சேதுபதி மன்னர் வரலாறு/இணைப்பு - இ
VII இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி
அன்னசத்திரங்கள்
தானம் வழங்கப்பெற்ற அமைப்பு | தானம் வழங்கப்பெற்ற ஊர்கள் | |
1. இராமநாதபுரம்
- செல்லபூபால சத்திரம்
- சிக்கல் - வெள்ளாமருச்சுக்கட்டி
- பரமக்குடி - கொடிக்குளம்
- இராமநாதபுரம் - கும்பரம்
- - நயினாமரைக்கான்
- - இருமேனி
- - சின்ன ரெகுநாதபுரம்
2. தேவிபட்டினம் சத்திரம்
- தொன்பொதுவத்குடி
- இராஜசிங்கமங்கலம் - அடந்தனகோட்டை
- அருப்புக்கோட்டை - சிலுக்குவார் பட்டி
3. மண்டபம் சத்திரம்
- இராமநாதபுரம் - துரத்தியேந்தல்
4. இராமேஸ்வரம்
- மேலக்கோபுரவாசல் சத்திரம்
- சித்தார்கோட்டை
5. பிடாரிசேரி சத்திரம்
- திருச்சுழி - சித்தநேந்தல் 6. தோப்பூர் சத்திரம்
- அருப்புக்கோட்டை - தோப்பூர்
- - கருவனைச்சேரி
- திருச்சுழி - மு.இலுப்பக்குளம்
- - குருஞ்சாக்குளம்
- - பனைக்குளம்
- ஆலங்குளம்
- சொக்கம்பட்டி
7. முத்துராமலிங்கபட்டணம்
- சத்திரம்
- இராஜசிங்கமங்கலம் - வெட்டுக்குளம்
- - முத்துராமலிங்கபட்டணம்
- திருவாடானை - சின்னக்கரையான்
- - பெரியகரையான்
- - பிரம்பு வயல்
- - மருதவயல்
8. முத்துக்குமாரப்பிள்ளை மடம்
- சத்திரம்
- கண்ணங்குடி - கட்டவிளாகம்
- - சேந்தனி
9. தங்கச்சி மடம்
- திருவாடானை - புளியூர்
10. பாம்பன் சத்திரம்
- - மானாக்குடி
- - காரான்
- - இருட்டுரணி
- - வெள்ளரி,ஒடை
- - தரவை
- இராஜசிங்கமங்கலம் - மணக்குடி
11.இராஜகோபால சத்திரம்
- - வயலூர்
12. தோணித்துறை சத்திரம்
- -வலமாவூர்
- -மேலவயல்
- -தேர் போகி
- - மண்டபம்
13. அலங்கானுர் சத்திரம்
- பரமக்குடி - அலங்கானுர்
- - கிரத்திசேரி
14. சிக்கல் சத்திரம்
- முதுகளத்துர் - ஆலங்குளம்
15. கடுகுசந்தை சத்திரம்
- சாயல் குடி - கடுகுசந்தை
16. பிள்ளைமடம் சத்திரம்
- சாத்தக்கோன் வலசை
17. நாகநாத சமுத்திரம் சத்திரம்
- இலந்தோடை
18. என்மனங்கொண்டான் சத்திரம்
- என்மனங்கொண்டான்
19. இராமசாமி பிள்ளை மடச் சத்திரம்
- கடுக்காய்வலசை 20. சாமிநாத மணியக்காரர் சத்திரம்
- தெளிச்சாத்தநல்லூர்
21. உப்பூர் சத்திரம்
- இராஜசிங்கமங்கலம் - சித்துர்வாடி
22. சேதுக்கு வாய்த்தான் சத்திரம்
- தேளூர்
23. கோட்டைப்பட்டினம் சத்திரம்
- கண்ணங்குடி - கொடிக்குளம்
24. போகலூர் சத்திரம்
பற்றிய தொகுப்பு
தானம் பெற்ற அமைப்புகளின் வகை |
தானம் பெற்ற அமைப்புகளின் எண்ணிக்கை |
தானம் வழங்கப்பட்ட ஊர்களின் எண்ணிக்கை |
1. திருக்கோயில்கள் | 59 | 311 |
2. திருமடங்கள் | 22 | 41 |
3. அன்னசத்திரங்கள் | 28 | 77 |
4. பள்ளிவாசல் | 10 | 13 |
தேவாலயம் | 1 | 2 |
5. தமிழ்ப் புலவர்கள் | 9 | 12 |
6. தனியார்கள் | 210 | 219 |
352 | 643 | |
திருக்கோயில் | ||
இணைப்பு அ | 59 | 311 |
இணைப்பு ஆ (கட்டளை) |
11 | 36 |
இணைப்பு இ (சத்திரம்) |
28 | 61 |
மொத்தம் | 98 | 408 |
நிலையாமையை நிரந்தர அணிகலனாகக் கொண்டது தான் இந்த உலகம் என்று வள்ளுவம் தெரிவிக்கிறது. மனித வாழ்க்கையில் மரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்பதை யாரும் அறிந்திலர் என்றாலும் மனிதன் இந்த உலகில் எத்தனையோ நூற்றாண்டுகள் வாழப்போவதாக நினைத்துப் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றான்.
இதற்கு விதிவிலக்காகச் சேதுபதி மன்னர்கள் ‘அன்றறிவான் எண்ணாது அறஞ்செய்க” என்ற வள்ளுவத்தின்படி பல அரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். அவைகளின் ஒரு பிரிவான சமயப் பொறைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள நன்கொடை பட்டியல்தான் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை அறக்கொடைகளை வழங்கிய சேதுபதி மன்னர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது இவர்களுக்கு ஈடாகத் தமிழ்நாட்டில் வேறு எந்த அரச மரபினரும் இருந்தது இல்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது. காலமெல்லாம் இந்த தர்மங்கள் நிலைத்து நின்று மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனச் சிந்தித்துச் செயலாற்றிய இந்த அரச மரபினரை மனிதகுலம் என்றும் மறக்காது என்பது உறுதி.