்."

"மக்களின் மாநாட்டைக் கூட்டி, இப்போதிருந்து வரும் அநீதி நிறைந்த ஏற்றத்தாழ்வான உடன்படிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென்று சமீபத்தில் சிபார்சு செய்யப்பட்ட காரியத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்ற வேண்டும். இது என்னுடைய முழு மனதான வேண்டுகோளாகும்.

மார்ச்சு 11, 1925. (ஒப்பம் ) சன்வென்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சீனத்தின்_குரல்/சாசனம்&oldid=1073190" இலிருந்து மீள்விக்கப்பட்டது